இளைய கிங் ஆர்த்தர் வேற்று நாட்டு மன்னரின் விசுவாசிகளான ஒர் கும்பலால் மறைந்திருந்து தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இக் கும்பல் அவரைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அவரது இளம் வயது மற்றும் மேலான எண்ணங்களைக் கண்டு அவ்வாறு செய்யவில்லை. மாறாக அவரை ஒரு கடினமான கேள்விக்கு விடையளிக்க சம்மதித்தால் விடுதலை எனக் கூறி அடைத்து வைத்திருந்தனர். மேலும் அக்கேள்விக்கு விடையளிக்க ஒரு வருட கால அவகாசமும் அளித்தனர். ஒரு வருடகாலத்திற்குப் பிறகு அக்கேள்விக்கு ஆர்த்தர் பதில் சொல்லாமலிருந்தால் அவருக்கு மரணதண்டனை கொடுக்கவும் விதித்தனர்.
அந்தக் கேள்வியானது - ஒரு பெண் உண்மையாகவே எதை விரும்புகிறாள்?
இப்படிப்பட்டக் கேள்வி, முதுபெரும் அறிஞர்கள், உயர்ந்த படிப்பு படித்த பேரறிஞர்கள் போன்றோராலும் பதிலளிக்கவியலாத ஒன்றாகும். ஆர்த்தரோ இளைஞர், மணமாகாதவர் - அவருக்கு இது இயலாத ஒன்றாகவேத் தோன்றியது. ஆனால் விடை தேடுவது மரணத்தை விட மேலானது என்று நம்பினார்.
அவர் இந்தச் சவாலை ஏற்று ஓராண்டுக்குள் பதில் கூறுவதாகக் அறிவித்தார். அவரை அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பினர்.
தன்னாட்டுக்குத் திரும்பிய ஆர்த்தர் கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் இறங்கினார். இளைய ராணி, மகாராணி, மூத்தவர், அறிஞர், நீதிபதிகள் என பேரறிவாளர்கள் எல்லோரையும் கேட்டார். யாரும் இதற்குத் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. இவர்களில் பலர் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் எல்லாக் கேள்விகளுக்கும் விடையிருப்பதாயும் அவளிடமே போய் கேட்டுப்பார்க்கும்படியும் சொன்னார்கள். ஆனால் கூடவே அவளது பேராசை மற்றும் குரூர புத்தி பற்றியும் எச்சரித்தனர்.
பெரும்பான்மையினர் அவ்வாறே அறிவுறுத்தவே, இளவல் ஆர்த்தர் அவர்கள் எச்சரிக்கையையும் மனதிற்கொண்டு அவளைச் சென்று பார்ப்பதைப் பற்றிய முடிவு ஏதும் எடுக்கவில்லை.
ஒராண்டு முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கையில் யாருமே திருப்திகரமான பதில் கூறாததால், வேறு வழியின்றி சூனியக்காரியைப் போய் பார்க்க முடிவு செய்தார் ஆர்த்தர்.
சூனியக்காரி கேள்விக்கு விடையளிக்க ஒப்புக் கொண்டாள். இதற்கு முக்கிய காரணம் சூனிக்காரி ஸர்.லான்சட் என்பவர் மீது தீராதக் காதல் கொண்டிருந்தாள். லான்சட் ஆர்த்தரின் உயிர் நண்பர். அவளது விடைக்கு மாறாக லான்சட் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள் அவள்.
இதைக் கேட்டதும் ஆர்த்தர் பேரதிர்ச்சி அடைந்தார். லான்சட்டுக்கும் ஆர்த்தருக்கும் ஒத்த வயதுதான். சூனியக்காரியோ கிழவி, கூனல் விழுந்த முதுகோடு, நரைத்த தலையுடன், அவள் இருக்கும் இடமோ சுத்தத்தில் சாக்கடையை விடக் கேவலமாக இருந்தது. ஆர்த்தருக்கு அவள் ஒரு கேவலமான பூச்சிபோலத் தோன்றினாள்.
இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழலை அவர் வாழ்க்கையில் கண்டதேயில்லை. அவர் உடனடியாக மறுத்து விட்டு என் உயிரைக் காப்பாற்ற என் நண்பனுக்கு கேடு விளைவிக்க முடியாது என்று கூறிவிட்டு வந்து விட்டார். ஆனால் இது பற்றித் தெரிந்தவுடன் லான்சட்டோ நண்பனின் உயிருக்கு முன் இதெல்லாம் ஒன்றமில்லை எனக்கூறி திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
லான்சட் மற்றும் சூனியக்காரியின் திருமணம் பேராலயத்தில் அறிவிக்கப்பட்டது. சூனியக்காரி ஆர்த்தரின் கேள்விக்கு விடையளித்தாள்.
"நீ கேட்ட கேள்வி ஒரு பெண் உண்மையாகவே எதை விரும்புகிறாள்? என்பதுதானே! அவள் உண்மையாகவே விரும்புவது தன் வாழ்க்கையை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதுதான்!" என்றாள்.
அந்த நாட்டின் அனைத்து மக்களும் அறிஞர்களும் அனைவரும் இந்தப் பதிலை பெரிதும் பாராட்டினார்கள். அவள் ஒரு மகத்தான உண்மையைக் கூறியதாகவே அனைவரும் மகிழ்ந்தனர். இனி தங்கள் இளவலின் உயிர் இனி பிழைத்துவிடும் என்று மகிழ்ந்தனர்.
அதே போல அந்த பதிலை ஏற்று அவரை விடுதலை செய்தனர்.
லான்சட் மற்றும் சூனியக்காரியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. அவர்கள் தேனிலவுக்குச் செல்லவும் ஆயத்தங்கள் செய்யப்பட்டன. சூனியக்காரியின் அறைக்குள் ஒரு வித அருவருப்போடும் பயத்தோடும் நுழைந்த லான்சட்டுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
உலகின் பேரழகு அனைத்தும் ஒன்றே சேர்ந்தார் போல ஒரு அழகி அங்கிருந்தாள். அதிர்ந்து போன லான்சட் "என்ன நடந்தது?" என்று கேட்டார்.
சூனியக்காரி "நீ என்னிடன் மிகவும் அன்பாகவும் தன்மையாகவும் இருக்கிறாய், அதனால் இனி நான் பாதி நாள் பேரழகியாகவும் மீதி நாள் சூனியக்காரியாகவும் இருப்பேன். எப்போது பேரழகியாக இருக்க வேண்டும் - பகலிலா? இரவிலா?" என்று கேட்டாள்.
லான்சட்டுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பகலில் அழகாக இருந்தால் உலகத்தாருக்கு தம் மனைவி உண்மையில் ஒரு பேரழகி என்பது தெரியவரும். ஆனால் இரவிலோ, தனிமையில் அவள் அவருக்கு ஒரு சூனியக்காரியாகவே இருப்பாள்.
படிக்கும் நீங்கள் ஒரு லான்சட்டாக இருந்தால் இந்த இரு தெரிவுகளில் எதைத் தேர்தெடுப்பீர்கள்?
புத்திசாலியான லான்சட்டோ அவள் ஏற்கனவே தன் மனதை ஆர்த்தரின் பதிலாகத் தெரிவித்து விட்டதால், அவளுடைய விருப்பம் போலவே இருந்து விடச் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் சூனியக்காரியோ, தன் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்த லான்சட்டின் விருப்பத்திற்கேற்ப நாளின் எல்லா நேரமும் தான் பேரழகியாக இருப்பதையே விரும்புவதாகக் கூறினாள்.
இந்தக் கதையின் கருத்து-
1. ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு சூனியக்காரி மறைந்து இருக்கிறாள்
2. பெண்ணை அவள் விருப்பம் போல வாழ விட்டு, மற்றவர் விருப்பங்களைத் திணிக்காமல் இருந்தால், பேரழகியாகவே இருப்பாள்
3. ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முயல வேண்டாம். அவள் வழியில் போனால் உங்கள் விருப்பங்கள் தானாகவே நிறைவேறும். இல்லை எனில் - வேறு வழியேயில்லை.
(பின்குறிப்பு: இந்தப் புனைவு நான் எப்போதோ படித்த ஆங்கிலக் கதை - இதில் என் உழைப்பென்று சொல்வதானால் மொழிமாற்றம் செய்து, சுருக்கமாக சொல்லியது மட்டுமே)
.
13 comments:
நானா இருந்தேன்னா உன் விருப்பம் போல வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இருப்பேன்
பாவம் அந்த புள்ள பொழைக்க தெரியாத புள்ள
அசத்தலா எழுதியிருக்கீங்க விதூஷ்...
ரொம்ப வித்தியாசமா இருந்தது...சூனியக்காரியின் பதிலை ரசித்தேன்...அது முற்றிலும் உண்மை.
விதூஷ்
எனக்கு கூட சின்ன வயசுல இந்த கதைய படிச்ச ஞாபகம் இருக்கு......
//என் உழைப்பென்று சொல்வதானால் மொழிமாற்றம் செய்து, சுருக்கமாக சொல்லியது மட்டுமே.//
இது போதுமே..... நல்லா இருக்கு...... வாழ்த்துக்கள்...
என்ன ஆச்சு?
யாரையோ பயமுருத்தணும்னு கங்கணம் கட்டிக் கொண்டு எழுதிய மாதிரி இருக்கிறது!
தமிளிஷில் வோட்டு போட்டு popular ஆகிய அனைவருக்கும் நன்றி.
Srivathsan
abragam
sayrabala
jntube
suthir1974
vilambi
urvivek
kosu
ganpath
jollyjegan
bhavaan
நன்றி பாலா, செய்யது, கோபி, கிருஷ்ணமூர்த்தி
அருமையான கதை! அழகான மொழிபெயர்ப்பு!
யம்மாடி.... அப்பறமா வந்து வாட்ச் பண்றேன்!!
ஆதவா said...
யம்மாடி.... அப்பறமா வந்து வாட்ச் பண்றேன்!!
July 27, 2009 3:43 PM
ரிபீட்டுங்க
நீங்க எபுடீங்க இங்குலீஷ் சமஸ்கிருதம்
சும்மா கலக்குரீங்கலேங்க
உங்க பதிவுகள் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்...
ம்ம்.. நல்லாயிருக்கு.
ஆகா.. சிறுவர் மலர் படிக்கற மாதிரியே இருக்கு.. :)
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.. :) வாழ்த்துகள்..
ரொம்ப நல்லா இருக்கு.
Post a Comment