- சில நேரம் குழந்தைகள் ஷூ-லேசை இறுக்கி முடிச்சிட்டு கொண்டு வந்து விடுவார்கள். காலிலிருந்து ஷூ-வை கழற்ற முடியாமல் திண்டாடுவோம். முடிந்தவரை காலிலிருந்துஷூ-வை கழற்றி விட்டே முடிச்சை நீக்க முயற்சிக்கவும். கழற்ற முடியாவிட்டால், அந்தநபரை ஒரு சேரிலோ சோபாவிலோ அமரச் செய்து, நீங்கள் தரையில் அமர்ந்து கொண்டால், அந்த நபர் தடுமாறி கீழே விழுவதைத் தவிர்க்கலாம்.
- ஒரு மெட்டல் போர்க்-கைப் (metal fork) அல்லது கோணி ஊசி பயன் படுத்தி மெதுவாக கழற்றப்பாருங்கள். அதிக அழுத்தம் கொடுத்தால், போர்க் / ஊசி நழுவி காயப்படுத்தக் கூடும்.முடிந்தவரை எதுவும் லூப் கிடைக்கிறதா என்று பார்த்து, அந்த லூபிலிருந்து ஆரம்பியுங்கள். பொறுமை மிக அவசியம்.
- மழைக் காலத்தில் சிக்கலான ஒரு விஷயம் ஈரமான ஷூக்கள், மற்றும் ஈரத்தில் இறுகிப்போன லேய்ஸ் முடிச்சுதான். அதை எப்படி இலகுவாக கழற்றுவது என்று பார்க்கலாம்.
- ஈரமான ஷூ-வை நல்ல தண்ணீரில் அலசி விட்டு, ஷூ-வின் வடிவம் மாறாமல் இருக்க, நியூஸ் பேப்பரை உருட்டி உள்ளுக்குள் திணித்து வைத்து, காய வையுங்கள். இதனால்ஷூ-வுக்குள் இருக்கும் ஈரமும் பேப்பரால் உறிஞ்சப் படும்.
- காய்ந்த பின், போர்க் அல்லது கோணி ஊசியால் நீக்கினால் சுலபமாக வந்து விடும். ஷூ-வுக்குள் ஈரம் நன்கு காய்ந்த பிறகு போரிக் பவுடர் தூவி வைக்கவும்.
- எதுவுமே கைகூடவில்லை என்றால் கத்தரிக்கோல் உபயோகித்து கத்தரித்து விடவும்.
- முடிந்த வரை, ஷூ லேஸ் அதிக நீளத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இதனால்அடிக்கடி லேஸ் கழன்று விடுவதையும், கால்தடுக்கி கீழே விழுவதையும் தவிர்க்கலாம்.
- காட்டன் அல்லது ரோப் ஸ்டைல் லேஸ்களே சிறந்தவை. எலாஸ்டிக் மற்றும் சிந்தெடிக்இரகங்கள் அடிக்கடி கழன்று விடும்.
பொறுப்பு அறிவிப்பு: இது ஈமெயில்-லில் வந்தது. தமிழ் மொழிக்கு மாற்றம் செய்தது மட்டுமே என் உழைப்பு.
.
8 comments:
//ஈரமான ஷூ-வை நல்ல தண்ணீரில் அலசி விட்டு, ஷூ-வின் வடிவம் மாறாமல் இருக்க, நியூஸ் பேப்பரை உருட்டி உள்ளுக்குள் திணித்து வைத்து, காய வையுங்கள். இதனால்ஷூ-வுக்குள் இருக்கும் ஈரமும் பேப்பரால் உறிஞ்சப் படும்.//
இது நல்ல விடயமாக இருக்கே. பகிர்தமைக்கு நன்றி.
//எதுவுமே கைகூடவில்லை என்றால் கத்தரிக்கோல் உபயோகித்து கத்தரித்து விடவும்//
ஹ்ஹ ஹ இதுதான் நாம அடிக்கடி செய்யறது. nice.
நல்ல யோசனைகள். மொழி பெயர்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி.
உடனே அடுத்த பதிவா நாடு தாங்காதுக்கா
பகிர்வுக்கும் நன்றி.
இதை பேரண்ட்ஸ் கிளப் லையில் இடலாமே..??
நன்றி உமா, அன்புமணி, பாலா (இந்தப் பதிவெல்லாம், schedule செய்யப்பட்டது. கைவசம் எதுவும் இல்லை என்றால் release செய்ய வேண்டி)
வண்ணத்துபூச்சி - நல்ல பெயர். அதென்ன பேரண்ட்ஸ் கிளப். லிங்க் கொடுக்கவும்.
நன்றி வித்யா.
பேரண்ட்ஸ் கிளப் சுட்டி:
http://parentsclub08.blogspot.com
நீங்களும் சேர்ந்து கொண்டு நல்ல தகவல்களை பதிவிடலாம்.
நல்லதொரு பயனுள்ள யோசனைகள், மொழிபெயர்ப்புக்கு மிக்க நன்றி.
நன்றி உங்கள் எல்லோருக்கும்.
--வித்யா
Post a Comment