பிரளயம் வேண்டாம்

நம்பகம் இல்லை எனும் சான்றுகளும்,
பத்திரம் இல்லாத பத்திரங்களும்,
வீழ்ந்து விடும் வீழ்ந்து விடும் வேகம் என
உள்ள வெற்று காகிதமே பல உயிரை நிர்ணயிக்கும்!
நீர் தங்காது இங்கென்று பெருமை கூறும் நிலத்துக்கு
புல் முளைத்த நீரின்மை விலை பெருக்கும்,
80-G வரி விலக்கு சான்று கேட்டு, கொடுக்கும்
கட்டளைக்கு அறம் ஒரு பண்ட மாற்று.
தினம் ஒரு வன்முறையும், கற்பழிப்பும்,
விபத்துகளும், வெறித்தனமும், பாதகமும்
வியாபாரத் தந்திரமும் வஞ்சகமும், போதாதென
வெள்ளம் அங்கு, பஞ்சம் இங்கு, கொலை களவு
நித்தம் ஒரு புதுப் பெயரில் பிறப்பெடுக்கும் - தீராத
நோய் களைய, ஜாதகமும், கட்டங்களும் நாள் குறிக்கும்
இடை மெலிய ஒரு கூட்டம் இரை விடுக்கும் - இன்னொன்று
தானே பெரியதென மனம் மெலிந்து இறை விடுக்கும்
கலி தீராது இனி - வளர்ந்து வரும் வளர்ந்து வரும்
வீழும் முன் அத்துணையும் ஆண்டு விட
ஆள்பவனின் ஆசை அலை சீறி வரும் - வேறு
நேராது ஒரு பிரளயம் இவர் துயர் துடைக்க!
அமைதி அமைதி அமைதி எனும் கூக்குரல்கள்
இறைஞ்சி பொங்கும் அலறல்கள் எங்கெங்கும்
ஒலிக்கப் போதும் போதும் என புவி வெடிக்க
பச்சிளம் குழந்தைகள் பிறந்த கொடும்பாவம் தீர
வேண்டாம் ஒரு பிரளயம் இவ்வுலகழிக்க
அவரைப் பெற்ற பெண்டிரையும், பசுக்களையும்
பலி கொடுங்கள்!


.

8 comments:

நேசமித்ரன் said...

நன்று மிக நன்று

வால்பையன் said...

ரொம்ப பெருசாயிருக்கு!
உள்ளிருக்கும் மேட்டரும்!

"அகநாழிகை" said...

விதூஷ்,
ஆழ்ந்த கருத்துக்கள். ஒரு கவிதைக்குள் ஒவ்வொரு வரியிலும் ஒரு கவிதை. அடர்த்தியாக இருக்கிறது கவிதை.
தீவிர அர்த்தத்தளத்தில் உள்ளது இக்கவிதை. வாழ்த்துக்கள்.

(18 G யா அல்லது 80 G யா..?)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Vidhoosh said...

ரொம்ப நன்றி நேசமித்ரன், வால் அருண்.

வாசு. அது 80 G தான். சுட்டியதற்கு நன்றி. :)

யாத்ரா said...

அருமையான கவிதை.

நசரேயன் said...

ம்ஹும்.. ஒண்ணுமே புரியலை எனக்கு.. கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுங்க தமிழ் தாயே

நசரேயன் said...

நாற்காலியில் இருந்த ஆணிகள் எங்கே போச்சு காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?

Vidhoosh said...

நன்றி யாத்ரா. :)

நன்றி நசரேயன். இது தமிழ் தான். இந்தியா வந்த பின் இன்னொரு முறை படித்து பாருங்கள். நிச்சயம் புரியும்.

இதய நாற்காலியின் ஆணிகள், என் கவனமின்மையால் draft ஆகவே இருந்து விட்டது நேற்று. இன்று release செய்து விட்டேன்.

Post a Comment