கேட்காத பிட்சை
Posted by
Vidhoosh
on Saturday, July 18, 2009
Labels:
கவிதை
குறைகள் இருந்தாலும்
உங்களிடம் குறைந்தது
ஒரு திருவோடு,
வெட்கம் வெட்கம்
தலை குனிந்தேன் நான்
என்னிடம் ஏதுமில்லை.
கடந்து போங்கள்!
நான் ஓதுகிறேன் உலகம் உய்ய
ஓதுவதால் தீரவில்லை எம் தாகம்,
தாகம் தீராது, நடக்கிறது நிதம்
ஒரு ஊமைச் சிலைக்கு
அபிஷேகம்! அதையேதான்
பருகுகிறார் எம்மக்கள்.
உணவெல்லாம் ஹவிசாக..
பட்டாடைப் படையலிட்டு
எறியுங்கள் ஹோமத் தீயில்
நன்கு எரியட்டும் பசித்தீயில்
என்னுடல், என் ஆன்மா
என் மனம் இவையெல்லாம்...
போய் விடுங்கள்.. உங்கள்
அரை நிர்வாணம் கூட அறுவருப்பு
சமீபம் நிற்க வேண்டாம்
மற்ற கண்களுக்குத் தெரியாது
உமக்கும் எமக்குமான வித்தியாசம்
உங்களிடம் திருவோடு
என்னிடமோ இன்னும் நீட்டாத
வெறும் கையில் பத்து விரல்கள்
நானோ பரிசுத்தம், நானே உண்மை
என்று கிடக்கிறது தினம் தினம்
என் வேர்வைக்கு சில்லரைக்கள்
நீங்கள் கேட்டே விட்டீர்கள்.
என்னிடமோ இன்னும்
தன்மானத் திரை அணிந்து
நிர்வாணம் ஆகாமல்
பல கேட்காத பிட்சைகள்
தயவு செய்து போய்விடுங்கள்.
என்றெல்லாம் பேசவில்லை.
நாகரீகம் கருதி சொன்னது
என் அகம்-பாவம்
"போடா பிச்சைகாரா !"
.
6 comments:
//குறைகள் இருந்தாலும்
உங்களிடம் குறைந்தது
ஒரு திருவோடு,
வெட்கம் வெட்கம்
தலை குனிந்தேன் நான்
என்னிடம் ஏதுமில்லை.
கடந்து போங்கள்//
இது புரிகிறது. சரி.
//சமீபம் நிற்க வேண்டாம்
மற்ற கண்களுக்குத் தெரியாது
உமக்கும் எமக்குமான வித்தியாசம்
உங்களிடம் திருவோடு
என்னிடமோ இன்னும் நீட்டாத
வெறும் கையில் பத்து விரல்கள்
போய் விடுங்கள்.. உங்கள்
அரை நிர்வாணம் கூட அறுவருப்பு
நான் பரிசுத்தம், நானே உண்மை
கிடக்கிறது தினம் தினம்
என் வேர்வைக்கு சில்லரைக்கள்//
இதுவும் சரி.
//நீங்கள் கேட்டே விட்டீர்கள்.
என்னிடமோ இருக்கிறது
இன்னும் தன்மானத் திரை
அணிந்து நிர்வாணம் ஆகாமல்
பலக் கேட்காத பிட்சைகள்
தயவு செய்து போய்விடுங்கள்//
இதுவும் சரிதான்.
//போடா பிச்சைகாரா//
ரசித்தேன்.
மீதமுள்ள வரிகள் தேவையற்றவை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//குறைகள் இருந்தாலும்
உங்களிடம் குறைந்தது
ஒரு திருவோடு,
வெட்கம் வெட்கம்
தலை குனிந்தேன் நான்
என்னிடம் ஏதுமில்லை.
கடந்து போங்கள்!//
மனம் பாரம் கொள்கிறது......... இதை படிக்கையில்.....
//நான் ஓதுகிறேன் உலகம் உய்ய
ஓதுவதால் தீரவில்லை எம் தாகம்,
தாகம் தீராது, நடக்கிறது நிதம்
ஒரு ஊமைச் சிலைக்கு
அபிஷேகம்! அதையேதான்
பருகுகிறார் எம்மக்கள்.
உணவெல்லாம் ஹவிசாக..
பட்டாடைப் படையலிட்டு
எறியுங்கள் ஹோமத் தீயில்
நன்கு எரியட்டும் பசித்தீயில்
என்னுடல், என் ஆன்மா
என் மனம் இவையெல்லாம்...//
இந்த பாராவில் எனக்கு உடன்பாடில்லை.....
//நாகரீகம் கருதி சொன்னது
என் அகம்-பாவம்
"போடா பிச்சைகாரா !"//
தெறிக்கிறது............
வாழ்த்துக்கள்.
Wow ... I like this piece of pie ... it's good actually
நன்றி நந்தா
நன்றி யாத்ரா (உங்கள் கமெண்ட், ஒரு அனானி கமெண்டோடு தவறுதலாய் அழிந்து விட்டது. மன்னிக்க)
அருமை
கடைசி வரியில் தீக்குச்சி கிழித்து போடுகிறதுசொற்கள்..!
அகநாழிகையோடு நானும் ஒத்துபோகிறேன்
'' ப்ரமார்ப்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரம்மாக்நொவ் பிரம்ம நாகுதம் பிரம்மை வதேன கந்தவ்யம் பிரம்ம கர்ம சமாதினா "
பிரம்ம என்று வரும் இடத்தில் கார்பன் என்று போட்டால் சயின்ஸ் தானே ...
என் கருத்தில் மாற்று கருத்து இருந்தால் தாராளமாக தெரிவிக்கவும்
கோபித்துக் கொள்ள வேண்டாம்
:)
muthal 7 varikal..
paaramaakkiyathu.
Post a Comment