வருமுன் காப்பீடு செய்வோம்

உயிருக்கு போராடும் நம் பதிவுலக நண்பர் செந்தில்நாதன் அவர்களுக்காக பலரும் பதிவு மூலம் உதவிகள் திரட்டுகின்றனர். நம்மாலான எதையும் செய்வோம்.

ஆனால், இந்நேரத்தில் உங்களுடன் ஒரு சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நான் டாடா இண்டிகாம் நிறுவனத்தில் பணியிலிருந்த போது நடந்த இரு நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தது. இது நடந்தது ஆறு வருடங்களுக்கு முன் என்றாலும் இன்று நினைத்தாலும் என் மனம் பதறும்.

என் சகபணியாளர் ஒருவரின் கணவர் ஸாஃப்ட்வேர் நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜர். பணிநிமித்தமாக பிரான்ஸ் செல்லும் போது, ப்ளைட்டிலேயே இதயம் செயலிழந்து, வழியிலேயே இறந்து விட்டார். அவர் தம் மனைவியிடம் சில கருத்து வேறுபாடுகளால் (வேறென்ன அளவுக்கு மீறிய பணம் கொடுத்த சந்தேகங்கள்) தன் பாங்க் அக்கௌன்ட் மற்றும் இன்வெஸ்ட் செய்துள்ள பத்திரங்கள் பற்றிய எந்தவொரு தகவலையும் அளிக்காமலேயே இருந்திருக்கிறார். இவளுக்கும் மாதம் முப்பதாயிரம் சம்பளம். அவருக்கோ எண்பதாயிரத்துக்கும் குறைவில்லாமல் இருந்துள்ளது.

இருந்தாலும் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவந்து, அதைப் பெறவே முறையான கட்டணங்கள், இலஞ்சம் எனச் செலவுக்கு அதிகக் கடன் பெற வேண்டிய நிலையில் இவள் மிகவும் திண்டாடிப் போனாள். இருவரும் இவ்வளவு சம்பாதித்தும் தம் அவசரத் தேவைக்கென பணமாக பாங்கில் வைத்திருக்காமல் இன்வெஸ்ட்மென்டில் அத்தனை பணத்தையும் முடக்கியது ஒரு காரணம். அவளுடைய குழந்தைகள் இருவரில் பெண்ணுக்கு மனவளர்ச்சி குறைவு மற்றும் மகனுக்கு ஒரு வயதே ஆகிறது. இதில் வேதனையான ஒன்று என்னவென்றால், அவரைத் தகனம் செய்த அன்று, அவள் உறவினர்களில் சிலர் அவள் கணவர் அவர்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி அதையும் திரும்பத் தரும்படி சண்டை போட்டு, கடைசியில் இருந்த அவள் வீட்டையும் அடமானம் வைக்கும்படி செய்து பணத்தை ஏறத்தாழ கொள்ளையடித்து சென்றனர். இவளுக்கு அப்போது வயதோ இருபத்தியாறு. இந்த நிலை ஏன்? இது ஒரு புறமிருக்கட்டும். இவளுக்காவது கடன் வாங்கினால் திரும்பக் கட்டும்படியாக பொருளாதார நம்பிக்கையிருந்தது. எங்கள் நிறுவனத்தின் லீகல் டிபார்ட்மண்ட் உதவியினால் ஒரளவுக்குப் பிழைத்தாள்.

முப்பதே வயதான என் நண்பர், ஜெயின் இனத்தவர். மிகுந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவன் என்றாலும் பெற்றோர் கட்டாயப்படுத்தி இவருக்கு பதினெட்டு வயதே (எட்டாம் வகுப்பு வரை பயின்ற) ஆன பெண்ணை மணமுடித்தார்கள். மனைவியும் இவனும் மட்டும் சென்னையில். சென்னைக்கு வந்த மூன்றே மாதத்தில் இவனுக்கு வலிப்பு ஏற்பட்டு தானே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டான். கடைசியில் ஆஸ்பத்திரி இவன் வீட்டைத் தொடர்பு கொண்டு, பாஷையும் தெரியாமல் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திண்டாடியிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு ஏடிஎம், பாங்க் போன்ற எந்த விஷயஞானமும் இல்லாதது ஒருபுறமிருக்க, ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தாலும் கார்டு கையில் இல்லாமல், மயக்க நிலையில் அவனால் பேசவும் முடியாமல், பணத்தைக் கட்டாமல் டிஸ்சார்ஜ் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்த ஆஸ்பத்திரியில் மாட்டிக்கொண்டு திண்டாடியிருக்கிறார்கள். இரண்டு நாட்களாக இவன் அலுவலகத்துக்கு வரவில்லையே, எந்த செய்தியும் இல்லையே, என்று நான் அவர்கள் வீட்டிற்கு போய் பார்க்கும் போது, விஷயம் தெரிந்து ஆஸ்பத்திரி போய் பார்த்தால், அழுது சிவந்த கண்களுடன் வீங்கிய முகத்தோடு பயந்து ஒரு கோழிக்குஞ்சு போல சோபாவில் பதுங்கியிருந்தவளை பார்த்து ரொம்ப வேதனைப்பட்டேன். அலுவலகத்தின் உதவியோடு பணம் கட்டி அவனை அழைத்து வந்தோம்.

இந்த இரண்டு நிலைகளிலும் இதே மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தால் கணவன்மார்கள் இவ்வளவு திண்டாடியிருப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி அதிகம் நிகழ்வதாக நான் கேள்விப்பட்டதுமில்லை. முன்னவள் படித்து அதிகாரியாக பணிசெய்து கொண்டிருந்தாள், பின்னவள் படிக்காதவள், ஆனால் இருவருமே ஏறத்தாழ ஒரே மாதிரியான சூழலில் எல்லாம் இருந்தும் திண்டாடியிருக்கின்றனர்.

பொருளாதார சரிவு ஏற்பட்டு உலகமே பணத்திற்காக திண்டாடும் சென்ற ஒரு வருடம் மட்டுமல்ல, பொருளாதாரம் நன்கு இருந்த நாட்களிலேயே கூட, நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிக்கல் இன்சூரன்ஸ் (மருத்துவக் காப்பீடு) ப்ரீமியம் கட்டுவதை ஒரு வீண் செலவாகவே கருதிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவோ செலவு செய்யும் நாம், தேவையில்லாமல் வார இறுதிகளில் மகிழ்ச்சிக்காக எவ்வளவோ ரெஸ்டாரண்டுகள் மற்றும் தியேட்டர்களில் ஆயிரக்கணக்கில் மூன்று நான்கு மணிநேரத்தில் செலவு செய்யத் துளியும் தயங்காத நாம், மாதம் ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்ட யோசிக்கிறோம்.

ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம்? மருத்துவமனைகள் அனைத்துமே நம் பயத்தை பயன்படுத்தி பணம் பிடுங்கும் பகல் கொள்ளை காடுகளாக மாறிவிட்ட போது, நாமும் அதற்கேற்ப நம்மை உஷாராக வைத்துக்கொள்ள வேண்டாமா? இன்சூரன்ஸ் எடுத்தால் மட்டும் போதாது. அதைப் பற்றிய முழு விபரங்கள், எந்தெந்த நோய் / வியாதிகளை கவர் செய்கிறது, எந்தெந்த மருத்துவமனையில் அதை அனுமதிக்கிறார்கள் என்றெல்லாம் நம் வாழ்க்கைத்துணை (கணவன் / மனைவி) மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு விளக்குவது அவசியம். இல்லையென்றால், நோய் சுமை குறைந்து வீட்டுக்கு வரும்போது, கடன் சுமை அழுத்தினால், எப்படி உடல்நலம் மீளும்?

ப்ரீமியம் நிச்சயம் ஒரு அதிகப்படியான செலவுதான். ஆனால், அது நம்மை பெரிய இழப்புக்களிலிருந்து காக்கும். நமக்கு எப்போது பெரிய நோய்கள் / மருத்துவ செலவு நேரிடும் என்று தெரியாத நிலையில், குறைந்தது 80 சதவீதம் வரை மருத்துவச் செலவை கட்டிவிடும், காப்பீடு, அதுவும் ஒரு நம்பகமான இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து காப்பீடு பெறுவது அவசியம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஏற்றவாறு, ஒரு மருத்துவக் காப்பீட்டை இன்றே உங்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளிடம் கலந்தாலேசியுங்கள்.

இதனால் மருத்துவச் செலவால், உங்கள் சேமிப்பு கரைவதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், நீங்கள் கடனாளி ஆவதையும் தவிர்க்கலாம். உங்கள் மருத்துவச் செலவு அனைத்தையும் நீங்களே ஏற்றுக் கொள்வதை விட, இதற்கான ப்ரீமியம் தொகை மிகக் குறைவானதுதான்.


காப்பீடு செய்யும் போது எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

1. உங்கள் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத் தேவைகளை கருத்தில் கொண்டு, முக்கிய குடும்பச் செலவு போக, ப்ரீமியம் எவ்வளவு கட்ட முடியும் என்பதை கணக்கிடுங்கள்.
2. இதனடிப்படையில் எவ்வளவு தொகைக்கான மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்தால் தடைபடாமல் செலுத்தமுடியும் என்பதை கணக்கிடுங்கள்.
3. சரியான இன்சூரன்ஸ் (ஏஜென்ட்/ஆலோசகர்) அட்வைசரைத் தேர்ந்தெடுங்கள்.
4. உங்கள் இன்சூரன்ஸ் என்னென்ன நோய்களை கவர் செய்கிறது என்று கவனியுங்கள்.

கவரேஜ் (கவர்டு ஸர்வீஸ்/covered service) என்றால் என்ன?

மருத்துவ இன்சூரன்ஸ் என்பது உங்களுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமான ஒரு ஒப்பந்தம். உங்கள் பாலிஸியில், மருத்துவ மற்றும் லேபரட்டரி டெஸ்டுகள், மருந்துகள், மருத்துவச் செலவுகள் போன்ற மருத்துவ பெனிபிட்டுக்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். இதைத்தான் கவரேஜ் என்கிறோம்.

மருத்துவத்தின் அவசியத்தை உங்கள் மருத்துவர் தீர்மானிக்கிறார். ஆனால் மருத்துவ நிவாரணத்தை (பெனிபிட்/benefit) உங்கள் இன்சூரன்ஸ் ப்ளான் மட்டுமே தீர்மானிக்கும். இல்லையென்றால், மருத்துவச் செலவுகளின் சுமை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அழுத்தும். இதன் பாதிப்புக்கள் உங்கள் குழந்தைகள் மீது நிச்சயம் ஏற்படலாம்.

உங்கள் குடும்ப மருத்துவருக்கு உங்கள் குடும்பத்துக்குத் தேவையான இன்சூரன்ஸ் பற்றிய ஞானம் இருக்கக்கூடும். அவரையும் ஆலோசியுங்கள்.

உங்கள் இன்சூரன்ஸ் பாலிஸியை நிதானமாக முழுதும் படித்துப் பார்த்து முடிவெடுங்கள்.

அவசர சிகிச்சைக்கான அவசியம் ஏற்பட்டால் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வளவு தூரம் மருத்துவச் செலவை ஏற்கும் என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

சில மருத்துவச் செலவுகளை, மருத்துவம் செய்யப்படும் முன்பே இன்சூரன்ஸ் நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு இருக்கும்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எந்த மருத்துவச் செலவுகளை எல்லாம் தம் நிறுவனம் கட்ட வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம்தான் தீர்மானிக்கிறது. உங்கள் டாக்டர் அல்ல.

உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் எந்தவொரு கேள்வியையும் இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் எந்தவொரு தயக்கமும் இன்றி கேட்டுத் தெளிவுறுங்கள்.

இன்சூரன்ஸ் நிறுவனம் உங்கள் க்ளெம்களை மறுக்கவும் (டினையிங் தி க்ளெம்) கூடும். உங்களுக்கு மறுக்கப்பட்ட க்ளெம்களை மறுப்பதற்கான ஆதாரங்களைக் கோரி அப்பீல் செய்ய முடியும். இப்படி அப்பீல் செய்யும் முன் அப்பீல் செய்வதற்கான விதிமுறைகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள் ப்ளான் கையேட்டிலேயே இந்த விபரங்கள் இருக்கும்.

வருமுன் காப்பீடு செய்வோம். அவசரத் தேவைக்கென ஒரு குறிப்பிட்ட அளவில் பணமாக ஏ.டி.எம். வசதி உள்ள ஒரு வங்கியில் சேமிப்பதை பழக்கிக் கொள்வோம்.
-------------------------------------------------
திரு.குகன் அவர்களை மருத்துவக் காப்பீடு பற்றிய தெளிவான பதிவு எழுத வேண்டுகிறேன். மேற்கூறிய விபரங்களில் ஏதும் தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்.
-------------------------------------------------
உங்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாகத் தோன்றினால் தமிலிஷில் ஓட்டு போடவும். இதனால் இச்செய்தி அதிகம் பேரைச் சென்றடையும்.

-வித்யா.


.

13 comments:

R.Gopi said...

வித்யா... ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்....

நல்லா விரிவா எழுதி இருக்கீங்க....

சொல்லாமலேயே ஓட்டும் போட்டாச்சு....

வாழ்த்துக்கள்......

Vidhoosh said...

vanniinfo, mohamedFeros, vilambi, balak, jollyjegan, boopathee, mvetha, ganpath, rgopi3000

Thank you for voting.

-vidhya

Vidhoosh said...

ரொம்ப நன்றி கோபி. :)
வித்யா

சந்தனமுல்லை said...

நல்லதொரு இடுகை,வித்யா!

வடுவூர் குமார் said...

பலருடைய கண்களை திறக்கும் பதிவு.

Shabeer said...

arumaiyana pathivu. Entha Insurance Company nallathu enru sonnal innum nanri.

Radhakrishnan said...

மிகவும் விளக்கமாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அழகிய கட்டுரை.

சில சம்பவங்களை விவரித்து விழிப்புணர்வு வேண்டும் என சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

நல்லதொரு இடுகை. மிக்க நன்றி.

குகன் said...

நல்ல கட்டுரை வித்யா. நர்சிம் பதிவை பார்த்து என்னால் முடிந்த தொகையை செந்தில்நாதனுக்கு அனுப்பியிருக்கிறேன்.

என்னால் எழுத முடியும் என்று நீங்கள் நம்பியதற்கு நன்றி.

'Health Insurance' என்பது 'General Insurance' பிரிவில் வரும். இதில் விபத்து வந்தால் க்ளைம் செய்யலாம். 'Maturity', 'Return' என்ற வார்த்தைக்கு இதில் இடமில்லை.

'அயூள் காப்பீடு' என்பது 'Life Insurance' வரும். இதில் உங்கள் முதலீட்டுக்கு லாபம் கிடைக்கும். குறிப்பிட்ட வருடங்களில் முதலீடு செய்தால் போட்ட பணம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

மேலும் என் பதிவில் விரிவாக எழுதிகிறேன்.

geethappriyan said...

ரொம்ப நல்ல விஷயம் சொன்னீங்க வித்யா.
என் குடும்ப மெடிகிளைம் பாலிசீ முடிவடைய போகிறது.
எந்த பாலிசி நன்றாக உள்ளது என்ற விபரம் கிடைக்குமா?
voted in tamilish

Vidhoosh said...

சந்தனமுல்லை, வடுவூர் குமார், Shabeer, வெ.இராதாகிருஷ்ணன், குகன், கார்த்திக்கேயன்,
Thanks to you all.

வால்பையன் said...

எங்க பாஸ் கார்த்திக் வருடா வருடம் எங்களுக்கு மருத்துவ காப்பீடு எடுத்து விடுவார்!

அடுத்த வருடம் குடும்பத்துக்கே எடுத்துவிடுவதாக சொல்லியிருக்கிறார்!

Vidhoosh said...

ecanadatamil, gnanasekaran, suthanthira-ilavasa-menporul, karthoo2k
Thanks

Thanks Val-Arun.

-vidhya

Vidhoosh said...

Comments
written by Muthuviji 2 days ago
இது ரொம்ப அவசியமான பதிவு

written by rkrishnanv 1 day 16 hours ago
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விசயம்.

written by karthoo2k 1 day 4 hours ago
goodpost

Thanks to you all.
-vidhya

Post a Comment