
ஸ்ஸ்ஸ்... அப்பா...டி...எவ்வளோ கஷ்டம்பா.
But if you find anyone with relevance to persons living may be considered dead, and their assets transferred to my account.
நான் "பல்லி". சுவற்றுப் பல்லி இல்லீங்க. சிங்கப்பல்லைக் காட்டி சிரித்துக்கொண்டே இருப்பதால் என் தமிழ் ஆசிரியை செல்வி பயந்து கொண்டே வைத்தப் பட்டப் பெயர். என் நிஜப் பெயர்தான் ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமே.
அவையின் உறுப்பினர்கள்---
1. முன் வரிசையில் இருக்கும் பல்லியான என்னைக் கூட தலைவியாக ஏற்றுச் சிரிப்பாச் சிரிக்கும் சபையில், என் அருகில் அமர்ந்திருக்கும் என் ஆத்ம நண்பர்களான, எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு போய் அடிவாங்கி வரும் "சொங்கி" சீனு, அவனுக்கு எப்போதும் "உனக்கெல்லாம் பட்டாத்தாண்டா புரியும்" என்று ஆறுதல் சொல்லும் "பட்டாத்தான்" ரமேசு, ஒரு சப்பை அழிலப்பருக்காகக் (eraser) கூட லோலோவென்று பின்னால் அலையும் "லோலாக்கு" கமலா, எதைத் தின்றாலும் "எனக்கு தாப்பா" என்று கேட்கும் "தாப்பா" தாரணி ஆகியோர்,
மற்றும்...
2. பேசும் போது வாயிலிருந்து கமழும் புனுகு மணத்தில் கிறங்கி, மயக்கம் போட்டு, கேர் ஆகி, தெத்தி இருக்கும் தேங்காய்த் துருவிப் பற்களின் இடையிலிருந்து தெளிக்கும் அந்த அன்பு மழையில் நனைந்து பிரதியுபகாரமாக, எங்கள் சபை அன்புடன் கொடுத்தப் பெயருக்கு சொந்தக்காரியான "பன்னீர்" செல்வி - அவையின் அரசியான தமிழ் மேடம்
மற்றும்......
3. பின் வரிசையில் "பூரா அவிங்களாத்தான்” இருக்கும் பழங்குடி மக்கள் அதிர்ஷ்டம் பண்ண அல்பக் கட்டைகள். பெயிலானா இப்போல்லாம் தற்கொலைதான பண்றாங்க. அப்போல்லாம் இந்த நல்லப் பழக்கம் எல்லாம் கிடையாதுங்க. அதுங்க, மறுபடியும் அதே கிளாஸ்ல உக்காந்து புதுசா வரும் எங்களை ராகிங் கொடுமை செய்தது மட்டும் இல்லாமல், எங்களுக்கு முன் சீட்டை ஒதுக்கி, நாங்கள் பன்னீர் சிந்திய முகத்தைத் துடைக்கும் போதெல்லாம் சிரித்துச் சிரித்தே எங்கள் விரோதத்தைச் சம்பாதித்த பயங்கரவாதிக் கூட்டத்தின் தலைவன், யாரையாவது பற்றி படு கேவலமாக புறம் பேசி அவர்களை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கும் "சிக்லட்" மணி, "பாம்" சூரி (நீங்கள் நினைக்கும் அதே தான்), டபுள் மீனிங் பேசும் "மேட்டர்" சிதம்பரம், ஒன்றரைக் கண்ணன் "பாதி பரமசிவம்" குமார் மற்றும் அவர்களின் ஜால்ராக்கள்.
இது ஒரு பெண்ணின் ஆட்டோ..பய... சரி சரி...
இந்த முன் வரிசைக்கும் பின் வரிசைக்கும் நடக்கும் மகாபாரதக் காவியம் தான் நீங்கள் இனி படிக்கப் போவது. படித்து, மேல் வரிசையும், கீழ் வரிசையும் அதிரும்படி சிரியுங்கள். ”உலகம் இன்னுமா என்னைய நம்பிட்டு இருக்கு”..
இனி வாரம் ஒரு முறை, சனியன்று மட்டும், வெளி வரும்... தவறாமல் படியுங்கள். ஊட்டம் கொடுங்கள். பின்னூட்டம் தான். அதுக்கே கஞ்சப்படும் மகாபிரபுக்கள் நீங்க, பின்ன ஹார்லிக்ஸா கொடுப்பீங்க.
சைக்கிள் போகும் ...
3 comments:
எவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்ல முடிகிறது உங்களால் ..
நல்ல நடை
ஆவலுடன் தொடர்ச்சியை எதிர் பார்கிறேன்
உங்களின் பகடியான நடை மிகவும் பிடித்திருக்கிறது, தொடருங்கள்.
பேரெல்லாம் ரொம்ப நல்லா வச்சிருக்கீங்க.
தொடருங்கள்.[பேர் வைப்பதை அல்ல.]
Post a Comment