சொல்லின் செல்வன் ஹனுமான்
















வால்மீகி இராமாயணத்தில் கஸ்த்வம் (கி + + த்வம்) (நீ யார்?) என்ற கேள்வி இரண்டு இடத்தில் ஹனுமானை பார்த்து கேட்கப்படும் போது, ஹனுமான் இப்படி பதில் அளிக்கிறார்.

தேஹபுத்த்யா த்வதாஸோ (அ )ஸ்மி ஜீவபுத்த்யா த்வதம் ஸக:|

ஆத்மபுத்த்யா தவமேவாஹம் இதி மே நிஷ்சிதா மதி:||

இராம காவியம் சொல்லும் கருத்துக்கள் பல இருந்தாலும், மேற்கண்ட சுலோகத்திற்கு அதன் இடத்திற்கு ஏற்ப இரு விதமான அர்த்தங்களைக் கண்டேன். இரசித்தேன். பகிர்கிறேன். எவ்வளவு கருத்தாழம் கொண்டதாக இருக்கிறது என்று பாருங்கள். சமஸ்கிருத மொழியின் அழகையும் இரசியுங்கள்.

===============================================================
இராமன் ஹனுமானைப் பார்த்துக் "கஸ்த்வம்" (கி + ஸ + த்வம்) (நீ யார்?) என்று கேட்கும் போது,ஹனுமான் பதிலளிக்கிறார்.

நான் (அஸ்மி) உடலாக (தீத்புத்தயா) இருக்கும் போது, உன் (த்வ) தாசனாக (தாஸோ) இருக்கிறேன். நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது உன் அம்சம் (த்வ + அம்ஸக:) ஆகிறேன். நான் ஆத்மாவாக (ஆத்மபுத்த்யா) இருக்கும் போது, நான் நீயே (த்வம்+ ஏவ+அஹம்) ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.

நான் உடலாக இருக்கும் போது, உன் தாசனாக இருக்கிறேன். நான் ஜீவனாக உணரும் போது உன் அம்சம் ஆகிறேன். நான் ஆத்மாவாக இருக்கும் போது, நான் நீயே ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.
===============================================================

இதையே இராவணன் "கஸ்த்வம்" என்று ஹனுமானைக் கேட்கும் போது இதே பதிலையே அளிக்கிறார்.

அதாவது,
நான் (அஸ்மி) உடலாக (தேஹபுத்தயா) இருக்கும் போது,
த்வதாஸோ (அ )ஸ்மி
= து + அதாஸ: அஸ்மி (சந்தியினால் த்வ =து+அ ) = நான் உனக்கு தாசனாக இல்லை.
நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது,
த்வதம் ஸக: = த்வ + தம்ஸக : நான் உன்னை த்வம்சம் செய்பவன்.
நான் ஆத்மாவாக (ஆத்மபுத்த்யா) இருக்கும் போது,
தவமேவாஹம் = து + அம + ஏவ + அஹம் = நான் உனக்கு கிலி / பயங்கரன் ஆகிறேன்.
(இதி + மே + நிஷ்சிதா+ மதி: )இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.


நான் உடலாக இருக்கும் போது, நான் உனக்கு தாசனாக இல்லை. நான் ஜீவனாக உணரும் போது, நான் உன்னை த்வம்சம் செய்பவன். நான் ஆத்மாவாக இருக்கும் போது, நான் உனக்கு கிலி / பயங்கரன் ஆகிறேன். இது என் உறுதியான கருத்தாகும், இப்படியே நம்புகிறேன்.
===================================================================

உண்மையில் சொல்லின் செல்வன், வால்மிகிப் பெருமானோ என்று அதிசயம் தோன்றுகிறதே?


.

15 comments:

Radhakrishnan said...

இது ஹனுமானால் சொல்லப்பட்டதா? அல்லது வால்மீகியால் எழுதப்பட்டதா? எப்படியிருப்பினும் அற்புதமான வாக்கியங்கள் அவை. மிகவும் இரசித்தேன்.மிக்க நன்றி வித்யா.

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்கள் பக்கத்துக்குள் இது என் முதல் வருகை.....


வாழ்த்துக்கள்... தொடர்ந்தும் எழுதுங்கள்......

அப்படியே என் வலைப் பக்கமும் வந்து பாருங்க.....

Boston Bala said...

நன்றி

Vidhoosh said...

இராதாகிருஷ்ணன்: ஹனுமானால் சொல்லப்பட்டதாக, வால்மீகி சொல்கிறார்.

அபூ பக்கர். நன்றி! உங்கள் வருகைக்கு. உங்கள் வலைபக்கத்துக்கு கண்டிப்பாய் வருகிறேன்.

பாஸ்டன் பாலா: நன்றி.

--வித்யா

R.Gopi said...

//நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது உன் அம்சம் (த்வ + அம்ஸக:) ஆகிறேன். நான் ஆத்மாவாக (ஆத்மபுத்த்யா) இருக்கும் போது, நான் நீயே (த்வம்+ ஏவ+அஹம்) ஆகிறேன்.//

விளக்கம் மிக மிக அருமை விதூஷ்.....

//நான் ஜீவனாக (ஜீவபுத்தயா) உணரும் போது,
த்வதம் ஸக: = த்வ + தம்ஸக : நான் உன்னை த்வம்சம் செய்பவன்.//

பிர‌மாத‌ம்.....

ந‌ல்ல‌ ப‌திவு.... வாழ்த்துக்க‌ள் வித்யா..... ஹ‌லோ அப்ப‌டியே ஓட்டும் போட்டுட‌றேன்.

Vidhoosh said...

கோபி. :) மொழிகள் ஒளித்து வைத்திருக்கும் அற்புதங்கள் எத்தனை எத்தனை?

உண்மையான பொக்கிஷங்கள் மொழிகள் என்பதை என் தமிழ் ஆசிரியர் (மறைந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்) சொன்ன போது, பொக்கிஷங்களைத் தேட ஆரம்பித்தேன். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன். :)

இந்தப் பதிவில் ஒட்டு போட்டு popular ஆக்கும் அளவுக்கு பொது நன்மை / சமூக சிந்தனைகள் என்று எதுவும் இல்லை. அதனால் ஒட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை.

ஆனால் இந்த பதிவை, மொழி ஆர்வம் உடையவர்கள் தேடி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. :)

--வித்யா

RAMYA said...

விளக்கங்கள் மிக அருமையாக இருக்கின்றது!

ஒவ்வொரு வரிகளில் இருந்தும் கண்கள் விலகியபோது
அதன் காட்சிகளும் விரிந்தது!!

வால்பையன் said...

இடை இடையில் வரும் சமஸ்கிருதம் படிக்கவிடாமல் டரியல் ஆக்குகிறது!
அது தனியா இது தனியா எழுத முடியாதா!?

வால்பையன் said...

// RAMYA said...

விளக்கங்கள் மிக அருமையாக இருக்கின்றது!//


அம்மணி வந்துட்டிங்களா!?
உடம்பு சுகமா!?
செப்டம்பர் 12-ஆம் தேதி நான் உங்களை பார்க்க வர்றேன்!

Vidhoosh said...

நன்றி ரம்யா.
நன்றி வால் (தனியாக போட்டு விட்டேன்).
--வித்யா

Prapa said...

கதவுகள் பூட்டப்படாமல் எங்கள் வலைப்பூ உங்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ,வந்து வனப்பாக்குங்கள்.

sakthi said...

அசந்து விட்டேன் உங்கள் அர்த்தங்களை கண்டு

வாழ்த்துக்கள் !!!!
வித்யா

அ.மு.செய்யது said...

வால்பையன் said...
இடை இடையில் வரும் சமஸ்கிருதம் படிக்கவிடாமல் டரியல் ஆக்குகிறது!
அது தனியா இது தனியா எழுத முடியாதா!?

Vidhoosh said...

நன்றி பிரபா.

நன்றி சக்தி.

கீழே italics -சில் கொடுத்திருக்கிறேன் செய்யது.

==========================

--வித்யா

SUMAZLA/சுமஜ்லா said...

வித்யா இது உங்கள் ப்ளாக் என்று நேற்று தான் தெரியும். ஆனா, ரொம்ப நாளா இத ரீடரில் படித்து வருகிறேன். பக்கோடா பேப்பர் வேறு, விதூஷ்.ப்லாக்ஸ்பாட் வேறு என்று நினைத்திருந்தேன்.

Post a Comment