வாரிசு

"நான் கண்டிப்பா இன்னொரு குழந்தைக்கு ஒத்துக்க மாட்டேன். நம்மளால நிச்சயம் அப்போர்ட் பண்ண முடியாது."

"பிளாட்பாரம்ல வாழறவங்க கூட இரண்டு மூன்று பெத்துக்கறாங்க. அவங்கள்லாம் இப்படியா யோசிக்கறாங்க. அவங்கள விடக் கேவலமானவனா நான். என் பிசினசை எனக்குப் பிறகு நடத்த யார் இருக்காங்க அபி. நீயும் அஞ்சு கூடப் பிறந்தவங்களோட தான வளர்ந்தாய்"

"சிவா. அதுனாலதான் சொல்றேன். நம்ம ஸ்டேடஸ் இப்போ இருக்க மாதிரி எப்பவும் இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். வீ கேனாட் அப்போர்ட் அனதர் சைல்ட். அட்லீஸ்ட் ஐ கான்ட் பார்கைன் வித் மை கரீர் அட் தி மொமென்ட். நமக்குத்தான் நேகா இருக்காளே. அவளுக்கே எல்லாத்தையும் கொடுத்துடலாம். ஓகே. லெட்ஸ் ஸ்டாப் திஸ் டிஸ்கசன் நவ். அந்த ஷாப்பிங் மாலில் என்னை டிராப் செய்யுங்க"

காரிலிருந்து டக் என்று இறங்கிப் போய் விட்டாள்.

======

நேகாவுக்கு முகுந்த்துடன் கல்யாணம் நிச்சயம் ஆனது.

"அங்கிள். உங்களுக்கேத் தெரியும். ஏற்கனவே என்னோட ஷிப்பிங் பிசினஸ் என் வீக் என்டைக் கூட எனக்காக இல்லாமல் பண்ணி விட்டது. இப்ப எதுக்கு நீங்க கொடைக்கானல் வீட்டுக்கு ஷிப்ட் செய்யணும். உங்க பங்களா, ஷாப் எல்லாத்தையும் வித்துட்டு எங்களோட வந்துடுங்களேன். எனக்கும் அம்மா அப்பா இல்லை. என் பங்களா இதைவிட ரொம்ப பெரிசு. நாம சேர்ந்தே இருக்கலாம். தேர் இஸ் நோ பாயின்ட் இன் டிஸ்கசிங் திஸ் பர்தர்" முகுந்த் சிவாவிடம் கூறுவதைக் கேட்ட அபிக்கு தேள் கொட்டிய உணர்வு.

"கவலைப் படவேண்டாம் முகுந்த். நேகா எல்லாத்தையும் பார்த்துப்பா. அவ ஏற்கனவே இதில் முழுசா ட்ரைன் ஆகிட்டா." என்றாள் அபி.

"அம்மா ப்ளீஸ். முகுந்த் வீட்டில் இருக்கறதே லேட் ஈவிநிங்க்லதான். அப்போ கூட நான் உன் பிசினசப் பார்ப்பேனா, இல்லை உன் வீட்டைப் பார்ப்பேனா. அதுவும் தவிர உன்ன மாதிரி வீட்டை விட்டுட்டு பிசினஸ் பிசினஸ்னு பணத்து பின்னாடி ஓடரதுல எனக்குத் துளியும் ஆசை இல்லை. சீக்கிரம் ஒரு குழந்தைப் பெத்துகிட்டு, என் முகுந்த், என் குழந்தை மட்டுமே என் உலகம்னு வாழப்போறேன். ஒரு நல்ல மனைவியா, அருமையான அம்மாவா மட்டும் இருக்க ஆசைப்படறேன். ஐ திங்க் யு நெவர் டிரைடு டு ஃபில் தட் வேய்கன்ட் ஸ்பய்ஸ் ஃபார் மீ மாம். என்னை மன்னிச்சுக்கோ"

சிவா ரொம்பவும் வருத்தப்பட்டான். கல்யாணம் முடிந்து நேகாவை அனுப்பிய பின் வீடு ரொம்பவும் பெரியதாகிப் போனது.

====

"ஐம் சாரி சிவா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நாம இன்னொரு குழந்தை பெத்துடிருக்கணும்." அழுதவளைத் தூக்கி,

"அபி. என்னையும் மன்னித்துடு. நானும் உன்கிட்ட ஒரு உண்மையை மறச்சுட்டேன்." என்றான்.

அபி அதிர்ச்சியுடன் நிமிர்ந்து "வாட் டூ யூ மீன்?" என்றாள்.

"என் செகரட்டரி மீனா. அவள் என்னைப் போலவே அக்கறையுடன் என் பிசினசையும் நாம பார்த்துப் பார்த்துக் கட்டின வீடும் அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாத்துக்கும் மேல நம் பிசினசைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் அவளுக்கு அத்துப்படி"

"சிவா. டோன்ட் டெல் மீ. மீனாவுக்கு உன் மகள் நேகா வயதுதான்." என்று சீறினாள்.

"உன்கிட்ட சொல்லாமையே மீனாவை தத்தெடுத்து என் பிசினசுக்கும் வீட்டுக்கும் வாரிசாக்கிட்டேன்"

3 comments:

நந்தாகுமாரன் said...

முன்பே சொன்னது தான் - கதையின் ஸ்வாரஸ்யமான உரையாடல் நடையின் லாவகம் எனக்குப் பிடித்தது ... கூடிய விரைவில் ஆனந்த விகடனில் உங்கள் கதைகளை எதிர்பார்க்கலாம் எனத் தோன்றுகிறது ... best of luck ...

நசரேயன் said...

விலாசம் இருந்தா கொடுங்க.. என்னையும் தத்து எடுக்க முடியுமான்னு கேட்கணும்

Unknown said...

நன்றி நந்தா. நசரேயன்.

நசரேயன். துபாய். விவேகானந்தர் தெரு. பஸ் ஸ்டாண்ட் அருகில். :))

Post a Comment