ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்


தேங்க்ஸ் தமிழ் மீடியா
==========================
==========================

இன்றைய சூழலில் பொய் சொல்லாமல், மனதாலும் பாவஞ்செய்யாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது. ஒரு entry level மென்பொருள் இன்ஜினியர் வேலைக்கே fake போடாமல் நடக்க மாட்டேங்குது. இவ்ளோ handsomeஆக ஒரு ஹ்ருதிக் ரோஷனும், stunningஆக ஸ்ரேயாவும் இருந்தால். பாஸ்கர் ஸ்ரேயாவையும், நான் ஹ்ருதிக் ரோஷனையும் best-ஆக இருப்பதால், பார்த்து மகிழ்ந்து கொள்ளும் போது, என் better half-க்கு மனதாலும் துரோகம் செய்ய மாட்டேன், என்று கண்ணையா மூடிக்கொள்கிறோம். இல்லையே.. இதுவும் பாவச் செயல்தானே.. இந்தப் பாவத்தை கங்கையில்தானே குளித்துச் சரி பண்ணவேண்டும். சரி. இப்படி கங்கையிலோ, திரிவேணி சங்கமத்திலேயோ குளித்தால் நிஜமாகவே ஒருவரது பாவங்கள் நீங்கிவிடுமா? அப்படி நதியில் குளித்தால் பாவங்கள் தொலையும் என்று நம்புபவர்களின் நம்பிக்கை கற்பனையே, தர்க்கத்திற்குக் கூட ஏற்றது அல்ல. அப்படி அது சாத்தியம் என்றால் சக மனிதனைக் கொலை செய்த எவனுக்கும் திரிவேணி சங்கமத்தில் (நதி) மூழ்கினால் அவன் செய்த பாவங்கள் தொலைந்து விடுமே? அப்படி நடக்கிறதா? இல்லையே! திரிவேணி சங்கமத்தில் குளித்தால் (மூழ்கினால்) பாவங்கள் தொலையும் என்று கூறுவது இங்கு நதியைக் குறிப்பிட்டு அல்ல. பாவம் என்றால் என்ன? மனதால் துரோகம் நினைத்தல், தவறான நடத்தை, தகாக செயல்கள், குற்றஞ்செய்தல், மற்றவருக்கு துன்பம் தரக்கூடிய செயல்களில் ஈடுபடுதல், ஆகியவையே பாவம் ஆகும். ஆகையால், ஒருவர் தான் செய்த பாவச்செயல்களின் பலனை (தண்டனை) அனுபவித்தே தீருவான். ஒருவர் செய்யும் செயலின் தன்மைக்கேற்ப பலாபலன்கள், தண்டனைகளாகவோ பிரதியுபகாரங்களாகவோ ஒருவன் பெறுவான். ஒரு இரப்பர் பந்தை சுவற்றில் அடித்தால் அது எப்படி நம்மிடமே திரும்பி வருகிறதோ, அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலன்கள் நம்மையே வந்து சேரும். ஒரு பாவத்தைச் செய்த பின் ஒருவன் பல மேன்மையானத் தர்மகாரியங்கள் செய்தாலும் பரிகாரங்கள் செய்தாலும் அதற்குரிய தண்டனை அவனுக்குக் கிடைக்கும். ஒருவேளை அவன் கங்கை அல்லது திரிவேணியில் மூழ்கிக் குளித்தபின் மிகுந்த சிரத்தையோடு தான் எந்தவித பாவச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்றச் சங்கல்பம் செய்து (உறுதி மொழிந்து) அதையே பின்பற்றினால் அவன் பிற்காலத்தில் எந்தப் பாவங்களையும் செய்யமாட்டான். இதனால் அவன் இனியும் பாவங்கள் செய்வது குறையும். ஆனாலும் அவன் ஏற்கனவே செய்த பாவங்களின் பலன்களிலிருந்து தப்பிக்கவே முடியாது. திரிவேணி சங்கமத்தைப்பற்றிக் கூறியாகி விட்டது. இப்போது உண்மையான திரிவேணி சங்கமத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் திரிவேணி சங்கமம் ஒன்றும் வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளேயேதான் இருக்கிறது. இடா பாகீரதி கங்கா பிங்களா யமுனா நதி தயோர்மத்யகதா நாடி சுஷும்ணாக்யா ஸரஸ்வதீ த்ரிவேணீ-ஸங்கமோ யத்ர தீர்த்தராஜ: உச்யதே தத்ர ஸ்நாநாந் ப்ரகுர்வீத ஸர்வபாபை: ப்ரமுச்யதே (ஸமஸ்கிருத மொழி - ஞான ஸங்க்லிநீ தந்த்ர) ஞான ஸங்க்லிநீ தந்த்ர - என்பது பரமயோகி சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் உரையாடலாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சுலோகம் -- இடா நாடி கங்கையாகவும், பிங்கள நாடி யமுனையாகவும் இவையிரண்டிற்கும் இடையே பாயும் நாடியான சுசும்னா நாடியை ஸரஸ்வதீ என்றும் கூறுகின்றனர். இவை மூன்றும் ஒன்றிணையும் (திரிவேணீ) புள்ளியே (ஆஞ்யா சக்கரம்) தீர்த்தராஜா ஆகும். இதில் மூழ்கும் சாதகர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். --என்றே பொருள்படுகிறது. இதன் கருத்தானது இவ்வாறு.. ஒருவன் பிராணாயாமம் அல்லது த்யானப் பயிற்சிகள் மூலம் ஆஞ்யாசக்கரத்திலுள்ள (புருவங்களுக்கு இடையில் நெற்றிப்பொட்டில் உள்ளது) திரிவேணி சங்கமத்தில் மூழ்கி, தன் மனதை ஒருநிலைப்படுத்தி, நமக்குள்ளேயே இருக்கும் இறைவன் மீது பக்தியில் (தியானம்) ஆழ்ந்து, ஞானகங்கையில் குளிக்கும் (உயிர் ஆற்றலை முதுகெலும்பு வழியாக மூளைக்கு கொண்டு செல்லும் குண்டலினி எழுப்புதல்) ஒருவனுக்கு பாவச்செயல்கள் செய்வதைப் பற்றி சிந்தனை கூட செய்யமுடியாதபோது அவன் பாவங்கள் எப்படிச் செய்வான்? உண்மையாகவே நாம் பாவங்களிலிருந்து முக்தி பெற வேண்டும் என்றால், நாம் தினசரி ஆஞ்யா சக்கரத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்து, யோக தவங்களைச் செய்து, ஓம்கார மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும். ஓம்காரம் என்பது குறிப்பிட மதத்தினரை மட்டுமே சார்ந்தது அல்ல. அது ஒரு universal sound. சங்கை காதில் வைத்துக் கேட்டால் அதே போன்றுதான் ஒலி வரும். மிருதங்கம் "தம்" என்று வாசித்து முடிக்கும் அந்த endnote-டில் கூட அதே ஒலிதான் வரும். ஓம்கார ஒலியின் அதிர்வுகளை சும்மா, இப்போது நீங்கள் ஒரே ஒரு நிமிடம், ஒரு பரிசோதனையாக, கண்ணை மூடிக்கொண்டு "ஓம்" என்றும் வாய் விட்டு சொல்லி அனுபவித்துப் பாருங்கள். ஓம்காரம் பிந்துசம்யுக்தம் நித்யம் த்யாயந்தி யோகின: காமதம் மோக்ஷதம் சைவ ஓம்காராய நமோ நம: இதன் பொருளானது - நம் ஆற்றல்களையும், இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களையும் ஒன்றிணைக்க (சம்யுக்தம்) தினம் தினம் (நித்யம்) ஒற்றை புள்ளியான (பிந்து) அந்த பிரம்ம சக்தி மீது தியானம் (த்யாயந்தி)செய்பவன் யோகியாகிறான் (யோகின: ) . ஆகையால், நாம் காம மோகங்களில் (காமதம்) இருந்து முக்தி பெற (மோக்ஷதம்) அந்த பிரம்ம சக்தியிடமே (ஓம்காராய) நாம் மீண்டும் மீண்டும் சரண் புகுவோம் (நமோ நம:). நான் படித்து அறிந்த வரையில், வேதங்களும் புராணங்களும் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் அல்லது இனத்தினர் மட்டுமே படித்து பயன் பெற எழுதப்பட்டவை அல்ல. மனிதன் தன் சுய ஆற்றலைப் பயன்படுத்தி எவ்வளவு மேன்மைகளை அடைய முடியும் என்பதையே வேதங்கள் ஒவ்வொன்றும் கூறுகிறது. வேத-புராணங்களில் அதிகம் ஒரு மனிதனின் தனிப்பட்ட மேம்பாட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே கூறியபடி, கூற வரும் விஷயத்தை எளிமையாக நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து கூறியிருப்பதால், அதன் உண்மையானக் கருத்து சரியான முறையில் அடுத்தடுத்து வரும் generation-களுக்குப் pass செய்யப்படாமல் அல்லது புரிந்து கொள்ளப்படாமல், அதன் உண்மைத்தன்மை இழந்து, (misinterpretation through the ages) இன்றும் நாம் ஜீவ நதியான கங்கையையே அசுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆகவே, இனியும் கங்கையையோ, வேறெந்த நதிகளையுமோ அசுத்தம் செய்யாதீர்கள். புனித ஸ்தலமான ஹரித்துவாரில், ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் உயிர் நீத்தால், நேராக சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி நான் கிண்டலோ கேலியோ செய்யவில்லை. எனக்கு அந்த உரிமையும் கிடையாது. ஆனால் அந்த குறிப்பிட்ட சுற்றுவட்டாரத்தில் அத்தனை மனிதர்கள், அவர் மனமலங்களை நீக்காமலேயே, சொர்க்கத்திற்குச் செல்வதற்காக வாழும் போதே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்தில் அவ்வளவு ஜன நெருக்கடி. pollution. சரி... உங்களைச் சுற்றி உலகில் வேறெந்த ஜீவனுமே மிச்சமில்லாமல் போய்விட்டால், நீங்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக இருந்தால், சுற்றிலும் பிணங்களே இருந்தால், நீங்கள் நம்பிக்கை இழக்காமல், மனம் தளராமல், துணையேதும் இன்றி எப்படி வாழ்வீர்கள். இதற்கும் யார் வேண்டுமானாலும் எளிதில் பழகிக் கொள்ளக் கூடிய, எந்தக் காலத்திலும் பயன்படக்கூடிய, எப்போதும் நடைமுறைக்கு ஒப்பான பதில் வேதத்தில் இருக்கிறது. அதைப்பற்றி பிறிதொரு முறை காணலாம். நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கிறீர்களா? யார் கண்டது... நதியின் அக்கரையில் ஒரு ஹ்ருதிக் ரோஷனோ, அல்லது ஸ்ரேயாவோ உயிரோடு இருந்தால். .

7 comments:

Sundar said...

ரொம்ப அருமையா சொல்லிருக்கே.

Vidhoosh said...

வருகைக்கும், கமெண்ட்-க்கும் நன்றி "சுந்தர்" :(

Nundhaa said...

என்னுடைய ‘செய்யாத பாவம்’ கவிதை தான் நினைவிற்கு வருகிறது ... நல்லா இருக்கு வித்யா

Vidhoosh said...

உங்கள் செய்யாத பாவத்தைப் படிக்கும் போது தான் இந்த ஸ்லோகத்தின் நினைவே வந்தது. அப்புறம் கொஞ்சம் புத்தகங்களைப் பிரட்டி இந்த பதிவை உருவாக்கினேன். உண்மையிலேயே, என் எழுத்துக்களுக்கு நேர்மையுடன் விமர்சனம் அளித்து, என்னை மேலும் எழுத தூண்டும், என் இரண்டாம் வாசகரான உங்களுக்கே நன்றிகள் சேரும்.

மலைநாடான் said...

அருமை

Vidhoosh said...

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-53-36/2588-2009-07-29-13-43-02

இந்தக் கட்டுரையை மீள் பதிவு செய்த தமிழ் மீடியா-வுக்கு நன்றி.
-வித்யா

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

www.findindia.net

Post a Comment