கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு

கருப்பான கருப்புத்தான் அட்டக் கரி,
கருப்பு இங்க் போல, சூப்பர் black,
jade black, double african,
அமாவாசைக்குப் பிறந்த மூத்த மகன்,
தீய்ந்து போன சப்பாத்தித் தவாவின் அடிப்பாகம்.
அண்டங்காக்கைக்கு கொள்ளுத்தாத்தா,
குயிலுக்கு தாத்தா, black magic-கில் இருக்கும் black.
ஒரு டின் தார் கூட உன் காலில் விழும் பக்தியோடு,
நிலக்கரி கூட, உன் நிறம் பெற, தவம் செய்கிறது நிலத்தடியில்.
நொந்தேன் நொந்துகொண்டே, கடைக்குச் சென்று
fair and lovely கொடுமெனக் கேட்டேன்.
அது இல்லையென்று சொல்லிவிட்டான்,
அதோடு
நின்றானா,
உனக்கெல்லாம் எதற்கொரு fairness cream
இந்தா பிடி cherry blossom, குறைந்தபட்சம்
உன் கரிமுகத்தில் shining-காவது வரும் என்றான்!

டிஸ்கி: நிலைக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டேதான், இதை எழுதினேன். வேறு யாரையும் புண்படுத்த அல்ல. only humour intended.


.

18 comments:

யாத்ரா said...

:)

கார்ல்ஸ்பெர்க் said...

பிரசன்ட் மேடம்..
இந்தக் கவிதைக்கு என்ன கமெண்ட் சொல்றதுன்னு தெரியல.. ஆனா நாங்களும் ஒரு கடை வச்சிருக்கோம் அப்படின்னு உங்களுக்கு தெரியப்படுத்த இந்த மாதிரி அட்டன்டன்ஸ் குடுக்குரதத் தவிர வேற எப்படி சொல்றதுன்னு தெரியலையே :))

R.Gopi said...

விதூஷ்...

உனக்கு ஏம்மா இந்த கொலவெறி....

ராமர்
க்ருஷ்ணர்
நிலக்கரி, அதிலிருந்து வரும் ஜொலிக்கும் வைரம்
கருமேகம், அது தரும் வான்மழை
வைரமுத்து, அவரின் அட்டகாசமான கவிதைகள்
ரஜினிகாந்த், அவரின் திரை ஆளுமை
கரிய கூந்தல், இது வேண்டாமென்று சொல்லும் பெண்டிரும் உண்டோ
குறுகுறு பார்வையில் கோடி சேதி சொல்லும் கருவிழி
கயல் போன்ற விழிகளை மேலும் மெருகூட்டும் கண்மை
கம்பீர நடை போடும் யானை, என்னே அழகு....

இவையெல்லாமே கருப்புதான், ஆனால கூடவே அழகும்தானே......

இருக்கும் நிறங்களில் கம்பீரமானது கருப்பு தானே.... நானும், நீங்கள் எழுதியது என்று சுட்டி காட்ட வரவில்லை... கருமையிலும் வெகுவானது அழகுதான் என்று சொல்ல வந்தேன்...

//டிஸ்கி: நிலைக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டேதான், இதை எழுதினேன்.//

கண்டிப்பாக இது டூப்தான்.... பரவாயில்லை...

அடுத்து உங்கள் டார்கெட் என்ன நிறம்?

Prakash said...

fair and lovely விளம்பரங்களில் சொல்லப்படும் " சிகப்பழகு" என்பது அப்பட்டமான நிறவெறி இந்த கவிதையில் உள்ள வலியை நகைச்சுவை மூடி மறைக்கவில்லை. !

"அகநாழிகை" said...

இதெல்லாம் எப்பூடி...?

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Vidhoosh said...

யாத்ரா, கார்ல்ஸ்பெர்க் (உங்க கடைக்கு வந்தேன்), கோபி (நாம அப்படி இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனைதான்),

பிரகாஷ் (கரெக்டா சொன்னீங்க.சென்னை வந்த புதிதில் ஒரு பேருந்து பயணத்தின் போது ஒரு சின்ன சம்பவத்தின் பாதிப்பு இந்த கவிதை, எழுதினேன்.)

அப்பூடியேதான் வாசு. :) - யாருக்கோ ஏற்ப்பட்ட வலியின் தாக்கம் தந்த ஒரு சின்ன வேதனையை புன்னகையாகிவிட்டேன்.நல்லாருக்கீங்களா?

---வித்யா

மண்குதிரை said...

onnu sollattaa karupputhaan enakku romba pitichcha colour

sakthi said...

R.Gopi said...

விதூஷ்...

உனக்கு ஏம்மா இந்த கொலவெறி....

ராமர்
க்ருஷ்ணர்
நிலக்கரி, அதிலிருந்து வரும் ஜொலிக்கும் வைரம்
கருமேகம், அது தரும் வான்மழை
வைரமுத்து, அவரின் அட்டகாசமான கவிதைகள்
ரஜினிகாந்த், அவரின் திரை ஆளுமை
கரிய கூந்தல், இது வேண்டாமென்று சொல்லும் பெண்டிரும் உண்டோ
குறுகுறு பார்வையில் கோடி சேதி சொல்லும் கருவிழி
கயல் போன்ற விழிகளை மேலும் மெருகூட்டும் கண்மை
கம்பீர நடை போடும் யானை, என்னே அழகு....

இவையெல்லாமே கருப்புதான், ஆனால கூடவே அழகும்தானே......


ரீப்பீட்டிங்

Vidhoosh said...

மண்குதிரை, சக்தி - எனக்கும் கருப்பென்றால் ரொம்ப பிடிக்கும்..:)

-வித்யா

வெ.இராதாகிருஷ்ணன் said...

வசன கவிதையைப் படித்தேன். அதில் இருக்கும் வலியும் அறிந்தேன். நிறம் என்ன நிறம் மனசுதான் திறம் என வாழும் மனிதர்களுக்கு இதுபோன்ற செயற்கையைத் தேடிச் செல்லும் நிலை கொண்ட மனிதர்களை வித்தியாசமாகவேப் பார்க்கச் செய்யும்.

ஒரு ஷூ விற்கு கிடைக்கும் மரியாதைதான் இந்த நிறத்திற்கும் கிடைக்கும் என 'நிறவெறி'யைச் சொல்லும் வரிகள்.

நகைச்சுவை என்பதால் உண்மை ஒளிந்து, சிரிப்பு கவுஜ (ம்ஹும் என்ன ஒரு வார்த்தை) ஆளுமையை மேலோட்டமாக மறைக்கலாம்!

எனக்குப் பிடித்தது கருத்துப் போகாத வானத்து நீலநிறம்!

மிக்க நன்றி.

Vidhoosh said...

நன்றி இராதாகிருஷ்ணன்.
இதை சீரியஸ் கவிதையாக்கவே நினைந்தேன். ஆனால், இப்படியாகி விட்டது.
--வித்யா

அ.மு.செய்யது said...

இந்த‌ க‌விதை என‌க்கு நானே டெடிகேட் செய்து கொள்கிறேன்.

க‌ருப்பாக‌ இருப்ப‌து ஒரு குற்ற‌மா ???? என்று நானும் சில‌ நேர‌ங்க‌ளில் புல‌ம்பியிருக்கிறேன்.

அ.மு.செய்யது said...

ஓட்டு போட முடியல...ஏதோ பிரச்சனை.

Vidhoosh said...

நன்றி செய்யது. இதே கேள்வியும் யாரோ சிலர் பேருந்தில் மற்றொருவரைப் பற்றி கிண்டலும் கேலியுமாய் பேசியதையும் கேட்டு மனம் நொந்து எழுதியது இது. சீரியஸாக எழுதினால், நானே கிண்டல் செய்வது போன்ற தொனியில் ஒலித்தது. அதனால் நகைச்சுவையாகவே மாற்றி விட்டேன் - டிச்கியோடு. :(

என்ன செய்வது? மனகருப்பை மற்ற முடியாததால் marketing மூலம் சிகப்பழகு கிரீம்கள், சிகப்பாக ஆக்காது என்றாலும் அமோக விற்பனை ஆகின்றன.

--வித்யா

துளசி கோபால் said...

என்ககு மட்டுமில்லைங்க எங்க நாட்டுக்கேக் கருப்புதான் பிடிச்ச கலர்.

எங்கள் தேசீய நிறம் கருப்பு.

வால்பையன் said...

இது கவிதை தானே!

Vidhoosh said...

நன்றி துளசி (டீச்சர்) - அதே அதே.

நன்றி வால் அருண். நானும் அப்படி நினைத்துதான் எழுதினேன். அது கவுஜ ஆகிவிட்டது.
--வித்யா

நேசமித்ரன் said...

அருமை
வலியை சொல்லுதல் இக்கவிதை

Post a Comment