பிரைன் சிப் பதித்த இதயம்
Posted by
Vidhoosh
on Thursday, August 6, 2009
Labels:
கவிதை
குளிர்ந்த டிசம்பர் இரவில் இவ்வுலகம்
யோக நித்திரை பயிலும் இரண்டு மணி
என் மூளை வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை,
"cerebral palsy-தான் இது.
இன்னும் பிறக்காத குழந்தை போல்
மெல்லியதானது இவன் மனம்,
wrong diagnosis, surgery failed"
குறிப்பெழுதினார் மருத்துவர்.
மருத்துவரின் மேசை மேல் நின்ற மூளை
அறுபட்ட நிலையில் யோசித்தபடியே
"இன்று நீ யார்? நானில்லை உன்னோடு"
என்றதும், உரத்து சிரித்தேன் நான்
"எனக்கு இதயம் மட்டும் போதும்"
மருத்துவரிடம் " இன்று மேசை பூக்களை
மாற்றவில்லை நீங்கள்" எனக்கூறி
விடை பெற்றதென் மூளை.
பிளாட்டினம் பதித்த சாலையில்,
warp drive lane-னில் மெல்ல
நடந்தபடியே, brain chip
பதிக்கப்பட்டவென் இதயம்
மழையின் வாசத்தை நுகர்ந்தது.
.
9 comments:
வாவ் !!! அறிவியில் புனைவுக் கவிதை செமையா எழுதியிருக்கீங்க வித்யா !!!
good one !!
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.
வித்யா.....அருமை....
அறிவியலையும், விஞ்ஞானத்தையும் இணைத்த அந்த சாமர்த்தியம்..... பதிவின் ருசியை அதிகப்படுத்தி இருக்கிறது..... அதிலும், அந்த கடைசி இரண்டு வரிகள்... சான்ஸே இல்ல.....
//brain chip
பதிக்கப்பட்டவென் இதயம்
மழையின் வாசத்தை நுகர்ந்தது.//
பின்னுது....... வாழ்த்துக்கள் வித்யா.......
நிறைய எழுதுங்கள்.....
wow vidhya super
மிகவும் அருமையாக இருக்கிறது, எல்லா உறுப்புகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் கலையை அறிந்துவிட்டால் மூளையின் செயல்பாடு அவசியமற்றுப் போகிறது, மூளையினால் செய்ய முடியாத செயல்களையும் உறுப்புகள் தன்னால் செய்ய இயலும் எனும் அற்புத சிந்தனையை விதைத்துச் செல்லும் அழகிய கவிதை இது.
மிக்க நன்றி வித்யா.
நலம் நலம்...
நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போகமுடியல
அருமை அருமை அருமை
அருமை தோழி.
நல்லா இருக்குங்க. ம்... புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா...
Post a Comment