ஊர் (உயிரோடை சிறுகதைப்போட்டி)


இதன் ஆதாரத்தில் கருவாக்கப்பட்ட இதற்காக எழுதியது..

"டேய். திரும்பி பாக்காம நட." என்னை அவசரப்படுத்தினாள் அம்மா.

"ஏம்மா? அங்க புதர் பின்னாடி எதோ சத்தம்." சொல்லியபடியே "யாரு?" என்று குரல் கொடுத்தேன். மறைந்திருந்த இரண்டு பேர் சரேலென்று ஓடிவிட்டனர். அந்தப் பெண்ணை மட்டும் நான் பார்த்துவிட்டேன். எங்கள் பெட்டிக்களைத் தூக்கிக் கொண்டு வந்த சுக்கிரனிடம் "ஏன் ஓடுறாங்க?" என்று கேட்டேன்.

"அந்தப் பொண்ணு பால்ய விதவை" என்றான் மொட்டையாக. "அதுக்கு ஏன் ஓடணும்?" என்றேன். அம்மா என்னைப் பார்த்த பார்வையில் பேசாமல் நடந்தேன்.

நாங்கள் கம்பங்கொல்லையைத் தாண்டி அக்கிரஹாரத்துக்குள் நுழைந்தோம். எல்லோரும் எங்களைக் கண்டும் காணாதது போல நகர்ந்தனர். முக்கியமாகப் பெண்கள். முதல் முதலில் எங்களை அடையாளம் கண்டது கோவில் கணக்குப்பிள்ளை ராமன்தான். "சிங்கப்பூர்காரனோட ஓடிப் போன ஆட்டக்காரி சிவகாமியா நீ? ஏன் திரும்பி இங்க வந்த?" வாயில் இருந்த வெற்றிலையை என் அம்மாவிற்கு மிக அருகில் துப்பியவாறு கேட்டார்.

"உன் மகனா இது . அப்பன் இருக்கானா?" கேள்வியின் சூடு என்னைத் தாக்கியது.

அவர் அகத்துத் தூணுக்குப் பின் வெள்ளைப் புடவை சலனமாடியது. "என் கடைசி மகள். போன வருஷம் மூளியாயிட்டா." என்றார் கணக்குப்பிள்ளை.


.

4 comments:

அகநாழிகை said...

கதையை வாசித்தேன். நன்றாக உள்ளது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் said...

ஹ்ம் ... நீங்களும் சின்னஞ் சிறுகதை எழுதிகிறீர்கள் ... நானும் எழுதுகிறேனே ... வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

Unknown said...

மிக்க நன்றி, நந்தா மற்றும், பொன்.வாசுதேவன்-அவர்களே.

நந்தாவிளக்கின் வெளிச்சத்தில்தான் உயிரோடையைச் சென்றடைந்தேன். இல்லாவிட்டால் இத்தனை ஆழமான கதை உருவாகி இருக்காது. எனக்கு நானே மகிழ்ந்த கதை இது.எல்லாப் பாராட்டும் நந்தா-விற்கே.

Radhakrishnan said...

மிகவும் அருமையாக எழுதப்பட்டு இருக்கும் அழகிய சிறு காவியம். மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது.

Post a Comment