இன்று போல் ஒரு வாழும் நாள்

அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய ப்ரோஜெக்ட்ஸ் கொடுத்த மன அழுத்தத்தில் பாடல்கள் கேட்பதே மறந்து விட்டது. இருந்த ஒரு நாளையும் வலைப் பக்கங்கள் படிக்கும் ஆசையில் பாடலை மறந்தேன்.

இன்று மீண்டும் ஒரு நாள் எனக்காகவே முழுமையாய் வாழ... மீண்டும் பாடல்கள் கேட்டேன்.

அட்னன் சாமி மற்றும் என் அம்மாவின் குரல் போன்ற கே.எஸ். சித்ரா பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தேன்.

இந்த ரெண்டு பாட்டையும் கேட்டு அப்படியே தூங்கிட்டேன். ஏதோ, யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்றே ஆசை. ஆனால் ஆபிஸ்ல இருந்தா உங்களுக்கு இவை உதவாது. ஏன்னா நீங்க ஏற்கனவே...
(நசரேயன் நீங்க அப்பிடியே சிரிச்சிட்டே தூங்கிடுங்க - சரியா)

அட்னன் சாமி-யை இங்கே பாருங்கள், கேளுங்கள்.

சித்ரா-வின் தாலாட்டு இங்கே டவுன்லோட் செய்து கேளுங்கள். பெருமழாக்காலம் என்ற மலையாள சினிமாவிலிருந்து. இந்தப் பாட்டையும் கேளுங்கள், பாருங்கள்.

கொசுவத்தி வேறு பற்றிக் கொள்ள, முழிப்பு வந்து விட்டது ;(

பழைய நினைப்புடா பேராண்டி-ன்னு மகிழ்ந்து அப்பிடியே, dvd-ல மெக்கநாஸ் கோல்ட் (Macanas Gold) பார்க்கப்போறேன். அப்பறம், ஹைமா(Heima), டியர் ஜசரி-ஏ லெட்டர் டு சன் அபௌட் ஹிஸ் பாதர் (Dear Zachary: A Letter to a Son About His Father) என்ற இரண்டு டாகுமெண்டரிப் படங்கள் பார்க்கப் போகிறேன். இப்படங்களை நான் எத்தனாவது முறை பார்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை, இன்று போல் ஒரு வாழும் நாள் வந்தால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.

பாக்றது டாகுமெண்டரி, இதுல என்ன பெருமைன்னு கேக்காதீங்க. நீங்க பாக்கலன்னா முடிந்த போது இப்படங்களைப் பார்க்கவும் என்றே எச்சரிக்கிறேன்..

9 comments:

நசரேயன் said...

//அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய ப்ரோஜெக்ட்ஸ் கொடுத்த மன அழுத்தத்தில் பாடல்கள் கேட்பதே மறந்து விட்டது. இருந்த ஒரு நாளையும் வலைப் பக்கங்கள் படிக்கும் ஆசையில் பாடலை மறந்தேன்.//

கடல்ல தீ அணைக்கிற வேலையோ ?

நசரேயன் said...

//
அட்னன் சாமி மற்றும் என் அம்மாவின் குரல் போன்ற கே.எஸ். சித்ரா பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தேன்.இந்த ரெண்டு பாட்டையும் கேட்டு அப்படியே தூங்கிட்டேன்.
//

உங்க குரல்ல பாடி இருந்தா, கேட்ட உடனே தூக்கம் வருமா ?

நசரேயன் said...

//நீங்க பாக்கலன்னா முடிந்த போது இப்படங்களைப் பார்க்கவும் என்றே எச்சரிக்கிறேன்..//
எனக்கு இங்கிலிபிசு தெரியாது

Vidhoosh said...

//கடல்ல தீ அணைக்கிற வேலையோ ?//

இல்லங்க.. யாருமே இல்லாத கடையில டீ ஆத்தறது மட்டும் தான்..

Vidhoosh said...

//உங்க குரல்ல பாடி இருந்தா, கேட்ட உடனே தூக்கம் வருமா?//

ம்ம்ம்...ஆனா என் பொண்ணு பாடவேண்டாம்னு தான் சொல்லுவா..

Vidhoosh said...

///எனக்கு இங்கிலிபிசு தெரியாது ///

பரவால்லை ..
"தங்க மகன் தோண்டிய தங்கப் புதையல்" (Macanas Gold)
"ஐஸ் லேண்டில் ஐஸ்வர்யா" (Heima)
"சிறையில் பூத்த சின்ன மலர்" (Dear Zachary: A Letter to a Son About His Father)

அப்பிடீனுல்லாம் தமிழாக்கம் பண்ணி ரிலீஸ் ஆகும்...அப்பயாவது பாருங்க..

நட்புடன் ஜமால் said...

"தங்க மகன் தோண்டிய தங்கப் புதையல்" \\

ஹா ஹா

பதிவை விட இந்த பின்னூட்டம் இரசிக்க வைத்தது.

Vidhoosh said...

thanks jamaal.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

நானும் சில உலக படங்களை எழுதி இருக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

Post a Comment