காத்திருத்தல்கனவுகளால் கண்கள் எரிந்தன
கால்கள் சோர்ந்தன - என் வலியை
காணாத கண்கள் உனக்கு
எனக்கும் தந்துவிடாதே
அப்படி ஒரு அகங்காரம்
விண்மீன்களின் வெளிச்சத்தில்
இருண்டு கொண்டிருக்கிறது வானம்
உறங்கிவிட்டது நகரம்
வாசல் நீண்டு கொண்டே போகும்
உன் வருகைக்காக... முடிந்தால்
மீண்டும் மீண்டும் என்னை கரை
சேர்க்கும் அலைகளை நிறுத்து!.

4 comments:

Nundhaa said...

அருமை

நசரேயன் said...

//முடிந்தால்
மீண்டும் மீண்டும் என்னை கரை
சேர்க்கும் அலைகளை நிறுத்து!//
நின்னா.. நீங்க கவுஜ எழுதுவைதை நிறுத்துவீங்களோ ?

"அகநாழிகை" said...

நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

யாத்ரா said...

//என் வலியை
காணாத கண்கள் உனக்கு
எனக்கும் தந்துவிடாதே
அப்படி ஒரு அகங்காரம்//

அருமை

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

Post a Comment