ஆயிரங்காலத்து அழுகல் பயிர்

ஒரு கவிதையுடன் ஆரம்பிப்போம்.
ஆயிரங்காலத்து அழுகல் பயிர்

அவள்
காயங்களிலிருந்து குருதி
வழிந்து கொண்டுதான் இருக்கிறது
நாளை இது வலியற்றதாகி விடும்
இவள் கதை யாரும் சொல்லவில்லை
இன்று புதிர் உடையவிழ்க்கிறது
மெல்லிய ரீங்காரத்தோடு ஒலிக்கும்
தன் தனிமையை தன்
காதோடு மட்டும் கேட்கிறாள்

"
உனக்குக் கேட்குமா என்
இதயத்தின் இறைஞ்சல்கள்"
விக்குகிறாள், கேவுகிறாள், கெஞ்சுகிறாள்
யாருக்கும் கேட்கவில்லை இந்த இரைச்சல்

"
சூழ்நிலைக் கைதியின் மேல்
வார்த்தைகள் வீசாதே, சவுக்காலே தடவி விடு"
மிருகமா நீ ? மறைந்திருந்து தாக்க வேண்டாம்,
முடியவில்லை எல்லாம்,
போர் இப்போதுதான் ஆரம்பம் ஆகிறது
தன்னோடும் கூட.

தூக்கியெறிந்த உலகம் அழகில்லை,
தன்னையும் தெரியவில்லை, தானும்
அறியவில்லை, காதலோடு வள்
சொன்ன ஆயிரம் வார்த்தைகள்
அவளுக்கே அம்புகளாய்

அவன் வெற்றிகளின் வெகுமானம்
பொறாமைப் பார்வைகள்தான்
இவள் மனம் மட்டும் அறியும் அவன்
கொண்ட தோல்விகளின் பட்டியல்கள்

அவனோ வெற்றியாளன்,
வெற்றி மட்டும் வேண்டுகிறான்
இன்றும் நாளையும் அவனே ஜெயிப்பான்
தோல்வியெல்லாம் வாழ்க்கையில்தான்
தோற்றாலும் இறந்தாலும் இங்கேதான் மிதந்திருப்பேன்,
எனக்கும் ஆசைதான் வெற்றி மட்டும் காண்பதற்கு

உன்னை வெல்வதற்கு எல்லாவற்றையும்
தோற்பேன் என சூளுரைத்தான்.
ரத்து...ரத்து எனக்கூறி அறுவடையான அழுகல் பயிர்,
ஆயிரம் காலங்கள் இருக்கவில்லை
கண்ணாடி உடைந்தது போல்,
அவன் வெற்றி பெற்ற கதை கூறி
வென்றதாக நினைத்தாலும்
தோற்று விட்டான், தோற்று விட்டான்
வென்றாலோ தோல்விதான்...
அவன் தோற்றிருந்தால் வென்றிருப்பாள்
வாழ்க்கை புன்னகை போல் கிடைக்கவில்லை


------------------------------------------------------------


ஒரு நண்பன் இன்னொரு நண்பனை பார்த்து "உன் திருமண வாழ்க்கை எப்படிஇருக்கிறது" என்று கேட்டானாம். அதற்கு இவன் "வேடிக்கையாக இருக்கிறது" என்றானாம். என்னவென்று கேட்டதற்கு "நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வது அக்கம் பக்கத்துக்காரர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது" என்றானாம்.

-----------------------------------------------------------
திருமண வாழ்க்கையைப் பற்றிப் பொதுவாக புலம்பல்கள், அசட்டு நெகடிவ் ஜோக்குகள், கசப்புணர்வுகள் பல இருந்தாலும், ஒவ்வொரு முகூர்த்த நாளிலும் கல்யாணச் சத்திரங்கள் மூன்று வருடம் வரை புக் ஆகி கிடப்பதேன்?

திருமணம், கால்கட்டு, பெண்ணுக்கு சிறை, வளர்ச்சி/சுதந்திரம் எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை என்றெல்லாம் சொல்லியிருந்தாலும், எல்லா (முக்கால்வாசி) திருமணங்களிலும் மாப்பிள்ளையும் பெண்ணும் மிகுந்த சந்தோஷத்தோடே காணப்படுவது ஏன்?

மனைவி / கணவன் என்ற பந்தத்தை
ஏற்படுத்திக் கொள்வது ஏன் அவசியமாகிறது?

ஏன் தொண்ணூறு சதவிகித திருமணங்கள்,
அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்றாலும், பூமியில் நிச்சயிக்கப்பட்டதென்றாலும், முரண்பட்ட இரசனை கொண்டவர்களை இணைக்கிறது?

முரண்களாகவே இருந்தாலும், சதாபிஷேகம் வரை, காதலித்துக் கொண்டே, சண்டை போட்டுக் கொண்டே
பழுத்த கிழங்களாக தம்பதியர் சிலரைப் பார்க்கும்போது, நம்மையும் மீறி, நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது ஏன்?

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் / விவகாரத்துஆனவர்கள் இருவருமே, ஏனோ /எதையோ
இழந்தது போலவே காணப்படுவது ஏன்?

விவகாரத்து செய்வதனால் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிம்மதி கிடைக்கிறதா?

மறுமணம் விவகாரத்துக்கு தீர்வா?

இந்திய நாட்டின் வேதங்கள், புராணங்கள், இந்த பந்தத்தை பற்றி என்ன கூறுகின்றன?

ஜாதகங்கள் பார்ப்பது அவசியமா?

புலஹா, புலஸ்தியா, வஷிஷ்ட, மரீசி, அகஸ்திய, தடிசி, நக்று, பிருகு, அத்ரி, ஜாபாலி, ஜைமினி, தௌம்ய, ஜமதக்னி, உப்யஜா, யஜா, பரத, ஆர்வரிவத, பிப்பலாட, கன்ய, குமுத, உபமன்யு, குமுதக்ஷ, குத்ச, வத்ஸ, வரதந்து, விபந்தக, வ்யாச, கண்வரிஷ, கந்து, மந்தவ்ய, மதங்க, குக்ஷி, மந்தகர்ணி, சந்த, கௌஸிக, சாண்டில்ய, ஸகடாயன, சதாதப, மனுச்சந்த, கர்க, ஸௌபரி, ரோமச, ஆபஸ்தம்ப, ப்ரிதுஸ்தம்ப, பார்கவ, உதங்க, பார்வத, பாரத்வாஜ, தஸ்ய, தந்த, ஸ்வேதகேது, கௌண்டின்ய, புண்டரிக, ரைப்ய, த்ரிணபிந்து, வால்மீகி, நாரத, வக்னி, திரிடமன்யுன், போதாயன, சுபோத, கபோத, ஹரித, ம்ரிகண்டு, துர்வாச, ஜலபத, சக்தி, கங்காவரிய, நடண்த, தேவதத்த, ந்யங்கு, சுஸ்ருத, அக்நிவேச்ய, கலவ, மட்டுவ, லோகக்ஷி, விஸ்ரவஸ், சைந்தவ, சுமன்து, சிசுபாயண, மௌத்கல்ய, பத்ய, ச்யவனல் மதுர, ரிஷ்யஸ்ரிங்க, ஏகபாத, க்ரௌந்ச, த்ரிட, கோமுக, தேவல, ஆங்கீரச, வாமதேவ, அவுர்வ, பதஞ்சலி, கபிஞ்சல, சனத்குமார, சனக, சனந்தன, சனாதன, ஹிரன்யானபா, வதசன (இதில் பகுதிகளாக சத்ய, சுகோத, மைத்ரேய, புஷ்பஜித், சத்யதப, சலிஷ்வ, சிசிர, நிடக்த, உதத்ய, சம்வர்த்த, ஸௌல்கயானி, பராசர, வைசம்பயான, கௌசல்ய, சரத்வத, கபித்வஜ், குசஸ்வர்சிக, கைவல்ய, யஜ்னவல்க்ய, ஆஸ்வலயந, கிருஷ்ணதபோத்தம, அனந்தகருண, அமலாகப்ரிய, சரக, பவித்ர, கபில, கன்சி, என்று நமக்குத் தெரிந்து/தெரியாமல்
ஏறத்தாழ 300-400 கோத்திரங்களுக்கு மேல் ஹிந்து சமூகத்தில் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது மிஞ்சி இருப்பதோ முப்பதுக்கும் குறைவுதான். கோத்திரம் என்றால் என்ன? இதை ஏன் ஹிந்து திருமணத்தில் முக்கியமாக பார்க்கிறார்கள்?

இதையெல்லாம் பற்றி பேசப் போகிறேன், பதிவு வாயிலாக.

--வித்யா

========================

வரும் வியாழன் அன்று மீண்டும் இதைத் தொடர்வோம்.

========================

.

13 comments:

R.Gopi said...

//அவள் காயங்களிலிருந்து குருதி
வழிந்து கொண்டுதான் இருக்கிறது
நாளை இது வலியற்றதாகி விடும்//

க‌விதையோட‌ ஆர‌ம்ப‌மே ந‌ல்லா இருக்கு... என்ன‌... கொஞ்ச‌ம் வ‌லி ஜாஸ்தி...

//சூழ்நிலைக் கைதியின் மேல்
வார்த்தைகள் வீசாதே, சவுக்காலே தடவி விடு"
மிருகமா நீ ? மறைந்திருந்து தாக்க வேண்டாம்,//

வாழ்வின் மிக கொடுமையான‌ த‌ருண‌ம் இது.... யாருக்கும் இதுபோன்ற‌தொரு நிலை வ‌ர‌ வேண்டாமே...

//வென்றதாக நினைத்தாலும்
தோற்று விட்டான், தோற்று விட்டான்
வென்றாலோ தோல்விதான்...//

மிக‌ மிக‌ அருமை.....

//"நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வது அக்கம் பக்கத்துக்காரர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது" //

நிறைய‌ வீடுக‌ளில் மிக‌ சாதார‌ண‌மாக‌ நட‌க்கும் த‌ற்கால‌ நிக‌ழ்வு இது... விட்டுக்கொடுக்கும் ம‌ன‌ப்பான்மையும், ச‌கிப்புத்த‌ன்மை குறைவுமே இத‌ற்கு கார‌ண‌ம்...

//ஒவ்வொரு முகூர்த்த நாளிலும் கல்யாணச் சத்திரங்கள் மூன்று வருடம் வரை புக் ஆகி கிடப்பதேன்? //

//எல்லா (முக்கால்வாசி) திருமணங்களிலும் மாப்பிள்ளையும் பெண்ணும் மிகுந்த சந்தோஷத்தோடே காணப்படுவது ஏன்?//

நல்ல கேள்விகள்...அந்த‌ ச‌ந்தோஷ‌ த‌ருண‌ம் எல்லோர் வாழ்விலும் கிடைக்க‌ வேண்டும்.... பின் இருக்க‌வே இருக்கு குடுமி பிடி ச‌ண்டை...

//பழுத்த கிழங்களாக தம்பதியர் சிலரைப் பார்க்கும்போது, நம்மையும் மீறி, நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது ஏன்? //

அவ‌ர்க‌ள் வாழ்வாங்கு வாழ்ந்த‌வ‌ர்க‌ள் விதூஷ்.....

//ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் ஆகாதவர்கள் / விவகாரத்துஆனவர்கள் இருவருமே, ஏனோ /எதையோ இழந்தது போலவே காணப்படுவது ஏன்?//

இருவ‌ருமே எல்லாவ‌ற்றையும் இழந்த‌வ‌ர்க‌ள் தானே!!

//விவகாரத்து செய்வதனால் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிம்மதி கிடைக்கிறதா? //

இது ஒரு மில்லிய‌ன் டால‌ர் கேள்வி...

//புலஹா, புலஸ்தியா, வஷிஷ்ட, மரீசி, அகஸ்திய, தடிசி, நக்று, பிருகு .....பவித்ர, கபில, கன்சி, என்று நமக்குத் தெரிந்து/தெரியாமல் ஏறத்தாழ 300-400 கோத்திரங்களுக்கு மேல் ஹிந்து சமூகத்தில் இருந்திருக்கிறது///

ய‌ப்பா..... இருங்கோ கொஞ்ச‌மா மூச்சு வாங்கிக்க‌றேன்....

//கோத்திரம் என்றால் என்ன? இதை ஏன் ஹிந்து திருமணத்தில் முக்கியமாக பார்க்கிறார்கள்?

இதையெல்லாம் பற்றி பேசப் போகிறேன், பதிவு வாயிலாக.//

அந்த ப‌திவிற்காக‌ இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்... நன்றி...

உமா said...

அருமை தோழி. மிக அருமையாக படிப்பவரின் ஆர்வம் தடைபடாமல் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

பாலா said...

அருமையா இருக்கு
இந்த கோத்ரம் சமாசரம்லாம் எங்க புடிசீங்க வித்யா ?

நேசமித்ரன் said...

கவிதையை விட உங்கள் கேள்விகள் சுவாரஸ்யமாய்.....
:)
இவ்வளவு கோத்திரங்களா?

Radhakrishnan said...

அற்புதமான கவிதையுடன் ஆரம்பித்து இருக்கிறது இந்த ஆயிரங்காலத்து அழுகல் பயிர்.

பெண்ணுக்கு ஏற்படும் அநீதியை மட்டுமேச் சொல்ல வருகிறதைப் போல் கவிதை அமைந்திருக்கிறது. இதில் ஆணும் பாதிக்கப்படுவது என்பது மறைந்திருக்குமோ அல்லது மறைக்கப்படுமோ எனத் தெரியவில்லை.

//அவர்களது காயங்களிலிருந்து// எனத் தொடங்கி இருக்கலாம் என்பது எனது கருத்தாகவே இருக்கட்டும். .

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தோன்றும் கேள்விகளுக்கு நல்லதொரு பதிலாகத் தொடரப்போகும் பதிவுகளைப் படித்திட ஆவல் கூடுகிறது.

நீங்கள் என்னவெல்லாம் எழுத வருகிறீர்கள் எனப் படித்து விட்டு உங்கள் கேள்விக்கெல்லாம் எனக்குள் தோன்றிய எண்ணத்தை நீங்கள் இத்தொடரை முடித்ததும் எழுதிவிடுகிறேன். அதுவரை சின்னச் சின்ன விசயங்கள் மட்டுமேச் சொல்லிச் செல்கிறேன்.

ஊடல் எனும் வார்த்தையின் அர்த்தம்
தேடலின்றிப் போனதன் விளைவு.

ஓஹோ எனப் போற்றப்படாததன் காரணம் ஈகோ என்றே சொல்லிச் செல்வர்.

தொடருங்கள் வித்யா.

Vidhoosh said...

நன்றி கோபி, உமா, பாலா, நேசமித்ரன், இரா.கி.

இரா.கி. ஆண் அல்லது பெண் என்று ஒரு பக்கம் சார்ந்து எழுதப் படவில்லை இக்கட்டுரை. காத்திருந்து பாருங்கள். இக்கட்டுரை, "பைத்தியம்" போல edit செய்யாமலே வரும். கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், பொறுத்து படிப்பேன் என்று நீங்களும், நேசமித்ரனும் சொன்னதாலே நம்பிக்கையுடன் எழுதினேன்.
--வித்யா

நிலாரசிகன் said...

கவிதை அருமை.

Sanjai Gandhi said...

/ஒரு நண்பன் இன்னொரு நண்பனை பார்த்து "உன் திருமண வாழ்க்கை எப்படிஇருக்கிறது" என்று கேட்டானாம். அதற்கு இவன் "வேடிக்கையாக இருக்கிறது" என்றானாம். என்னவென்று கேட்டதற்கு "நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வது அக்கம் பக்கத்துக்காரர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது" என்றானாம்.//

:)))

வால்பையன் said...

//ஏன் தொண்ணூறு சதவிகித திருமணங்கள், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்றாலும், பூமியில் நிச்சயிக்கப்பட்டதென்றாலும், முரண்பட்ட இரசனை கொண்டவர்களை இணைக்கிறது?//

தொண்ணூறா?
எனக்கு தெரிந்து நூறு சதவிகதமும் அப்படி தான்! ஒத்த கருத்துள்ளவர்கள் தான் மனம் முடிக்க வேண்டுமென்றால் யாருக்கும் திருமணம் நடக்காது!
என் மனைவிக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாமல் உளருவதை நான் ரசித்து கொண்டு தான் இருப்பேன்!
(என்ன, அதுக்கு ஒரு குவாட்டர் செலவாகும்)

thiru said...

Dear Vidya!

I remember one article I read from the Chennai based magazine "Frozen Thoughts" related to marriage.

In marriage, both the stake holders come together with their individual spaces. and Marriage, as a relation (artificially or otherwise) creates common space between them. How they live in the common space while keeping their individual spaces together, determines the relationship's depth and durability...In the case of "Great Couples - Vaazhvaanghu Vaazhnthavargal", they put un-selfish effort to promote each other's space while the common space expands...As they age and hence their relationship, their individual spaces merge together to form a greater common ground of both of them...That is when we say, one can see Wife's face in Husband's and vice versa....

looking forward for your next thursday's article...

Thanks,

Thiru

Vidhoosh said...

நன்றி நிலாரசிகன், சஞ்சய், வால் அருண், திரு.

--வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger வால்பையன் said...

தொண்ணூறா?
எனக்கு தெரிந்து நூறு சதவிகதமும் அப்படி தான்! ஒத்த கருத்துள்ளவர்கள் தான் மனம் முடிக்க வேண்டுமென்றால் யாருக்கும் திருமணம் நடக்காது!
என் மனைவிக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவள் சம்பந்தமில்லாமல் உளருவதை நான் ரசித்து கொண்டு தான் இருப்பேன்!
(என்ன, அதுக்கு ஒரு குவாட்டர் செலவாகும்)/

ஊட்டுக்காரம்மா, 'எனக்கு வாழ்க்கையே செலவாகிவிட்டது' என்று சொல்ல வைத்து விடாதீர்கள், ப்ளீஸ்:-)

வால்பையன் said...

//ஊட்டுக்காரம்மா, 'எனக்கு வாழ்க்கையே செலவாகிவிட்டது' என்று சொல்ல வைத்து விடாதீர்கள், ப்ளீஸ்:-) //

நான் புலம்புறது பத்தாதா சார்!
அவுங்களும் புலம்பனுமா!?

அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நானெல்லாம் ஆதிமூலகிருஷ்ணனுக்கு தம்பியாக்கும்!

Post a Comment