காதல் கவிதை எழுதினேன்! பேனா மையும் தீர்ந்தது!


உன் முன்னாலே எத்தனை
இருக்கிறது sample
ஒரு முறையாவது
என்னையும் pick செய்
என் காதலின் icon-னில்
எப்போதேனும் click செய்
அன்போடு தினமும் சொல்வேன்
எத்தனை good morning
இப்படியா முறைப்பது என்னை
0 error
ஆனால் 5 warning...
காலங்காலமாய் காதல்
உன்னை செய்வேன் நான் repeat
நீ மறுத்தாலோ உன்னை
செய்து விடுவேன் நான் shift delete
நீ அழகி தான் ஆனால்
இருக்கிறாய் stand-a-lonely ஆக
உன் பிரச்சினையே இதுதான்,
இருக்கிறாய் read only ஆக
நீ என் காதலை செய்ய மறந்து விட்டாய் taste
என் இதயத்தை இப்படி cut செய்தாய்,
செய்ய மறந்து விட்டாய் paste
என் இதயத்தை உடைத்து விட்டால்
நான் ஆகி விடுவேனா dead?
ஐயோ பாவம் நீ!! உனக்குத் தெரியாது...
என்னிடம் உள்ளதே இன்னும்
ஆயிரம் ஆயிரம் thread!!!


சைக்கிள் - 1

டிஸ்கியாம்பா... All characters in this story are fictitious, exceptious, ablatitious, cautious, adventitious, combustious, deceptious, gumptious, supposititious, temptatious, and unconscientious and vexatious....

ஸ்ஸ்ஸ்... அப்பா...டி...எவ்வளோ கஷ்டம்பா.

But if you find anyone with relevance to persons living may be considered dead, and their assets transferred to my account.

நான் "பல்லி". சுவற்றுப் பல்லி இல்லீங்க. சிங்கப்பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டே இருப்பதால் என் தமிழ் ஆசிரியை செல்வி பயந்து கொண்டே வைத்தப் பட்டப் பெயர். என் நிஜப் பெயர்தான் ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமே.

அவையின் உறுப்பினர்கள்---

1. முன் வரிசையில் இருக்கும் பல்லியான என்னைக் கூட தலைவியாக ஏற்றுச் சிரிப்பாச் சிரிக்கும் சபையில், என் அருகில் அமர்ந்திருக்கும் என் ஆத்ம நண்பர்களான, எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு போய் அடிவாங்கி வரும் "சொங்கி" சீனு, அவனுக்கு எப்போதும் "உனக்கெல்லாம் பட்டாத்தாண்டா புரியும்" என்று ஆறுதல் சொல்லும் "பட்டாத்தான்" ரமேசு, ஒரு சப்பை அழிலப்பருக்காகக் (eraser) கூட லோலோவென்று பின்னால் அலையும் "லோலாக்கு" கமலா, எதைத் தின்றாலும் "எனக்கு தாப்பா" என்று கேட்கும் "தாப்பா" தாரணி ஆகியோர்,

மற்றும்...

2. பேசும் போது வாயிலிருந்து கமழும் புனுகு மணத்தில் கிறங்கி, மயக்கம் போட்டு, கேர் ஆகி, தெத்தி இருக்கும் தேங்காய்த் துருவிப் பற்களின் இடையிலிருந்து தெளிக்கும் அந்த அன்பு மழையில் நனைந்து பிரதியுபகாரமாக, எங்கள் சபை அன்புடன் கொடுத்தப் பெயருக்கு சொந்தக்காரியான "பன்னீர்" செல்வி - அவையின் அரசியான தமிழ் மேடம்

மற்றும்......

3. பின்
வரிசையில் "பூரா அவிங்களாத்தான்” இருக்கும் பழங்குடி மக்கள் அதிர்ஷ்டம் பண்ண அல்பக் கட்டைகள். பெயிலானா இப்போல்லாம் தற்கொலைதான பண்றாங்க. அப்போல்லாம் இந்த நல்லப் பழக்கம் எல்லாம் கிடையாதுங்க. அதுங்க, மறுபடியும் அதே கிளாஸ்ல உக்காந்து புதுசா வரும் எங்களை ராகிங் கொடுமை செய்தது மட்டும் இல்லாமல், எங்களுக்கு முன் சீட்டை ஒதுக்கி, நாங்கள் பன்னீர் சிந்திய முகத்தைத் துடைக்கும் போதெல்லாம் சிரித்துச் சிரித்தே எங்கள் விரோதத்தைச் சம்பாதித்த பயங்கரவாதிக் கூட்டத்தின் தலைவன், யாரையாவது பற்றி படு கேவலமாக புறம் பேசி அவர்களை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கும் "சிக்லட்" மணி, "பாம்" சூரி (நீங்கள் நினைக்கும் அதே தான்), டபுள் மீனிங் பேசும் "மேட்டர்" சிதம்பரம், ஒன்றரைக் கண்ணன் "பாதி பரமசிவம்" குமார் மற்றும் அவர்களின் ஜால்ராக்கள்.

இது ஒரு பெண்ணின் ஆட்டோ..பய... சரி சரி...
இந்த முன் வரிசைக்கும் பின் வரிசைக்கும் நடக்கும் மகாபாரதக் காவியம் தான் நீங்கள் இனி படிக்கப் போவது. படித்து, மேல் வரிசையும், கீழ் வரிசையும் அதிரும்படி சிரியுங்கள். ”உலகம் இன்னுமா என்னைய நம்பிட்டு இருக்கு”..

இனி வாரம் ஒரு முறை, சனியன்று மட்டும், வெளி வரும்... தவறாமல் படியுங்கள். ஊட்டம் கொடுங்கள். பின்னூட்டம் தான். அதுக்கே கஞ்சப்படும் மகாபிரபுக்கள் நீங்க, பின்ன ஹார்லிக்ஸா கொடுப்பீங்க.

சைக்கிள் போகும் ...

உன் கையால் ஒரு கடிதம்

மைக்கல் ஜாக்சன் - King of pop

பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் அமெரிக்கா கலிபோர்னியா - லாஸ் ஏஞ்சலஸ்-சில் மரணம் எய்தினார்.

Hard to believe his demise. பாப் இசைக்கு பேரிழப்பு.

மரணத்தை ஏற்படுத்தும் மரபணு கோளாறான ஆல்பா 1 ஆன்ட்டி டிரிப்சின் குறைபாட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்து, அவரது பார்வையில் 95 சதவீதம் போய், பேச்சும் கிட்டத்தட்ட நின்றே போய் விட்ட நிலையில், மரணம் அவருக்கு தீராத துன்பங்கள் மற்றும் மன உளைச்சல்களிலிருந்து விடுதலை என்றே கூற வேண்டும்.

பிரபலமான வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், பல இன்னல்களுக்கு இடையே துன்பப்பட்டுக் கொண்டிருந்த இவரது ஆத்மா இனியும் நிம்மதியாக உறங்க பிரார்த்தனை செய்கிறேன்.

Never Can Say Goodbye!!!

குடிகாரன் உளறல்

எனக்கான வெயில்

அந்த 32 பல்லையும் உடைங்கப்பா....

கதை கவிதையான கதை

என் நிழலில் கூட தெரிந்தது
அவன் கை ரேகைகள்
அவனை விட இனிமை அவன் நினைவுகள்
ஒளியாய் கவிழ்கின்ற இருளில்
கதை கவிதையான கதை
எழுதும் கடைசி அத்தியாயம்
இன்னும் எழுதாத பக்கங்களைச் சுமந்து
அவன் நினைவுகள் ஏதோ வகையில்
பயணித்துச் சென்றடைந்த ஒரு இடத்தில்,
தூங்காத இரவுகளை மையாக்கி
நான் எழுதிய என் கதையை
எனக்கே படித்தான் அவன்..

காத்திருத்தல்

சம்பளம்


காமுன்யக் - ஒரு பெண் சிங்கம்

நேற்றிரவு அனிமல் ப்ளானெட்டில் Heart of lioness மறு ஒளிபரப்பானது. ஒரு மணிநேர நிகழ்ச்சி. அனிமல் ப்ளானெட்டில் ஜனவரி 2002-ல் ஸம்புரு நேஷனல் ரிஸர்வ் கென்யாவில் shoot செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் (படபிடிப்புக் குழுவினரால் காமுன்யக்-Kamunyak என்று பெயரிடப்பட்டது) தாயைப் பிரிந்த ஒரு ஆரிக்ஸ் (orix) மான் குட்டியை தத்து(?) எடுத்துப் பாதுகாப்பதை shoot செய்திருந்தனர். நெஞ்சை உருக்குவது போல இருந்தது அந்த சிங்கத்தின் உணர்வு

இந்த படத்தைத் தொகுத்து வழங்கியுள்ள ஸபா என்ற பெண்மணி (Saba Douglas-Hamilton, presenter for Heart of a Lioness), ஸம்புரு மக்கள் அந்த பெண் சிங்கத்தை ஒரு கடவுளாகவே பார்க்கின்றனர் என்கிறார். இந்த பெண் சிங்கம் மான்குட்டியைத் தத்து எடுத்த பின் இரண்டு மூன்று வாரங்களாக வேட்டையாடவே செல்லவில்லை என்கிறார். மேலும் அந்த பெண்சிங்கம் அங்கே வரும் மற்ற மான்களையும் விரட்டி விட்டு அந்த மான்குட்டியே மற்ற மான்களுடன் தப்பி ஓடும் போதும், போக விடாமல் தன்னுடனேயே வைத்திருக்கிறது. அந்த பெண்சிங்கம் இந்த மான்குட்டியை உணவுக்கான அல்லாமல் தன் குடும்பமாக நினைத்து பாதுகாக்கிறது என ஸபா கூறுகிறார்.

தண்ணீர் குடிக்கத் தன்னுடன் கூட்டிச் செல்கிறது. அப்போது யானை கூட்டங்களை குழுவாக யானைகளோடும், அந்தந்த மிருகங்கள் தன் இனக் குழுவினோடு வருவதையும், இவை இரண்டும் ஒன்றாக நீர் அருந்துவதையும் காட்டுகின்றனர். நான் மிகவும் இரசித்த அழகான காட்சி இது.

கடைசியில், ஒரு ஆண்சிங்கம் அந்த மான் குட்டியைச் சாப்பிட்டு விடுகிறது. அப்போது ஆண் சிங்கத்தை எதிர்க்க முடியாமல் ஒதுங்கும், அந்த பெண் சிங்கத்தின் சோக உணர்வை அப்படியே படம்பிடித்துள்ளார்கள். மறுநாள் மதியமே அப்பெண் சிங்கம் ஒரு பன்றிக்குட்டியை கொன்று சாப்பிடுகிறது. இப்போது ஸபா, அந்த மான்குட்டியை இழந்ததும் அப்பெண்சிங்கம் தன் மென்மை உணர்வுகளை இழந்து மீண்டும் predator ஆகி விட்டது என்று கூறுகிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு மான் குட்டியோடு அதைக் கண்டதாகவும், ஒரு வருடம் கழித்து ஐந்து மான் குட்டிகளோடு கண்டதாகவும் அவர் கூறுகிறார்.
========================
இதை முன்பே ஓரிரு முறை பார்த்திருந்தாலும், நேற்றிரவு ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அப்போது என் மனதில் இந்தக் கேள்விகள்...

  • சிங்கங்கள் பொதுவாகவே pride எனப்படும் ஒழுங்குபட்டக் குழுவில்தான் வாழும். ஆனால் இந்த பெண் சிங்கம் ஏன் தனியாக இருக்கிறது?
  • எப்போதும் அதன் கழுத்துப்பகுதியில் ஈக்கள் மொய்த்தபடியே இருக்கிறதே? நோய்வாய்ப்பட்டதாலேயே அந்த பெண்சிங்கம் தனித்திருக்கிறதா? அப்படிஎன்றால் அது மற்ற மான்களைத் துரத்தும் போது ஏன் அந்த ஈக்கள் காணப்படவில்லை?
  • பார்த்துக்கொண்டிருந்த எனக்கே எப்போது அந்த பெண் சிங்கம் அந்தமான்குட்டியை சாப்பிட்டு விடுமோ என்றிருந்தது. அந்த மான்குட்டிக்குஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும்? அந்த பயம்அதற்கு இருந்ததால் தானே அந்த மான்குட்டி தன் இனத்தோடு தப்பி ஓடமுயன்றது?
இது இயற்கையையோ தாய்மையுணர்வையோ காட்டிய ஒரு நிகழ்ச்சியாக என்னால் பார்க்க முடியவில்லை. மாறாக இரண்டு பரிதாபமான மிருகங்கள் உணவின்றித் தவிக்கும் நிலையை மட்டுமே என்னால் message between the lines ஆகப் பார்க்க முடிந்தது.

படப்பிடிப்புக் குழுவினருக்கு எந்த விதமான கட்டாயங்கள், சட்டத்திட்டங்கள் இருக்கின்றன என்பது பற்றிய ஞானம் எனக்கு இல்லை. ஆனால் ஒரு வேளை நான் ஸபா-வாக இருந்திருந்தால், எல்லா ரூல்ஸையும் (rules) உடைத்தெறிந்து விட்டு அந்த சிங்கத்தை டிரான்க்குலைஸ் (tranquillise) செய்து விட்டு மான்குட்டியைக் காப்பாற்ற முயற்சித்து இருப்பேன். இது இயற்கை.. அதை தொந்தரவு செய்யக்கூடாது என்று பேசாமல் இருந்திருக்க மாட்டேன்.

நாமும் இயற்கையின் ஓரு அங்கம்தானே. அந்த மிருகம் தன் இயல்பிலிருந்து மாறி, இயற்கைக்கு மாறாக, தன் மேன்மையான குணத்தைக் காட்டும் போது ('a bit of uncharacteristic humanity' in Saba’s words), நமக்கு அம்மிருகத்திடம் இல்லாத பகுத்தறிவு இருக்கிறதே. தாயைப் பிரிந்த அந்த மான்குட்டியை காப்பாற்ற முயற்சித்த ஒரு மிருகத்திற்கு இருந்த உணர்வு கூட அந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே, instead filming it was raw brutality, என்று வருந்தினேன். "We must let nature take its course" is a cold blooded attitude. Oh, wait! They did throw a little meat in the way of the lioness!

பெண்சிங்கத்தின் அந்த உணர்வை an exception to 'the rule' -ஆக ஏற்ற நம்மால், அந்த மான்குட்டியை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய், அதை வாழவிடுவதை மறுத்து 'within their nature'-ஆக இருக்க மனிதர்கள் முடிவெடுத்தது எந்த விதத்தில் நியாயம்?

குறைந்த பட்சம் அந்த ஆண்சிங்கம் தன் குணத்தை நேர்மையான முறையில் காட்டி, (கருணை) கொலை செய்ததால் எப்படியும் உணவின்றி இறக்கப்போகும்அந்த மான்குட்டி மிகுதி நாளையும் பயத்தோடு கழிக்காமல் இறந்தே போனது? அந்த பெண்சிங்கமும் தகுந்த குழுவில் இல்லாமல் பின் நாட்களில் இறந்தே போயிருக்கும்.

ஆனால் my guess is the filmmakers probably acted out their voyeuristic blood lust (very thinly disguised with the sheen of 'respecting nature') and filmed that too. I understand and respect the opinion that we should leave the wild to the wild, but this was different. This was NOT a normal circumstance. Reality TV completely sucks, even reality TV wild kingdom style. I've always justified it as "They are wild animals, and so goes the circle of life." Not this time.

மற்றபடி ஒரு தனிமைப்பட்ட பெண் சிங்கத்தின் மென்மையான உணர்வுகளை பொறுமையுடன் follow செய்த படம், அதன் அருமையான போட்டோக்ராபி, அற்புதமான தொகுப்பு.

ஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்


தேங்க்ஸ் தமிழ் மீடியா
==========================
==========================

ரூபாய் நோட்டில் இடம் பெற்ற பிள்ளையார்

மலேசியாவில் பிள்ளையார் படம் போட்ட 20 மலேஷிய டாலர் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை அந்த நாட்டில் பலரும் நன்றியுணர்வோடு பாதுகாத்து வருகின்றனர். ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன் அங்கு பணவீக்கம் ஏற்பட்டு, அந்த தேசத்து கரன்சியின் மதிப்பு சரியத் துவங்கியது. அப்போது, மலேசிய அரசுக்கு பிள்ளையாரின் ஞாபகம் வந்து, கரன்சியில் பிள்ளையார் படத்தை அச்சிட்டனர். வினை தீர்த்தார் விநாயகர்.
=====

இதைப் படித்தவுடன், இதுவும் நினைவுக்கு வந்துவிட்டது.

=====

நீங்கள் காண்பது நமது அண்டை நாடான இந்தோனேசியாவின் இருபதாயிரம் ரூப்பியா பண நோட்டு. அந்நோட்டின் இடது பக்கம் ஒரு குட்டிப் பிள்ளையார்ஜம்மென்றுஉட்கார்ந்திருக்கிறார். பார்க்கவே சந்தோமாக இருக்கிறது.

இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அது தன் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மறக்கவில்லை. இந்தோனேசியாவில் (முக்கியமாக பாலித்தீவில்) பழமையான இந்துக் கோயில்கள் இன்னமும் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அது தன் நாட்டின் தொன்மையான கலாச்சாரங்களை சமூகத்திற்கும், உலகத்திற்கும் வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாக பண நோட்டுகளில் பல்வகை கலாச்சாரத்தின் அம்சங்களை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு. ஆழமான பின்னணி. மிகவும் சூட்சுமமான பின்னணி.

ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன.

சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை.

ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே.

ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு.

ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது.

வஜ்ரபோதி என்னும் தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள்.

அந்த மரபில் வந்த கடைசி மன்னரின் காலத்தில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜாவானியர் மந்திரதந்திரங்கள், ஜோதிடம் ஆகியவற்றில் வல்லவர்கள். அந்த சமயத்தில் சில சாபங்கள், ஆணைகள், சபதங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை பிறந்தன. அதன்பின்னர் ஆட்சி பல கைகள் மாறி டச்சுக்காரர்களிடம் சென்றது. அந்த சாபங்கள், சபதங்களை மக்கள் மிகவும் நம்பியிருந்தனர். 'ராத்து' எனப்படும் பெருவீரன் ஒருவன் பிற்காலத்தில் வரப்போவதாக நம்பப்பட்டது. அப்போது ஜாவா மீண்டும் பழைய க்ஷத்திரிய மரபினர் கைக்கே சென்றுவிடும் என்றும் நம்பினர். அந்த தீர்க்கதரிசனத்தை நடக்கவொட்டாமால் தடுக்க பலர் முயன்றும் வந்திருக்கின்றனர். ராத்துவின் வருகையால் ஜாவாவும், ஜாவாவின் தலைமைத்துவத்தில் இந்தோனீசியாவும் வல்லரசாக மாறிவிடுமோ என்று பயந்தனர். ராத்து என்னும் அந்த க்ஷத்திரிய வீரன் ஜாவாவின் முக்கிய நகரமாகிய பாண்டுங் என்னும் பிரதேசத்தில் தோன்றுவான் என்று ஏற்கனவே நம்பப்பட்டது.

சொக்கார்ணோ தம்மை ஓர் அவதார புருஷனாக நினைத்திருந்தார். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதிக்கொண்டார். ஒருமுறை வெட்டவெளியில் நிர்மலமான ஆகாயத்தில் மின்னல் தோன்றச்செய்து வெள்ளைக்காரப் பத்திரிக்கையாளர்கள் சிலருக்குக் காட்டினார். அவரே அந்த ராத்துவாக இருக்கக்கூடும் என்றும் நினத்தார்கள்.அந்தப் பழைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி சொக்கார்ணோவினால் உண்மையாகியது.

அவரைத் தள்ளிவிட்டு வந்த சுஹார்த்தோ, நாளடைவில் தம்மையே பழைய பாண்டுங் மன்னர் பரம்பரை என்று நினைக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் உண்டு. இப்போதைய யோக்ஜாக்கார்த்தா சுல்த்தானுக்கு அவர் சகோதர முறை ஆகிறார். ஏதோ ஒரு முறையில் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு பாண்டுங் ராஜகுமாரி ஒருத்தியை மணம் முடித்துவைத்தார். அந்த திருமண பெர்ஸாண்டிங்க் சடங்கின்போது, மணமகளும் மணமகனும் பண்டைய க்ஷத்திரிய மரபையட்டி ஆடையணிகள் புனைந்து மணம் செய்துகொண்டனர்.
இந்தோனேஷியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தபோது, சுஹார்த்தோவின் தரப்பினர் பழைய தீர்க்கதரிசனங்கள், சாபங்கள் போன்றவற்றையெல்லாம் கிளறிக் கிண்டிப் பார்த்தார்கள். பெரும்புலமை வாய்ந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் ஆகியோரையெல்லாம் வைத்து மிகவும் நுட்பமாக ஆராயச் செய்தனர். இந்தோனேஷியாவின் தற்சமய இடையூறுகள், துன்பங்களை நீக்குவதற்குச் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

அவற்றில் ஒன்று, கணேசரை வைத்துச்செய்யவேண்டிய பரிகாரம்.

பொருளாதாரம் சீரடையவும், இந்தோனேஷிய ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊறுகள் நீங்குவதற்காகவும் செய்யப்பட்ட பரிகாரங்களின் ஓர் அங்கமாக கணேசரின் உருவத்தை கரன்ஸி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் பயன்படுத்தியது, பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த மூர்த்தம் மிகவும் வீரியம் மிக்கது. அந்த ரூப்யா நோட்டை வெளியிட்டு 18 மாதங்களுக்குள்ளாக சுஹார்த்தோவின் ஆட்சிக்கு மோசம் நேரிட்டது.

ஏன் அவ்வாறு நடந்தது?

இந்தோனேஷியாவின் நல்வாழ்வுக்கு இடையூறுகள் இல்லாவண்ணம் அந்த ஜாவானிய தாந்திரீகர்கள் சடங்குகளைச் செய்து பரிகாரமும் கண்டனர். இந்தோனேஷிய நல்வாழ்வுக்குக் குந்தகமாக இருந்தது சுஹார்த்தோவின் ஆட்சிதான். ஆகவே அந்த ஆட்சி அகன்றது. அதை நடத்திவர் சுஹார்த்தோ என்பதாலும் அவரே இந்தோனேஷியாவின் பாழ்நிலைக்குக் காரணர் என்பதாலும் அந்த சூட்சும மர்மசக்தி அவரை அகற்றிவிட்டது. அவர்கள் நம்பியது வீண்போகவில்லை. ஆட்சியிலிருந்து சுஹார்த்தோவும் அவருடைய ஆட்களும் அகன்றனர். ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நீங்கியது. இவ்வாறு அற்புதமான அதிசயமான விதத்தில் ப்ராம்பனான் கணேசர் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அரிய காரியத்தை சாதித்துவிட்டார்.

நீ இல்லை இப்போது

பகல் வேஷக்காரன்

இன்று போல் ஒரு வாழும் நாள்

அதிக கவனத்துடன் செய்ய வேண்டிய ப்ரோஜெக்ட்ஸ் கொடுத்த மன அழுத்தத்தில் பாடல்கள் கேட்பதே மறந்து விட்டது. இருந்த ஒரு நாளையும் வலைப் பக்கங்கள் படிக்கும் ஆசையில் பாடலை மறந்தேன்.

இன்று மீண்டும் ஒரு நாள் எனக்காகவே முழுமையாய் வாழ... மீண்டும் பாடல்கள் கேட்டேன்.

அட்னன் சாமி மற்றும் என் அம்மாவின் குரல் போன்ற கே.எஸ். சித்ரா பாடல்களைக் கேட்டு கொண்டிருந்தேன்.

இந்த ரெண்டு பாட்டையும் கேட்டு அப்படியே தூங்கிட்டேன். ஏதோ, யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்றே ஆசை. ஆனால் ஆபிஸ்ல இருந்தா உங்களுக்கு இவை உதவாது. ஏன்னா நீங்க ஏற்கனவே...
(நசரேயன் நீங்க அப்பிடியே சிரிச்சிட்டே தூங்கிடுங்க - சரியா)

அட்னன் சாமி-யை இங்கே பாருங்கள், கேளுங்கள்.

சித்ரா-வின் தாலாட்டு இங்கே டவுன்லோட் செய்து கேளுங்கள். பெருமழாக்காலம் என்ற மலையாள சினிமாவிலிருந்து. இந்தப் பாட்டையும் கேளுங்கள், பாருங்கள்.

கொசுவத்தி வேறு பற்றிக் கொள்ள, முழிப்பு வந்து விட்டது ;(

பழைய நினைப்புடா பேராண்டி-ன்னு மகிழ்ந்து அப்பிடியே, dvd-ல மெக்கநாஸ் கோல்ட் (Macanas Gold) பார்க்கப்போறேன். அப்பறம், ஹைமா(Heima), டியர் ஜசரி-ஏ லெட்டர் டு சன் அபௌட் ஹிஸ் பாதர் (Dear Zachary: A Letter to a Son About His Father) என்ற இரண்டு டாகுமெண்டரிப் படங்கள் பார்க்கப் போகிறேன். இப்படங்களை நான் எத்தனாவது முறை பார்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை, இன்று போல் ஒரு வாழும் நாள் வந்தால் அதைப் பற்றியும் பகிர்கிறேன்.

பாக்றது டாகுமெண்டரி, இதுல என்ன பெருமைன்னு கேக்காதீங்க. நீங்க பாக்கலன்னா முடிந்த போது இப்படங்களைப் பார்க்கவும் என்றே எச்சரிக்கிறேன்..

பெயர் இல்லாதது....

சால மிகுத்துப் பெயின்

இன்று பள்ளி reopening. என் மகள் UKG. என் மகளைப் பள்ளியில் drop செய்த போது அவள் பள்ளியில் பயிலும் சக தோழ-தோழியரின் அப்பா-அம்மாக்களைச் சந்தித்தேன். அப்பா-அம்மாக்களாக இருப்பதாலும், தினசரி சந்திப்பதாலும் என் தோழர்-தோழிகளாக ஆனவர்கள் அவர்கள். LKG-யில் புதிதாகச் சேர்ந்து கதறிக்கொண்டு இருந்த மழலைகளின் பெற்றோர் பாதி பேர் மழலைகளுக்கு மேல் அழுது கொண்டிருந்தனர்.

எங்கள் எல்லோரையும் சிறிது நேரம் prayer hall-லில் அமர வைத்தனர். ஒரு மைக்கையும் கொடுத்து எல்லாப் பெற்றோரயும் அவரவர் எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தனர். எங்கள் பொழுதும் சிறப்பாகப் போகவேண்டும் என்ற நல்ல அக்கறைதான் பள்ளி நிர்வாகத்திற்கு. இரண்டு மணி நேரம்...

சக மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களை பேச விட்டு கேட்பதும் எத்தனை அற்புதமான அனுபவம் என்றும், அது எத்தனை informative ஆக இருக்கிறது என்பதையும் தெரியவில்லை என்றால் அதை அனுபவித்து உணர்ந்தவர்களிடம்தான் கேட்டு அறிய வேண்டும்.

குழந்தைகளை படிப்பு அல்லாத மற்ற சுய முன்னேற்ற செயல்களில் ஈடுபட வைப்பது அவர்கள் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது உண்மைதான். ஒரு அம்மா தன் 4 வயதுக் குழந்தையை பள்ளி முடிந்ததும் Drawing, Vedic Maths, Keyboard, Vocal, Handwriting, dance, karate, personality development(????) இவற்றிற்கெல்லாம் அனுப்புவதாகக் கூறினார். கேட்டால் ஜப்பான் பாஷையில் "rest" என்ற வார்த்தையே கிடையாதாம். இதில் என்ன பெருமை என்று தெரியவில்லை. எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 4 வயதுக் குழந்தைக்கு personality development...கொடுமை!!

ஏற்கனவே பள்ளி 9 முதல் 2.30 வரை, இதற்குப்பின், மேற்கூறிய வகுப்புகளெல்லாம் வகுப்புக்கு அரை மணிநேரம் என்றே இருந்தாலும் இரவு 7 மணிவரை அக்குழந்தை பயங்கர பிஸியாகவே இருக்கும். நான்கே வயதுடைய அக்குழந்தைக்கு சிறிது உறக்கம் / ஓய்வு வேண்டாமா? எப்போது விளையாடும், எங்கே என்ன சாப்பிடும், மற்ற சக வயதுக் குழந்தைகளோடும் மற்றவர்களோடும் எப்போது பழகும், புத்தகம் படிக்குமா... overstressed ஆகிவிடாதா என்றெல்லாம் நினைத்து-- என் முறை வந்த போது நான் பகிர்ந்து கொண்டது இதுதான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். (குறள் எண்: 475)

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

தன்னை விட தன் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்பது நியாயமான ஆசைதான். உங்கள் குழந்தைகளை இதன் மூலம் நீங்கள் அதிக சுமை போடுகிறீர்களா என்றும் யோசித்துப் பாருங்கள். மூன்றரை முதல் ஐந்து வயதிற்குள் அவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களையும் கற்றறிந்து விட வேண்டும் என்ற பேராசை பெற்றவர்களுக்கு. ஆனால் அது சாத்தியமா? How much is too much?

ஆனால் ஒரு குழந்தைக்கு பெற்றோருக்கு இருக்கும் IQ-வில் மேலதிகபட்சமாக 50 சதவீதம் அதிக IQ இருக்கலாம். அதையும் மீறி சாதிக்கும் குழந்தைகள் எல்லாம் கடவுளின் குழந்தைகளாகத்தான் இருக்க முடியும்.

எனக்கு ஏதோ ஓரளவில்தான் புத்திசாலித்தனம் உள்ளது என்று நினைக்கிறேன். அவளிடம் கொஞ்சம் அதிகமாக இருக்க முயற்சி செய்வேன். ஆனால் என் மகளிடம் நான் ரொம்ப எதிர்பார்ப்பதில்லை, நான் படித்தது ஒன்று, அலுவலகப் பணி செய்தது ஒன்று, எனக்குள் இருக்கும் என் உண்மையான ஆர்வங்கள் இவை இரண்டும் இல்லாத ஒன்று. இதில் நீங்கள் கூறும் extra curricular activities எல்லாம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எனக்கு இரவு 9 முதல் 10 வரை ஒரு நாள் என் தாத்தா ஒரு நாள் என் அப்பா என கணக்கு, டிராயிங் வரைவது இவையெல்லாம் வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார்கள்.

எல்லாவற்றையும் ஐந்து வயதிலேயே கற்றுக்கொடுத்து உங்கள் பிள்ளைகளை என்னவாக ஆக்க விரும்புகிறீர்கள் என்ற குறிக்கோள் ஏதும் இருக்கிறதா? நாம் ஒன்றை ஆசைப்பட்டு அதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக அது உங்கள் குழந்தையே ஆனாலும் இன்னொருவர் மீது திணிப்பது என்பது வன்முறைதானே?

அவர்கள் ஓரளவுக்கு வளரும் வரை பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி கற்றுக்கொடுப்பதை வைத்து அவர்களுக்கு எதில் உண்மையான ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொண்டு அதைக் குறித்துப் பயிற்சிகள் அளிப்பதே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு எல்லா வண்டிகளிலும் ஒரே நேரத்தில் ஏற்றி விட்டு போய் சேர வேண்டிய இடம் புரியாமல் அக்குழந்தைக்கு படிப்பு உட்பட அனைத்து செயல்களின் மீதும் ஒரு வெறுப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தன் சொந்த வாழ்க்கையையும், வேலையையும் (படிப்பு, ஹோம் வொர்க்), பொழுதுபோக்கு அல்லது ஓய்வு நேரத்தில் செய்யும் செயல்கள், புத்தகம் படித்தல், விளையாட்டு, அவர்கள் வீட்டிலேயே இருக்கும் தாத்தா பாட்டி போன்ற மற்ற உறவுகளோடும் சிறிது நேரம் செலவிடுதல் போன்றவற்றை இப்போதிலிருந்தே balance செய்யக் கற்றுக்கொடுத்தால் பின்னாளில் இந்தப் பாடம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

அப்படி இல்லாமல், இந்தமாதிரி குழந்தை மீது ஒரே நேரத்தில் ஒரே நாளில் இப்படி திணிப்பது அவர்களை எது செய்வது என்று தெரியாதக் குழப்பத்திற்கும், சோர்வடையச் செய்தும், எதுவுமே சரிவர முடிக்க முடியாமல் தான் திறமை குறைந்தவராகவும் தன்னம்பிக்கை இல்லாமல் உணரச் செய்தும், ஊக்கமற்றவராகவும் ஆக்கக் கூடும்.

ஏன் நாமெல்லாம் சேர்ந்து இலவசமாகவே ஒரு play group உருவாக்கி முறையில் அந்நேரத்தில் அவர்களை விளையாட விடக்கூடாது என்றேன்.

இதை கேட்ட போது நிறைய பெற்றோருக்கு என் மீது கோபம். கேள்விக் கணைகளால் துளைத்து விட்டனர். ஒருவர் உங்கள் அனுபவத்தை வைத்து எதையும் கூற வேண்டாம். ஒருவருக்கொருவர் அனுபவம் மாறும் என்றார்.

உண்மைதான். ஆனால் நெருப்பு எல்லோருக்கும் சுடத்தானே செய்யும். ஒருவேளை அவர் தீக்குள் விரல் விட்டு நந்தலாலனைத் தீண்டிய புண்ணிய ஆத்மாவாக இருக்கலாம்.

போகட்டும். குறைந்தது ஏதோ ஒன்று இரண்டு பேர் இதனால் மாற்றி சிந்தித்தால் நான் மகிழ்வேன்.

மனக்கரை

வானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!.

மௌனம்

ஒவ்வொரு உந்தலுக்கும் கிரீச்சிடும்
ஊஞ்சல்
கட்டிய கூடத்தில்
ஓயாத தொலைக்காட்சியின் அலறல் மீறி
ஜன்னல் வழி பாயும் வாகன
அலைகளின் ஓலம் தாண்டி
ஈட்டிப் போல குத்தும் சில
மானுட குரல்கள் தாங்கி
எப்போதும் நடக்கும் பல
தெருச் சண்டைகள் சுமந்து வரும்
காற்றின் சப்தம் கூட இன்றில்லை!
மரணித்தே
விட்டேனோ?

===================================

Version 2

ஒவ்வொரு உந்தலுக்கும் கிரீச்சிடும்
ஊஞ்சல்
கட்டிய கூடத்தில்
ஓயாத தொலைக்காட்சியின் அலறல் மீறி
ஜன்னல் வழி பாயும் வாகன
அலைகளின் ஓலம் தாண்டி
ஈட்டிப் போல குத்தும்
மானுட குரல்கள் தாங்கி
எப்போதும் நடக்கும்
தெருச் சண்டைகள் சுமந்து வரும்
காற்றின் சப்தம் கூட இன்றில்லை!.

இலக்கியவாதிகள் இப்படித்தான் எழுதவேண்டுமா?

இன்று வேறு வேலைகள் ஏதும் இல்லாமல் ஆற அமர இருக்க, என் மொபைலைக்கூட அணைத்துவிட்டு, அகநாழிகை, நந்தா, யாத்ரா (கண்டிப்பாய் இவர்கள் எழுதியவற்றைப் படியுங்கள்), டக்லஸ், தூறல் கவிதை, ஆ.முத்துராமலிங்கம், அனுஜன்யா, பிரவின்ஸ்கா, அபிஅப்பா, அய்யனார், எல்லோர் வலைப்பக்கங்களையும் கொஞ்சம் படித்தேன்.

:) ... நான் கொஞ்சம் லேட். மேற்குறிப்பிட்ட இவர்களின் எழுத்துக்களை, அதுவும் இன்றே, படித்துவிட வேண்டும் என்ற அவசர ஆவலில், ரயில் பயணத்தின் போது ஓடும் மரங்களை இரசிப்பது போல கொஞ்சம் அவசரமாக படித்தேன். நிதானமாய் இன்றே படிக்க முடியாத நிலைக்கு மிகவும் வருந்துகிறேன். அற்புதமான எழுத்துக்கள். இவர்கள் எழுத்துக்களைப் படிக்க வாயிலாக இருந்த வலையுலகிற்கு நன்றி. முழுதாகப் படிக்காமல் என்ன comment கொடுப்பது என்று கேட்க வேண்டாம் ப்ளீஸ். இருந்தாலும், ஒரு சில கவிதைகளைப் படித்து என்னுள் எழுந்த என் எண்ணங்களை மட்டும் பகிர்கிறேன்.

இயல்பிலேயே எனக்கு மொழிகளின் மேல் விவரிக்க முடியாத காதல். அதுவும், உருது கவிதைகளுக்கு அடிமைப்பட்டவள். கஜல் பாடல்கள், தமிழ் கவிதைகள், கிவாஜ, முவ, கல்கி, நா.பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், ஸ்டெல்லா ப்ரூஸ், டெக்னிகல் குரு சுஜாதா போன்றவர்களில் இருந்து அடிமட்ட பக்கோடா பேப்பர் (நிஜமாகவே பொட்டலம் மடித்து வரும் பேப்பர்தான்) வரை, எதையும் விடாமல் முழுதாய் படிக்கும் பேப்பர் கழுதையே நான்.

நான் பன்னிரண்டாம் கிளாஸ் படிக்கும் போது, சமஸ்கிருதம் படித்தேன். நிறையவே படித்தேன். ஆர்வக் கோளாறில் சில சமஸ்கிருத வேத புத்தகங்களைப் படித்து மிரண்டு, ஆனாலும், தோற்கக் கூடாது என்ற ஒரே வீம்பால், பிடிவாதமாய், கொஞ்சம் கொஞ்சமாய் படித்ததில் இப்போதெல்லாம் சிலது புரிகிறது. சமஸ்கிருத வேத, புராணங்கள் கஷ்டமாய் இருப்பதால், புரியாமல் போகின்ற ஒரே காரணத்தால், சமஸ்கிருதம் என்னை விட நன்றாகப் படித்த (அதாவது நிறைய மார்க் வாங்கிய) என் சக தோழர், தோழியர், ஸ்லோகங்களைத் தவிர வேறு எதையுமே படிக்காமல், இப்போது சமஸ்கிருதமே மறந்து போய் இருக்கிறதும் தெரிவதால்... இன்று இதை எழுதுகிறேன்.

Griffith போன்ற பல அறிஞர்கள் சமஸ்கிருதத்தை கரைத்துக் குடித்து, நம் வேத-புராணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த மொழி பெயர்ப்புக்களைப் படித்தால், original வேத புராணங்களே தேவலாம் போல இருக்கிறது. அத்தனை கடின ஆங்கிலம். அல்லது, வேதங்கள் எழுதப்பட்ட காலங்களில் படித்தவர்கள் அனைவருமே அவ்வளவு மொழித்திறன் கொண்டவர்களாக இருந்தார்களா? தெரியவில்லை!

எழுதுவது என்பதே, அதை படிக்கும் மற்றவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தானே? (குறைந்தபட்சம் அப்படித்தான் நான் நம்புகிறேன்)

போகட்டும்! இப்போது, இன்று, நவீன கவிதைகளில் நிறைய கவிதைகள் நன்றாக, அற்புதமான படைப்புக்களாகவே உள்ளது. ஒரு சிலவற்றில் மட்டும், கருத்துக்கள் உடையதாக இருந்தாலும் சரி, மாறாக content இருக்கோ இல்லையோ ஏதோ எழுதியதாக இருந்தாலும் சரி, அதில் அகராதிகளில் தேடினாலும் புரியாத வார்த்தைகளை பிரயோகித்து, எழுதுவது தன் மொழித் திறனைக் காட்டவே அன்றி வாசகர்களுக்காக எழுதப்பட்டவை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அதென்ன, சாதாரணர்களுக்கும் புரியும்படி எழுதிவிட்டால் தவறா?

நவீனமயம் என்றாலே சுலபமயம் என்றிருக்கும் விரல் நுனி உலகில், உண்மையாகவே படிப்பதில் ஆர்வம் உடைய அதிகம் பேர்களால் படிக்கப் படாமலே இருக்கும் பல அற்புதமான சமஸ்கிருத காவியங்களைப் போல, தமிழ் நவீன கதைகளையும் கவிதைகளையும் படைக்கும் போது, அவற்றை படிக்கும் வாசகருக்கும், நவீனங்கள் படிப்பதில் ஒவ்வாமை ஏற்படுத்திவிடாதீர்கள் என்றே வேண்டுகிறேன்.

மேலே இருக்கும் கருத்துக்கும் நான் இங்கே கீழே கொடுக்கும் உதாரணத்திருக்கும் மலைக்கும் பாதாளத்திற்க்கும் உள்ள வித்தியாசம். தயவு செய்து மனதாலும் Griffith-தோடு இவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.

நாம் பேசும் subject-க்கு உதாரணமாக இங்கேயும் - இங்கேயும் பார்க்கவும். நான் படித்துப் புரிந்து இதை எழுதிய விரல்களை நொந்து கொண்டு, இதைப் படிக்க கொஞ்சம் time waste பண்ணியதை நினைத்தும் நொந்தேன் :(. கோபம் ஏதுமில்லை. வருத்தம்தான் எனக்கு. இப்படி எக்ஸ்ப்ளிசிட்-ஆக எழுதக் களங்கள் நிறைய இருக்கின்றன. ஜ்யோவ்ராம் அவர்களுக்கு தன் கோபத்தைக் காட்ட வேறு வார்த்தைகளா கிடைக்கவில்லை. இக்கவிதையைப் பாராட்டியவர்கள், பாபா-வைப் பாராட்டிய ரஜினி ரசிகர்களாக மட்டுமே இருக்க முடியும். அல்லது வடிவேலு காண்பித்த கடவுளைக் கண்டவர்கள் என்றும் நினைக்கிறேன்.

ஏற்கனவே எனக்குத் தெரிந்த வரையில், பெண்கள் புத்தகம் / இலக்கியம் / கவிதைகள் படிப்பது குறைவு. அதிலும், இப்படி ஒரு கவிதைக்கு நான், ஒரு சாதாரணப் பெண்ணாக, என்ன பின்னூட்டம் எழுதுவது?

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று."
இன்னாது கூறினீர்கள் என்று சொல்லவில்லை. இனிமையானதை (இனிமை அல்லாததையும் கூட) எளிமையாகக் கூறுங்கள் என்று விழைகிறேன். நீங்கள் பயன்படுத்தும் மொழிக்கு அதற்கே உரிய மரியாதையைக் கொடுங்கள். மொழிகள் தான் மனித நாகரீகத்தை வளர்த்தன. அவற்றை மரியாதையை குறைவாக நடத்தாதீர்கள் ப்ளீஸ்.

நியாயமான கோரிக்கை என்றால், ஏற்றுக்கொள்ளவும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

ஊர் (உயிரோடை சிறுகதைப்போட்டி)


வாரிசு

தேங்க்ஸ். பட் நோ தேங்க்ஸ்.

பெண்ணியவாதிகளே! பெண்களுக்காகப் பேசும் சகோதரர்களே! தேங்க்ஸ். பட் நோ தேங்க்ஸ்.

ஏற்கனவே மானம் சூறையாடப்பட்ட ஒரு பெண்ணை அவள் குடும்பத்தாரும், போலீசாரும், வக்கீல்களும், மற்றவரும், "என்ன ஆனது. எப்படி ஆனது" என்று மேலும் மேலும் அவளை உரித்துப் பார்ப்பது போல, இப்போதும், பெண்களின் நிலையை, அவர்களுக்காகப் பரிந்து பேசுவது போல பேசி விளம்பரம் தேடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிக்கைகளில், விளம்பரங்களிலும், பல "நவீனம்" என்ற பெயரில் ஆண்களின் பலவீனத்தைப் பறைசாற்றும் விதமாக எழுதப்படும் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் இந்தப் போக்கை அதிகம் காண்கிறேன். தமிழ் வார்த்தைகளை அழகாகக் கையாளத் தெரிந்த அருமையான கவிஞர் ஒருவர் தம் கவிதையில் தமக்கும் தம் மனைவிக்குமான அந்தரங்க விஷயங்கள், அவர் உபயோகிக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பெருமையுடன் எழுதிக் கைத்தட்டல்கள் பெற்றார். அதே மாலையில், கவிஞரின் நண்பர் கவிஞரின் மனைவிக்கே அந்த புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தப் போது, கவிஞரின் முகம் போன போக்கைப் படம் அல்லவா பிடித்திருக்க வேண்டும்.

பெண்ணியவாதிகள் என்ற பெயரில் பெண்களின் அவல நிலைகளைப் பேசி விளம்பரம் தேடும் சகோதரர்களே. இனிமேலும் பெண்களை உங்கள் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், உரித்துப் பார்க்காதீர்கள்.

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இந்நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே போதும். ஆடு நனைகிறதே என்று சில ஓநாய்கள் அழவேண்டாம்...

லஞ்ச் ரூம்

ஊக்குவிப்பும், ஊக்குக்குத்தும்

இன்றையக் காபிக்கும் முன்னே இதை எழுதிப்போடுகிறேன்.

//sssuuuppப்eeerrr ... உங்களுக்கு உரையாடல், கதை, கட்டுரை லாவகமாக வருகிறது ... கவிதையை என் போன்ற சிறுவர்களிடம் விட்டுவிட்டு நீங்கள் இதைத் தொடருங்கள் .....//

ஒரே நேரத்தில் இப்படி ஊக்குவித்தும், ஊக்குக்குத்தும் கொடுத்து என் பாதைக்கு வெளிச்சம் காட்டிய நந்தாவிளக்கே காரணம். இன்னும் நாலு நாளைக்கு தலை போகும் வேலை உள்ளது என்றாலும், பிறந்தகம் போல என் மனம் இங்கேயேதான் இருக்கும்.
-------------
"வென்றவர்களின் வரலாறு அளவுக்கே தோற்றவர்களின் வரலாறும் முக்கியம் என நமக்கு கற்பித்தது பின்நவீனத்துவமே." எழுத்தாளர் ஜெயமோகன்
--------------
அது நீயாகத்தானி ருக்கும்
என் கண்ணாடியில்
உன் பிம்பம்

என்று அலட்சியமாகவும்

அதென்ன சிவப்பாய் - போகாதே
அங்கே சூரியன்தான்... வானின்
முதுகில் குத்திவிட்டது

என்று பிரபாகரனுக்காக வருத்தப்பட்டும்...

நெளிந்தும் வளைந்தும்
நகர்ந்தும் பெயர்ந்தும்
வெளுத்தும் சிவந்தும்
வாழ்கிறேன் நான் மென்பொருள் ஊழியன்

என்று கம்யூனிஸ்ட்த்தனமாகவும் (ஒரே சிரிப்புத்தான்..)

நந்தா என்றொரு நண்பராம் - என்
கவிதைப் படிச்சு சிரிச்சாராம்
எல் ஐ சி மேலேந்து குதிச்சாராம்
திருப்பி படிச்சு அழுதாராம்

என் சின்னப்புள்ளத்தனமாக ரைம்ஸும்

அடியடியாய டித்தாலு மொரடிகூட அடிக்கா
மலெழுதமாட்டா ளிவள்

என்று திருவள்ளுரை இம்ப்ரெஸ் செய்தும் (அது இன்ஸ்பயர் தான) கூட எழுதுவேன்.

விடுவிடுவென்றாலும் விடமாட்டேன் விளங்கும் வரை
விடுவிடுவென வந்தேன் நந்தா விளக்கு
என்றும் கெஞ்சு...வேன்

ஒரு பெரிய மலை
உருண்டது ஒரு தலை
சாயுதே மாலை
பெய்யுதே மழை
நான் பேப்பர் தின்னும் கழுதை
வந்தததே அழுகை
புரியலியே உம் கவிதை - முடிந்தால்
புரிந்து கொள்ளும் இதை

என்று டி.ஆர் ரேஞ்சிலும் எசப்பாட்டு எழுதி அடம்பிடிப்பேன்.

இருந்தாலும் அது நீங்க அன்றிரவு சாப்பிட்ட மீன், மலையாடு (த்தலை), மற்றும் புறாக்கறிகளோ?

என்ன செய்வது? புரியாததை புரிய ஆசைப்படும் நான் ஒரு பின்நவீனத்துவவாதியே (ரொம்ப பின்னால் இருக்கும் நவீனத்துவவாதி என்றும் கொள்ளலாம்), ஏதோ நோயாகவும் இருக்கலாம். இல்லை.. எனக்குத்தான் ரொம்ம்...ப வயதாகிவிட்டதோ?

கவிதையால் கெஞ்சிக் கேட்டேன், அப்படிக்கூட
கிடைக்கவில்லை அங்கீகாரம்,
நடை பழகும் மக்கு தானே நான், என்னை
கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா நீ....