நல்ல இலக்கியத்தின்/கவிதையின் அடையாளங்களில் ஒன்று நினைவில் தங்கிவிடுவது.
திருப்பதிக்குப் போன ஒருவர் பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து கடவுளைப் பார்த்து விட்டு வெளியே வந்தார். நல்ல பசியாக இருந்ததால் ஒரு புளியோதரைப் பொட்டலம் வாங்கிக் கொண்டார். பேருந்தில் ஏறிக் கீழே வந்து பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே சோற்றோடு ஒரு எறும்பு. ஒரு நிமிடம் திகைத்துப் போனார்: இந்த மலையில் ஒரு படியாகக் கிடவேனா? தூணாக நில்லேனா? புல்லாக இருக்கமாட்டேனா? 'எம் பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆகேனோ' என்று ஒருவர் உருகி உருகிப் பாடினாரே அவர்தான் இந்த எறும்பாகப் பிறந்திருப்பாரோ, அவரைத்தான் நான் கீழே எடுத்து வந்து விட்டேனோ, என்ன பாவம் செய்துவிட்டேன் எனப் பதறிப் போய் அப்படியே அந்தச் சோற்றுப் பொட்டலத்தை மறுபடியும் கால் நடையாய் மலையேறிப் போய் அங்கேயே போட்டுவிட்டு வந்தார் என ஒருவரைப் பற்றி பேராசிரியர் தொ.பரமசிவம் ஒருமுறை சொன்னார்.
பசி நேரத்திலும் கட்டெறும்பைப் பார்த்த போது அவருக்குக் குலசேகர ஆழ்வாரது பாட்டு ஞாபகம் வந்தது. அதன் பின் எறும்பைச் சாதாரண எறும்பாக எண்ண முடியவில்லை. நல்ல இலக்கியம் இப்படியெல்லாம் இம்சிக்கும் என்று படித்தேன்.
அதே போலத்தான், யாத்ராவின் கவிதைகளும். எதைப் படித்துக் கொண்டிருந்தாலும் குறுக்கே வந்து (கவி) தை தை என்று குதித்து நிற்கிறது.
ஐயாயிரம் மைல்கள்
காற்றாக ஆதல்
நகரும் அகவை
இவை மூன்றையும் நான் தந்திருக்கிறேன். மிகுதியை நீங்களே தேடி எடுங்கள் இங்கே.
=========================
அதே போல அருட்பெருங்கோ. என்றோ எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு லிங்க் நினைவில்லை. ஆனால் வரிகள் மட்டும்...
ஆறு மணிக்கு வரச்சொன்னால்
ஆறு மணிக்கே வந்துவிடுவதா
காத்து இருப்பவனுக்குத்தான்
அதன் சுகம் தெரியும்.
“எப்போதென்னைக்
காதலிக்க ஆரம்பித்தாய்?”
எத்தனை முறை
கேட்டாலும் உதட்டுப் பிதுக்கலே பதிலாய்…
எப்போது மலர்ந்தோமென
எந்த மலருக்குதான் தெரிகிறது?
=========================
கோவி.கண்ணனின் கொலைவெறி கவுஜையும் இங்கே பார்க்க. (நேயர் விருப்பம் by my beloved Bhaskar).
=========================
கிணறு வெட்ட பூதம்...! -- இதை படித்து நொந்தேன். ஆளுமை உள்ளவர்களே...ஏதாவது செய்யுங்க ப்ளீஸ்.
.
எறும்பு, லட்டு, அப்பளக் குழவி மற்றும் பூதம்
Posted by
Vidhoosh
on Monday, July 20, 2009
Labels:
சக பதிவர்
12 comments:
காப்பிஸ்கேப் என்பதை போட்டுள்ளீர்களே ? காப்பிஸ்கேப் பற்றி சொல்லமுடியுமா ? ஒரு பதிவு போட்டு ?
எறம்பு பற்றி படித்ததும் எனக்கு கண்தாசன் தான் ஞாபகத்திற்கு வருகிறார். தெய்வம் என்றால் அது தெய்வம்... சிலை என்றால் அது சிலைதான். எறும்பு என்றால்... அது எறும்பு.
காத்திருத்தலும், மலரும் பற்றிய அருட்பெருங்கோ கவிதையும் அருமையோ அருமை
கிணறு வெட்ட பூதம் படித்தேன். நீங்கள் கூறியதையே நானும் சொல்லிக்கிறேன்.
யாத்ரா பற்றிய பகிர்வு பிடித்திருந்தது. அருட்பெருங்கோ இப்போது அவ்வளவாக எழுதுவதில்லை என நினைக்கிறேன். அவரது வலை முகவரி :
www.blog.arutperungo.com
எளிய சொற்களால் இருதயம் வெல்லும் கலை யாத்ராவின் கவிதைகளுக்கு உண்டு
மீள்வாசிப்புக்கு உதவியதற்கு நன்றி
உங்கள் வருகைக்கு நன்றி ரவி. நான் டெக்னிகல் ஆக அவ்வளவு சிறந்த அறிவு பெற்று இருக்கவில்லை.
யாரிடமாவது கேட்டுப் பார்கிறேன். காப்பிஸ்கேப் என்பதன் மூலம் இதே கன்டேன்ட்ஸ் வேறு எங்கும் இருக்கிறதா என்று பார்க்கலாம் என்பது வரை எனக்குத் தெரியும். அவ்வளவுதான்.
நன்றி அன்புமணி.
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர். உங்கள் வருகைக்கு. அருட்பெருங்கோ வலைமுகவரிக்கு.
நன்றி நேசமித்ரன்.
யாத்ராவின் கவிதை மீள்பதிவிற்கு ஒரு நன்றி..
காத்திருத்தல், மலர் பற்றிய அருட்பெருங்கோ கவிதை நன்று.....
கிணறு வெட்ட பூதம் இட்லிவடையில் படித்தேன்..... மனசு kanaththathu.....
ivangalaala தான் TSUNAMI varradhunnu nenaikkaren......
யாத்ரா,
கிணறு வெட்ட பூதம்
இரண்டு பகிர்வுக்கு நன்றி.
தென்னை மரம் படம்
மிகவும் அழகாக இருந்தது.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
நீங்கள் மேலும் மேலும் என் நன்றிக்கடனை அதிகமாக்குகிறீர்கள், மிக்க நன்றி, பேராசிரியர் தொ பரமசிவன் அவர்கள் பகிர்வு அருமை, என் பழைய பதிவுகளையெல்லாம் தேடி படித்து பதிவிடும் உங்களைப் போன்றோரின் அன்புக்கு எப்போதும் என் நன்றிகள்.
நன்றி எல்லாத்தையும் பாக்கோட பேப்பர்ல போட்டு கொடுத்ததுக்கு
யாத்ராவின் கவிதைகளை எடுத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. அவரது கவிதைகளைப் படிக்கும் பொழுது ஏற்படும் மனத்தாக்கம் நெடுநேரம் நீடித்திருப்பதை உணர முடிகிறது.
மீண்டும் மீண்டும் அந்த கவிதைகளை எடுத்துப்பார்த்து (குறிப்பாக "ஐயாயிரம் மைல்") படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி விதூஷ்.
வாசு, யாத்ரா, நசரேயன், ஆதவா
--எல்லோருக்கும் நன்றி. :)
Post a Comment