பெயர் இல்லாதது....

 
கோடுகளே முகவரி
கருவளையங்கள் கண்மையிட
விளைந்தவைக் கூட வெளுத்து
வெடித்துதான் கிடக்கிறது மனவெளி
கிழிந்திருக்கும் இலைகளே அலங்காரம்தான்
கண்டு மழை என விழும் ஆலங்கட்டிகள்
அப்போதும் வான் பார்த்துத்
திறந்துதான் கிடக்கும் தரிசல் நிலம்
பொழியுமா இன்றேனும் - அந்த
நம்பிக்கைத் தூறல்களால் மீண்டும்
நனைகிறது மனவெளி
இருள் மீண்டும் வரும் பகல்
குளிர் மீண்டு வரும் வெய்யில்
மீண்டு வரும் மழைதான்
வெற்றுப் புன்னகையாய்
வெடிக்கிறது ஒரு விதை இன்றும்...





.

5 comments:

நசரேயன் said...

மேகம் உங்க கவிதைய படிக்கலைன்னு நினைக்கிறன்,படிச்சா கண்டிப்பா அழும்

நந்தாகுமாரன் said...

பரவாயில்லை ... ஆனால் கொஞ்சம் செதுக்கியிருக்கலாமோ ...

Vidhoosh said...

ஆமாம் நந்தா. version 2 release செய்கிறேன்.

Vidhoosh said...

:)) சும்மா ... ஆயிரம் கொலை பண்ணால் தானே அரை வைத்தியன்...
பக்கோடா கொஞ்சம் தீய்ந்து போய்விட்டது..காந்தலே ஒரு ருசிதான்...
easy அது ஒரு குழந்தையின் (கொஞ்சம் வளர்ந்த) நடைதான்...அதனால் இதை cat walk range-க்குப் பார்க்க வேண்டாம்
(இதுக்கு கவிதையே தேவலாம் என்று பெரியவா புலம்பறது நேக்கு கேக்றது)

Vidhoosh said...

நன்றி நசரேயன்.

Post a Comment