நீ இல்லை இப்போது


கண்ணீரின் நிழலும் தொடர்கிறது
என் ஒவ்வொரு புன்னகையோடும்
இப்போதெல்லாம்
நாம் நடந்த ஒவ்வொரு சாலையும்
அந்நியமாகவே தெரிகிறது நீயில்லாமல்
உன் நினைவுகளே அடுத்தடுத்த அடியானதால்
நீண்ட தொலைவு வந்தேவிட்டேன் - எனை
அடையாளம் காணவும் மறுக்கிறது காற்று
நம் பெயர் பொறித்த மரங்களின் இலைகள்
அசைவதில்லை இப்போதெல்லாம் - நீயில்லை
கிடைத்துக்கொண்டேதான் இருந்தது - விஷம்
குடித்துக்கொண்டேதான் இருந்தேன்
தினமும் இறந்தும் தினம் உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உனக்கான என் கடமைகள் மிச்சமிருக்கிறது
தற்செயலாய் கூட என் விழிகளைச்
சந்திக்கவில்லை நீ - என் விழி வழி
ஒரு துளி அருந்திவிட்டாலும்
உனக்கான என் கடமை முடிந்தேவிடும்
.

6 comments:

நசரேயன் said...

//கண்ணீரின் நிழலும் தொடர்கிறது
என் ஒவ்வொரு புன்னகையோடும்
இப்போதெல்லாம்
நாம் நடந்த ஒவ்வொரு சாலையும்
அந்நியமாகவே தெரிகிறது நீயில்லாமல்//

வீட்டுக்காரர் வெளியூர் போய்ட்டாரா??

நசரேயன் said...

//உன் நினைவுகளே அடுத்தடுத்த அடியானதால்
நீண்ட தொலைவு வந்தேவிட்டேன்//

ஐயயோ.. அப்புறம்

நசரேயன் said...

//எனை
அடையாளம் காணவும் மறுக்கிறது காற்று
நம் பெயர் பொறித்த மரங்களின் இலைகள்
அசைவதில்லை இப்போதெல்லாம்//

காத்துக்கு உங்க விலாசம் தெரியாது, அந்த மரத்தை வெட்டி தான் நீங்க வீடு கட்டுனீங்க

நசரேயன் said...

//விஷம்
குடித்துக்கொண்டேதான் இருந்தேன்
தினமும் இறந்தும் தினம் உயிர்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்//

உங்க சமையல் அவ்வளவு மோசமாவா இருக்கும் ??

நசரேயன் said...

//
உனக்கான என் கடமைகள் மிச்சமிருக்கிறது
தற்செயலாய் கூட என் விழிகளைச்
சந்திக்கவில்லை நீ

//

என்ன கஷ்டமோ ..

நசரேயன் said...

//என் விழி வழி
ஒரு துளி அருந்திவிட்டாலும்
உனக்கான என் கடமை முடிந்தேவிடும்//

சீக்கிரம் வருவாரு, நல்ல ஹோட்டல சாப்பாடு வாங்கி கொடுங்க

Post a Comment