தேங்க்ஸ். பட் நோ தேங்க்ஸ்.

பெண்ணியவாதிகளே! பெண்களுக்காகப் பேசும் சகோதரர்களே! தேங்க்ஸ். பட் நோ தேங்க்ஸ்.

ஏற்கனவே மானம் சூறையாடப்பட்ட ஒரு பெண்ணை அவள் குடும்பத்தாரும், போலீசாரும், வக்கீல்களும், மற்றவரும், "என்ன ஆனது. எப்படி ஆனது" என்று மேலும் மேலும் அவளை உரித்துப் பார்ப்பது போல, இப்போதும், பெண்களின் நிலையை, அவர்களுக்காகப் பரிந்து பேசுவது போல பேசி விளம்பரம் தேடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிக்கைகளில், விளம்பரங்களிலும், பல "நவீனம்" என்ற பெயரில் ஆண்களின் பலவீனத்தைப் பறைசாற்றும் விதமாக எழுதப்படும் கவிதைகளிலும், கட்டுரைகளிலும் இந்தப் போக்கை அதிகம் காண்கிறேன். தமிழ் வார்த்தைகளை அழகாகக் கையாளத் தெரிந்த அருமையான கவிஞர் ஒருவர் தம் கவிதையில் தமக்கும் தம் மனைவிக்குமான அந்தரங்க விஷயங்கள், அவர் உபயோகிக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பெருமையுடன் எழுதிக் கைத்தட்டல்கள் பெற்றார். அதே மாலையில், கவிஞரின் நண்பர் கவிஞரின் மனைவிக்கே அந்த புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தப் போது, கவிஞரின் முகம் போன போக்கைப் படம் அல்லவா பிடித்திருக்க வேண்டும்.

பெண்ணியவாதிகள் என்ற பெயரில் பெண்களின் அவல நிலைகளைப் பேசி விளம்பரம் தேடும் சகோதரர்களே. இனிமேலும் பெண்களை உங்கள் கவிதைகளிலும், கட்டுரைகளிலும், உரித்துப் பார்க்காதீர்கள்.

உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இந்நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே போதும். ஆடு நனைகிறதே என்று சில ஓநாய்கள் அழவேண்டாம்...

2 comments:

மணிப்பயல் said...

தெரியாத்தனமா பெண்ணியம் பேசிட்டாங்க.

அதுக்குப்போயி ஏன் இப்படி அவங்களை சுளுக்கு எடுக்கறீங்க?

பாவம். விட்டுடுங்க வித்யா.

நந்தாகுமாரன் said...

சூடு பறக்கிறது ... ஏன் என்று தான் புரியவில்லை

Post a Comment