ஆயிரங்காலத்து அழுகல் பயிர் - பாகம் 3


பொறுப்பு அறிவித்தல்: இக்கட்டுரை, பொதுவாக நல்லவிதமாக குடும்பம் நடத்தும் / நடத்த விரும்பும் 90 சதவீதபெண்கள் மற்றும் ஆண்களை பற்றி / அவர்களுக்காகஎழுதப்பட்டது. இக்கட்டுரையில் exceptions / extraordinary -யாகஇருக்கும் பாக்கி 10 சதவீத பெண்கள்/ஆண்களை பற்றி விவாதிக்கப் போவதில்லை. 498 பிரச்சினையெல்லாம் இங்கேவராது.

இக்கட்டுரையில் வரும் எல்லாக் கருத்துக்களும் முழுக்க முழுக்க என் சொந்த கருத்து. இதற்கு மாற்றாக கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.

தனி மனித தாக்குதல் அல்லது எந்தவொரு ஜாதி, மதம், இனம் பற்றி பேசுவதற்கு இது இடமில்லை. அப்படி ஜாதி பெயர் குறிப்பிட்டு வரும், அல்லது பெயரில்லாப் (அனானி) பின்னூட்டங்களை நான் வெளியிட மாட்டேன்.


========================================================================

பகுதி 5. திருமண மந்திரங்கள்

========================================================================

மந்திரங்கள் ஏன் சமஸ்கிருதத்திலேயே இருக்க வேண்டும்? அவரவர் பாஷையில் இருந்தால் தவறா? ஏன் புரியாத மந்திரங்களை சொல்லவேண்டும்?

இதற்கு பதில் ஆமாம், மற்றும் இல்லை இரண்டுமே பொருந்தும்.

மந்திரங்கள் சகுண மந்திரம், நிர்குண மந்திரம், பீஜ மந்திரம் என்று மூன்று வகைப்படும்.

சகுண மந்திரங்கள் பல்வேறு உயர்குணம் படைத்த சான்றோர்கள் அல்லது பரமயோகிகளின் பெயர்கள் மற்றும் அவரை பற்றிய புகழ்ந்து பாடப்பட்டவை ஆகும். (இவர்களை நாம் இறைவன் என்றே வணங்குகிறோம். சிலர் தமது தலைவரின்/ தாயின் அல்லது மனைவியின் சிலை வடித்து வணங்குவது போல). உதாரணத்திற்கு "ஓம் துர்காய நம:" என்பதை நாம் "துர்கையே! உன்னை வணங்குகிறேன்" என்று சொல்வதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

நிர்குண மந்திரங்களான, "அஹம் பிரம்மாஸ்மி" (நானே படைப்பவன் - இதன் பொருள் 'நான் கடவுள்' இல்லை), "தத் வம் அஸி" (நானே அது (ஜீவன்/ஆத்மா)) போன்ற மந்திரங்கள் வார்த்தைகளால் உச்சாடனை செய்யப்படக்கூடியவை அல்ல. வாய் வார்த்தைகளால் சொல்லப்பட்டாலும் அந்த சப்தத்திற்கு எந்த பலனும் இல்லை. ஆனால், மனதுக்குள் இந்த மந்திரங்களைச் சொல்லும் போது சொல்லில் அடங்கா பல நன்மைகள் இருக்கிறது. இது உண்மைதான் என்பதை உணர்ந்து தான் பார்க்கவேண்டும். இவை தியானிக்கப் படவேண்டியவை. daily assertions என்று நாம் ஆங்கிலத்தில் சொல்வது போலத்தான் இந்த மந்திரங்களும். ஆனால், வெறும் அர்த்தங்களை தாண்டி இவற்றை சமஸ்கிருதத்திலேயே மனதிற்குள் உச்சரிப்பதன் சப்த அதிர்வலைகள் நம் உடலுக்குள்ளேயே எதிரொலிக்கப்படும்போது அதன் பலன்கள் சொல்லிலடங்காதது.

பீஜ மந்திரங்கள் என்பவை, எளிதில் யாராலும் படித்து விட முடியாது. அவற்றை புரிந்து அர்த்தம் பண்ணுவதும் ரொம்பவே கஷ்டம். சிவ-சக்தி என்று கூறுவது போல, ஆற்றலையும் ஞானத்தையும் ஒன்றிணைக்கும் மந்திரங்கள் இவை. பதம் பிரிப்பது மிக மிக கடினமானது. இவற்றை உச்சரிக்க யாருமே பயப்படுவார்கள். சமஸ்கிருதம் பற்றிய அதிகப்படியான விஷய ஞானம் கொண்டவர்கள் கூட தவறான உச்சரிப்பு நாக்கின் நரம்புகளை முறுக்கி விடும் என்று இன்றும் நம்புகிறார்கள். இது ஆச்சரியம்தான் என்றாலும் பீஜ மந்திரங்களை பார்த்தாலே நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொள்கிறது என்பது நிஜம். பீஜ மந்திரங்கள் மனித உடலின் சக்கிரங்களையும், குண்டலினியையும் திறக்க உதவும் மந்திரங்கள் ஆகும். உதாரணத்திற்கு, "ஹ்ரீங்" என்ற மந்திரம் காளியைக் குறிப்பதாக சொல்கிறார்கள்.

ஏன் கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சமஸ்கிருத மந்திரங்கள் கடவுளை மகிழ்விக்கச் சொல்வதில்லை. மந்திரங்கள் சொல்லப்படும்போது, உண்டாகும் sound waves ஏற்படுத்தும் நல்ல அதிர்வுகள் மனிதனுக்கு நன்மை விளைவிக்கிறது.

சமஸ்கிருதம் என்ற பாஷை பிரபஞ்சத்தின் சப்தங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது. நமக்கு ஏற்கனவே தெரிந்துள்ளபடி, குறிப்பிட்ட சப்தங்கள் (sound waves) அந்தந்த சப்தங்களுக்கேர்ப்ப மனநிலையை உண்டாக்குகிறது.

திருமண மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஒரு குறிப்பிட்ட தாள, லயம் மற்றும் சப்தத்தோடுஅமைந்துள்ளது. இவற்றை சரியான வகையில் (குழுவாக) உச்சரிக்கும் போது, ஏற்படும் அதிர்வலைகள், மணமக்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை விளைவிப்பதாக அறியப் படுகிறது. இதைத்தான் நாம் இன்றும் music therapy, chanting therapy என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறோம்.

சமஸ்கிருத மந்திரங்களை இப்போதெல்லாம் நிறைய மொழிகளில் மொழிபெயர்ப்புக்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Mummy Returns படத்தை "அம்மா திரும்பறாங்க"ன்னு பேர் வச்சு பார்த்தா எப்படி இருக்கும்? நமக்கு எளிதில் புரியும் என்பதை தவிர, அந்தப் படத்தில் "ஏ டண்டனக்கா." அப்டீன்னு சொல்லிக் கொண்டே Rick O'Connell (Brendan Fraser) மற்றும் Imhotep (Arnold Vosloo) சண்டை போட்டால் எவ்வளவு செயற்கைத் தன்மை தெரியும். அதன் originality இல்லாமல் இருக்கும்.

தமிழிலும் இந்த மொழிபெயர்ப்புக்கள் வந்தால் நமக்கெல்லாம் சுலபமாகி விடும். சமஸ்கிருதமும் அதன் மந்திரங்களில் உள்ள பரந்த நோக்கும் எல்லோருக்கும் புரியும் என்பதைத் தவிர, தமிழிலோ அல்லது வேறெந்த மொழியிலோ மந்திரங்களைச் சொல்வதால் அதன் உண்மையான பலன் (therapy) கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், தவறாக மொழிபெயர்த்தோ, தவறான உச்சரிப்போ, தவறான பதம் பிரித்தலோ நடந்தால், சப்தங்களின் உச்சரிப்பு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.

உதாரணத்திற்கு, நான் சமீபத்தில் பதிவிட்ட, சொல்லின் செல்வன் ஹனுமான் என்ற பதிவைப் பாருங்களேன். ஒரே ஸ்லோகம் இரு வேறு அர்த்தங்களை கொடுக்கிறது பாருங்கள். (சமஸ்கிருதத்தில் hymns / verses-சை சுலோகம் என்றே சொல்கிறார்கள் - நான் இந்தத் தொடரில் சுலோகம் என்று சொல்வதை எல்லாம் "சாமி" சுலோகத்தோடு குழப்பிக் கொள்ளவேண்டாம்).


========================================================================

பகுதி 6. இல்லாள் ஏன் கணவனின் இல்லத்திற்கு வரவேண்டும்?

========================================================================

திருமணம் முடித்தால் ஏன் தான் பிறந்து-வளர்ந்த தன் வீட்டை /குடும்பத்தை விட்டு கணவன் வீட்டுக்கு வர வேண்டும்?

dependancy/சார்பு என்ற உணர்வு நாம் மற்றவரை எப்படி மதிக்கிறோம் என்பதை நிர்ணயம் செய்கிறது. நாம் அதிகம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ அவருக்கு அதிகம் மதிப்பு கொடுக்கிறோம். அவரை முக்கியமாக நினைக்கிறோம்.

எந்த வேலையையும் ஒழுங்கு முறையோடும், சீரான ஒரே முறையை ஒவ்வொரு முறை அந்த வேலையைச் செய்யும் போது பின்பற்றும் (regular practice of doing things) தன்மை இருப்பதாலும், சிக்கனம், அழகுணர்ச்சி, அலங்கார உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதும், வீட்டை ஆளும் பொறுப்பைக் கொடுத்ததற்கு இன்னொரு காரணம். வீட்டின் பொறுப்பு முழுதும் அவர்கள் வசம் இருப்பதால், ஒரு நிலையில், ஆணின் தேவை அல்லது முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.

இயல்பாகவே, பெண்கள் ஆண்களை விட அதிக மன பலம் பெற்றவர்கள். ஒரு சின்ன துரும்பு கிடைத்தால் கூட அதைப் பிடித்துக்கொண்டு மலையையே திருப்பும் மன பலம் இருக்கிறது. இதனால், பெண்களின் ஆற்றலை நல்வழிப்படுத்தி, அவர்கள் தம் கணவனை மதிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப் பட்டது இம்முறை. பெண் வீட்டையும் பணத்தையும் நன்கு கையாள்வதால், அவளுக்கு வீட்டை நிர்வகிக்கும் அனைத்துப் பொறுப்புக்களும் கொடுக்கப்பட்டது. நிர்வாகத்திற்கு தேவையான பொருட்களை/பணத்தை ஈடுவது ஆணின் கடமையாக சொல்லப் பட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையிலேயே இருந்ததால், பிரியும் எண்ணம் வராமல், சின்ன சின்ன தவறுகளையும் சண்டையிட்டும், சமாதனம் ஆகியுமாய், பிரியாமலே வாழ்ந்து வந்தனர். நாளடைவில், சார்ந்திருக்கும் கட்டாயத்தால் மட்டுமே இல்லாமல், காதலும் வளர்ந்தது.


மேலும் ஆண்கள் பெண்களை விட உடற்பலம் அதிகம் பெற்றிருப்பதாலும் ஆண்கள் பொருளீட்டுவதும், பிள்ளைப்பேறு / பிள்ளைகளைப் பேணுதல் ஆகிய இரண்டும் பெண்களுக்கு மட்டுமே வரமாகியிருக்கிறதாலும், பெண் தன் அன்பால் ஆணுக்கு சிறந்த வாழ்வியல் வழிகாட்ட முடியும் என்பதாலும், பெண்கள் குடும்பத்தைப் பேணுதலும் ஆகிய காரியங்களை சமமாகப் பிரித்துக் கொண்டனர். இதனால் இதில் சமூகத்தையோ அல்லது வேறு யாரையுமே குறை கூறி பிரயோஜனம் இல்லை.

இந்த முறை நடைமுறையில் இன்றும் இருப்பதால், இதைப் பற்றி ஆளுமை / அடக்குமுறை என்றெல்லாம் குதர்க்கவாதம் தேவையில்லை.


வீட்டோடு மாப்பிள்ளைகள் எவ்வளவு தூரம் மதிக்கப்படுகிறார்கள் என்று நமக்கெல்லாம் தெரிந்ததே.

பெண்கள் தண்ணீர் போன்றவர்கள், எப்படி மலை மீதிருந்தது வீழும் போது நீர் வீழ்ச்சியாகவும், பின் ஓடையாகவும், நதியாகவும், குளமாகவும், கடலாகவும் மாறுகிறதோ அதேபோல அவள் இயல்பே சூழ்நிலைக் காரணங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதுதான். உண்மையில், பெண் மனம் மாறுதல்களை (adaptive) வெகு சீக்கிரம் பழகிக் கொள்ளும் என்பதாலும், இம்முறை பல குடும்பத்தாரால் ஏற்படுத்தப்பட்டு முறையாக இருந்து வந்திருக்கிறது என்பதாலும், நாம் அப்படியே பின்பற்றி வருகிறோம். பெண்கள் எளிதில் இன்னொரு சூழலை தனதாக்கி கொள்கிறார்கள். எதையும் எளிதில் கற்றுத் தேர்கிறார்கள். அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் "நாணம்" என்ற உணர்வு, அவர்கள் மனதை அலைபாய விடாமல் செய்கிறது. இதனால் பெரும்பான்மை பெண்கள் தம் ஆற்றல் தரும் தன்னபிக்கையை தவறாக பயன்படுத்தாமல் குடும்ப முன்னேற்றத்திற்கும், சுய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தி சிறந்த உயர்நிலை பெற்று, மரியாதைக்குரியவர்களாக ஆகிறார்கள்.

ஆளுமை என்பது ஆண்களின் இயல்பு / குணம். அன்பால் அவனை ஆள்வது பெண் என்பதால், அவன் தான் தாயிடமும், மனைவியிடமும், அவர்கள் அன்புக்கு அடிமையாகிறான், அடங்குகிறான். அன்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ஆண் அடிமைப்படுகிறான்.

இப்போதும் கூட, ஒருவரை ஒருவர் அடக்குவது கணவனோ அல்லது மனைவியோ அல்ல. எங்கு பணம் அன்பை ஆளத் துவங்குகிறதோ, அங்கே உறவுகள் விரியத் துவங்குகின்றன. இந்த விரிசல் நாளடைவில் அன்பை அழித்து, சகிப்புத்தன்மை இல்லாமல் போய், அடக்குமுறைக்கு ஆளாகிறோம் என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்குகிறது.

இவன் உனக்கானவன், இவள் உனக்கானவள் என்றிருக்கும்போது, மனித இயல்பான காமத்திற்கு ஒரு முறையான வடிகாலும், தம்மைச் சார்ந்து, தம்மையே நம்பி ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு அந்தப் பெண்ணுக்கும், ஆணுக்கும் தாம் உயிரோடிருக்க ஒருநோக்கமும், வாழும் ஆசையும் உண்டாகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மகாபாரத்தின் சகுனி முதல் இன்று வரை, சில குடும்பங்களில், பெண் வீட்டைச் சார்ந்தவர்கள்அந்தப் பெண்ணின் கணவர் சார்ந்த /அவள் குடும்பம் சார்ந்த விஷயங்களில் தலையிட்டதால், ஆளுமை குணம் ஆண்களுக்கு இயல்பிலேயே இருப்பதால், இரு வீட்டு ஆண்களும் ஆளுமைக்காக மோதிக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். அல்லது சூழ்ச்சியினால் அந்தப்பெண்ணையோ பெண்ணைச் சார்ந்தவர்களையோ கொன்று விடவும் தயங்க மாட்டார்கள். இக்காரணத்தால் இம்முறை துவங்கப்பட்டிருக்கலாம். இன்று இப்படியெல்லாம் அதிகமாக நிகழ்வது இல்லை என்றாலும், சரித்திரங்களில் அதிகம் இப்படி நிகழ்ந்துள்ளதால் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.

மனைவி வீட்டைச் சார்ந்தவர்கள் அல்லது கணவன் குடும்பத்தைச் சாராதவர்கள் தூண்டுதலின் மூலம் பிரிந்த கணவன் மனைவிகள் இன்றும் அதிகம். கணவனையோ மனைவியையோ பிரிவுக்கு தூண்டி விடுபவர்களுக்கு நிச்சயம் ஏதும் சுயலாபம் இருக்கும். அது பெரும்பான்மையான இடங்களில் கணவனிடம் இருக்கும் சொத்தோ, அல்லது குறைந்த பட்சமாக இருவரில் ஒருவரிடம் இருக்கும் பணமோ காரணமாகிறது.

மன்னிக்கவும், ஆனால் இது பொய்யென்று யாரும் மறுக்க முடியுமா? எக்ஸப்ஷன்ஸ் (exceptions) இருக்கக் கூடும். ஆனால், இன்றும் கணவனின் பெற்றோர் தலையீட்டாலோ அல்லது கணவனின் முறைகெட்டபழக்கவழக்கங்கள், இம்மாதிரிக் காரணங்களை விட, பெண்ணை காரண காரியம் இல்லாமல் புகுந்த வீட்டிற்கு எதிராகத் தூண்டிவிட்டு அவர்கள் மண (குடும்ப) வாழ்க்கையை குலைப்பவர்களே அதிகம்.

அப்படியொன்றும் இல்லை. ஆளுமை பெண்களுக்கும் உரியதுதான் என்று பெண்ணியம் பேசினால் நஷ்டமடையப் போவது பெண்தானே.

ஆண் எப்போது பாதுகாக்க / பராமரிக்கப்படுகிறானோ / பொறுப்புக்கள் அல்லது தன்னை சார்ந்து யாருமில்லை என்கிற எண்ணம் தலை தூக்குகிறதோ, அவன் தறுதலை ஆகி, நல் வாழ்க்கை வழியில் செல்லாமல், தவறான செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தன் ஆளுமையை குணத்தை இழக்கிறான். சுயமரியாதையை இழக்கிறான். எங்கே ஆண் தன் ஆளுமையை இழக்கிறானோ அங்கே தன் ஆண்மையையும் இழக்கிறான். மலை எப்படி உயர்ந்திருப்பதால் மட்டுமே பெருமைக்குரியதாக ஆகிறதோ, ஒரு ஆணும் தலைநிமிர்ந்து சுயசார்போடு இருப்பதால் மட்டுமே மதிக்கப்படுகிறான். அன்பால் அவனை ஆண்டு எப்போது பெண் அவனை தன்வசப்படுத்துகிறாளோ, அங்கே அவளுக்கும் தானாகவே பெருமை சேர்கிறது.

இங்கு ஆளுமை என்று கூறப்படுவது, நான் மதிக்கப்படுபவன், சிறந்தவன் என்ற தன்னம்பிக்கை குணம் மற்றும் பொறுப்புணர்வு மட்டுமே ஆகும். என் குடும்பத்திலுள்ளவர்கள் என்னைச் சார்ந்திருக்கின்றனர் என்ற உணர்வே ஆண்களுக்கு ஒரு டிரைவிங் ஃப்போர்ஸாக (driving force) அமைகிறது.

ஆண்களின் உடற் பலமும், பெண்களின் மன பலமும் இணைந்து ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் போது, இருவரின் ஆற்றல்களும் சரியானபடி, ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தனக்கு ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் இருக்கும் போது, குடும்பத் தலைவனோ, தலைவியோ, தவறான செயல்கள் / குற்றங்கள் / சட்ட புறம்பான செயல்களில் ஈடுபட பயப்படுகிறார்கள்.

திருமணம் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு நன்மை பயக்குமாறு அமைந்திருக்கிறது இல்லையா?


===========
அடுத்து வியாழனன்று வரும்...
===========
..

21 comments:

நட்புடன் ஜமால் said...

மனைவி வீட்டைச் சார்ந்தவர்கள் அல்லது கணவன் குடும்பத்தைச் சாராதவர்கள் தூண்டுதலின் மூலம் பிரிந்த கணவன் மனைவிகள் இன்றும் அதிகம். கணவனையோ மனைவியையோ பிரிவுக்கு தூண்டி விடுபவர்களுக்கு நிச்சயம் ஏதும் சுயலாபம் இருக்கும். அது பெரும்பான்மையான இடங்களில் கணவனிடம் இருக்கும் சொத்தோ, அல்லது குறைந்த பட்சமாக இருவரில் ஒருவரிடம் இருக்கும் பணமோ காரணமாகிறது.]]

நிதர்சணம்

நட்புடன் ஜமால் said...

அப்படியொன்றும் இல்லை. ஆளுமை பெண்களுக்கும் உரியதுதான் என்று பெண்ணியம் பேசினால் நஷ்டமடையப் போவது பெண்தானே.
]]


நன்னா தகிரியமா சொன்னேள் போங்கோ ...

நட்புடன் ஜமால் said...

ஆண் எப்போது பாதுகாக்க / பராமரிக்கப்படுகிறானோ / பொறுப்புக்கள் அல்லது தன்னை சார்ந்து யாருமில்லை என்கிற எண்ணம் தலை தூக்குகிறதோ, அவன் தறுதலை ஆகி, நல் வாழ்க்கை வழியில் செல்லாமல், தவறான செயல்களில் ஈடுபட ஆரம்பிக்கிறான். தன் ஆளுமையை குணத்தை இழக்கிறான். சுயமரியாதையை இழக்கிறான். எங்கே ஆண் தன் ஆளுமையை இழக்கிறானோ அங்கே தன் ஆண்மையையும் இழக்கிறான்.]]

ரொம்ப யோசிச்சி இருக்கீங்க

இப்ப யோசிக்கவும் வச்சிட்டீங்க ...

நட்புடன் ஜமால் said...

இங்கு ஆளுமை என்று கூறப்படுவது, நான் மதிக்கப்படுபவன், சிறந்தவன் என்ற தன்னம்பிக்கை குணம் மற்றும் பொறுப்புணர்வு மட்டுமே ஆகும்]]

சிறப்பா சொன்னீங்க ...

sakthi said...

வித்யா ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்றீர்கள்

அருமையானதொரு கட்டுரை

R.Gopi said...

//"ஹ்ரீங்" என்ற மந்திரம் காளியைக் குறிப்பதாக சொல்கிறார்கள்.//

"ஹ்ரீங்" இதை லேசா ஒரு த‌ட‌வை சொல்லிப்பார்த்தேன்... உட‌லெங்கும் ஜிலீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

//மந்திரங்கள் சொல்லப்படும்போது, உண்டாகும் sound waves ஏற்படுத்தும் நல்ல அதிர்வுகள் மனிதனுக்கு நன்மை விளைவிக்கிறது.//

ஏற‌க்குறைய‌ பால‌குமார‌ன் விளக்கி சொல்ற‌து மாதிரி இருக்கு விதூஷ்.....

//இன்றும் music therapy, chanting therapy என்றெல்லாம் சொல்லி ..//

மிக‌ ச‌ரி....

//Mummy Returns படத்தை "அம்மா திரும்பறாங்க"ன்னு பேர் வச்சு பார்த்தா எப்படி இருக்கும்? நமக்கு எளிதில் புரியும் என்பதை தவிர, அந்தப் படத்தில் "ஏ டண்டனக்கா." அப்டீன்னு சொல்லிக் கொண்டே Rick O'Connell (Brendan Fraser) மற்றும் Imhotep (Arnold Vosloo) சண்டை போட்டால் எவ்வளவு செயற்கைத் தன்மை தெரியும். அதன் originality இல்லாமல் இருக்கும்.//

ஹா...ஹா....ஹா.... ஆனா இப்போ எல்லா ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளும் த‌மிழில் ட‌ப் செய்ய‌ப்ப‌ட்டு, பி & சி சென்ட‌ர்ல‌ ப‌ட்டைய‌ கெள‌ப்ப‌ற‌தாம்.... அதுவும், ஜேம்ஸ்பாண்ட் கோட், சூட் எல்லாம் போட்டுண்டு, ஸ்டைலா வ‌ந்து, வில்ல‌ன் கிட்ட‌ பேச‌ற‌ ட‌ய‌லாக் இருக்கே....கேட்டோம்.. ஒல‌க‌த்துல‌ இருக்க‌ற‌ அத்த‌னை சுவ‌த்தையும் தேடி புடிச்சி, முட்டிக்க‌லாம் உதாரணத்துக்கு ஒரு டெர்ரர் டயலாக்...(யேய்... நீ இப்டியே ப‌ண்ணிட்டு இருந்த‌, ம‌வ‌னே, ஓங்கி ஒரு அறை...செவுளு, அவிலு வுட்டுடும்...)

//தமிழிலோ அல்லது வேறெந்த மொழியிலோ மந்திரங்களைச் சொல்வதால் அதன் உண்மையான பலன் (therapy) கிடைக்குமா என்று தெரியவில்லை. //

ப‌ல‌ன் கிடைக்காது என்றே நினைக்கிறேன்... அதை நீங்க‌ள் இங்கே அடுத்த‌ வ‌ரியிலேயே சொல்லி விட்டீர்க‌ள்.. ( தவறாக மொழிபெயர்த்தோ, தவறான உச்சரிப்போ, தவறான பதம் பிரித்தலோ நடந்தால், சப்தங்களின் உச்சரிப்பு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்).

//அதிகம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ அவருக்கு அதிகம் மதிப்பு கொடுக்கிறோம். அவரை முக்கியமாக நினைக்கிறோம்.//

க‌ரெக்ட் வித்யா... இதுதானே ந‌டைமுறை ப‌ழ‌க்க‌ம்....

//ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையிலேயே இருந்ததால், பிரியும் எண்ணம் வராமல், சின்ன சின்ன தவறுகளையும் சண்டையிட்டும், சமாதனம் ஆகியுமாய், பிரியாமலே வாழ்ந்து வந்தனர். நாளடைவில், சார்ந்திருக்கும் கட்டாயத்தால் மட்டுமே இல்லாமல், காதலும் வளர்ந்தது. //

ரொம்ப‌ அருமை வித்யா... த‌ங்க‌ள் எழுத்து மிக‌வும் ப‌ண்ப‌ட்டு காண‌ப்ப‌டுகிற‌து...

//இந்த முறை நடைமுறையில் இன்றும் இருப்பதால், இதைப் பற்றி ஆளுமை / அடக்குமுறை என்றெல்லாம் //

ம்ம்ம்... இந்த‌ இர‌ண்டு வார்த்தைதான் இப்போ ந‌ட‌க்க‌ற‌ நிறைய‌ ச‌ண்டைக‌ளுக்கு கார‌ண‌ம்......

//பெண்கள் தண்ணீர் போன்றவர்கள், எப்படி மலை மீதிருந்தது வீழும் போது நீர் வீழ்ச்சியாகவும், பின் ஓடையாகவும், நதியாகவும், குளமாகவும், கடலாகவும் மாறுகிறதோ அதேபோல அவள் இயல்பே சூழ்நிலைக் காரணங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்வதுதான்.//

இங்கே த‌மிழ் அருவியாய் ஓடுகிற‌தே.... ந‌ல்ல‌ வ‌ர்ண‌னை...

//இயல்பாகவே இருக்கும் "நாணம்" என்ற உணர்வு, அவர்கள் மனதை அலைபாய விடாமல் செய்கிறது. இதனால் பெரும்பான்மை பெண்கள் தம் ஆற்றல் தரும் தன்னபிக்கையை தவறாக பயன்படுத்தாமல் குடும்ப முன்னேற்றத்திற்கும், சுய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தி சிறந்த உயர்நிலை பெற்று //

இத‌ப்போல‌ இருந்துட்டா, பிர‌ச்ச‌னை என்ற‌ வார்த்தையையே டிக்ஷ‌ன‌ரில‌ இருந்து எடுத்துட‌லாம்...

//அவன் தான் தாயிடமும், மனைவியிடமும், அவர்கள் அன்புக்கு அடிமையாகிறான், அடங்குகிறான். அன்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் ஆண் அடிமைப்படுகிறான்.//

எப்பேற்ப‌ட்ட‌ வீர‌னும், ப‌ராக்கிர‌ம‌சாலியும், ச‌ர‌ணாக‌திதான்...

//எங்கு பணம் அன்பை ஆளத் துவங்குகிறதோ, அங்கே உறவுகள் விரியத் துவங்குகின்றன. இந்த விரிசல் நாளடைவில் அன்பை அழித்து, சகிப்புத்தன்மை இல்லாமல் போய் //

இதுதான் இப்போ நிறைய வீட்டுல நடக்கறது... அதனால தான்,பிரச்சனையே..

//மலை எப்படி உயர்ந்திருப்பதால் மட்டுமே பெருமைக்குரியதாக ஆகிறதோ, ஒரு ஆணும் தலைநிமிர்ந்து சுயசார்போடு இருப்பதால் மட்டுமே மதிக்கப்படுகிறான். //

ஒன்றே சொன்னீர்கள்... நன்றே சொன்னீர்கள்... அதையும் இன்றே சொன்னீர்கள்.. வாழ்த்துக்கள்...

//தனக்கு ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் இருக்கும் போது, குடும்பத் தலைவனோ, தலைவியோ, தவறான செயல்கள் / குற்றங்கள் / சட்ட புறம்பான செயல்களில் ஈடுபட பயப்படுகிறார்கள்.//

ஈடுபட பயப்படறத விடுங்க... ஈடுபடவே யோசிப்பாங்க...

//திருமணம் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு நன்மை பயக்குமாறு அமைந்திருக்கிறது இல்லையா?//

மிக‌ மிக‌ ந‌ன்மை ப‌ய‌க்கிற‌து என்ப‌தை சொல்ல‌வும் வேண்டுமோ...

ரொம்ப நல்லா எழுதறீங்கன்னு சொல்லி சொல்லி அலுத்து போச்சு...

அடுத்த‌ வியாழ‌னுக்காக‌ காத்திருக்கிறேன்...

வெ.இராதாகிருஷ்ணன் said...

வெகு பிரமாதம் வித்யா.

மூவகை மந்திரங்கள் பற்றியும், அது குறித்த விளக்கமும் அசத்தல். வெகுவாக ரசித்தேன்.

மொழி பெயர்ப்பினால் ஏற்படும் பிரச்சினைகளையும், கருத்து தொலைந்திட வாய்ப்பாக அமைகிறது என்பதையும் தெளிவாக விளக்கி விட்டீர்கள். திருக்குறளின் அர்த்தம் தெரிய தமிழ் படித்துக் கொள்வதை விட்டுவிட்டு ஏன் பிற மொழிகளில் மொழி பெயர்த்தார்கள் எனும் எண்ணம் எழுவதுண்டு.

சமஸ்கிருதம் படித்து, வேதங்கள் படித்திட ஆசை எழுவதுண்டு. 'தேவபாஷை' என சமஸ்கிருதத்திற்கு அடைமொழி கொடுத்ததையும், அம்மொழியை கடுமையாக எதிர்ப்பவர்கள் உண்டு என்பதையும் அறிவேன். ஆனால் நீங்கள் சொல்வது போல அந்த அந்த மொழியில் படிப்பதுதான் சுகம். ஆங்கிலப் படத்தில் வரும் சண்டைக் காட்சிக்கான விளக்கம் சிரிக்க வைத்துவிட்டது. நல்ல ரசனை.

திருமண பந்தம் பற்றிய கண்ணோட்டம் மிகவும் அருமை. உறவுகள் ஏன் உவர்ப்பதுண்டு என சிந்தித்து இருக்கிறேன். கணவன் மனைவியின் பிரிதலுக்கு மற்றவர்கள் வினையூக்கியாக செயல்படுவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

பெண்ணுக்கு மனபலம் எனவும், ஆண் அன்புக்கு அடிமையாகிவிடுவான் எனவும் சற்றே பெண்ணைப் பற்றிய விசயங்கள் தூக்கல்தான். அதனால்தான் எழுதியவர்கள் எல்லாம் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே எனச் சொல்லி வைத்தார்கள். ஒரு பெண்ணினால் மட்டுமே குடும்பத்தைத் தூக்கி நிறுத்த முடியும் எனச் சொல்லப்பட்டதும் ஆண் எளிதாக பெண் வயப்படுவது என்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இருவருக்கும் சம பொறுப்பு உண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது.

பணம் குறித்த கண்ணோட்டமும், ஆளுமை குறித்த பார்வையும் சரிதான், இருப்பினும் பெண் மட்டுமா நஷ்டமடையப் போகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். நமது சமூக கட்டுப்பாடு என்பதால் தான் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.தங்களின் ஆளுமை குறித்த விளக்கப்படி பெண்ணுக்கு ஆளுமை அவசியம்.

அடுத்த வியாழன் வரை காத்திருக்கிறேன். மிக்க நன்றி வித்யா அவர்களே.

Vidhoosh said...

நன்றி ஜமால்
நன்றி சக்தி
நன்றி கோபி
நன்றி இராதாகிருஷ்ணன்: பெண்கள் அன்பால் மட்டுமே ஆளவேண்டும் என்றே விரும்புகிறேன். அன்புக்கு அடிமையாகாதவர் யாருமே கிடையாது என்பதாலே இப்படி கூறுகிறேன். பெண்களுக்கு அன்பு மட்டுமே அழகும் (வெளி அழகல்ல), நிம்மதியும், மரியாதையையும் பெற்றுக் கொடுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

sakthi said...

உங்களுக்கு என் அன்பு பரிசு வித்யா

http://veetupura.blogspot.com/

Vidhoosh said...

அட. அவார்டா.. பொன் முடிப்பெல்லாம் தருவீங்களா.. :) ரொம்ப நன்றி சக்தி..

நேசமித்ரன் said...

My hearty wishes for receiving award from sakthi

:)

அ.மு.செய்யது said...

உங்கள் பதிவை சில விவாதங்களுக்கு ரெஃபரன்ஸ் ஆக பயன்படுத்தி கொள்கிறேன்.
அந்த அளவுக்கு விஷயஙக்ள் பொதிந்துள்ளன.

சேகரித்து தொகுத்திருக்கும் உங்கள் உழைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டுகளும் !!

வால்பையன் said...

//ஆளுமை பெண்களுக்கும் உரியதுதான் என்று பெண்ணியம் பேசினால் நஷ்டமடையப் போவது பெண்தானே.//

அது அந்த பெண் எடுத்து கொள்ளும் மனநிலையை பொறுத்து இருக்கிறது!
எது நஷ்டம் என்பதும் பொதுப்படையாக சொல்லமுடியாது, ஒருவருக்கு பணம் தேவை ஒருவருக்கு அது தேவையில்லை!

000

சவுண்ட் வேவ்ஸ் காமெடியை ரசித்து படித்தேன்!
நன்றி இந்த மாதிரி காமெடியாக எழுதுவதற்கு!

சிரிக்க மட்டுமே, டென்ஷன் ஆககூடாது

வால்பையன் said...

//அன்பால் அவனை ஆண்டு எப்போது பெண் அவனை தன்வசப்படுத்துகிறாளோ, அங்கே அவளுக்கும் தானாகவே பெருமை சேர்கிறது.//

சுயநலமில்லாமல் இங்கே யாரும் அன்பு செலுத்துவதில்லை!

Vidhoosh said...

நன்றி நேசமித்ரன்

நன்றி செய்யது.

சரிதான் வால். இந்த point-டை ஒத்துக் கொள்கிறேன்.

சிரிக்க மட்டும் இல்ல. சிந்திக்கவும் தான். காமெடியைச் சொன்னேன் அப்பு. :))

--வித்யா

வால்பையன் said...

//குடும்பத்திலுள்ளவர்கள் என்னைச் சார்ந்திருக்கின்றனர் என்ற உணர்வே ஆண்களுக்கு ஒரு டிரைவிங் ஃப்போர்ஸாக (driving force) அமைகிறது.//

ஆளுமை சிலநேரங்களில் தலைகணமாக மாற நிறைய வாய்ப்புண்டு, தவறுகள் செய்தால் யார் கேட்கபோகிறார்கள், நாம் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன கதி போன்ற கேடுகெட்ட எண்ணங்கள் ஆனாதிக்கத்தை அதிகப்படுத்தும்!

வால்பையன் said...

//ஆண்களின் உடற் பலமும், பெண்களின் மன பலமும் இணைந்து ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் போது, இருவரின் ஆற்றல்களும் சரியானபடி, ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.//

எத்தனை புருஷன் பொஞ்சாதிகள் சேர்ந்து கம்பெனி நடத்துறாங்க, ஆக்கபூர்வ செயல் பெற!
இப்படியே பேசி பேசி தான் பெண்களை நாம அடுப்பாங்கரைகுள்ளயே பூட்டி வச்சிருக்கோம்!

வால்பையன் said...

//தனக்கு ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் இருக்கும் போது, குடும்பத் தலைவனோ, தலைவியோ, தவறான செயல்கள் / குற்றங்கள் / சட்ட புறம்பான செயல்களில் ஈடுபட பயப்படுகிறார்கள்.//

அதுகெல்லாம் யாரு பயப்பட மாட்டான்!
மனிதன் பயப்படுவது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே, மனிதனுக்கு இருக்கும் சுயமரியாதையே அவனது தனிமனித ஒழுக்கத்தை காக்கிறது!

குடும்பம் இல்லாமலும் தப்பு பண்ணாமல் இருப்பது இதற்கு உதாரணம்!

வால்பையன் said...

//தனக்கு ஒரு குடும்பம், குழந்தைகள் என்ற பொறுப்புக்கள் இருக்கும் போது, குடும்பத் தலைவனோ, தலைவியோ, தவறான செயல்கள் / குற்றங்கள் / சட்ட புறம்பான செயல்களில் ஈடுபட பயப்படுகிறார்கள்.//

அதுகெல்லாம் யாரு பயப்பட மாட்டான்!
மனிதன் பயப்படுவது இந்த சமுதாயத்திற்கு மட்டுமே, மனிதனுக்கு இருக்கும் சுயமரியாதையே அவனது தனிமனித ஒழுக்கத்தை காக்கிறது!

குடும்பம் இல்லாமலும் தப்பு பண்ணாமல் இருப்பது இதற்கு உதாரணம்!

வால்பையன் said...

//திருமணம் ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் எவ்வளவு நன்மை பயக்குமாறு அமைந்திருக்கிறது இல்லையா?//

தனிமனிதனுக்கு சரி,
சமூகத்திற்கு என்ன பண்ணுச்சு, ஒரே ஒரு நாள் எல்லோரையும் கூட்டி சோறு போட்டதோட சரி, அப்புறம் யார் சமூகத்தை கண்டுகிட்டா!?

Vidhoosh said...

இதுக்குத்தான் இரண்டாம் பாகத்திலேயே ஜமால் படிச்சு படிச்சு சொன்னாரு. ஒவ்வொரு பாகமா போடுங்க, சௌரியமா இருக்கும்னு.

இப்படி சராமாரியா கேட்டா எப்படி?

ஒன்னொன்னா பதில் சொல்றேன்.. :))

--வித்யா

Post a Comment