எனக்கான வெயில்அது நீயாகத்தான் இருக்கும்
என் கண்ணாடியில் உன் முகம்
அது நானாகவும் இருக்கக் கூடும் என்றது
உன் தேவதை எனக் கூறி எனக்கு
நீ அளித்த சிறகுகளின் பிரதிபலிப்பு!
உனக்கான உன் கனவுகள் மட்டுமே எனக்கும்
என கண்கள் திறந்து தூங்குகிறேன்
யுகங்களாய் மீளவில்லை நான் நானாய்
என் கனவுகளும் உன்னிடம்
தொலைந்தே போயின போலும்
நீயாகி விட்ட நான் போல.
சுடவே இல்லை வெயில்
எழுந்தால் உனக்கு முன்னாலும்
வீழ்ந்தால் உன் பின்னாலும்
உனக்கே நான் நிழலானேன்
நீ சென்று விட்ட தூரம் காண
ஜன்னலே இல்லாத உன் வீட்டில்
தென்றல் கூட வருவதில்லை
நீ தந்த தேவதைச் சிறகுகள் உதறி
எனக்கான என் வெய்யிலில்
நனைத்து கொள்கிறேன் என்னை
மீண்டும் துளிர்கிறேன் நான் நானாக!
உன் இதய வீட்டின் கதவைத் திறந்து விடு.
.

3 comments:

Kavi kilavan said...

எழுந்தால் உனக்கு முன்னாலும்
வீழ்ந்தால் உன் பின்னாலும்
உனக்கே நான் நிழலானேன்
நீ சென்று விட்ட தூரம் காண

சுப்பர் மாமு

இலங்கையில் இருந்து யாதவன்

Vidhoosh said...

அங்கு எல்லாம் நலந்தானே கிளவன்?
உங்கள் வருகைக்கு நன்றி.

Nundhaa said...

என் கவிதைகளை யாரோ எழுதிப் படிப்பது போல் இருக்கிறது ... பிடித்திருக்கிறது :)

Post a Comment