விரும்பாத கவிதை



இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய் உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல் சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு
திரைச்சீலையாய் அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில், ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில், என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக் கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.



.

12 comments:

அகநாழிகை said...

விதூஷ்,

கவிதை அருமை.

//கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்//

//இருக்கும் நிறங்கள் எல்லாம் வானில்//

//நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்//

//கருப்பும் வெள்ளையுமாய் உடைந்த நிலவு//

//யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு//

இவ்வரிகளை வாசிக்கையில் உணர்வலைகள் மீட்டப்படுகிறது.

வாசிப்பும் இனிமை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Vidhoosh said...

நன்றி வாசு. எனக்கு interesting blog விருது வழங்கியதற்கும், தொடர்ந்து எனக்கு நல வழி காட்டுவதற்கும்.

:) நான் நெகிழ்ந்திருக்கும் சில நேரங்களில் எதுவும் சொல்ல வராது. அதே போலத்தான் இப்போதும். ரொம்ப நன்றி.

அ.மு.செய்யது said...

உங்கள் தளமும் ஆக்கங்களும் தலைப்பும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

இந்த கவிதையைப் போலவே ....

( இது என்னுடைய முதல் வருகை !!! இனி தவறாமல் தொடர்ந்து வருவேன் )

குடந்தை அன்புமணி said...

நான் விரும்பும் கவிதையாக இருக்கிறது தோழி. பலமுறை ரசித்து படிக்க வைத்தது உங்கள் வார்த்தை பிரயோகம்.

பாலா said...

அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்

enna oru muran !!!!!!!!!!!!


இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்

ingathaan irukko visayam ???????????


rasaikka mudinthathu aanal 100 % purinthu kolla mudiyavillai

naan innum niraya thooram poganum pola

R.Gopi said...

//கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்//

//நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்//

//சிந்திய புன்னகை போல் சிதறியிருக்கும் மேகங்கள்//

ஆ.....ஹா.. என்னே ஒரு உவமை!!??

//அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்//

பிரமாதம்....... இது என்ன முரண்பாட்டின் மூட்டை? என்று கேட்டாலும்......

//யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு//

சான்ஸ் இல்லை........

//நான் நினைவுகளில் வடித்ததைக் கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.//

மிக மிக பிரமாதம்....... சொல்ல வேறு வார்த்தை இல்லை........

கவிதையும், இதோ இந்த பின்னூட்டமும்தான்......

//நான் நெகிழ்ந்திருக்கும் சில நேரங்களில் எதுவும் சொல்ல வராது. அதே போலத்தான் இப்போதும்.....//

வாழ்த்துக்கள்...... தொடர்ந்து வருவேன்.... நான் தமிழை மறக்காமல் இருப்பதற்கு.......

நேசமித்ரன் said...

ஆகா !
வைரமுத்து பாணியில் சொல்வதென்றால் பேச்சு மூர்ச்சையானது
மொழி நொண்டுகிறது
அருமையான பயணம் ....!

விருதுக்கு வாழ்த்துக்கள்
:)

உங்களுக்கு விரும்பாத கவிதை
எங்களுக்கு விரும்பும் கவிதை

நந்தாகுமாரன் said...

//

நான் நினைவுகளில் வடித்ததைக் கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.

//

இதை மட்டும் நீக்கிவிட்டு எனக்குப் பிடித்த கவிதை எனக் கொள்கிறேன்

யாத்ரா said...

அருமையான கவிதை, மிகவும் பிடித்திருக்கிறது.

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று.

//கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்//

//சிந்திய புன்னகை போல் சிதறியிருக்கும் மேகங்கள்//

//திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு//

மேலும் எழுதுங்க‌ள்

ஆதவா said...

கவிதை பிரமாதமாக வந்திருக்கிறது விதூஷ்.
வெகு சில வரிகள்....

விரும்பியோ விரும்பாமலோ
கவிதை அங்கங்கே அலைந்து கொண்டிருக்கிறது
நீங்கள் பிடித்து கொடுத்திருக்கிறீர்கள்.

அன்புடன்
ஆதவா

Vidhoosh said...

செய்யது, அன்புமணி, பாலா, கோபி, நேசமித்ரன், லாவண்யா, ஆதவா - எல்லோருக்கும் நன்றி. :)

Post a Comment