சால மிகுத்துப் பெயின்

இன்று பள்ளி reopening. என் மகள் UKG. என் மகளைப் பள்ளியில் drop செய்த போது அவள் பள்ளியில் பயிலும் சக தோழ-தோழியரின் அப்பா-அம்மாக்களைச் சந்தித்தேன். அப்பா-அம்மாக்களாக இருப்பதாலும், தினசரி சந்திப்பதாலும் என் தோழர்-தோழிகளாக ஆனவர்கள் அவர்கள். LKG-யில் புதிதாகச் சேர்ந்து கதறிக்கொண்டு இருந்த மழலைகளின் பெற்றோர் பாதி பேர் மழலைகளுக்கு மேல் அழுது கொண்டிருந்தனர்.

எங்கள் எல்லோரையும் சிறிது நேரம் prayer hall-லில் அமர வைத்தனர். ஒரு மைக்கையும் கொடுத்து எல்லாப் பெற்றோரயும் அவரவர் எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தனர். எங்கள் பொழுதும் சிறப்பாகப் போகவேண்டும் என்ற நல்ல அக்கறைதான் பள்ளி நிர்வாகத்திற்கு. இரண்டு மணி நேரம்...

சக மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களை பேச விட்டு கேட்பதும் எத்தனை அற்புதமான அனுபவம் என்றும், அது எத்தனை informative ஆக இருக்கிறது என்பதையும் தெரியவில்லை என்றால் அதை அனுபவித்து உணர்ந்தவர்களிடம்தான் கேட்டு அறிய வேண்டும்.

குழந்தைகளை படிப்பு அல்லாத மற்ற சுய முன்னேற்ற செயல்களில் ஈடுபட வைப்பது அவர்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது உண்மைதான். ஒரு அம்மா தன் 4 வயதுக் குழந்தையை பள்ளி முடிந்ததும் Drawing, Vedic Maths, Keyboard, Vocal, Handwriting, dance, karate, personality development(????) இவற்றிற்கெல்லாம் அனுப்புவதாகக் கூறினார். கேட்டால் ஜப்பான் பாஷையில் "rest" என்ற வார்த்தையே கிடையாதாம். இதில் என்ன பெருமை என்று தெரியவில்லை. எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 4 வயதுக் குழந்தைக்கு personality development...கொடுமை!!

ஏற்கனவே பள்ளி 9 முதல் 2.30 வரை, இதற்குப்பின், மேற்கூறிய வகுப்புகளெல்லாம் வகுப்புக்கு அரை மணிநேரம் என்றே இருந்தாலும் இரவு 7 மணிவரை அக்குழந்தை பயங்கர பிஸியாகவே இருக்கும். நான்கே வயதுடைய அக்குழந்தைக்கு சிறிது உறக்கம் / ஓய்வு வேண்டாமா? எப்போது விளையாடும், எங்கே என்ன சாப்பிடும், மற்ற சக வயதுக் குழந்தைகளோடும் மற்றவர்களோடும் எப்போது பழகும், புத்தகம் படிக்குமா... overstressed ஆகிவிடாதா என்றெல்லாம் நினைத்து-- என் முறை வந்த போது நான் பகிர்ந்து கொண்டது இதுதான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். (குறள் எண்: 475)

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

தன்னை விட தன் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்பது நியாயமான ஆசைதான். உங்கள் குழந்தைகளை இதன் மூலம் நீங்கள் அதிக சுமை போடுகிறீர்களா என்றும் யோசித்துப் பாருங்கள். மூன்றரை முதல் ஐந்து வயதிற்குள் அவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் கற்றறிந்து விட வேண்டும் என்ற பேராசை பெற்றவர்களுக்கு. ஆனால் அது சாத்தியமா? How much is too much?

ஆனால் ஒரு குழந்தைக்கு பெற்றோருக்கு இருக்கும் IQ-வில் மேலதிகபட்சமாக 50 சதவீதம் அதிக IQ இருக்கலாம். அதையும் மீறி சாதிக்கும் குழந்தைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகளாகத்தான் இருக்க முடியும்.

எனக்கு ஏதோ ஓரளவில்தான் புத்திசாலித்தனம் உள்ளது என்று நினைக்கிறேன். அவளிடம் கொஞ்சம் அதிகமாக இருக்க முயற்சி செய்வேன். ஆனால் என் மகளிடம் நான் ரொம்ப எதிர்பார்ப்பதில்லை, நான் படித்தது ஒன்று, அலுவலகப் பணி செய்தது ஒன்று, எனக்குள் இருக்கும் என் உண்மையான ஆர்வங்கள் இவை இரண்டும் இல்லாத ஒன்று. இதில் நீங்கள் கூறும் extra curricular activities எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எனக்கு இரவு 9 முதல் 10 வரை ஒரு நாள் என் தாத்தா ஒரு நாள் என் அப்பா என கணக்கு, டிராயிங் வரைவது இவையெல்லாம் வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார்கள்.

எல்லாவற்றையும் ஐந்து வயதிலேயே கற்றுக்கொடுத்து உங்கள் பிள்ளைகளை என்னவாக ஆக்க விரும்புகிறீர்கள் என்ற குறிக்கோள் ஏதும் இருக்கிறதா? நாம் ஒன்றை ஆசைப்பட்டு அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக அது உங்கள் குழந்தையே ஆனாலும் இன்னொருவர் மீது திணிப்பது என்பது வன்முறைதானே?

அவர்கள் ஓரளவுக்கு வளரும் வரை பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி கற்றுக்கொடுப்பதை வைத்து அவர்களுக்கு எதில் உண்மையான ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொண்டு அதைக் குறித்துப் பயிற்சிகள் அளிப்பதே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு எல்லா வண்டிகளிலும் ஒரே நேரத்தில் ஏற்றி விட்டு போய் சேர வேண்டிய இடம் புரியாமல் அக்குழந்தைக்கு படிப்பு உட்பட அனைத்து செயல்களின் மீதும் ஒரு வெறுப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தன் சொந்த வாழ்க்கையையும், வேலையையும் (படிப்பு, ஹோம் வொர்க்), பொழுதுபோக்கு அல்லது ஓய்வு நேரத்தில் செய்யும் செயல்கள், புத்தகம் படித்தல், விளையாட்டு, அவர்கள் வீட்டிலேயே இருக்கும் தாத்தா பாட்டி போன்ற மற்ற உறவுகளோடும் சிறிது நேரம் செலவிடுதல் போன்றவற்றை இப்போதிலிருந்தே balance செய்யக் கற்றுக்கொடுத்தால் பின்னாளில் இந்தப் பாடம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

அப்படி இல்லாமல், இந்தமாதிரி குழந்தை மீது ஒரே நேரத்தில் ஒரே நாளில் இப்படி திணிப்பது அவர்களை எது செய்வது என்று தெரியாதக் குழப்பத்திற்கும், சோர்வடையச் செய்தும், எதுவுமே சரிவர முடிக்க முடியாமல் தான் திறமை குறைந்தவராகவும் தன்னம்பிக்கை இல்லாமல் உணரச் செய்தும், ஊக்கமற்றவராகவும் ஆக்கக் கூடும்.

ஏன் நாமெல்லாம் சேர்ந்து இலவசமாகவே ஒரு play group உருவாக்கி முறையில் அந்நேரத்தில் அவர்களை விளையாட விடக்கூடாது என்றேன்.

இதை கேட்ட போது நிறைய பெற்றோருக்கு என் மீது கோபம். கேள்விக் கணைகளால் துளைத்து விட்டனர். ஒருவர் உங்கள் அனுபவத்தை வைத்து எதையும் கூற வேண்டாம். ஒருவருக்கொருவர் அனுபவம் மாறும் என்றார்.

உண்மைதான். ஆனால் நெருப்பு எல்லோருக்கும் சுடத்தானே செய்யும். ஒருவேளை அவர் தீக்குள் விரல் விட்டு நந்தலாலனைத் தீண்டிய புண்ணிய ஆத்மாவாக இருக்கலாம்.

போகட்டும். குறைந்தது ஏதோ ஒன்று இரண்டு பேர் இதனால் மாற்றி சிந்தித்தால் நான் மகிழ்வேன்.

7 comments:

நந்தாகுமாரன் said...

ஏற்கனவே கேட்ட விஷயம் தான் எனினும் ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் ... மாற்றி சிந்திப்பதா ... ஆனாலும் உங்களுக்குப் பேராசை தான் ...

Vidhoosh said...

நன்றி நந்தா
:)

Vidhoosh said...

பேராசையை விட நப்பாசை எனலாம்.
:(

நசரேயன் said...

உங்கள் கருத்துக்கள் ஏற்புடையது

//
ஒரு அம்மா தன் 4 வயதுக் குழந்தையை பள்ளி முடிந்ததும் Drawing, Vedic Maths, Keyboard, Vocal, Handwriting, dance, karate, personality development(????) இவற்றிற்கெல்லாம் அனுப்புவதாகக் கூறினார்
//
ஐடியல் மாமியா இருக்கனுமுன்னு சில மாமிகள் இப்படித்தான் செய்யுறாங்க

Singai RamC said...

mmmm good vidhya....

Vidhoosh said...

நன்றி நசரேயன்...
ஏதேது... இது அந்த மாமிகள் காதிலேயும் சித்த போட்டுட்டு வந்துடறேன்..அப்பிடியே உங்காத்து அட்ரசும் கொடுத்து வாசல்லே கச்சேரி பண்ண சொல்லட்டுமா..அம்பி...
;)
அத மம்மி-ன்னு தான் டைப் பண்ணேன். கூகிள் சதி இது....ம...ம்மி....அப்பிடீன்னுல்லாம் அழப்படாது ஆமாம் ....

Vidhoosh said...

Thanks Singai C Ram.

Post a Comment