
நான்தானா அது, இருட்டுக்கு
மை தீட்டும் கண்கள் திறக்கிறேன்
என்னருகில் ஊர்ந்து வரும் சிலந்தி
கூர்ந்து பார்த்தால் என்னிலும்
பெரிதான எறும்புதான் அது
அதன் பெரிதான அளவைத் தவிர
வேறுபாடு ஒன்றும் இல்லை
கடந்து ஓடுகிறேன் அழைக்கிறது
எங்கோ ஒரு குரல் போலவே
கரைகிறதே கருப்பாக காகம்.
அருகில் நின்றேன்..அதே எறும்புதான்
உருமாறிய தன் பெரிய இறக்கைகளை
விரித்த சப்தம் சூனியத்தையும் துளைத்தது
பற என்று ஆணையிட்டு உயரப்
பறந்தது எறும்பு மேன்மேலே...
லாவாக் குழம்பு கக்கும் எறும்புப்
புற்றை நோக்கி என் கால்களைச் சுமந்து
உருகும் தரை மீது ஊர்ந்தது என் உடல்!
(Painting info - Flaming June by Frederick Leighton - 1895)
.
9 comments:
ரொம்ப பிடிச்சிருக்கு வித்யா
ரொம்ப நல்லா இருக்கு வித்யா.
அனுஜன்யா
ரொம்ப நன்றி நந்தா.
ரொம்ப நன்றி அனுஜன்யா (அட!)
வித்யா,
கவிதை அழகாக வந்திருக்கிறது.
யாத்ராவின் எறும்பு கவிதையைப் படித்ததிலிருந்து சில நாட்களுக்கு எறும்பின் நினைவாகவே இருந்தது. அடுத்தது எனது ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ உமாஷக்தியின் ‘சின்னுவைக் காணவில்லை‘ பூனை, அடுத்ததாக, தமிழ்நதியின் ‘பூனை‘ என தொடர்ந்து பூனைகளாக துரத்திக் கொண்டிருந்தது.
இப்போது மறுபடியும் உங்கள் கவிதை கனவின் எறும்பு.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//லாவாக் குழம்பு கக்கும் எறும்புப்
புற்றை நோக்கி என் கால்களைச் சுமந்து
உருகும் தரை மீது ஊர்ந்தது என் உடல்!//
அதி மானுடர்களின் உலகை விவரிக்கிறது
உங்களின் //கனவு//
நன்றாக இருக்கிறது..!
உண்மைதான் வாசு. இனியும் எப்போதும் எறும்பை நினைக்கும் போதெல்லாம் யாத்ராவின் நினைவும் கூடவே வரும். நன்றி.
நன்றி நேசமித்ரன். :)
Scifi கனவு??
எனக்கு மட்டும் இப்படி எல்லாம் கனவு வரமாட்டேங்குது
நன்றி நசரேயன். sci-fi எல்லாம் ஒன்றும் இல்லை. நீங்க சொல்வது போல கவி"ஜ" எழுத ஒரு மாற்று முயற்சி செய்தேன். அவ்வளவுதான்.
இதை விட உங்கள் கனவுகள் அழகானது. அதையே தொடருங்கள்.
Post a Comment