உன் கையால் ஒரு கடிதம்இந்தத் தனிமைப் பறவை மீது
உன் நினைவுகளோடு செய்த
பயணங்களின் தூரங்களால்
மிகவும் சோர்ந்துவிட்டேன்
உன் கையால் ஒரு கடிதம்
மட்டுமேனும் அனாமதேயமாக!
எழுத்தில் நீ தெரிவாய் எனக்கு
அன்புள்ள ... என்பதற்கடுத்து
என் பெயர் மட்டும் எழுதி விடு
நலம் கூறி, நலம் கேட்டு
உன் மனம் கூட எழுதவேண்டாம்.
என்றும் போல் எனைப் பற்றி
சில குறையேனும் கூறி விடு

3 comments:

நேசமித்ரன் said...

அது சரி..!

:)

யாத்ரா said...

அருமையாக எழுதியிருக்கீங்க,உங்களின் இந்தக் கவிதையும், என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

நந்தாகுமாரன் said...

தனிமைப் பறவை என்று உருவகம் சொல்லாமல் பறவை என்று கொண்டு படித்தால் எனக்கு OK

Post a Comment