மனக்கரை

வானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!



.

5 comments:

நந்தாகுமாரன் said...

எளிமையான, அழகான கவிதை ... படித்தவுடன் பிடித்தது

Vidhoosh said...

நன்றி நந்தா.
ம்ம். வசிஷ்டர் வாயில் பிரம்மரிஷி எனும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்.

நசரேயன் said...

//அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்! //

ஏன் அது புது செருப்பா?

Vidhoosh said...

உங்களிடம் உள்ள இந்த நகைச்சுவை உணர்வை ரொம்பவே இரசிக்கிறேன் நசரேயன். :))

ny said...

//அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!//

தலைப்போடு இவ்வரிகளை இணைக்க
ஏதேதோ சொல்லி நிறைகிறது
இக்கவிதை..

உங்க blog தலைப்பும் beauty!!

Post a Comment