மூன்று கேள்விகளும் ஒரே ஒரு பதிலும்

என்னுடைய இந்தக் கவிதை படித்த நேசமித்ரன், கோபி, மற்றும் அகநாழிகை வாசு கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறவே இந்தப் பதிவு.

நன்றி வாசு, கோபி, நேசமித்ரன்.

நேசமித்ரன் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட அவ்வரிகள் சமஸ்கிருத மொழி, பகவத் கீதையில், நான்காவது அத்தியாயத்தில் வரும் 24வது சுலோகம்.

ப்ரஹ்மார்ப்பநம் ப்ரஹ்ம ஹவிர்
ப்ரக்மாஞு ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரக்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினஹ.

இறைவனுக்கு (ப்ரஹ்மா) இடப்பட்டவை எல்லாமே பிரம்மன்தான்,
இறைவனால் இறைவனுக்கு அக்னியில் இடப்படும் ஹவிசாக அளிக்கப்படும் (ஆஹுதம்-அளித்தல்) பிரம்மன்தான். அந்த அக்னியும் பிரம்மன்தான்.
(நெருப்பில் இடப்பட்ட நிவேதனங்கள்/பலி - ஹவிஸ் எனப்படும்)
எவன் எல்லா உயிரிலும் இறைவனைப் பார்க்கிறானோ,
இறைவனாய் கருதி மற்ற உயிர்களின் நன்மைக்கு மட்டும் செயல் படுகிறானோ (கர்மா-செயல்) அவன் மட்டுமே இறைவனை அடைய முடியும் (ஸமாதின:)

நான் ஓதுகிறேன் உலகம் உய்ய
ஓதுவதால் தீரவில்லை எம் தாகம்,
தாகம் தீராது, நடக்கிறது நிதம்
ஒரு ஊமைச் சிலைக்கு
அபிஷேகம்! அதையேதான்
பருகுகிறார் எம்மக்கள்.
உணவெல்லாம் ஹவிசாக..
பட்டாடைப் படையலிட்டு
எறியுங்கள் ஹோமத் தீயில்
நன்கு எரியட்டும் பசித்தீயில்
என்னுடல், என் ஆன்மா
என் மனம் இவையெல்லாம்...


இந்தப் பத்தி கவிதையோடு ஒட்டாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். இந்தப் பத்தியில் நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாமெல்லாம் (நம்மில் பலர்) ஒரு வாய் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பேசக் கூட நேரமில்லாமல், ஆத்ம வஞ்சனை செய்து கொண்டு, எதை தேடி அலைகிறோம்.

ஒரு பிச்சைக்காரன் நேரடியாய் பிச்சை கேட்கிறான். அறிவை அடகு வைத்து ஞானப் "பிட்சை" அளித்து நாம் பணம் (ஊதியம்) பெறுகிறோம். சும்மா வாயால் தெய்வம் தெய்வம் என்று சுலோகங்கள் ஓதுவதும், பூஜைகள் செய்வது மட்டும் வழக்கமாக்கிக் கொண்ட நாம், அடுத்த மனிதரின் நிலையை பற்றிய நினைத்துக் கூடப் பாராத அளவுக்கு மனத்தால் ஏழையாய் இருக்கிறோம்.

மனிதனே இறைவன் என்று பரமாத்மா கிருஷ்ணன் அறிவுறுத்தியதை, நாம் நம் சௌகரியத்துக்கு, எப்போதும் போல, மாற்றிக் கொண்டு, விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தும், பூஜை என்ற பெயரில் மலர்களைக் கொன்றும் வருகிறோம். உண்மையில் விரதம் என்றால் celibacy/abstinence, அதாவது - காமம், குரோதம், ஆசை, வெறுப்பு ஆகி உணர்வுகளில் இருந்து மனத்தால் விலகி இருத்தல். பூஜை என்றால் குறித்து இருத்தல்-அதாவது, தெளிந்த நோக்கம் மற்றும் நேரான பார்வை கொண்டு நம் இலட்சியம் குறித்து இருத்தல் என்பதே ஆகும்.

ஆனால், நாமோ மாறாக, விரதம் என்ற பெயரில் நம் உடலையும், உறவுகளின் அன்பை மறந்து மனதையும், நோக்கமில்லா ஒன்றன் பின் ஓடி நம் ஆன்மாவையும் வஞ்சிக்கிறோம்.

மனிதனே இறைவன், அவன் மற்ற உயிர் ஒன்றிலும் இறைவனைப் பார்க்கும் போது, அவன் மற்ற உயிரிடமிருந்து மாற்றாக அன்பெனும் பேறு பெற்று இறை நிலை அடைகிறான்.

அன்பின் நேசமித்ரன். நாம் தான் ஏற்கனவே "பிரம்ம" என்ற இடத்தில் கார்பனை நிரப்பி விட்டோமே???? Science-சில் ஏதும் human மிச்சம் இருக்கிறதா என்ன?


.

10 comments:

தேவன் மாயம் said...

விளக்கம் நன்று!!

நாமக்கல் சிபி said...

இதான் முதல் தபா!

R.Gopi said...

இது இன்னாபா

தலைப்பே புச்சா கீதே!!!

எங்களை தெளிவிக்க இந்த பதிவு எழுதியதற்கு முதற்கண் நன்றி.....

//அறிவை அடகு வைத்து ஞானப் "பிட்சை" அளித்து நாம் பணம் (ஊதியம்) பெறுகிறோம். சும்மா வாயால் தெய்வம் தெய்வம் என்று சுலோகங்கள் ஓதுவதும், பூஜைகள் செய்வது மட்டும் வழக்கமாக்கிக் கொண்ட நாம், அடுத்த மனிதரின் நிலையை பற்றிய நினைத்துக் கூடப் பாராத அளவுக்கு மனத்தால் ஏழையாய் இருக்கிறோம்.//

இப்போதும், இதில் எனக்கு உடன்பாடு என்று சொல்ல முடியாது..... நான் பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபடுவதோடு..... நிறைய பேருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன்.... செய்து கொண்டிருக்கிறேன்.... தொடர்ந்து செய்வேன் (இறைவனின் அருளும், ஆசியும் இருந்தால்......). நான் செய்த உதவிகளை இங்கு பட்டியல் இடுவதற்காக சொல்லவில்லை..... (யாரும் என்னை தவறாக என்ன வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன்......).

என் நண்பன் ஒருவன் எனக்கு உதவி செய்து, சென்னையில் இருந்து துபாய்க்கு வேலையில் சேர்ந்ததும், இந்த 7 வருடத்தில், குறைந்த பட்சம் 12-13 பேருக்காவது வேலை ஏற்பாடு செய்திருக்கிறேன்..... (இதில், என் நண்பர்கள் பல்வேறு உதவிகள் செய்தனர்...... சிறிதளவு கூட, பணம் காசு எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த அந்த நல்ல நண்பர்களை நான் என் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.....).

//உண்மையில் விரதம் என்றால் celibacy/abstinence, அதாவது - காமம், குரோதம், ஆசை, வெறுப்பு ஆகி உணர்வுகளில் இருந்து மனத்தால் விலகி இருத்தல். பூஜை என்றால் குறித்து இருத்தல்-அதாவது, தெளிந்த நோக்கம் மற்றும் நேரான பார்வை கொண்டு நம் இலட்சியம் குறித்து இருத்தல் என்பதே ஆகும்.//

இது சுலபமாக எல்லோருக்கும் கைவருவது கிடையாது.... இடையறாத பயிற்சியின் விளைவாக பல நாட்களுக்கு பின் கைகூடும்..... நானும் இது போன்றதொரு நிலையை அடைய அந்த இறைவன் அருள் புரிவார் என்று திடமாக நம்புகிறேன்...

//ஆனால், நாமோ மாறாக, விரதம் என்ற பெயரில் நம் உடலையும், உறவுகளின் அன்பை மறந்து மனதையும், நோக்கமில்லா ஒன்றன் பின் ஓடி நம் ஆன்மாவையும் வஞ்சிக்கிறோம்..//

உண்மையே.... இந்நிலையில் இருந்தும் நம்மை காப்பது அந்த தெய்வமின்றி வேறு யார்?? தொடர்ந்து இறைவனின் பாதம் பணிந்து வேண்டுவோம்...

பொறுமையாகவும், பிரமாதமாகவும் விளக்கம் அளித்தமைக்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி........வித்யா.......

"அகநாழிகை" said...

ம்.
:)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஊர்சுற்றி said...

எரியுங்கள் - எறியுங்கள் ஆன்மாவை....!

நர்சிம் said...

//ஒரு பிச்சைக்காரன் நேரடியாய் பிச்சை கேட்கிறான். அறிவை அடகு வைத்து ஞானப் "பிட்சை" அளித்து நாம் பணம் (ஊதியம்) பெறுகிறோம். சும்மா வாயால் தெய்வம் தெய்வம் என்று சுலோகங்கள் ஓதுவதும், பூஜைகள் செய்வது மட்டும் வழக்கமாக்கிக் கொண்ட நாம், அடுத்த மனிதரின் நிலையை பற்றிய நினைத்துக் கூடப் பாராத அளவுக்கு மனத்தால் ஏழையாய் இருக்கிறோம்.
//

நச்.

இது போன்ற எண்ணங்களின் வெளிப்பாடுகளே விடியல் போன்ற பதிவுகள்.

யாரைப் பற்றியும் கவலைப் படுவதில்லை..வாழ்வின் வேகம் மட்டுமே முக்கியாமாய் போனதிங்கே.

நேசமித்ரன் said...

இதைத்தான் எதிர் பார்த்தேன் சமஸ்கிருத புலியிடம்
இதற்காகத்தான் அப்படி ஒரு பின்னூட்டம்
:)
"சர்வ தர்மான் பரித்யஞ்ச மாமேகம் சரணம் வஜ "
இது உங்களுக்கு சொல்ல விரும்புவது உங்கள் பதிவுக்கான பின்னூட்டமாயும் கொள்ளலாம்

:)

Vidhoosh said...

நன்றி தேவன்மாயம் (உங்கள் பெயர் பல அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது.)

வாங்க சிபி. நன்றி வருகைக்கு.

கோபி. உங்கள் முயற்சிகளைப் பாரட்டுகிறேன். தெய்வம் என்று நாம் அழைக்கும் ஒரு பேராற்றல் நிச்சயம் இருக்கிறது. நான் அதை சரஸ்வதியின் ரூபத்தில் பார்கிறேன். குருடர்கள் யானையைப் பார்ப்பது போல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவம் கொடுத்துள்ளோம். அந்த பேராற்றலை உணர, சக மனிதர்களை (முதலில் நம் வீட்டில் உள்ளவர்களை) மனதாலும் துன்பப் படுத்தாமல், தொடர்ந்து இயன்றளவு இதே போல நல்லது செய்ய உங்களுக்கு இறைவன் உதவட்டும். எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது. ஏதோ இயன்றளவு செய்யுங்கள்.

நன்றி வாசு. நீங்கள் கேட்கவில்லை என்றால் இந்த பதில் இல்லை.

நன்றி ஊர்சுற்றி.

அட!! நர்சிம். வந்துட்டீங்களா? வருக வருக. நன்றி. :)

நேசமித்ரன். என்னை புலி என்றெல்லாம் கூற வேண்டாம். இன்னும் நிறைய உண்மையான சமஸ்கிருதப் புலிகள் இருக்கின்றனர். வருத்தம் என்னவென்றால் அதில் பெரும்பாலானோர் சந்தேகம் கேட்ட போதெல்லாம் என்னை இன்னும் படித்துவிட்டு 35 வருடம் கழித்து வரச்சொன்னார்கள். :( அதில் ஒருவருக்கு வயது அறுபதுக்கும் மேலே.

அறிவு தேடிச் சென்ற என்னை, பல சமஸ்கிருத அறிஞர்கள் படிப்பறிவு தந்த அலட்சிய கர்வத்தில், அவமானப் படுத்தி, என்னை எரித்தவர்கள் எவ்வளவோ மனிதர்கள். பெண் வேதம் படிக்கக் கூடாது, படித்து விட்டு என்ன கிழிக்கப் போகிறாய் என்றெல்லாம் என்னை கேட்டவர்கள் நிறைய பேர்.ஆனால், ஒருவேளை அவர்கள் எனக்கு பாடம் சொல்லியிருந்தால் நானாக தேடிய பல பொக்கிஷங்கள் என் கைக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். அதன் உண்மையான அர்த்தங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

அவர்களிடம் எரிந்து போய் விட சீதையா என்ன, நான் பீனிக்ஸ் என்றே கூறிவிட்டு வந்தேன். :) என்ன செய்வது, புரியாததைப் புரிந்து கொள்ள ஆசைப் படும் பேப்பர் தின்னும் கழுதை நான்.

பற்றை விடாமல் பற்றிக் கொண்டே, "அவன்" பாதங்களையும் இறுக்கிப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்து கூடப் பார்க்காத அறிவாற்றல் கிடைக்கும்.

தேடி பெற ஆசை கொள்ளுங்கள். மேலும் மேலும் படிக்க ஆசை படுவதை மட்டும் நிறுத்தாதீர்கள்.

குடந்தை அன்புமணி said...

//மனிதனே இறைவன் என்று பரமாத்மா கிருஷ்ணன் அறிவுறுத்தியதை, நாம் நம் சௌகரியத்துக்கு, எப்போதும் போல, மாற்றிக் கொண்டு, விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தும், பூஜை என்ற பெயரில் மலர்களைக் கொன்றும் வருகிறோம். உண்மையில் விரதம் என்றால் celibacy/abstinence, அதாவது - காமம், குரோதம், ஆசை, வெறுப்பு ஆகி உணர்வுகளில் இருந்து மனத்தால் விலகி இருத்தல். பூஜை என்றால் குறித்து இருத்தல்-அதாவது, தெளிந்த நோக்கம் மற்றும் நேரான பார்வை கொண்டு நம் இலட்சியம் குறித்து இருத்தல் என்பதே ஆகும்.//

நல்ல விளக்கம். விரதமிருப்பவர்கள் படிக்க வேண்டிய இடுகை.

நசரேயன் said...

இப்படி நீங்க எழுதுற ஒவ்வொரு கவுஜக்கும் கோனார் உரை கொடுத்தா ரெம்ப புண்ணியமா இருக்கும்

Post a Comment