ஜெய் ஹோ - Live Show of A.R. ரஹ்மான்
ஏ. ஆர. ரஹ்மானை அறிமுகம் செய்வது சூரியனுக்கே டார்ச் போலாகும்.

அவரது நிகழ்ச்சி (லைவ் கான்செர்ட்) சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூர் தாண்டி அமைந்துள்ள மார்க்-ஸ்வர்ணபூமி-யில் அக்டோபர் 11-2009 (ஞாயிறு) அன்று மாலை 6.00 மணிமுதல் நடைபெறப் போகிறது (நான்கு மணிநேர நிகழ்ச்சி).

இந்நிகழ்ச்சி மூலம் சக்தி பவுண்டேஷன் தொண்டு அமைப்புக்கு உதவி திரட்டப் படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி ஆதிபராசக்தி மெடிக்கல் அண்ட் ரிசர்ச் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும்.

இதற்கும் முன்னால் 2002-ஆம் வருடம் இதே போன்ற லைவ் நிகழ்ச்சி மகேஷ் மெமோரியல் கான்செர் இன்ஸ்டிட்யூட்-க்காக நன்கொடை திரட்ட நடத்தப்பட்டது.

ஆஸ்காருக்குப் பிறகு ஏ.ஆர்.ஆர். அவர் இசையுலகிற்கு அறிமுகமான சென்னையில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அறுநூறுக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகளை இலவசமாக இயக்க மார்க் நிறுவனம் (MARG) ஏற்பாடுகள் செய்துள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் சென்னை அடையாரிலிருந்து ஒன்றரை மணி நேரம் சாலை வழிப் பயணமாகச் செல்லலாம். கார் பார்கிங் வசதிகளும் மிகவும் அருமையாக செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி ஜெய் ஹோ வேர்ல்ட் டூர்-ரின் பகுதியாக சென்னையில் நடைபெறுகிறது. இதில் ஹரிஹரன், சிவமணி, சாதனா சர்கம், ப்லேய்ஜ் (BLAAZE), பென்னி தயாள் போன்ற புகழ் பெற்ற இசைக் கலைகர்களும் பங்கேற்கிறார்கள்.
இதில் DRUMMER-களுக்கான போட்டியும் நடைபெறப் போகிறது. இதில் வெற்றிபெறும் போட்டியாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சில நிமிடங்கள் இணைந்து இசைக்கும் வாய்ப்பைப் பெறுவார். போட்டியில் பங்கேற்க திறமை மட்டும் இருந்தால் போதும். வயதோ வேறெதுவுமோ தடையில்லை.

மூன்று சுவர் LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாயிரம் சதுரடியில் இந்நிகழ்ச்சி நடைபெற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ரூ.300-க்கான டோனார் டிக்கெட்டுகள் என்னிடம் இருபத்தைந்து இருக்கின்றன.

For

Time :6:00pm
Date:11th oct 09 Sunday.

8 comments:

நசரேயன் said...

//ரூ.300-க்கான டோனார் டிக்கெட்டுகள் என்னிடம் இருபத்தைந்து இருக்கின்றன.//

எனக்கு ஒரு டோனார் டிக்கெட் ஓசியிலே வேணும்

R.Gopi said...

நல்ல நியூஸ் வித்யா...

எனக்கு ஒரு விஷயம் கன்ஃபர்ம் பண்ணியாச்சுன்னா, உங்க கிட்ட இருக்கற‌ மொத்த டிக்கெட் கூட வாங்க ஏற்பாடு செய்யலாம்... அது என்னன்னா....

சொல்லிடுவோமா....

வேண்டாம்பா...

ப‌ய‌மா இருக்கு....

இல்ல‌... சொல்லிடுவோம்...

அய்யோ... சொன்னா அடிச்சாலும் அடிக்கலாம்...

பரவாயில்ல... அது என்னன்னா, "எந்திரன்" படத்தோட ஒரு பாடல் பாடுவாரா??

Vidhoosh said...

:)) நசரேயன்... தனி ஈமெயில் பார்க்கவும்.

===

கோபி: அவர் பாடுவதெல்லாம் இறைவன் கட்டளை. நாம் நேயர் விருப்பம் வேண்டுமானால் கேட்கலாம்.
அரங்கம் பத்தாயிரம் சதுர அடியாம் - நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்...

--வித்யா

R.Gopi said...

//அரங்கம் பத்தாயிரம் சதுர அடியாம் - நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்...

--வித்யா//

நோட்ட‌டுங்கோ...

ரொம்ப‌ பெரிசுங்கோ...

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி வித்யா...

வால்பையன் said...

//இதற்கான ரூ.300-க்கான டோனார் டிக்கெட்டுகள் என்னிடம் இருபத்தைந்து இருக்கின்றன.//

நீங்க ரொம்ப நல்லவங்க!
வல்லவங்க,
இரக்கமானவங்க,
குணமானவங்க,

என் அட்ரஸ் தெரியுமுல்ல

Vidhoosh said...

Hi ssrividhyaiyer,

Congrats!

Your story titled 'ஜெய் ஹோ - Live Show of A.R. ரஹ்மான்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 1st October 2009 09:30:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/119495

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


THANKS TAMILISH. THANKS TO ALL WHO VOTED.

Vidhoosh said...

வால்: அவ்வளோ நல்லவளும் இல்லீங்க. இருந்தாலும் சென்னை வரப் போறீங்களா?

வால்பையன் said...

//வால்: அவ்வளோ நல்லவளும் இல்லீங்க. இருந்தாலும் சென்னை வரப் போறீங்களா? //

இல்லைங்க சும்மா தான் கேட்டேன்!
எனக்கு அவ்ளோ பெரிய கூட்டம் என்றால் அலர்ஜி!

நீங்க போனா போட்டோ எடுத்து போடுங்க

Post a Comment