கரும்பு தின்னக் கூலி


இதை கொடுத்த அகநாழிகை வாசுவுக்கு நன்றி.

செந்தழல் இரவி சொன்னது போல இது டானிக்தான்.

யாரோ ஒருவரேனும் நம் எழுத்துக்களைப் படிக்கிறார்கள் என்பது தெரியும் போதே நம்மையும் அறியாமல் நமக்கு ஒரு பயமும் பொறுப்பும் ஏற்பட்டு விடுகிறது ---- நாம் கொடுக்கும் information சரியானதா, மற்றவருக்கு நேர்மையுடன் ஒரு கருத்தைச் சொல்கிறதா என்று!

இத்தனைக்கும் அப்புறம் ஒரே ஒரு பதிவையாவது interesting/killing என்று யாராவது ஒருத்தராவது படித்து சொல்லிவிட்டால் மகிழ்ச்சிதான். எழுதுவதும், படிப்பதும் எனக்கு பிடிக்கும் என்பதாலும், நான் படித்ததில் பிடித்ததை குறிப்பு எடுத்து வைத்த பேப்பர்களைத் தெரியாம வீட்ல இருக்கறவங்க, குப்பை (!!) என நினைத்து கடையில் போட்டு விட்டதாலும், அவற்றை எங்கேனும் சேமித்துப் பாதுகாக்கவே பிளாக் எழுத வந்தேன்.

நாம் ஆசைப்பட்டு செய்யும் ஒரு விஷயத்திற்கு award tag வேறு கொடுத்தா??? கரும்பு தின்னக் கூலி போலாயிற்று.

சிலர் பிளாக் எழுதுவது என்பது public-கில் இரைந்து பேசுவது போல இருக்கிறது, ஒருவருக்கு வடிகாலாய் இருக்கிறது, சிலருக்கு ego, நிறைய பேருக்கு hobby என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை பேர் இருக்கிறார்கள் இங்கே?

இவர்கள் எழுதுவதை நான் விரும்புவதால், இவர்கள் எல்லோருக்கும் பணிவுடன்... அன்புடன்.

நம்ம மணிபயல் - இவரைச் சொல்லாமல் இருக்க முடியலை. யாரையும் புண்படுத்தாத இவரது நகைச்சுவை எனக்கு பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கக் கூடும்.

இம்சை - செந்தழல் ரவி - இதை ரூம் போட்டு யோசிச்சத்துக்காக :) (LOL - Ofcourse, he blogs interestingly too!! இதைதான் திருநெல்வேலிக்கே .... அப்படீன்னு சொல்லுவாங்களா? ;)
குழந்தை ஓவியம் - ஆதவ்

சில கவிதைகள் - உமா
ஷீ-நிசி கவிதைகள்
மண்குதிரை
இன்ன பிற - பெருந்தேவி
எண்ணங்கள் இனியவை - ஜீவ்ஸ் (இவ்விருதுக்கு இவரது மௌனத்தின் அலறல் ஒன்றே போதுமானது)
எட்டயபுரம் - கலாப்ரியா
கடல் புறா - பாலா

(ஆறு பேர்தான் என்று குறிப்பிட்டிருந்தார்கள், இங்கு மட்டும் 6 x 2-வாக வைத்துக்கொள்ளலாமே ப்ளீஸ். இவர்கள் ஒவ்வொருவரும் என்னை விட நன்றாக எழுதுகிறார்கள். )




.

23 comments:

நேசமித்ரன் said...

All the best and hearty wishes for all the receivers of this award

ரவி said...

உங்க விருதுக்கு நன்றி !!!!

வாழ்த்துக்கள் உங்களுக்கும்....!!!

பாலா said...

விருது வாங்கலையோ விருது தாயே
(நன்றி சகோதரி ஏற்கனவே நண்பர் நவாஸ் எனக்களித்திருந்தாலும் மீண்டும் உங்கள் மூலம் பெறுவது மகிழ்ச்சியே )

நட்புடன்
பாலா

ச.முத்துவேல் said...

பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் மனோ நிலையேதான் எனக்கும்.மகிழ்ச்சியும்,பயம் கலந்த பொறுப்பும்.

நன்றி விதூஷ். ஒருவகையில் இது ஊக்கமுள்ள சங்கிலித்தொடர்தான். அவரவர், அவர்வர்களுக்குப் பிடித்த பதிவர்களைச் சொல்வதன் மூலம் நிறைய பேரை அறிந்துகொள்ள முடிகிறது. ஹூம். நேரம்தான் பெரிய பிரச்னை.

அகநாழிகை said...

விதூஷ்,

ஆறு பேருக்குதான் கொடுக்கணும்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.

Iyappan Krishnan said...

//யாரோ ஒருவரேனும் நம் எழுத்துக்களைப் படிக்கிறார்கள் என்பது தெரியும் போதே நம்மையும் அறியாமல் நமக்கு ஒரு பயமும் பொறுப்பும் ஏற்பட்டு விடுகிறது --//

உண்மையிலேயே முதலில் உங்களோட பின்னூட்டம் யாரோ செஞ்ச விளையாட்டுன்னு தான் இருந்தேன். அப்புறம் இங்க வந்து பாத்தா என்ன சொல்றதுன்னே தெரியல. நீங்க மேலே சொன்ன வாசகங்கள் உண்மை. உங்களின் அன்புக்கு என் வணக்கங்கள். அடுத்த பதிவு 50 வது பதிவாக வரும் போது இது போன்ற விருதுகள் உற்சாக டானிக்காக இருக்கிறது.


நன்றிகள் பல சகோதரி

யாத்ரா said...

மகிழ்ச்சி,அனைவருக்கும் வாழ்த்துகள்.

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் விதூஷ்..விருது பெற்றமைக்கும் உங்களிடமிருந்து பெறுபவர்களுக்கும்..

நட்புடன் ஜமால் said...

1+12க்கும் வாழ்த்துகள்

R.Gopi said...

வாழ்த்துக்கள் விதூஷ்.........

நீங்கள் பெற்ற விருதுக்கும், உங்களிடமிருந்து வாங்கியவர்களுக்கும்.......

பிரவின்ஸ்கா said...

உங்கள் அன்பிற்கும், விருதுக்கும் மிக்க நன்றி.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Perundevi said...

என் பதிவை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி விதூஷ்.

Anonymous said...

வாழ்த்துக்களும், நன்றிகளும் விதூஷ்!

ஆதவா said...

மிகவும் நன்றி விதூஷ்.
முன்னுரை அறிவித்தல் பிரமாதமாக இருக்கிறது.

பதிவுகள் எழுதுவது அவரவர் எண்ண, மனோ நிலையின் வெளிப்பாடுகள்தான், வகைவகையினராய் வெளிப்பாடுகள் இருப்பதால் அப்படித் தோணுகிறது.

உங்களிடமிருந்து விருதைப் பெறுவதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
ஆதவா

உமா said...

முதலில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தப் போது பயந்துக் கொண்டேதான் வந்தேன். வந்ததும் மிகப் பெரிய இன்ப அதிர்ச்சி.மிக்க நன்றி. உங்களைப் போல் தான் நானும்,எனது வலை என் குறிப்பேடு மாதிரிதான். நானே எழுதி நானே படித்துவந்தேன். சமீபகாலமாகத்தான் பலநண்பர்கள் வருகைத்தருகிறார்கள். இது போன்ற வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சியூட்டுகின்றன.நன்றி, தொடர்வோம்.
அன்புடன் உமா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிலர் பிளாக் எழுதுவது என்பது public-கில் இரைந்து பேசுவது போல இருக்கிறது, ஒருவருக்கு வடிகாலாய் இருக்கிறது, சிலருக்கு ego, நிறைய பேருக்கு hobby என்றே தோன்றுகிறது. எத்தனை எத்தனை பேர் இருக்கிறார்கள் இங்கே //

எனக்கும் இப்படி தோன்றியது உண்டு.

மண்குதிரை said...

மிக்க நன்றி நண்பரே

Vidhoosh said...

நேசமித்ரன், செந்தழல் ரவி, பாலா, ச.முத்துவேல், வாசு (மன்னிக்கவும்-6x2 வாக வெச்சுக்கலாமே!), நர்சிம், ஜீவ்ஸ்,
யாத்ரா, செய்யது, ஜமால், கோபி, பிரவின்ஸ்கா, பெருந்தேவி, ஷீ-நிசி,ஆதவா, உமா, அமிர்தவர்ஷினி அம்மா

எல்லோருக்கும் நன்றி. :)

கிருஷ்ண மூர்த்தி S said...

/விதூஷ்,

ஆறு பேருக்குதான் கொடுக்கணும்.//
6 x 2-வாக வைத்துக்கொள்ளலாமே என்பதற்குப் பதிலாக, ஆறு, ஆறாக வைத்திருந்தால் ஆட்சேபனையே வந்திருக்காதோ:-)

butterfly Surya said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

செந்தழலார் கல்க்கிட்டார்..

மணிப்பயல் said...

நன்றி வித்யா. முதல்ல என் பெயர் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க

Post a Comment