நேரமில்லை




ஒலிக்கிறது காதுகளில் தாலாட்டு
அம்மா என்றழைக்க நேரமில்லை
எல்லாருடைய எண்களும் கையிலுண்டு
தோழமைக்கு மட்டுமே நேரமில்லை

தோழருடன் என்ன நான் பேசிவிட
என்னவருக்கே என்னிடம் நேரமில்லை
காத்திருக்கும் இந்நிமிட சந்தோஷங்கள் ,
புன்னகைக்க மட்டும்தான் நேரமில்லை

கெஞ்சிடும் கண்களில் நல்லுறக்கம்
தூங்கிவிட மட்டும்தான் நேரமில்லை
இதயம் பொங்கி வரும் வெடித்துவிட
இலேசாக அழுதிட கூடவொரு நேரமில்லை.

ஓட்டமாய் ஓடுகிறேன் எங்கெங்கோ
களைப்படையக் கூட நேரமில்லை
இப்படியா வாழுகிறேன் வாழ்க்கையெல்லாம்?
வாழ மட்டுமொரு நேரமில்லை.

நன்றிக்கடனெல்லாம் கிடக்கட்டும் போ-இன்று
என்னுடைய கனாக்காண நேரமில்லை
ஒவ்வொரு உறவுகளாய் கொன்றுவிட்டேன்
பிணங்களை எரித்தாக வேண்டுமொரு நேரமில்லை!



.

18 comments:

கவி அழகன் said...

அழகான கவிதை. .வாழ்த்துக்கள்!

கவி அழகன் said...

அழகான கவிதை வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

கவிக்கிழவன் said...

அழகான கவிதை. தங்களின் படைப்புகள் அனைத்தும் மிக அழகாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!
Yathavan from sri lanka

R.Gopi said...

அருமையான எழுத்து நடை.....

தங்களின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது..... மேலும் தொடருங்கள்.....

//ஓட்டமாய் ஓடுகிறேன் எங்கெங்கோ
களைப்படையக் கூட நேரமில்லை
இப்படியா வாழுகிறேன் வாழ்க்கையெல்லாம்?
வாழ மட்டுமொரு நேரமில்லை. //

மிகவும் அருமை........... வாழ்த்துக்கள்.......

மண்குதிரை said...

நல்ல இருக்குங்க

அகநாழிகை said...

என்னப்பா ஆச்சு.
இவ்வளோ சோகம்....


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நேசமித்ரன் said...

சல சலன்னு ஓடுற ஓடை பக்கத்துல உட்கார்ந்து கிட்டு
ஆலமரத்துக்கு கீழ ரேடியோ பொட்டியில எண்பதுகள்ல வந்த ஒரு பழைய ராஜா பாட்ட கேட்டுகிட்டு பழைய ஆல்பம் ஒன்னும் கொஞ்சம் பழைய லெட்டர் கட்டு ஒன்னும் படிக்கிற பீல் உங்களோட இந்த கவிதையோட வடிவம் மற்றும் ஓட்டத்துல

கருப்பொருள் பத்தி சொல்லனும்னா எப்பவும் கிடைக்கிற ஒரு கவித்துவம் குறையுதோன்னு தோனுது

சும்மா அருமை அற்புதம்னு சொலிட்டு போறது நட்புக்கு அழகில்ல இல்லியா?
:)

ஆதவா said...

கவிதையிருக்கு காகிதமில்லைங்கறமாதிரி....
நமக்கு அப்படித்தான் ஆயிடுச்சுங்க.

கவிதை அழகான உணர்வுகளின் பிரதிபலிப்பு. என் மனதை நானே எழுதி படித்தது மாதிரி இருக்கிறது.

வாழ்த்துக்கள் விதூஷ்

அன்பின்
ஆதவா

பாலா said...

சகோதரி இந்த கவிதை படித்தவுடன்
வைர முத்துவின் கவிதை ஒன்று ஞாபகம்
தாமதம் என்று கேட்கும் மேனேஜருக்கு பதில் சொல்லும்
பெண் சொல்வதாய் ஒரு கவிதை "தாமதம் தாமதம் "என்றே முடியும்

யாத்ரா said...

கவிதை மிகப் பிடித்திருக்கிறது.

//தோழருடன் என்ன நான் பேசிவிட
என்னவருக்கே என்னிடம் நேரமில்லை
காத்திருக்கும் இந்நிமிட சந்தோஷங்கள் ,
புன்னகைக்க மட்டும்தான் நேரமில்லை//


//நன்றிக்கடனெல்லாம் கிடக்கட்டும் போ-இன்று
என்னுடைய கனாக்காண நேரமில்லை
ஒவ்வொரு உறவுகளாய் கொன்றுவிட்டேன்
பிணங்களை எரித்தாக வேண்டுமொரு நேரமில்லை!//


:)

Radhakrishnan said...

மிகவும் நன்றாக இருக்கிறது. நேரமில்லை என்று சொல்ல நேரம் எப்போதும் நமக்கு இருக்கும். அருமை.

Vidhoosh said...

யாழவன், கவிக்கிழவன் - நீங்கள் என்ன இரட்டைப் பிறவியா?? - :)
நன்றி கோபி
நன்றி மண்குதிரை
நன்றி வாசு - சோகமெல்லாம் இல்லை. கோபம்தான். இன்று ஆறு முறை போன் பண்ணியும், "மீட்டிங்-கில் இருக்கிறேன்" என்ற பதில் கேட்டு.
நன்றி நேசமித்ரன். நல்லா நட்பு பாராட்டுக. அதையே வேண்டுகிறேன். விமர்சனங்கள் எழுத்து வளர்க்கும்.
ஆதவா - நன்றி.
நன்றி பாலா
நன்றி யாத்ரா - :)
நன்றி இராதாகிருஷ்ணன். - அதே அதே.

நந்தாகுமாரன் said...

கவிதையில்லை (எனக்கு)

பிரவின்ஸ்கா said...

கவிதை நல்லாருக்கு.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

அ.மு.செய்யது said...

//களைப்படையக் கூட நேரமில்லை//

//ஒவ்வொரு உறவுகளாய் கொன்றுவிட்டேன்
பிணங்களை எரித்தாக வேண்டுமொரு நேரமில்லை!//

நான் ரசித்த வரிகள்.

அசத்தல் விதூஷ்.....நல்லதொரு ஆக்கம்.

Vidhoosh said...

நந்தா (we are in harmony now.. இந்த பதிவை வலையேற்றும் போதே உங்கள் திட்டை நினைத்து கொண்டே தான் type செய்தேன்.:)

பிரவின்ஸ்கா நன்றி :)
செய்யது நன்றி. :)

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு வித்யா...

Joe said...

WOW!

Post a Comment