And now.....அவ்வ்வ்வ்
டிஸ்கி என்று செல்லமாய் அழைக்கப் படும் disclaimer:-
இது என்ன And Now.... என்றெல்லாம் யோசிக்கபடாது. அது சாமி குத்தமாயிடும் சரியா?
கிராமம் முதல் அயல்தேசமெல்லாம் ஓடிக்கொண்டே
தரையிலேயே இருக்கும் கால் போலவே,
இந்தக் கூரை என் தலையில் விழாது போலவே
ஸ்வரத்தில் பாடினாலும், ஜுரத்தில் பாடுவது போலவே,
மேக்கப் போட்டாலும், ஒரு துளி வியர்வை போலவே,
புரியவே புரியாது புரிந்த நவீனக் கவிதை போலவே,
இத்தனை நேரம் யோசித்தேன், இப்பத்தான் வருகிறது And now போலவே...
"பள்ளியில் திருடிய
பேனாவும் பென்சிலும்,
பொக்கிஷமாய் பதுக்கி வைத்தேன்
வெகு சுவாரசியமாக இருக்கும்
அவற்றால் எழுத..
கால மாற்றங்களில்
காணாமல் போனது
இப்போதெல்லாம் எழுத
பேனா திருடிய கை விரல்களே போதுமே!
(போதுமே!வுக்கு மூன்று முறை தலையை திருப்பி திருப்பி echo effect கொடுத்துகொள்ளவும்) "
And now....
ஆச்சியின் "And Now....."
ஆயில்யனின் "And Now....."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."
ஹரிணி அம்மாவின் "And Now....."
"And Now....."
.
24 comments:
அவ்வ்வ்வ்வ்வ்வ்...:))
இது போதுமே!
கலக்கிறீங்க போங்க...
அந்த முன்னுரையே ஒரு கவிதை மாதிரி இருக்கே!! ;-)))
//பேனா திருடிய கை விரல்களே போதுமே!//
காகிதம் தேவையில்லை கீகளே போதுமே
போதுமேக்கு... 3+1 தடவை தலையை திருப்பி எக்கோ கொடுங்க...
சும்மா... தமாசு... தப்பா நினைத்தாலும் தப்பில்ல
ஒன்னுமே புரியல..
உலக்த்துல.
( this is About "AND NOW" only.. Not about Ur Kavithi.)
:-)
ஹா ஹா ஹா
அவ்
அவ்
அவ்
முடியலையா இன்னும்
கால மாற்றங்களில்
காணாமல் போனது
இப்போதெல்லாம் எழுத
பேனா திருடிய கை விரல்களே போதுமே!
:)))
நன்று
நாங்கெல்லாம் ஒன்லி டிபன்பாக்ஸ் தான் திருடுவோம்!
//(போதுமே!வுக்கு மூன்று முறை தலையை திருப்பி திருப்பி echo effect கொடுத்துகொள்ளவும்) "//
தலையை வேற திருப்பணுமா அவ்வ்வ்வ்! பயங்கரமா டிரில் வாங்குறீங்களே!!!! நாங்க இம்புட்டு கஷ்டப்படல போஸ்ட் போடறதுக்கு!!!
ரொம்ப நல்லா இருக்குங்க :)
//ஆயில்யன் said...
//(போதுமே!வுக்கு மூன்று முறை தலையை திருப்பி திருப்பி echo effect கொடுத்துகொள்ளவும்) "//
தலையை வேற திருப்பணுமா அவ்வ்வ்வ்! பயங்கரமா டிரில் வாங்குறீங்களே!!!! நாங்க இம்புட்டு கஷ்டப்படல போஸ்ட் போடறதுக்கு!!!
//
ரிப்பீட்டேய்
வித்யா....
அன்ட் நௌ ஐயம் ஆல்டைம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
இந்த பதிவை படிச்ச எஃபெக்டா?? எஃபெக்டா?? எஃபெக்டா?? (ஐயோ, இது கூட மூணு தடவை எக்கோ அடிக்கறதே??!!)..
And Now-வை அங்கிங்கெனாதபடி எங்கும் தெளித்து கோலம் போட்ட சந்தனமுல்லையே - வருக வருக. நன்றி. அவ்வ் ---முன்னுரையும் கவிதைபோலவே படிச்சுட்டீங்களா..
நிஜம்ஸ் - அம்புட்டு சிரிப்பா வந்துச்சு. நன்றிங்க.
அன்புமணி-நன்றிங்க.
கதிர்-ஈரோடு - நன்றிங்க. தப்பே இல்லைங்க.
டக்ளஸ் - வாங்க வாங்க. நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.
நட்புடன் ஜமால் - உங்க பதிவுகள் எதுன்னு பயங்கர குழப்பமா இருக்குங்னா... சொன்னப் பேச்சை கேட்டு மூணு முறை தலையை திருப்பினத்தில் கழுத்து 'சுளுக்கி கிளுக்கி' கொள்ளலையே?
இராதகிருஷ்ணன் - நன்றிங்க.
சக்தி - நன்றிங்க
ஆயில்யன் - சொன்ன பேச்சை கேட்கலைனா முட்டி போட வேண்டியதுதான்..ஜாக்க்க்கிரதை...
யாத்ரா - நன்றிங்க. ரொம்ப நாளா ஆளை காணல??
சின்ன அம்மிணி - ///சொன்ன பேச்சை கேட்கலைனா முட்டி போட வேண்டியதுதான்..ஜாக்க்க்கிரதை...// நானும் ரிபீட்டேய்...
கோபி - நன்றிங்க. தலைவர் நல்லா இருக்காரா? இளையதளபதி, அய்யான்னு உங்க பதிவுல காற்று வேறு திசை திரும்புதேன்னு கேட்டேன். ஹி ஹி..
--வித்யா
விதூஷ்,
என்ன இது..?
இப்படியாயிட்டீங்க.
இருந்தாலும் திருடுனது ஒத்துகிட்ட
உங்க நேர்மைய பாராட்டுறேன்.
I like it.
//கோபி - நன்றிங்க. தலைவர் நல்லா இருக்காரா? இளையதளபதி, அய்யான்னு உங்க பதிவுல காற்று வேறு திசை திரும்புதேன்னு கேட்டேன். ஹி ஹி..
--வித்யா//
தலைவர பத்தி ஒரு 10 பகுதி தொடர் எழுதினேனே... இப்போ அவர் "எந்திரன்" ஷூட்டிங்ல படு பிசி... படம் நல்லா வந்து இருக்குன்னு பசங்க சொன்னாங்க..அதுவும் இல்லாம, தலைவரை பற்றி மட்டும் எழுத நண்பர்கள் பலரின் வெப்சைட்ஸ் (www.rajinifans.com, www.onlyrajini.com) இருக்கறதனால, நான் எல்லாரையும் கலந்து அடிக்கிறேன்...
உற்று நோக்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....
kalakitinga ponga :)
sema super
//(போதுமே!வுக்கு மூன்று முறை தலையை திருப்பி திருப்பி echo effect கொடுத்துகொள்ளவும்) "//
sulukidichi :(
//இது என்ன And Now.... என்றெல்லாம் யோசிக்கபடாது. அது சாமி குத்தமாயிடும் சரியா?//
யோசிக்கவே வழியின்றி பயப்பட வைத்துவிட்டீர்கள். இருந்தாலும் யோசிப்பதைத் தவிர்க்க இயலாது.
Then and Now என்றுதான் அமைந்திருக்க வேண்டும். பழையவை தொலைந்து போனதால் Then தனையும் தொலைத்து இருக்கிறீர்கள்/பிறரும் தொலைத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
மிகவும் அட்டகாசமாக வந்திருக்கிறது கவிதை. நல்லதொரு சிந்தனை. மிக்க நன்றி.
விதூஷ் and now மிக அழகு. வாழ்த்துக்கள். எல்லோரின் and now ம் அழகு.
வாவ் வித்யா எல்லா திசையிலும் சிக்ஸர் கிராப்தான் போல
வாசு - வாங்கய்யா வாங்க.. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே??
கோபி - உற்று உற்று நோக்கியதில் கண்ணே வலிச்சிருச்சுன்னா பாருங்களேன்!! (just kidding)
கிருத்திகா - நன்றிங்க
சஞ்சய் காந்தி - இப்போ மறுபடி படித்து மாத்திபக்கம் தலையை திருப்புங்க பாக்கலாம்..
இராதாகிருஷ்ணன் சார் - இது சும்மா கோடை மழை மாதிரி - ஒரு சேஞ்சுக்கு..
உமா - நன்றிங்க
நேசமித்ரன் - நன்றிங்க. சிக்ஸர்-எல்லாம் இல்லை. நாமெல்லாம் ஒரு தொடர் கவிதை (சீரியஸ்) எழுதினால் என்ன??
--வித்யா
//மேக்கப் போட்டாலும், ஒரு துளி வியர்வை போலவே,//
பெண்ணிஸத்தின் நீண்ட நாள் கவலை இன்று கவிதையாய்! அப்புறம்....(And, Now)ன் தமிழாக்கம் தான் வேறொன்றும் இல்லை...
சிறுநீரக நன்கொடையாளர்கள் 500,000.00 அமெரிக்க டாலர் (3 கோடி) மற்றும் வெளிநாட்டு நாணயத்துடன் நாங்கள் அவசரமாக தேவைப்படுகிறோம். இப்போது விண்ணப்பிக்கவும்!, மேலும் தகவலுக்கு மின்னஞ்சல்:
healthc976@gmail.com
Post a Comment