விநாயகரும் நம் மூளையின் அமைப்பும்விநாயக சதுர்த்தி நேற்று, மண் பிள்ளையார் வாங்கி, விடியற்காலையில் அதை அலங்காரம் செய்து கொண்டிருந்த போது, வெட்டி யோசனை வேறு. அதில் உருவான பதிவுதான் இது.ஏனோ பிள்ளையார் முகத்திற்கும், நம் மூளையின் செரிபெல்லம் (cerebellum) அமைப்பு யானைக் காதோடும், முதுகு தண்டு (தும்பிக்கை) போன்று ஒரு ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றியது. எனக்கு முழு மூளை - முதுகுத் தண்டோடு இணைந்த படம் ஏதும் கிடைக்கவில்லை.

கூகிள் தேடலில் கிடைத்ததில் சிறப்பாக பொருந்தி இருப்பதை போட்டிருக்கிறேன். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா என்று கூறுங்களேன்?
.

16 comments:

க. பாலாஜி said...

கூகிள் தேடலில் கிடைத்ததில் சிறப்பாக பொருந்தி இருப்பதை போட்டிருக்கிறேன். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா என்று கூறுங்களேன்?

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நமது மூளைக்கும் ஆன்மீக உருவங்களுக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்...

நல்ல பதிவிடல்....வாழ்த்துக்கள்...

கிருஷ்ணமூர்த்தி said...

வெட்டி யோசனை வந்தால், பிள்ளையார் எல்லாத்துலயும் தான் தெரிவார்!

ஏதோ கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி [அதாச்சும் படிக்க வந்தவங்களுக்குத் தந்த மாதிரியும்] ரொம்பவே ஃபீல் பண்றீங்களே!?

மு.மயூரன் said...

எனக்கென்னமோ மூளையின் அமைப்பை விட யானையின் முகத்தோடுதான் பிள்ளையார் உருவம் அதிகம் பொருந்திப் போவதாகப்படுகிறது.

ஏனென்றால் தொந்தி வயிறு, தந்தக்கொம்பு, நாலுகை, பெரிய தொடைகள் எல்லாம் மூளையின் அமைப்பில் இருப்பதாகத்தெரியவில்லை. யனையின் அமைப்பில் நிச்சயம் இருக்கிறது.

சந்ரு said...

உங்கள் இடுகைகளை அடிக்கடி பார்த்து வருகிறேன். நல்ல பயனுள்ள இடுகைகள்.

தொடரட்டும் உங்கள் பணி

Nundhaa said...

இது கொஞ்சம் ஓவர் என்றாலும் ரசிக்கத் தகுந்த கற்பனை ... ஆனால் இது ஆன்மீகம் அல்ல புனைவு

வால்பையன் said...

ரைட்டு இப்படி கூட யோசிக்கலாமோ!

Anonymous said...

வித்யாசமாக சிந்தித்திருக்கிறீர்கள் வித்யா.

R.Gopi said...

//வெட்டி யோசனை வேறு. அதில் உருவான பதிவுதான் இது.//

ஏன் வித்யா...அம‌ர்க்க‌ள‌ ஆர‌ம்ப‌மாதானே இருக்கு...

//பிள்ளையார் முகத்திற்கும், நம் மூளையின் செரிபெல்லம் (cerebellum) அமைப்பு யானைக் காதோடும், முதுகு தண்டு (தும்பிக்கை) போன்று ஒரு ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றியது.//

த‌ங்க‌ள் மூளை எக்ஸ்ட்ராவாக‌ ஓவ‌ர்டைம் செய்துள்ள‌து... (ஒன்ன‌ யாரு இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ சொன்னா??)

//சிறப்பாக பொருந்தி இருப்பதை போட்டிருக்கிறேன். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா?//

வித்யா... ந‌ம் ம‌ன‌ம் இறையுட‌ன் க‌ல‌ந்த‌ ஒரு நிலை வ‌ரும்போது, பார்க்கும் இட‌ம் எல்லாம், க‌ட‌வுளும், அவ‌ரின் உருவ‌முமே தெரியுமோ??

இருப்பினும், ந‌ல்ல‌ ப‌திவு வித்யா.... வாழ்த்துக்க‌ள்...

அ.மு.செய்யது said...

நல்ல ஒப்பீடு...உங்கள் கிரியேட்டிவிடி புரிகிறது.கலக்குங்க........!!!

Vidhoosh said...

அனானி - நான் அனானி கருத்துக்களை release செய்வதில்லை. நீங்கள் உங்கள் கருத்துகளை தைரியமாக பெயருடனே அனுப்பலாம். எப்போது பொதுவில் நான் என் கருத்துக்களை தெரிவிக்கிறேனோ, அப்பொழுதே விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

பாலாஜி - இருக்கலாம். இன்னும் கூர்ந்து நோக்கலாம் என்றே ஆசை. கொஞ்சம் போடோஷோப்பில் வேலை செய்யவேண்டும். நிச்சயம் ஏதோ தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

கிருஷ்ணமூர்த்தி - கூல். feelings எல்லாம் இல்லை. திடீரென flash ஆனதால் பகிர்ந்து கொண்டேன். :)

மயூரன் - அப்படியே மூளையின் அமைப்பையும் பாருங்களேன். அதே போல இருக்கிறதே.

சந்ரு - ரொம்ப நன்றி.

நந்தா - ததாஸ்து (அதே ஆகட்டும்). :)

வால் அருண் - வந்துட்டேங்களா? நேத்தெல்லாம் ஆளையே காணோம்.

சின்ன அம்மிணி - நன்றி. யோசனைதானே - அது பட்டாம்பூச்சி போல, பறந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்ய?


//பார்க்கும் இட‌ம் எல்லாம், க‌ட‌வுளும், அவ‌ரின் உருவ‌முமே தெரியுமோ?? //
இருக்கலாம் கோபி - நன்றி. கற்பனைக்கு எது தடை. ஒரு சின்ன flash ஏற்பட்டது. அதைப் பகிரலாம் என்றே நினைத்தேன். இதே போல யாருக்கேனும் தோன்றி இருக்கலாமோ என்றும் பார்க்கலாமே அப்படீன்னு பதிவிட்டேன்.

செய்யது - நன்றி.

pkathir,balasee,arasu08, ashok92, Vino23, kosu, kiruban,subam, mohanpuduvai - தமிழிசில் வோட்டு போட்டு பாப்புலர் ஆக்கிய எல்லோருக்கும் நன்றி.
--வித்யா

வால்பையன் said...

//வால் அருண் - வந்துட்டேங்களா? நேத்தெல்லாம் ஆளையே காணோம்.//

எனக்கு சனி,ஞாயிறு விடுமுறை!
விடுமுறை தினத்தன்று நெட்டுக்கு வந்தால் டென்ஷன் தான் மிஞ்சும்!
ஜாலியா அப்படியே ஊர் சுத்த போயிட்டேன்!

R.Gopi said...

வித்யா... நீ நெற‌ய‌ வெண்டைக்காய் சாப்பிட‌றியா??

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் வித்தியாசமான சிந்தனை. ஒன்றை வேறொன்றாக நினைத்துக் கொண்டுப் பார்க்கும்போது நமது மூளை நாம் நினைக்கும் அத்தகைய வடிவமைப்பை உருவாக்கிவிடும் என்பது விதிக்கப்படாத கட்டளையாகும்.

இதனால் தான் ஒரே விசயத்தைப் பல கோணங்களில் சிந்திப்பவரை 'அறிவுள்ளவர்' என மூளையைக் குறிப்பிட்டுச் சொல்கிறோம்.

நீங்க அறிவாளி வித்யா! எங்களுக்கு அறியத் தந்தமைக்கு நன்றி.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். எவ்வருடமும் இல்லா அதிசயமாக நாங்களும் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டோம்.

Vidhoosh said...

//நீங்க அறிவாளி வித்யா!//
அவ்வ்வ்வ்....
எனக்கு அழுகையே வந்திடுச்சுங்க. என் தமிழ் ஆசிரியர் பேரும் கிருஷ்ணமூர்த்திதான். காதல் தோல்வியில், தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரே ஒருமுறை,நான் எழுதிய "வந்தே மாதரம்" கட்டுரையை படித்து விட்டு இப்படித்தான் சொன்னார். இந்த கட்டுரை எழுதி பரிசெல்லாம் வாங்கின பிறகு, எனக்கு கல்யாணமும் ஆகிவிட்டது. அதுக்கப்புறம் எல்லாரும் என்னை முட்டாள்னு திட்ட மட்டும்தான் இல்லை.

இதை frame போட்டு மாடிவைத்தல் கூட, என் பொண்ணு கூட நம்பாது.

அதை விடுங்கள், இந்தப் பதிவைப் பற்றி முதலில் எங்கப்பா கிட்ட சொன்ன போது, இவ்வளோ யோசிக்கற அளவுக்கு உனக்கு வெட்டியா நேரம் இருக்கான்னு கேட்டுட்டார். ஹி ஹி..

//மிகவும் வித்தியாசமான சிந்தனை. ஒன்றை வேறொன்றாக நினைத்துக் கொண்டுப் பார்க்கும்போது நமது மூளை நாம் நினைக்கும் அத்தகைய வடிவமைப்பை உருவாக்கிவிடும் என்பது விதிக்கப்படாத கட்டளையாகும்.//

இதை ஒப்புக் கொள்கிறேன். எல்லோரும் கற்பனைனு சொன்னாலும், வீண் வேலைனு சொல்லாலும், அப்படியே இருந்தாலும் கூட, மனதின் ஓரத்தில் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என்ன செய்ய. போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறார் பிள்ளையார்..மூளை.. :(

--வித்யா

டக்ளஸ்... said...

ரைட்டு..

நேசமித்ரன் said...

//இது கொஞ்சம் ஓவர் என்றாலும் ரசிக்கத் தகுந்த கற்பனை ... ஆனால் இது ஆன்மீகம் அல்ல புனைவு

August 24, 2009 7:45 PM//

//வால்பையன் said...
ரைட்டு இப்படி கூட யோசிக்கலாமோ!

August 24, 2009 11:10 PM//

Repeating :)

Post a Comment