மேஜை
Posted by
Vidhoosh
on Saturday, October 3, 2009
Labels:
கவிதை
தாளமிடும் விரல்களின்
லயத்தோடு பெய்யும் மழை
ஆரஞ்சு நறுக்கியக் கத்தி முனையில்
நடனமாடும் மெழுகுவர்த்தி
கருப்புமைக் கசித்து நடந்து நடந்து
மான்ட்ப்ளன்க் எழுதும் நவீன ஓவியம்
மீது பளோரெச்சென்ட் வண்ணங்கள்
வாயிற்படியருகேக் குரல் கேட்டு,
கனவுக் களைந்தோடும் கால்களில்
பின்னிக் காத்திருந்த வலை
கலைந்தோடும் சிலந்தி விழுந்தச்
சட்டத்தின் மேல் சருகான மல்லி வாசம்
வெள்ளையாய் பொடியுதிர்த்துத் தின்னென்று
சொல்லும் எண்ணங்களுக்கூடே
விரல்களில் கசியும் கண்ணீரைப்
பார்த்துக் கொண்டேயிருக்கும் கண்
அதன்மேற் சிலப் பக்கங்கள் புரண்டபடி
கவிழ்த்து மூடிய வரிகளைப் படிக்குமென்
முதல் வாசகனுக்குக் கால்கள் மட்டும்.
-விதூஷ்
.
9 comments:
கவிதையின் சொல்லாடல் எனக்கு பிடித்திருக்கிறது ... நல்லா இருக்கு வித்யா
ரொம்ப நல்லா இருக்குங்க..
அன்புடன்,
அம்மு.
எப்போதும் போல், தமிழ் வித்யாவிடம் விளையாடுகிறது...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்...
எப்போதும் போல், தமிழ் வித்யாவிடம் விளையாடுகிறது...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்...
//கனவுக் களைந்தோடும் கால்களில்
பின்னிக் காத்திருந்த வலை
கலைந்தோடும் சிலந்தி விழுந்தச்
சட்டத்தின் மேல் சருகான மல்லி வாசம்//
நல்லாயிருக்குங்க கவிதை...
நல்லா இருக்கு
//பின்னிக் காத்திருந்த வலை
கலைந்தோடும் சிலந்தி விழுந்தச்
சட்டத்தின் மேல் சருகான மல்லி வாசம்
வெள்ளையாய் பொடியுதிர்த்துத் தின்னென்று
சொல்லும் எண்ணங்களுக்கூடே//
suberb வரிகள்...
தொடர் கோர்வையா அழகா இருக்கு வரிகள்
//சட்டத்தின் மேல் சருகான மல்லி வாசம்..,//
சருகுகளின் வாசம் கவிதையில் உணர்கிறேன்.!
ரொம்ப நல்ல இருக்கு
உங்கள் எல்லா பகோடா பேப்பரும் அருமை
Post a Comment