சைக்கிள் - 2

இதன் முதல் பகுதி - சைக்கிள் 1

================================

கணக்கு வகுப்பு ஆரம்பித்தது.

கணக்கு வாத்தியார் பெயரே பலராமன். உள்ளங்கை பளபளவென்று திருமண வீட்டில் தேச்சு வச்ச தாம்பாளம் மாதிரி இருக்கும். சாதாரணமாக கணக்கில் எங்களுக்கு சந்தேகமே வராது. ஏன்னா எங்களுக்கு எதுவுமே புரியாது. அதை விட ஏதும் தப்பாக் கேட்டு விட்டா தாம்பாளம் எங்கள் கன்னத்தில் தாளம் போடும்.

பார்த்தாலே சிரிப்பு வரும் அளவுக்கு பயங்கர அழகுடன் வேறு இருப்பார். ஆனால் சிரித்துவிடும் அளவுக்கு எங்களுக்கு தைரியம் கிடையாது. யாரையாவது அடி பின்னாவிட்டால் அவருக்கு சாப்பாடு செரிமானிக்காது. தினமும் ஒரு ஐந்து பேரையாவது பெஞ்சு மேல் நிற்க வைப்பார். ஒரே ஆறுதல் என்னவென்றால் பெஞ்சு மேல் நின்றால் அடிக்க மாட்டார். அடி வாங்கியவன் பெஞ்சு மேல் நிற்க வேண்டாம் என்ற கோட்பாடு கொண்ட நல்லவர் அவர். தினமும் பெஞ்சு மேல் நிக்கவேண்டும் என்று சாமி கும்பிடும் கூட்டமே உண்டு.

அவர் கிளாஸ் மட்டும் அமைதியோ அமைதி. யாரும் பேசக்கூட மாட்டோம்.

இன்று odd and even சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார்.

மேட்டர் திடீரென "சார். doubt?" என்றான்.

சிக்லெட் அடக்கினான் "டேய் வேணாண்டா..." என்றான்.

கேட்டே விட்டான் மேட்டர். "சார் ஆடம் அண்ட் ஈவ் எல்லாம் கணக்கு பண்ணிருக்காங்களா சா.." முடிக்க முடியாத மாதிரி வாய் திரும்பியிருந்தது.

"சிதம்பரமா உன் பேரு.. உங்க அப்பாவ வந்து என்ன பாக்க சொல்லு" என்று நெளிந்த தாம்பாளத்தை உதறியபடி சென்றார் கணக்கு வாத்தியார்.

அழுதபடியே புலம்பினான் மேட்டர் "ஆட் அண்ட் ஈவன்னுதான் கேக்க வந்தேண்டா... பழக்க தோஷத்துல வாய் தவறிடுச்சுடா". பட்டாத்தானுக்கு இன்னிக்கி அட்வைசுக்கு ஆள் கிடைத்த ஒரே சந்தோஷம்.

சொங்கி அங்கு ஓடினான். "டேய் ரமேசு, நீ எங்க சைடா அவங்க சைடா." என்று மேட்டரை முறைத்தான்.

அவிங்க குரூப்புக்கு கணக்கு வாத்தியார் மேல் இருக்கும் ஆத்திரத்தை முழுதும் தீர்த்துக்கொள்ள சொங்கி முதுகு பங்க்ச்சராகும் வரை ஓயமாட்டான் மேட்டர்.

எலிகள் சண்டையில் பல்லிக்கென்ன வேலை. என் கணக்கு நோட்டில் பிறந்தது இந்தக் கவிதை போலும்.

நம்
நாட்டு எல்லைகள் போல் இணைக்கவே
முடியாமல் இருக்கும்
புள்ளிகள் கொண்ட
ஹே geometry தேவியே உனக்கு வணக்கம்,
இயல்பாகவே வராத இயற்கணிதம்,
அறுகோணமோ என்னவோ அது, ஆசை இல்லை
மேலும் அறிய, போதுமென்ற திருப்தியுடன்
180 டிகிரி திருப்பத்தில் வாழ்கிறேன்,
சிக்கலெண் திசையன் வெளியில் நிகழும் மையப்பிறழ்வு
pi கால சக்கரத்தின் diameter கிடைக்கவேயில்லை
நிதிகூற்றுக்கள் கூறு போட்டு, கூட்டு பெருக்கு சராசரிகள்
சராமாரியாய் தாக்கின, partial fraction பாரபட்சமானது
mental calculus முழு மெண்டல் ஆக்கியது, திருகி கொண்டு
படித்தாலும் புரியாத Trigonometry, நான் எழுதும்
பரீட்சை பேப்பர்களோ காட்டிவிடும்
திட்ட விலக்கலின் உண்மை அட்டவணை...
நீ இரண்டும் இரண்டும் நாலென்றே படி,
உன் பண்பு காட்டி நான் ஒன்றும் ஒன்றும்
பதினொன்று என்பேன்.

"பல்லி. காப்பி பண்ண உன் கணக்கு நோட்டத் தாப்பா" என்றபடியே வந்தாள் தாரணி.

சொங்கி அலறும் சப்தம் கேட்டது...

(தொடரும்...)

============

(வாரம் ஒரு முறை சைக்கிளில் வர முடியாது போலிருக்கு. மன்னிக்கவும். முடிந்த போதெல்லாம் வரும் சைக்கிள்)

===========

தமிழ் கணித வார்த்தைகள் தெரியாதவர்களுக்கு இதோ கோனார் (நசரேயனுக்கு)

இயற்கணிதம் - algebra
அறுகோணம் - hexagan
சிக்கலெண் திசையன் வெளி - Complex Vector Space
மையப்பிறழ்வு - Eccentricity
நிதிகூற்று - Cash Statements
கூட்டு பெருக்கு சராசரி - Geometric Mean
திட்ட விலக்கல் - standard deviation
உண்மை அட்டவணை - Truth Table
பண்பு காட்டி - discriminant

180 டிகிரி திருப்பம் - 180 degree turn (complete change) - context-டில் இது கணிதம் சார்ந்தது அல்ல.

===================================


.

10 comments:

மண்குதிரை said...

puthusaa irukku

அ.மு.செய்யது said...

வாவ்.....கணக்கு கவிதை அசத்திட்டீங்க போங்க...

கணக்கு பீரியட்ல கவிதையா ????நிறைய தமிழ் கலைச்சொற்கள் கற்றுக்கொண்டேன் உங்களிடமிருந்து.....

நன்றி விதூஷ்...

அ.மு.செய்யது said...

கூட்டு பெருக்கு சராசரின்னா Arithmetic mean தானே ?? சரியா ??

R.Gopi said...

//கணக்கு வாத்தியார் பெயரே பலராமன். உள்ளங்கை பளபளவென்று திருமண வீட்டில் தேச்சு வச்ச தாம்பாளம் மாதிரி இருக்கும். சாதாரணமாக கணக்கில் எங்களுக்கு சந்தேகமே வராது. ஏன்னா எங்களுக்கு எதுவுமே புரியாது. அதை விட ஏதும் தப்பாக் கேட்டு விட்டா தாம்பாளம் எங்கள் கன்னத்தில் தாளம் போடும்.//

ஒப்பனிங்கே சிரிப்பாவும், கூடவே டேர்ரராவும் இருக்கே..... (நான் படிக்கறச்சே கணக்கு வாத்தியார் பெயர் ஜெயராமன் என்று நினைக்கிறேன்...... எல்லோரையும் கூப்பிட்டு முதுகில் நாலு சத்து சாத்துவார்.... அது, அவருக்கு ஒரு ஹாபி. அத, இப்போ நெனச்சா கூட, லேசா முதுகு வலிக்கற மாதிரி இருக்கு.....).

//பெஞ்சு மேல் நின்றால் அடிக்க மாட்டார். அடி வாங்கியவன் பெஞ்சு மேல் நிற்க வேண்டாம் என்ற கோட்பாடு கொண்ட நல்லவர் அவர். தினமும் பெஞ்சு மேல் நிக்கவேண்டும் என்று சாமி கும்பிடும் கூட்டமே உண்டு.//

இப்படி எல்லாம் கூட சலுகை இருக்கா.... பேஷ்... பேஷ்... பரவால்ல...

//"சார் ஆடம் அண்ட் ஈவ் எல்லாம் கணக்கு பண்ணிருக்காங்களா சா.." //

ஆ... ஹா...... வில்லங்கத்த தொடங்கிட்டானே பையன்.....

//இயல்பாகவே வராத இயற்கணிதம், அறுகோணமோ என்னவோ//

சூப்பர்........

//mental calculus முழு மெண்டல் ஆக்கியது, திருகி கொண்டு படித்தாலும் புரியாத Trigonometry//

ஹா......ஹா........ஹா........

விதூஷ்.....கலக்கல்....தொடருங்கள்.......

பாலா said...

இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருகோம் திரும்பவும் கணிதம் இயற்கனிதம்னு avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

யாத்ரா said...

நல்லா இருக்கு,

ஐயோ ,இவ்ளோ கணிதம் எனக்கு தெரியாதுப்பா :)

கார்த்தி said...

/* இயற்கணிதம் - algebra
அறுகோணம் - hexagan
சிக்கலெண் திசையன் வெளி - Complex Vector Space
மையப்பிறழ்வு - Eccentricity
நிதிகூற்று - Cash Statements
கூட்டு பெருக்கு சராசரி - Geometric Mean
திட்ட விலக்கல் - standard deviation
உண்மை அட்டவணை - Truth Table
பண்பு காட்டி - discriminan */

நீங்க சொல்லித்தான் இத தெரிஞ்சுகிட்டேன்..அருமை.. நா ஆங்கிலத்தில் ஆத்தர்ங்க ..

"அகநாழிகை" said...

கணக்கில்
ஆர்வமில்லை
எனக்கு

இருந்தாலும்
வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நேசமித்ரன் said...

அருமை வித்யா
அது சரி புரிஞ்சா தானே சந்தேகம் வரும்
:)

" உழவன் " " Uzhavan " said...

கணிதக் கவிதை மிக அழகு :-)

Post a Comment