குடிகாரன் உளறல்



என் நோய்க்கு இல்லை நீ
நீ இல்லாத நோய் தீர
அருந்துவதே மருந்து
தீராமல் அடுத்தடுத்து
நோயையே மருந்தாக
நான் அருந்த உதவும் கிண்ணம்
நீ விட்டுச் சென்ற பூச்சாடி!
அருந்திவிட்டால் அந்நேரம்
நீ நடந்த ஒவ்வொரு வீதியிலும்
என் குரல் உன்னையே தேடி வரும்
குடிகாரன் உளறல் என்று
உன் பெயர் கெடுத்த வலி தீர
எனை மன்னித்துக் கொன்று விடு - பின்
காதலோடு உனை அழைக்க
நான் கூட இருக்கமாட்டேன்
என் இதயம் நனைத்து விட
கண் மூடி அன்று மட்டும்
சிறிது கண்ணீர் விட்டு விடு.

யாத்ராவின் சாசனம் நேற்றுத்தான் படித்தேன். அத்தா உல்லாஹ் கான் என்ற பஞ்சாபிக் கவிஞரின் நெஞ்சைப் பிளக்கும் உருதுக் கவிதைகள் படித்த உணர்வு ஏற்பட்டது.
உருதுக் கவிதைகள் போலத் தமிழில் எழுத முடியாது என்ற என் முட்டாள்த்தனமான நம்பிக்கையைத் தகர்த்த யாத்ராவுக்கு என் ஐம்பதாவது பதிவு சமர்ப்பணம்.






.

10 comments:

நசரேயன் said...

நான் இப்படியெல்லாம் பேசின மாதிரி ஞாபகம் இல்லையே

Vidhoosh said...

நேத்து full-ஆ இருந்ததுனால மறந்திருப்பீங்க.

மயாதி said...

nalla pathivu..

நேசமித்ரன் said...

//மன்னித்துக் கொன்று விடு //

அருமை ..!

யாத்ரா said...

முதலில் மிகவும் நன்றி, மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன், வலையுலகிற்கு வந்த இந்த நான்கு மாதங்களில், இது போன்ற அன்பும் நட்பும், கவிதை குறித்த உற்சாகப்படுத்தும் கருத்துப் பகிர்வுகளும் தான் சற்றே ஆறுதலாகவும் மேலும் எழுதவதற்க்கான உந்துதலாகவும் இருந்து வந்திருக்கிறது, இருக்கிறது.

உங்கள் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள், எனக்கு சமர்ப்பித்ததற்கு மிக்க நன்றி, என் நன்றியை என் வார்த்தைகளால் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை.

என் மன உணர்வுகளை, நான் எழுத வேண்டிய கவிதையை, நீங்கள் குடிகாரன் உளறல் என்று எழுதியிருந்த கவிதையை வாசிக்கிற இப்போது, எனை அறியாமலே கண்களில் நீர் திரள ஆரம்பித்துவிட்டது.

தங்களின் அன்பிற்க்கும் நட்பிற்க்கும் என்றும என் நன்றிகள்.

யாத்ரா said...

நான்கு நாள் பயணமாக, மதுரைக்கு இலக்கிய கூட்டம் ஒன்றிற்கு சென்றிருந்ததால், தங்களின் இந்தப் பதிவை ,இப்போது தான் பார்க்க முடிந்தது, மிகவும் மகிழ்ச்சி.

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்கு வித்யா

Vidhoosh said...

யாத்ரா - என்னை ஒரு ஆணின் பார்வையில் யோசிக்க வைத்து இக்கவிதையை எழுத தூண்டிய உங்களுக்கு நான்தான் நன்றி கூற வேண்டும்.
இப்படியெல்லாம் சின்ன விஷயங்களுக்கு மகிழ்ந்து விடும் நல்ல மனது உங்களுக்கு. உங்களுக்கு நன்றி. :)

நேசமித்ரன், மயாதி, நந்தா: ரொம்ப நன்றிகள் :)

Joe said...

அருமையான கவிதை.

It must've been really difficult to step into a man's shoes and write a poem from his point of view, especially for a teetotaler to a imagine the drunkard's lines.

Joe said...
This comment has been removed by the author.

Post a Comment