விடை பெறுகிறேன் தோழர்களே

வைதரணி நதிகரையில் தெற்கே சிவந்த வானம். பூமியும் மனித இரத்தத்தில் சிவந்தே கிடந்தது. பாதி எரிந்த நிலையில் இருந்த மரத்தின் கிளையில் ஒரு ஊஞ்சல். அதில் யமதர்ம இராஜாவும் அவர் சகதர்ம இராணியும் உல்லாசமாய் பேசிக்கொண்டிருந்தனர். காதல் பேச்சா அது! இல்லை காலன் பேச்சு. அடுத்து யார் தலை என்று இராணி இங்கி பிங்கி போட்டு கொடுக்க, இராஜா போட்டு தள்ளிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் பெண்களுக்கே உரிய நற்குணங்களில் ஒன்றான "ஒரே காரியத்தை செய்து போரடிப்பது", இராணிக்கும் நிகழ்ந்தது.

அந்த நிகழ்வின் பின் விளைவுகளை சொல்லெறி குண்டுகளாக தாங்கும் மற்ற கணவன்மார்களைப் போலவே, எமதர்மனும் பாவம் கிரீடத்தை கழற்றிவிட்டு தலை சொரிந்து கேட்டுக் கொண்டிருந்தார். முடிவில் இராணியின் ஃபாரின் டூர் கோரிக்கையை அங்கீகரிப்பதை விடவும் வேறன்ன செய்ய முடியும் பாவம்.

இந்திரனின் சபைக்கு ஒரே ஒரு நாள் லீவு கேட்டு ஒரு கடிதம் போட்டார். அந்த அப்பிளிகேஷனை பத்தாக கிழித்து யமன் தலையில் பத்து போட்டு யமனுக்கு தீராத தலை வலியைக் கொடுத்தார் இந்திரன்.

இப்போ என்ன செய்வது என்று யோசித்தார் யமன். முடிவில் அந்த முடிவை எடுத்தேவிட்டார் பேனாவை எழுதிவிட ஒரு இராஜினாமா.

"இனிமேல் நான் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயம் பண்ணி எழுதவே மாட்டேன். விடை பெறுகிறேன் தோழர்களே. என்னை தயவு செய்து திரும்ப வரச்சொல்லி அழைக்க வேண்டாம். எனக்கு விடை கொடுக்க வாசல் வரை கூட வர வேண்டாம். எனக்கு இனிமேல் சக்தி இல்லை போராட, என் மனைவி மீது சத்தியமாய். அவர்களை வேறு சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தப்பிக்க இங்கு வந்தால், நீங்க வேற. எத்தனை நேரம் அழுகையை அடக்குவது. கொலைகாரக் காலன் என்ற கெட்ட பெயர் வேறு எனக்கு. ஒருவரை எத்தனை பேர் அடிப்பீர்கள். விடை பெறுகிறேன் தோழர்களே. வணக்கம்." என்றெல்லாம் புலம்பி எழுதி இருந்தார் அவர்.

அந்தோ! என்ன பரிதாபம். இந்தக் கடிதம் இந்திர சபைக்கு போய்ச் சேருவதற்கு முன்பே, யமதர்ம ராஜன் தன் சகதர்மிணியுடன் ஃபாரின் டூர் கூட்டிப் போவதாக சொல்லி பூலோகத்திற்கு தப்பித்து வந்து விட்டார்.

யம லோகமே அல்லோலகல்லோலப்பட்டது. எல்லோரும் யமனைத் தேடினார்கள். இந்திர லோகத்திலும் ஒரே அமளிதான். கைலாச லோகம் ஸ்தம்பித்தது. வைகுண்டம் வாயடைத்து நின்றது.

யாருமே இன்னும் சாகாத ஒரே காரணத்தால் காத்தல் மற்றும் படைத்தல் தொழிலும் நின்று போனது. வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் எல்லோரும் எமனை மட்டுமே குறித்திருந்தனர். சித்திரகுப்தன் கூட, பாவ புண்ணியக் கணக்கு எழுதாமல், கடிதாசி எழுதி தள்ளிக் கொண்டிருந்தான்.

"நீங்கள் இல்லை என்றால் நாங்கள் எப்படி இல்லாமல் போவது" என்றெல்லாம் உருக்கமாய்ப் பேசி கடிதாசெல்லாம் போட்டார்கள். அழகான அப்ஸரசுகள் யமலோகத்தின் வாசல் வரை சென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டு வந்தார்கள். யமவாஹனமான எருமை கூட "ம்மே ம்மே" என்று கத்தாமல், "ம்ப்ப்பா ம்ப்ப்பா" என்றே அவரை அழைத்து அழுது கதறியது.

ஒவ்வொருத்தரும் தனித் தனியே அவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இப்படித் தனியாக தேடுவதை விட, குழுவாக தேடினால் பரவாயில்லை என்று முடிவுகட்டி இந்திர சபை கூடியது. எல்லோரும் ஒரு கருத்து சொல்ல, இந்திரன் ஆவென்று அலறினான் தலை சுற்றி.

முடிவில் அவருக்கு கைபேசி அழைப்பு விட சபையில் தீர்மானிக்கப் பட்டது. இந்திரன் தன் நோக்கியா 1100-வை எடுத்து ஸ்டைலாக நம்பர்களைக் குத்தினார்.

"the subscriber you have called is not reachable" என்று கேட்டது.

"என்ன எமனுக்கு போன் போட்டால் ஒரு பெண்மணி பேசுகிறாரே" என்றபடியே, இந்திராணியிடம் ரொம்ப நல்லவர் போல போனைக் கொடுத்தார் இந்திரன்.

இந்திராணி டயல் செய்த போது "நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்" என்று ஒரு குரல் கேட்டது.

"சரி பார்த்துவிட்டேனடி குழந்தை. கொஞ்சம் யமனிடம் போனை கொடுடி" என்றார் இந்திராணி.

"நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்" என்றே கூறியது.

இந்திராணிக்கு கோபம் வந்து விட்டது. "அடி பிரம்மஹத்தி. போனைக் கொடு என்று சொல்கிறேன். திமிரா உனக்கு?" என்றார்.

ஏதோ பிரச்சினை என்று அறிந்த இந்திரன், போனை வாங்கி கால் சென்டருக்கு போன் செய்தார். கால் சென்டரின் தானியங்கி குரல் இந்திரனை சீரோ முதல் ஒன்பது வரையான அனைத்து எண்களையும் அமுக்கச் சொல்லியது. அப்படியே செய்தார் இந்திரன். ஒரு வழியாய் ஒரு குரல் கேட்டது என்று கூர்ந்து கவனித்தார்.

"மன்னிக்கவும். அலுவலக வேலை நேரமான காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை தொடர்பு கொள்ளவும்" என்று ஒலித்த குரலோடு சண்டை போட்டார்.

கடைசியில், தோற்று, வேறு வழி இல்லாமல், மனிதர்கள் இறந்தே போகாமல் அமரத்துவம் அடைந்து வருவதால், நிலைமையின் மென்மைத்தன்மையை உணர்ந்து, கொஞ்சம் நிதானமாய் நடந்து கொள்ள முடிவு செய்தார்.

பொறுமையாய் பேசினார், "சரிங்க. உங்கள மன்னிச்சு விடுகிறேன். யமன் கிட்ட கொஞ்சம் போன குடுங்க தயவு செய்து." என்று கெஞ்சினார்.

குரல் மீண்டும் அதே பல்லவியைப் பாட நோக்கியா 1100, தூள் தூளானது. முடிவில், தேவலோகத்தில் அனைவரும் ஒரு சேர இணைந்து ஒரே குரலில் சத்தமாய் யமனை அழைக்க முடிவு செய்யப்பட்டது. கத்திய கத்தலில் அனைவருக்கும் தொண்டை வரண்டதுதான் மிச்சம். யமன் வரவே இல்லை.

ஒரு நாள் இவ்வாறாகக் கழிந்தது. யாரும் சாகவில்லை. கடைசியில் யமலோகத்தில் காலனின் காலடி சப்தம் கேட்டது. இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் யமலோகத்தில் குழும எல்லோரும், வந்துடீங்களா, வந்துட்டீங்களா என்று ஆனந்த கூத்து அடித்தனர்.

இந்திரன் கோபமாய் யமனைப் பார்த்து, "நீ எப்படி இராஜினாமா செய்யலாம்? எங்கு போனாய்" என்று கேட்டார்.

"இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவை இல்லை. எனக்கென்று ஒரு அன்பு செலுத்தும் கூட்டம் பூலோகத்தில் உள்ளது. அவர்களைப் பார்த்து வரச் சென்றேன். வேண்டும் என்றால் ஏன் திரும்பி வந்தேன் என்று மட்டும் கேளும்." என்றார் யமன்.

இந்திரன் கோபம் தலைக்கேற, அண்டசராசரங்களும் நடுநடுங்கும்படி, "அதத்தான்டா இடக்கரடக்கலில் கேட்டேன் மாங்காய் மடையா!" என்று அலறினார்.

யமன் குழைவான குரலில், "ஹே இந்திரா. என்னை மன்னித்து விடு. நான் பாட்டுக்கு நானுண்டு, என் கொலைத் தொழிலுண்டு என்றிருந்தேன். சகதர்மிணியின் தொல்லை தாளாது, அவள் கேட்ட கேள்விக் கனிகளில் இருந்த உள்ளர்த்தம் புரியாது ஆடி விட்டேன். மன்னிக்கவும், ஓடி விட்டேன்.

பூலோகத்திற்கு என் yamaha-வில்
ஃபாரின் டூர் போய் வந்தேன். அங்கு போனால், multiplex-சில் parking செய்ய இடமில்லை. சினிமா பார்க்காமலே திரும்ப வேண்டியதாயிற்று. சரி தொலையட்டும் என்று beach-சுக்கு போனால், அங்கேயும் கூட்டம், என் நாயகியுடன் தனியாக இருக்க முடியாதவாறு. சாலையில் நடக்கக் கூட முடியாமல் கூட்டம் அதிகமான போதுதான், நான் கடமை தவறியது நினைவுக்கு வந்தது.

திரும்பி விட்டேன், உலக நலனுக்காக. இனி மீண்டும் எல்லோரும் சாவார்கள். மீண்டும் மயானங்கள் நிரம்பும். எல்லோரும் போகிறேன் போகிறேன் என்று போகாமல் இருப்பவர்களை நினைத்து அழுதபடியே இருப்பார்கள்"

தேவலோகம் யமன் தன் காரியத்தை பார்க்க வந்த மகிழ்ச்சியை அமளி துமளி ஆகிக் கொண்டாடியது. இனி நாமெல்லாம் சாக வேண்டியதுதான் - ஜாக்கிரதை.


பொறுப்பு அறிவித்தல் - இதில் யாரும் உள்குத்துகளைத் தேடி அரசியல் செய்து சக்தியை வீணாக அடிக்க வேண்டாம், அஹ் அஹ் அதாவது, வீணடிக்க என்றே கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.



.

13 comments:

குடந்தை அன்புமணி said...

ஹா...ஹா.... ஹா.... என்னமோ ஏதோன்னு விழுந்தடித்து ஓடிவந்தேன். யக்கோ... சிரிச்சு சிரிச்சு கண்ணில தண்ணியே வந்திடிச்சுக்கோ...

சத்தியமா எதுவும் உள்குத்து இல்லையே...

நம்புறோம்...

சரி, நான் கிளம்புறேன்...

உண்மையைத்தான் சொல்றேன்கா... படிச்சாச்சு. பின்னூட்டம் போட்டாச்சு. அப்புறம் என்ன... ஹா... ஹா... ஹா...

கிருஷ்ண மூர்த்தி S said...

போய்வருவேன் சபையோரே, போய்வருவேன் நான்'னெல்லாம் போட்டீங்கன்ன, நிஜம்மாவே போய்வாங்கன்னு சொல்லிடப்போறாங்க! இப்பத்தான் ஒரு காமெடியனை என்பதிவுல என்ட்ரி கொடுத்துட்டு வந்தா இங்கே இப்படி:-)

உமா said...

மிக மிக சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.முழுதாய் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

வால்பையன் said...

எப்பா இது என்ன விடை பெறுகிறேன் வாரமா?

எல்லாமே கலாய்த்தலா இருக்கே!
எதை தான் நான் நம்ப!

அ.மு.செய்யது said...

ஹா..ஹா..பின்னி பெடலெடுக்கறீங்க...

1100 முதல் யமஹா வரை ரசித்து சிரித்தேன் வித்யா...அசத்தல் ரகம்.

நந்தாகுமாரன் said...

செம கற்பனை காமடிங்க ... முதல்ல எங்க விலகப் போறீங்களோன்னு பயந்துட்டேன் (அப்புறம் நானெல்லாம் யாரைத் திட்றது அல்லது பாராட்றது (எனக்கிருக்கும் மிக சொற்ப நண்பர் வட்டத்தில் ஒருவர் குறைந்துவிட்டால்) ... ரசித்தேன் சிரித்தேன் ... நல்ல மொக்கை எழுதிய பொறுப்பில்லாமல் பொறுப்பு அறிவித்தல் போட்டதற்காக மட்டும் வாங்கிங்க ஒரு திட்டு :)

ஆதவா said...

பிரமாதம் பிரமாதம்..... மார்வ்லஸ்.!!!!!!

முற்றிலும் புதியதாய்.... எனக்குத் தெரிந்து எமபுரட்டன் எனும் கதை எனக்கு மிகவும் விருப்பம் மிக்கதாக இருந்திருக்கிறது. இருத்தல் யுகத்தை கற்பனை மனுஷிகளோடு சேர்த்து எழுதிய அழகான காமெடி!!!

Expecting ur next move!!!!

நேசமித்ரன் said...

விதூஷ்
ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்
அடிச்சு பிடிச்சு வந்தா காமெடிப் பதிவு

நல்லாத்தான்யா கிளம்பி இருக்காய்ங்க
நல்லாதான பொயிட்டு இருந்துச்சு
ஏன் இப்புடி
விடை பெருராங்கலாம் விடை
நந்தா சொன்ன மாதிரி அப்புறம் யாரை திட்டுறது
இருக்குறதே ரெண்டு மூணு பேரு

ஆனா காமேடியிலயம் பின்னுது உங்க எழுத்து
இனிமே இப்புடியெல்லாம் பயமுறுத்தக்கூடாது ஆமா

பொன் மாலை பொழுது said...

பயம் காட்டி காமெடி பண்ணிய விதம் அருமை. நன்றாக வந்த ஒரு முயற்சியை ஏன் சடக் கென்று முடித்துவிட்டீர்கள்?

யாத்ரா said...

:) :) :)

ஐயோ சிரிப்பு தாங்க முடியலங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நானும் தலைப்பு பாத்து முதல்ல பயந்துட்டன். நிறைய தெறிப்பான வரிகள் அங்கங்கு இருந்தது. மிகவும் ரசித்தேன்.

R.Gopi said...

யப்பா.........

எமன் பெற சொல்லி என்னா வில்லத்தனம்.......... நான் கூட தலைப்பை பார்த்துட்டு என்ன ஆச்சோன்னு ஓடி வந்து, மூச்சிரைக்க பார்த்தா...... ஆ......ஹா....... இனிமே, யாரையுமே வெள்ளந்தியா நம்ப கூடாதுடா மக்கான்னு "மத்து" எடுத்து ஓங்கி தலையில போட்ட மாதிரி இருந்தது..... யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்....

எனிவே...... கலக்கிடீங்க..... அதுவும் அந்த "உள்குத்து" இல்லாத கடைசி லைன், ஹ்ம்ம்.. பின்னுது........

நெக்ஸ்ட் என்ன???

Vidhoosh said...

நன்றி எல்லோருக்கும்.

அன்புமணி: அப்படியெல்லாம் போக முடியுமா.

கிருஷ்ணமூர்த்தி: அப்படியெல்லாம் சொல்ல படாது. போகதீங்கன்னு கெஞ்சனும். இலக்கியம் வாழவேண்டாம்.

நன்றி உமா

வால் அருண்: நீங்க எதையாவது நம்புவீங்களா என்ன? ஆனா, சென்ஷி தளத்தை காட்டியதற்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்...ஹா ஹா ஹா

செய்யது: நன்றி.

நந்தா, நேசமித்ரன், யாத்ரா: கழுத கெட்டா குட்டிச் சுவரு. நான் எங்க போறது... சும்மா எல்லோரும் சொல்லறாங்களே அப்படீன்னு யமனையும் பேச வச்சேன்.

ஆதவா: ரொம்ப நன்றி

மாணிக்கம்: இதுவே நீளமாய் எழுதிவிட்டேன்னு நினைச்சேன்.

கோபி: பத்த வெக்காதீங்க நண்பரே. இருந்தும் இல்லாத மாதிரி, தெரிஞ்சும் தெரியாத மாதிரி விட்டிடிங்க. அந்தக் கேள்வி பதில் படிச்சு, சென்ஷி கெஞ்சி கேட்டதை படிச்சு, முடியலப்பா, தடுக்க முடியலப்பா என் பேனாவை அஹ் அஹ் கீ போர்டை - இதெல்லாம் தற்செயலா நடந்ததுன்னு சொன்னா நம்பிக்கணும். ஓகே.



I thank all of them too who voted for this story and made it popular in Tamilish
Srivathsan, aadava, hihi12, boopathee, kiruban, ashok92, vilambi, VGopi, jntube, swasam, idugaiman

Unknown said...

உங்க பதிவு சம்பந்தமா நான் ஒரு பதிவிட்டிருக்கேன் முடிந்தால் படிக்கவும்

http://oviya-thamarai.blogspot.com/2009/07/blog-post.html

Post a Comment