ஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)

========================================================
Updated on 13.8.09 @ 10.30 AM

REMEDIES FOR SWINE FLU - THE INDIAN WAY

PLEASE CLICK THE FOLLOWING LINKS TO KNOW MORE.
1. HERE
2. HERE
3. HERE

I WILL ALSO TRY TO PUBLISH THEM IN TAMIL AFTER AVAILING DUE PERMISSION FROM THE OWNERS OF THESE ARTICLES/WEBSITES.


-VIDHYA

=============================================================

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?


ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
  • நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
  • முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  • ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
  • வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
  • தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
  • நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
  • உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
  • மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
  • மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.
நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்
  • தொடர்ந்த தலை வலி
  • குளிருதல், நடுங்குதல்
  • இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
  • பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
  • தலை சுற்றல் / மயக்கம்
  • பசியின்மை
  • உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
  • இடைவிடாத காய்ச்சல்
  • வயிற்று போக்கு
  • வாந்தி எடுத்தல்
  • மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
  • உயிரிழப்பும் ஏற்படலாம்
குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?
  • தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
  • மூச்சு விட சிரமப் படுவார்கள்
  • உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
  • தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
  • அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
  • தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
  • தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்
இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
========================================================
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
-----------------------------------------------------------------------
Chennai

King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------------------------------------------------------------------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road, Pune – 11
(020) 26006290
------------------------------------------------------------------------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road, Kolkata - 10‎
(033) 23701252
------------------------------------------------------------------------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road, Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------------------------------------------------------------------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------------------------------------------------------------------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle, Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------------------------------------------------------------------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road, Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO, Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------------------------------------------------------------------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road, New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/344/524/449/326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------------------------------------------------------------------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road, Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------------------------------------------------------------------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.
==========================================================================

Update (10.Aug.09 @ 10.30 AM): ஹெல்த் மினிஸ்ட்ரி ஒரு புதிய வெப் சைட் திறந்துள்ளது.

இதைப் பற்றிய இன்னொரு வெப்சைட் பார்க்க இங்கே சுட்டவும்.

==========================================================================


.

23 comments:

மண்குதிரை said...

ippoothuthaan ithaip parri oru mail paarththeen. echcharikkaiyaaka irukka veentum. pakirvukku nanri vithyaa.

உமா said...

வித்யா இதைவிடச் சிறந்த பதிவு ஒன்றிருக்கமுடியாது. மிகத்தேவையான சரியான நேரத்தில் இடப்பட்ட தெளிவான பதிவு. இந்த நோய்கான தடுப்பூசி நல்ல முறையில் உருவாகிகொண்டிருப்பதாக health secretary, govt. of india நேற்றய interview வில் சொல்லியிருக்கிறார். animal testing முடிந்து இன்னும் ஏழு மாதத்தில் நடமுறைக்கு வந்துவிடும் என் நம்பிக்கைக் கொடுத்தார். அதுவரை மக்கள் அதிக அளவில் அதை பரப்பாமல் கவனமாகவும் பொருப்புடனு்ம் இருக்க வேண்டும்.முக்கியமாக media பொறுப்பற்ற முறையில் நடந்து மக்களை பீதிக்குள்ளாக்க கூடாது.
செய்வார்களா. பதிவிற்கு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

வித்யா

மிக மிக நல்ல பதிவு.... தகுந்த சமயத்தில் எல்லோரையும் கவனமாக இருக்க சொல்லி இருக்கிறீர்கள்...

உங்களின் இந்த முயற்சிக்கு இதோ என் ராயல் சல்யூட்....

R.Gopi said...

//இந்த நோய்கான தடுப்பூசி நல்ல முறையில் உருவாகிகொண்டிருப்பதாக health secretary, govt. of india நேற்றய interview வில் சொல்லியிருக்கிறார். animal testing முடிந்து இன்னும் ஏழு மாதத்தில் நடமுறைக்கு வந்துவிடும் என் நம்பிக்கைக் கொடுத்தார்//

உமா....ஏழு மாதம் என்பது ரொம்ப ஜாஸ்தி ஆச்சே....

இப்போவே நிறைய பேரு அஃபெக்ட் ஆயிருக்காங்கன்னு நியூஸ் வருதே.....

என்ன ஆகப்போகுதோ ....... எப்போதும் போலவே....இறைவன் மேல் பாரத்தை போடுவோம்....

கார்த்திக் said...

பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்.. அனைவரும் இந்த பதிவை ஒரு பிரதி எடுத்துகொண்டால் நன்று

Vidhoosh said...

நன்றி மண்குதிரை, உமா, கோபி, கார்த்திக்.
மக்கள் பயப்படக் கூடாது என்ற நோக்கத்தோடே எழுதப் பட்டது இந்தப் பதிவு. பயனுள்ளதாக அமைந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
--வித்யா

அ.மு.செய்யது said...

பயனுள்ள டைமிங் பதிவு.

கண்டிப்பாக எனக்கு இந்த பதிவு பயன்படும்.

நான் தற்போது வசிக்கும் பூனே நகரில், பன்றி காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.

மணிஜி said...

இந்த இடுகையை படித்தவுடன் எனக்கு “நன்றி காய்ச்சல்” வந்துவிட்டது

Vidhoosh said...

டேக் கேர் செய்யது.

=========

தண்டோரா என்ற மணிஜி - காமெடி-ஜி.


--வித்யா

Radhakrishnan said...

நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடப்பட்டுள்ள இடுகை. பலருக்கும் பயன் தரும் வண்ணமாக அமைந்து உள்ளது. மிக்க நன்றி வித்யா.

பிரவின்ஸ்கா said...

அவசியம் தெரிந்து கொள்ளப்படவேண்டிய தகவல்கள்.
மிக்க நன்றி

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

பீர் | Peer said...

பயனுள்ள பதிவு,

பீர் | Peer said...

//Blogger அ.மு.செய்யது said...
... நான் தற்போது வசிக்கும் பூனே நகரில், பன்றி காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது.//

வித்யா, இந்த தொற்றுநோய் இண்டர்நெட்ல பரவாதே?

செய்யது பின்னூட்டத்த பார்க்காம நானும் பின்னூட்டிவிட்டேன். ;)

TakeCare - செய்யது, கூடுமான வரை பயணங்களை, மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிருங்கள்.

நர்சிம் said...

நன்றி

kamalabhoopathy said...

Useful post at right time and right direction

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக மிக நல்ல பதிவு

Vidhoosh said...

இராதாகிருஷ்ணன், பிரவின்ஸ்கா, பீர் | Peer, நர்சிம், அமித்து அம்மா - எல்லோருக்கும் நன்றி.

===
கமலா அத்தை உங்க வெப்சைட் சூப்பர். ஒவ்வொரு சண்டேவும் உங்க கை சாப்பாட்டை நினைச்சுக் கொண்டே சாப்பிடுவேன். சீக்கிரம் வரேன் உங்க வீட்டுக்கு.
==============
---வித்யா

Vidhoosh said...

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

விகடன் இணையதளத்தில் இக்கட்டுரையின் லிங்க் சேர்க்கப் பட்டுள்ளது.
--வித்யா

BHANUSIVA said...

thevaiyana nerathil vandhirukkum payanulla thagaval. mediakkalil bayaththai parappugirargale ozhiya ethu pondra payanulla thagavalgalai tharuvathillai. Ithai forward seitha en sagothararukku nandri. (eppadi thamizhil comment anuppuvathu?).

siva, chennai

Vidhoosh said...

http://www.google.com/transliterate/indic/Tamil

தமிழில் டைப் செய்ய இந்த லிங்கைப் பயன்படுத்துங்கள் சிவா.

--வித்யா

Beski said...

மிகவும் பயனுள்ள பதிவு. மெயில் மூலம் பார்த்தேன்.
நன்றி.

RJ Dyena said...

Dear Vidya..

its a very informative article...and the best article about 'swine flu' I had ever read....

U had collected so many info: from various to cover various areas re:swine flu...

All teh best

Dyena

Vidhoosh said...

எவனோ ஒருவன்,டயானா சதா'சக்தி'நாதன்

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி. இப்பதிவு உபயோகமாய் இருந்தலில் ரொம்ப மகிழ்கிறேன்.

-வித்யா

Post a Comment