அணைத்தல்


ஒளி இருளை
நிசப்தம் ஒலியை
இமைகள் விழியை
கரங்கள் கரங்களை
மேகங்கள் வானை
மண்ணை வானும்
புல்லுக்கொரு துளியும்
வெற்றுக் காகிதத்திலொரு
பிள்ளையார் சுழி போலவே
நான் அவனையும்
வாழ்க்கை என்னையும்.

9 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

இப்ப எல்லாப் பதிவர்களுக்குமே கவிதை எழுதிக் கலக்குற மூடு போல:-))

கலக்குங்க!

கலகம் வராதபடி, பதிவுகளைப் படிப்பதே அபூர்வமாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் இப்படியாவது ஒரு ஆசுவாசம் கிடைக்கிறது இல்லையா:-(

நேசமித்ரன் said...

அவ்ளோதானா ?

:)

D.R.Ashok said...

குடிசையும் ஏழ்மையும்
கிழிந்த ட்ரவுசரும் சட்டையும்
சே.. இங்க தொடர்கவிதையா.. எழுதுராங்க...


விதூஷ் கவிதை நன்றுங்க.
மேகங்கள் வானை மட்டும்..

நசரேயன் said...

இன்னும் ரெண்டு நான் சேத்துகிறேன்

பதிவு எழுத்தாளர்களையும்(???)
இடுகை வாசகர்களையும்

சிங்கக்குட்டி said...

நல்ல கவிதை கலக்குங்க!

Vidhoosh said...

Hi ssrividhyaiyer,

Congrats!

Your story titled 'அணைத்தல்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd October 2009 03:30:02 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/120159

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


THANK YOU TAMILISH

Vidhoosh said...

கி.மூ., நேசன், அஷோக், நசரேயா, சிங்கக்குட்டி எல்லோருக்கும் நன்றி.

கவிதை(கள்) said...

மிக அழகா இருக்கு.

" உழவன் " " Uzhavan " said...

அழகு

Post a Comment