இதில் நீ எது?இந்த வீட்டின் முற்றம் வழி
விழுந்துவிட்ட விருந்தாளி..
பறந்து போனால் மீண்டு கைக்குக்
கிடைக்காது அதுவான நான்.
ஜன்னல் வழி வந்த தென்றலில்
பறக்கத் தயாரானது இலேசாக
அதன் இறகுகள்...
அந்த இறக்கைகளில் கிடக்கும்
காய்ந்த குருதியின் கனம்..
பாதி மூடிய விழிகளால் பார்க்கும் அது
குருதி வழியும் இதயம் திறந்து,
"என்றேனும் என் அருகில் வாருங்கள்
இன்னும் துடித்துதான் கொண்டிருக்கிறது
என் இதயம்" எனச் சொல்லியபடி
மீதி விழியும் மென்மையாய் மூடியது!
திறந்திருக்கும் ஜன்னல் வழி இவையனைத்தும்
காணும் என் மானுடம். கண்டது வாழ்க்கையே...
வாழ்க்கையின் வேடிக்கை!
.

13 comments:

ஐந்திணை said...

ஆனாலும் இது வாடிக்கை

அமிர்தவர்ஷினி அம்மா said...

காணும் என் மானுடம்! கண்டது வாழ்க்கையே...
வாழ்க்கையின் வேடிக்கை!

நிதர்சனத்தின் வெளிப்பாடான வரிகள்

கவிதை அருமை.

குடந்தை அன்புமணி said...

வாழ்க்கையின் வேடிக்கையில் சிக்குண்டு போனேன்.

"அகநாழிகை" said...

வித்யா,
இக்கவிதையில் சொல்ல வருவதைப் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. (இறந்து கிடக்கின்ற பறவையா ?)

//காணும் என் மானுடம்! கண்டது வாழ்க்கையே...
வாழ்க்கையின் வேடிக்கை!//

இவ்வரிகள் நாடகத்தனமாக இருக்கிறது. கவிதையின் கரு சரியான விஷயம்தான். வழங்கிய விதம் வேறாய் இருந்திருக்கலாம்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆபிரகாம் said...

:)

நேசமித்ரன் said...

'//காய்ந்த குருதியின் கனம்..//
குருதி வழியும் இதயம் திறந்து//மானுடம்//

உன்னதமான உயரத்திலிருக்கும் மானுடம் கொள்ளும் பிறிதோர் உயிர் மீதான் பிரியம் குருதி கசியும் சொற்களால் பேசப்பட்டிருக்கிறது

நண்பர் வாசு சுட்டியது போல் இறுதி வரிகள் துருத்திக் கொண்டு நிற்கின்றன

அருமை தொடரட்டும் வித்யா..!

Nundhaa said...

வாசு சொல்வதே ஏறக்குறைய என் கருத்தும் ஆனால் கவிதை புரியவில்லை என்பதைத் தவிர

யாத்ரா said...

\\பாதி மூடிய விழிகளால் பார்க்கும் அது
குருதி வழியும் இதயம் திறந்து,
"என்றேனும் என் அருகில் வாருங்கள்
இன்னும் துடித்துதான் கொண்டிருக்கிறது
என் இதயம்" \\

அருமை.

Vidhoosh said...

ஐந்திணை, அமித்து அம்மா, அன்புமணி, வாசு, ஆபிரகாம், யாத்ரா, நந்தா, நேசமித்ரன் எல்லோருக்கும் நன்றி.

உண்மையில், இது ஒரு தனிக் கவிதை இல்லை, நான் படைத்த ஒரு கதையில் வரும் முடிவுப்பகுதி (கவிதை). தனிமையில் வாடும் ஒரு பெண்ணின் கதை. ஏனோ, இதை தனிக் கவிதை ஆக்கினால் செல்லுமா என்றே முயற்சித்தேன்.

உண்மையில், இக்கவிதை என் தோழிகள் (பெண்கள்) பெரும்பாலானோருக்குப் புரிந்துள்ளது.

மனக்கோவில் கட்டிய மாணிக்கமாக என் சொந்த பதிப்பகமாக இருந்த என் டையரியில் மட்டுமே எழுதி வந்த நான், ஒரு nilaiyil எழுதுவதையே நிறுத்தி இருந்தேன்.

என்னை பிளாகில் தினமும் தொடர்ந்து வரச் செய்த பைத்தியக்காரன் (கதைப் போட்டிக்கு வந்த கதைகளை ஒன்று விடாம ரிலீஸ் அன்னிக்கே பர்ஸ்ட் ஷோ பாத்த பெருமை எனக்கு) பெரிய உந்து சக்தி. மீண்டும் எழுதத் துவங்கிய எனக்கு இதுவே ஒரு பெரிய வெற்றிதான்.

நந்தா போன்றவர்களுக்கு நான் எழுதியவற்றை பாரபட்சம் இல்லாமல் நேர்மையான விமர்சித்த நந்தா, அகநாழிகை வாசு, நசரேயன் போன்றவர்களே நான் தொடர்ந்து எழுதக் காரணம்.

நசரேயன் said...

//இதில் நீ எது?//
படிச்சதுக்கு அப்புறம் மறந்து போச்சி நான் ஒரு மொக்கைனு

R.Gopi said...

வித்யா

எனக்கும், படித்ததும் புரியாமல் சிறிது யோசித்து.... பின் உங்கள் பின்னூட்டம் பார்த்து தெளிவடைந்தேன்.......

//காணும் என் மானுடம். கண்டது வாழ்க்கையே...//

மிக கூர்மையான வரிகள்..... சொல்கிறது பல செய்தி.........

வாழ்த்துக்கள்....

Vidhoosh said...

நன்றி நசரேயன். (நீங்கள் மொக்கை என்றால், அப்புறம் யார்தான் எழுத்தாளி)

நன்றி கோபி. :)

இரசிகை said...

puriyalanga!!

Post a Comment