லஞ்ச் ரூம்

இன்னைக்கு என்ன ஸ்பெஷல். பத்மா. உமா கேட்டாள்

மோர்க்குழம்பு வாழைப்பூ பருப்புசிலி. என்ற வழக்கமான உபசாரங்களோடு ஆரம்பித்தது எங்கள் கச்சேரி.

ஆமா. கேண்டிஸ் சீனியர் ஆபிஸர் ஆகிட்டாளாமே. மேனஜரோட போன வாரம் ஹைதராபாத் போனாள்ள. அங்க நல்ல பார்ட்டி போலருக்கு. என்று கூறியபடியே ஜானகி தன் வயிற்றெரிச்சல் வசைகளோடு வந்தாள்.

ஜானு. கண்டபடி பேசாத. அவளும் உன்னைப் போல பெண்தான.
உமா பொங்கினாள்

ஆமாங் என்ன பெண்ணோ. உருப்படாததது. ஜானகியின் தீராமை வார்த்தைகளில் கொட்டியது.

ஹாய் ஜானு. வெயிட் பண்றேன்னுட்டு வந்துட்ட.. என்று கேண்டிஸ் வந்து ஜானகியின் பக்கத்தில் உட்கா
ர்ந்தாள். அவளிடமிருந்து சிப்ஸை நொறுக்கியபடி ஜானகி முதலில் அவள் ப்ரமோஷனுக்காக வாழ்த்த மற்ற அனைவரும் வழிமொழிந்தார்கள்.

ஹைதராபாத்லேந்து அரக்குவளையல் கேட்டிருந்தேனே வாங்கிண்டு வந்தயாடி குண்டம்மா. என்றாள் ஜானகி.

உமா சிறிதும் பொறுக்க முடியாமல் கேண்டி. சிப்ஸ் கொஞ்சம் உப்பு கரிக்கிரதுடி. என்றாள்.

ம்க்கும் கனைத்தாள் ஜானகி.

ஐய்யோ போதும். என் கண்ணீ
ர் ரிக்கும் கதையையும் கொஞ்சம் கேளேன். இவனை நம்பினது தப்பாயிடுத்துடீ. என்கிட்ட ஆபிஸ் டூர் ன்னு சொல்லிட்டு அந்த ப்ரியாவோட கொடைக்கானல் போயிட்டு வந்திருக்கு. என்ன பண்ணறதுன்னே தெரிலடி. சலம்பினாள் நிரஞ்சனா.

நிரி. எதாவது உளறாதே. ரொம்ப கண்டியோ. அவங்களோட ஷூட்டிங்கிற்கு ராகவனும்தான் போயிருந்தா
ர். ப்ரியா எடிட்டிங் அஸிஸ்டன்ட். Ad எவ்ளோ நல்லா வந்திருக்கு தெரியுமா. சந்தேகப்பட்டே உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்கப் போற. பத்மா நீயே சொல்லுடீ. என்றாள் மாலா.

ஆமாண்டி. நம்பவும் முடியலைதான். இன்னிக்கு கார்த்தாலதான் ரவி போன்ல பேசறதத் தற்செயலா கேட்டுண்டுருந்தேன். திடீர்னு டிபன் சாப்பிட்டுண்டு இருக்கும்போது கண்ணெல்லாம் கலங்கி ‘படிக்காதவன்’ படத்துல ‘மாமா ஐ லவ் யு ன்னு’ன்னு அந்த ஆர்த்தி சொல்லும்போது தனுஷ் கொடுப்பானே… அத்த்த்தே மாதிரி ஒரு எக்ஸ்பிரஷன்.

இன்னிக்கு இட்லிதான. இது தயிரைத்தான தொட்டுக்கும்.
நாமதான் இன்னும் அஷயதிருதியப் பத்தி பேசவே இல்லயே…ன்னு பலவிதமா நெனச்சேன். நானிருப்பதைக் கவனிக்காம தானாவே
திடீர்னு “இவங்கல்லாம் நான் நல்லாருக்கேன்னு சொன்னாலும் கஷ்டமாயிருக்கு. நல்லா இல்லேன்னாலும் வருத்தமாயிருக்கு.” அப்டீன்னு முனகினார். கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தாள் பத்மா.

இவரக்க்க்கூ..ட காதலித்த அந்த முன்னாள் ‘ஜில்லு’மாலினிக்கிட்டதான் பேசியிருக்குன்னு
எனக்குத் தெரியும்.

அப்பக்கூடத் தெரியாத
மாதிரியே ‘என்ன ரொம்ப வருத்தமாயிருக்கீங்க.. யார் போன்ல. உங்க அம்மாவா.’ அப்டீன்னு கேட்டேன். “ம்ச். அதெல்லாம் உனக்கெதுக்கு. என் பழைய ப்ரெண்டு.” அப்டீன்னு சொல்லிடுத்து. அதான் இப்போல்லாம் ரிசெஷன் பயத்தில ஆபிஸே கதின்னு கிடக்கே. அதனால எங்கயும் போகாதுன்னு ஒரு நம்பிக்கைதான். பேசாம விட்டுட்டேன். நீயும் அப்படியே விட்டுடு. நமக்கெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்கற வரைக்கும்தான் அவங்களுக்கும் ஒரு பயம் இருக்கும்…என்றாள்.

சரீ பத்மா…அவர் ஒருத்திக்கிட்ட தான பேசினார். அப்பறம் என்ன இவங்கல்லா…ம்னு பன்மை..” என்று அவளைக் குழப்பிப் பற்ற வைத்த சந்தோஷத்துடன் ஜானகி கைகழுவப் போனாள்.

6 comments:

நந்தாகுமாரன் said...

சும்மா சொல்லக் கூடாதுங்க உங்களோட கதை சொல்லும் திறன் நல்லா இருக்கு ... இதெல்லாம் வார இதழ்களில் நிச்சயம் பிரசுரமாகும் ... தொடர்ந்து எழுதுங்கள் ...

நசரேயன் said...

நானும் இதை படிக்காத மாதிரியே இருந்துக்கிறேன்

Vidhoosh said...

இப்படி சொல்லி சொல்லியே வடிவேலு மாதிரி ஆக்கிடுங்க.. இருந்தாலும்,
"இன்னும் எத்தனை முறைதான்
எரிப்பீர்கள், என்ன சீதையா
நான் பீனிக்ஸ்"
அதனால ....
நானே எழுதிய மொக்கைகள் அப்டீன்னு ஒரு புதிய் ப்லாக் ஆரம்பித்து என் கவிதைகள் எல்லாவற்றையும் போஸ்ட் செய்கிறேன். நண்பர் நந்தா அப்ப்ரூவ் செய்யாத ஒரே காரணத்தால் அவை எல்லாம் மொத்த மொக்கைகள் ஆகின:)
அட... ஆட்டோவெல்லாம் ...இதுக்கு போயி... வேணாம்

Vidhoosh said...

ரொம்ப நன்றி நந்தா, நசரேயன்:)

Anonymous said...

நண்பா இந்த வார தமிழர் பட்டையை இணைத்தற்க்கு நன்றி,

அந்த பட்டையை உங்கள் பிளாக்கு மேல் முதல் காட்ஜட்டாக வைத்தால் தான் இந்த வார பதிவர் தெரியுவார்.

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Anonymous said...

இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு

இந்த சுட்டியை சொடுக்குங்கள்

தமிழர்ஸ் பிளாக்

Post a Comment