நல்ல புத்தகங்களை தேடுவது எப்படி?

அப்துல் கலாம் தனது செய்தியில், "நல்ல புத்தகங்கள் நல்ல கற்பனை சக்தியை கொடுக்கும்; நல்ல கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை வளர்க்கும்; நல் சிந்தனை சிறந்த அறிவை பெருக்கும்; சிறந்த அறிவே நம்மை மேம்பட வைக்கும். எனது வாழ்விலும் திருக்குறள் உள்ளிட்ட மூன்று புத்தகங்கள் என்னை வழிநடத்திச் செல்கின்றன. எனவே, நல்ல புத்தகங்களை தேடி எடுத்துப் படியுங்கள்'

அ.முத்துலிங்கம் அவர்களின் பதிவை பாருங்கள்.

நம்ம வெட்டிப்பயல் சொன்னது (இங்கே) போல இனிமேல் லிங்க்கே கொடுத்து விடுகிறேன். ஈசியாக உள்ளது. அதுதான் நியாயமும் கூட. முன்பே தோன்றவில்லை. வெட்டி... தேங்க்ஸ். நல்ல வழி.

அதிலிருந்து எனக்கு பிடித்த சில வரிகள்..
 1. புத்தகத்தை வாசிக்காத மனிதர், எழுத்தறிவில்லாதவரிலும் பார்க்க ஒரு விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களை தேடுவது அவ்வளவு கடினமான விஷயம்.
 2. ஒருவர் ஆரம்பத்தில் எப்படிப்பட்ட புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் போகப்போக அவர் தன் தரத்தை மேம்படுத்திக்கொண்டே போகவேண்டும்.
 3. எண்ணிக்கை பிரதானமல்ல; தரம்தான் முக்கியம்.
 4. சமீபத்தில் பி. அனந்தகிருஷ்ணன் எழுதிய 'புலி நகக்கொன்றை ' நாவலைப் படித்தபோது இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன. இதை எழுதிய ஆசிரியர் இந்திய மத்திய அரசு அதிகாரியாக டில்லியில் வேலைபார்க்கிறார். அவர் முதலில் ஆங்கிலத்தில் The Tigerclaw Tree என்ற பெயரில் இதை எழுதி 1998 ல் பென்குயின் வெளியீடாக கொண்டுவந்துள்ளார். பிறகு அதே நாவலை மொழிபெயர்க்காமல் தமிழிலே திரும்பவும் எழுதினார். தமிழிலே முதலில் எழுதாதற்கு என்ன காரணம் என்று கேட்டால் 'பயம் ' என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு அழகான தமிழ் நடையை வைத்துக்கொண்டு பயந்தால் மற்றவர்கள் கதி என்ன ஆவது என்று நான் நினைத்தேன்.

 5. இந்த நாவலின் தலைப்பு பிரமாதம். இப்படியான ஒரு நாவலுக்கு தலைப்பு வைப்பது சிரமமானது. ஆனால் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. ஐங்குறுநூறு 142 ஆவது பாடலில் இருந்து தனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் சொல்கிறார்.

  எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்

  புள்ளிறை கூருந் துறைவனை

  உள்ளேன் தோழி படா இயரென் கண்ணே.

  'தோழி கேள். நான் அவனைப்பற்றி நினைக்கமாட்டேன். யாரை ? எவன் நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலி நகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்துகொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்கு சிறிது தூக்கம் கிடைக்கட்டும். ' ( ஞாழல் - புலிநகக்கொன்றை ) உண்மையில் இது காதலை சொல்லும் பாடலல்ல; குடும்பத்தைப் பற்றியது. எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது. புலி நகக்கொன்றை. இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

 6. தேடுபவனிடம் தரமான இலக்கியங்கள் சிக்கும்
நிறைய படியுங்கள்.

Sri Santhana Srinivasa Perumal Temple - Mugappair

For having children recite Santana Gopala mantra.

Make a prayer to Santana Gopala by chanting the following mantra 108 times a day for 108 days after bath.

Santana Gopala Mantra:
Om Devaki Sut Govinda Vasudeva jagat pathe Dehimey Thanayam Krishna Twamaham Sharanam Gataha Deva Deva Jagannatha Gothra Vridhi Karap Prabho Dehimey Thanayam Sheegram Ayushmandham Yashashreenam!


Meaning: O son of Devaki and Vasudeva, the Lord of the Universe O Krishna! give me a son; I take refuge in you Nagaraja is the devata for Kutumba Vridhi.

Sri Santhana Srinivasa Perumal Temple at Mugappair

Sri Santhana Srinivasa Perumal Temple is located at Mogappair, literally means blessed with a child, in Chennai. This name symbolizes the belief that the Lord of Sri Santhana Srinivasa Perumal shrine provides the childless couples the most wanted blessing of little babies. Due to this belief childless couples throng to this holy place and offer their prayers, and it is said that their wishes have come true after the visit of this shrine. The Santhana Srinivasa Perumal Temple has been conducting many major religious festivals, one to note is Brahmotsavam. With the Brahmotsavam in full swing, the popular abode of Perumal wears a celebrity look with people thronging its boundaries, waiting to get a glimpse of the Lord and His Consort, decorated with precious jewels and full of colorful flowers, as they move out in the surroundings on a variety of vahanams to bless devotees.

Mogappair was once Maga-p-peru (meaning "blessed with a son"). This name derived from the belief that the deity in the Santhana Srinivasa Perumal Koil there granted the blessing of parenthood to childless couples. After persistent mispronunciation, the name `evolved' to its present form.

This 650 years old temple is very powerful to give the boon of a child (santhanam) which is called Maha-Peru in Tamil and that's how the place became Mugappair. The main deity Santhana Srinivasar is 9.5 feet high. Couples praying for child take the Santhana Srinivasar vigraham in their lap as part of their prayer. Thulaparam is also being done. Poojas are taking place throughout the day till the Ekantha Seva in the night as in Thirumala.

From Mugappair if u r coming in Metro Bus - get down at GOLDEN FLATS bus stop and from there you can take an Auto for amounts varying from Rs.25/- to Rs. 50/- to the temple.

If you are coming in private vehicle you can take left before Ambattur Industrial Estate Arch, which you get when u drive from Mugappair to Ambattur Estate (Vavvin) From that left it will straight lead to the temple. There you can very well ask anybody which is very nearer to the temple area.


Contact temple Volunteer:
Shri.G.Jayaprakash
(son of M.S.Ganesan - Parambarai Tharmakartha - Sri Santhana Srinivasa Perumal Aalayam - Mugappair)
HP: +91-9841755021
e-mail: jaiprakash.g@gmail.com

For more Information
You may contact the temple office at Tel: +91-44-26248117,
E-mail: sssptemple@gmail.com

ஸ்ரீ கணேஷ ஸ்துதி - மூஷிக வாகன

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மகேஷ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே