என் நிழலில் கூட தெரிந்தது
அவன் கை ரேகைகள்
அவனை விட இனிமை அவன் நினைவுகள்
ஒளியாய் கவிழ்கின்ற இருளில்
கதை கவிதையான கதை
எழுதும் கடைசி அத்தியாயம்
இன்னும் எழுதாத பக்கங்களைச் சுமந்து
அவன் நினைவுகள் ஏதோ வகையில்
பயணித்துச் சென்றடைந்த ஒரு இடத்தில்,
தூங்காத இரவுகளை மையாக்கி
நான் எழுதிய என் கதையை
எனக்கே படித்தான் அவன்.
.
16 comments:
வித்யா,
உங்கள் கவிதையின் வார்த்தை வசீகரம் இந்த பதிவில் சிறந்திருக்கிறது. நிறைய எழுத ஆசைதான். தேர்வுகளில் இருப்பதால் முடியவில்லை. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து உங்களிடமிருந்து ஆகச்சிறந்த கவி வெளிப்பாடுகளை எதிர்நோக்குகிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//பயணித்துச் சென்றடைந்த ஒரு இடத்தில்,
தூங்காத இரவுகளை மையாக்கி
நான் எழுதிய என் கதையை
எனக்கே படித்தான் அவன்//
மிகவும் அருமையான வரிகள். ரசித்து வாசித்தேன்.
//எழுதாத பக்கங்களைச்சுமந்து//
அருமையான வரிகள்
//நிழலில் கூட தெரிந்தது
அவன் கை ரேகைகள்//
class
//ஒளியாய் கவிழ்கின்ற இருளில்//
வித்தியாசமான கற்பனை.
//அவனை விட இனிமை அவன் நினைவுகள்//
உண்மையான உணர்வு. ஒருவரது இருப்பைவிட அவரது நினைவுகள் தரும் பரவசம் கூடுதல்தானே ?
அற்புதம். கவிதையை மறுபடி மறுபடி வாசிக்கிறேன்.
அந்த கதை எப்ப வெளிவரும் ?
நல்ல கவிதை ..
தொடர்ந்தும் நல்ல கவிதைகளை எதிர் பார்க்கிறோம்
நன்றி நந்தா - :) நன்றி.
நன்றி நசரேயன். விரைவில் வெள்ளித் திரையில் காண்க.... ஞாயிறுத் திரையிலும் காணலாம் (பயங்கர பில்ட் அப்பு..)
நன்றி மயாதி. உங்கள் முதல் வரவுக்கும், கமெண்ட்-க்கும். :) நானும் அதையே எதிர்பார்த்து, இன்னும் என் டயரிக்களை கிழித்துப் போடாமல் வைத்திருக்கிறேன்.
அழகான கவிதை.
நன்றி யாத்ரா. நீங்கள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
பூங்கொத்து!!!
நன்றி அருணா. :)
//பயணித்துச் சென்றடைந்த ஒரு இடத்தில்,
தூங்காத இரவுகளை மையாக்கி
நான் எழுதிய என் கதையை
எனக்கே படித்தான் அவன்//
:)
அட என்னங்க கவிதை நல்லா இருக்குன்னு பாராட்டிட்டு ஒருத்தரும் ஒட்டு போடாம போய்டீங்க
தூங்காத இரவுகளை மையாக்கி
நான் எழுதிய என் கதையை
எனக்கே படித்தான் அவன்
டச்ங்க
யப்பா
நேசமித்ரன் // பாலா
நன்றி உங்கள் வரவுக்கு.
:)
Post a Comment