பிரபல கர்நாடக இசை மேதையும், இசைத் திலகம் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருடன் இணைத்து போற்றப்பட்டவருமான முதுபெரும் இசைக்கலைஞர் டி.கே. பட்டம்மாள் காலமானார். அவருக்கு வயது 90.
அவருக்கு என் பணிவான நமஸ்காரங்களை அஞ்சலியாக்குகிறேன்.
====================
1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சீபுரம் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும், காந்திமதிக்கும் பிறந்த பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. அவருடைய தந்தையார் பட்டு என்று அழைத்ததே பிறகு அவுருடைய பெயராக நிலைத்தது என்று கூறுவர்.
தனது சகோதரர்கள் டி.கே. ரங்கநாதன், டி.கே.ஜெயராமன் போல இவரும் இளம் வயதிலேயே இசையில் சிறந்து விளங்கினார். துவக்கத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள், பிறகு முறையாக இசையைக் கற்றார். தனது 10வது வயதிலேயே வானொலியில் பாடினார்.
13வது வயதில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் இவரது இசை அரங்கேற்றம் நடந்தது. அதற்குப் பிறகே பட்டம்மாள் சென்னைக்கு குடியேறினார்.
பைரவி இராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப் புகழ் பெற்றார்.
இன்றைக்கு உச்ச ஸ்தாயில் பாடும் பெண் இசைக் கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி டி.கே.பட்டம்மாள்தான் என்று கூறுவார்கள். இவருடைய பக்திப் பாடல்களும், பாரதியாரின் விடுதலைப் பண்களை இவர் பாடியதும் ரசிகர்கள் இன்றும் மறக்காதவையாகும்.
.
6 comments:
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்..
வாழ்க்கையை நிறைவோடு வாழ்ந்து, மறைவிற்குப் பிறகும் உலகுள்ளவரை வாழப்போகும் டி.கே.பட்டம்மாள் இசையாளுமை அமரத்துவம் வாய்ந்தது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
இசையால் உலகை ஆளும் அந்த ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
தகவல் பகிர்வுக்கு நன்றி.
நண்பர்களே உங்கள் அனுமதியோடு பதிவுலகத்திலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறேன். நீங்கள் அளித்து வந்த ஆதரவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.நன்றி...
-Englishkaran.
என்றைக்கும்
காற்றில் மீதமிருக்கும் அவரின் கீர்த்தனைகள்
நித்தியஸ்ரீயின் குரலில் அவரைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அம்மா..!
பதிவிற்கு நன்றி
மற்றொரு இசைமேதை மறைந்தார். அவர் மறைந்தாலும், தலைமுறைகள் கடந்து அவரின் இசை வாழும் என்பது திண்ணம்.......
அன்னைன் ஆன்மா சாந்தி அடைய, அந்த இறைவனை இறைஞ்சுவோம்....
Post a Comment