இரு கடிதங்கள்
நீ எழுதிய இரு கடிதமும்
இன்றே வந்து சேர்ந்தது.
வழக்கம் போல புரியவே இல்லை
இவையிரண்டில் எது நல்லது, எது கெட்டது?
ஒன்றில் வழிந்தோடிய உன் காதலும்
இன்னொன்றில் எப்போதும் போல
எனைப் பற்றிய குறைகள்.

சென்ற முறை நான் அனுப்பிய கடிதம்
குறித்த குறிப்பேதும் இல்லையே?
உனக்கான எனது முத்தமும்,
இரு கண்ணீர் துளிகளும் வந்து சேர்ந்ததா?


.

26 comments:

நட்புடன் ஜமால் said...

உப்பு கரிச்சிருக்குமே ...

அப்படினா சரியா போய் சேர்ந்திருக்கும் போல ...

உமா said...

ஆஹா, அழகா இருக்கே. வாழ்த்துக்கள்.

sakthi said...

சென்ற முறை நான் அனுப்பிய கடிதம்
குறித்த குறிப்பேதும் இல்லையே?
உனக்கான எனது முத்தமும்,
இரு கண்ணீர் துளிகளும் வந்து சேர்ந்ததா?

Excellent vidhya

sakthi said...

ஒன்றில் வழிந்தோடிய உன் காதலும்
இன்னொன்றில் எப்போதும் போல
எனைப் பற்றிய குறைகள்.


அதானே ஆண்களுக்கு வழமை

sakthi said...

வழக்கம் போல புரியவே இல்லை
இவையிரண்டில் எது நல்லது, எது கெட்டது?

தெரிந்தால் மாட்டிக்கொள்வோமா என்ன ???

குடந்தை அன்புமணி said...

//நீ எழுதிய இரு கடிதமும்
இன்றே வந்து சேர்ந்தது.
வழக்கம் போல புரியவே இல்லை//

பின்நவீனத்துவமா எழுதியிருந்ததா?

குடந்தை அன்புமணி said...

காதல் ரசம் பொங்கி வழிகிறது. நல்லாருக்குங்க. வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

எனது மற்றொரு வலைத்தளமான தகவல் மலர் வலைத்தளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

ஓ.கே.
இப்போதான் வானம் மேகமூட்டம் ஆரம்பிச்சிருக்கு, அதுவும் அழகா.

நனையலாம்.


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

-தியா- said...

இரு கண்ணீர் துளிகளும் வந்து சேர்ந்ததா?
'அற்புதம்'

-தியா-

யாத்ரா said...

நல்லா இருக்குங்க

சந்ரு said...

அருமையான வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு

நேசமித்ரன் said...

நல்லாருக்குங்க
பிடிச்சிருக்கு

:)

A pleasant feel

Vidhoosh said...

ஜமால்: ம்ம்ம்..:(
உமா: நன்றிங்க
சக்தி: நன்றிங்க
அன்புமணி: ம்ம்ம்..:) (உங்கள் தகவலையும் பார்த்தேன்)
வாசு: நன்றிங்க. இன்னும் வரும்.
தியா: நன்றிங்க
யாத்ரா: நன்றிங்க
சந்ரு: நன்றிங்க
நேசமித்ரன்: நன்றிங்க


--வித்யா

பிரியமுடன்...வசந்த் said...

//ஒன்றில் வழிந்தோடிய உன் காதலும்
இன்னொன்றில் எப்போதும் போல
எனைப் பற்றிய குறைகள்.//

அப்படி குறை கூறினாலும் அதிலும் நல்ல எண்ணங்கள் மட்டுமே.........

வால்பையன் said...

நீ அனுப்பிய இரு பாட்டிலும்
இன்று வந்து சேர்ந்தது
வழக்கம் போல திறக்கமுடியவில்லை
இதில் எது நல்லசரக்கு? எது கெட்டசரக்கு?
ஒன்றில் வழிந்தோடிய நுரையும்
இன்னொன்றில் எப்போதும் போல் எனக்கான போதையும்


சென்றமுறை நீ அனுப்பிய சரக்கு குறித்து குறிப்பேதும் இல்லையே
உனக்காக நான் அனுப்பிய சைடிஷும்
ஒரு அவிச்ச முட்டையும் வந்து சேர்ந்ததா?


00

ஹிஹிஹிஹி

Vidhoosh said...

ரொம்ப நன்றி வசந்த் உங்கள் முதல் வருகைக்கு , கருத்துக்கு.

காதலோடு குறை கூறினால் குழப்பமாக இருக்கு இல்ல..

--வித்யா

Vidhoosh said...

ஒரு வழியாய் என் நேயர் விருப்பத்தையும் நிறைவேற்றி விட்டீர்களா?

:)) இரசித்தேன்.

--வித்யா

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஏதாவது ஒரு கடிதம் எழுதி அனுப்பாமல் விட்டுவிட்டாரே! அணைப்பதும், அடிப்பதுமாய் இருந்துவிட்டதால் புரியாமல்தான் இருக்கும்.

நீங்கள் அனுப்பிய கடிதம் முத்தத்தில் கிறங்கி, கண்ணீர்த் துளியில் கரைந்து அவரிடம் சேர்ந்திருக்க வாய்ப்பேதும் இல்லை.

நல்லதொரு கவிதை.

அ.மு.செய்யது said...

//உனக்கான எனது முத்தமும்,
இரு கண்ணீர் துளிகளும் வந்து சேர்ந்ததா?//

இந்த கவிதைக்கு இந்த இரண்டு வரிகள் போதும்ங்க...ரொம்ப அழகா இருக்கு .....!!!

கல்யாண்குமார் said...

சுகமான கவிதை வரிகள். ரசித்தேன். ஒரு நல்ல கவிதாயினியை அடையாளம் கண்டு கொண்டேன். வாழ்த்துக்கள். pls visit my www.kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

Anbu said...

நல்லா இருக்கு அக்கா..

D.R.Ashok said...

காதலிக்கும் போது ஆணிடமிருந்து பெண்னுக்கு வேதனை தான் மிஞ்சும். அதை உங்கள் கவிதை சொல்கிறது.

ஆனா.. after marriage.. அப்டியே reverse ஆகிடும் :)

மண்குதிரை said...

nalla irukku vithya

இரவுப்பறவை said...

//ஒன்றில் வழிந்தோடிய உன் காதலும்
இன்னொன்றில் எப்போதும் போல....//


அழகாய் இருக்கிறது!!

Sundar said...

//உனக்கான எனது முத்தமும்,
இரு கண்ணீர் துளிகளும் வந்து சேர்ந்ததா?//
sweet!

Post a Comment