மாற்றியெழுதப்பட்ட நியாயங்கள்
Posted by
Vidhoosh
on Wednesday, October 7, 2009
Labels:
கவிதை
முகம் நக்கி எச்சில் தடவும்
நாய்க்குட்டி எனதில்லையென
அன்பைத் துடைக்குமொருக் கைக்குட்டை
தெருவோர விபத்து
எனதில்லை இரத்தம்
என்றாலும் இதயம்?
இன்னும் இருக்கலாம்
பல உலகங்களைப் பிரசவிக்க
கருக்கலைக்கப்பட்டக் கழிவான
அந்தவொரு உலகம்?
உடைக்கப்பட்ட முட்டையில்
நரம்புக்கோடுகள்
கரையுமொரு உயிர்
அருகருகிருக்கும் வாய்ப்பு
இருக்க வைத்தன அருகில்
என்றாலும் இருப்பு?
என் முதுகெலும்பு உடையுமோசை
கத்தியில் இரத்தம் துடைத்து
கைகுலுக்கிச் சென்ற நட்பு?
ஊனமான ஊமை சொன்ன
வார்த்தைகளின் நெருப்பில்
வெளிச்சத்தின் இடைவெளி
சில முணுமுணுப்புக்களும்
கைத்தட்டல்களும் கொண்ட
அரங்கம் நிறைய வாய்ப்புக்கள்
திரை விலக்கும் நடிகன்
மாற்றியெழுதப்பட்ட
குற்றங்களைச் சுமந்தவன்தான்
அப்-பாவி, நான்?
.
13 comments:
வீட்டை விட்டு கோட்டை(சென்னை )- க்குவந்து..
பஸ் பயணத்தில் சில்லறை தேடியபோது..,
கையில் பட்டது அம்மா போட்டோ...,
என் மணிபர்சில்...
இது, மாற்றி எழுதப்படவேண்டிய நியாயங்கள்..,
//தெருவோர விபத்து
எனதில்லை இரத்தம்
என்றாலும் இதயம்?//
சிந்திக்க வைக்கும் பகீர் கேள்வி வித்யா...
//உடைக்கப்பட்ட முட்டையில்
நரம்புக்கோடுகள்
கரையுமொரு உயிர்//
மனம் கனக்க வைத்தது...
//என் முதுகெலும்பு உடையுமோசை
கத்தியில் இரத்தம் துடைத்து
கைகுலுக்கிச் சென்ற நட்பு?//
நிறைய இருக்கிறது இப்போது... நாம் என் செய்வது?? முன் சிரித்து, பின் குத்தினால்..
//சில முணுமுணுப்புக்களும்
கைத்தட்டல்களும் கொண்ட
அரங்கம் நிறைய வாய்ப்புக்கள்
திரை விலக்கும் நடிகன்//
நல்லா இருக்கு வித்யா...
//மாற்றியெழுதப்பட்ட
குற்றங்களைச் சுமந்தவன்தான்
அப்-பாவி, நான்?//
சூப்பர்... விடை கிடைக்குமா??
வாழ்த்துக்கள் வித்யா....
கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க.
//முகம் நக்கி எச்சில் தடவும்
நாய்க்குட்டி எனதில்லையென
அன்பைத் துடைக்குமொருக் கைக்குட்டை//
இந்த வரிகளை ரொம்ப நெருக்கமாக உணர்கிறேன்.
அட...ரொம்ப நல்லாயிருக்குங்க கவிதை...
பிறருக்காக சிந்திக்கும் மனம் தனக்காகவும் அழுகிறது
இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது குறிப்பாக முதல் வரி
http://nesamithran.blogspot.com/2009/10/3.html
Hi ssrividhyaiyer,
Congrats!
Your story titled 'மாற்றியெழுதப்பட்ட நியாயங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th October 2009 09:42:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/122102
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிழிஷ் மற்றும் வோட்டு போட்ட நண்பர்களே.
-வித்யா
சிவாஜி சங்கர்: நன்றி. ம்ம். எழுத முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
கோபி; நன்றி
யாத்ரா: நன்றி
ரௌத்திரன் : நன்றி
நேசன்; எளிதாக எழுதவேண்டும் என்றே ஆசை. உங்கள் இன்றைய / நேற்றைய பின்னூட்டங்கள் எனக்கு ஏனோ என் தமிழ் ஆசானை நினைவூட்டுகிறது.
-வித்யா
யாத்ராவையும் நேசமித்ரனையும் வழிமொழிகிறேன்.
புரியுது
அதனால்
வலிக்குது!
இது மாதிரி புரியுற மாதிரி கவிதை எல்லாரும் எழுதுனா எவ்ளோ நல்லாருக்கும்...
//உடைக்கப்பட்ட முட்டையில்
நரம்புக்கோடுகள்
கரையுமொரு உயிர்//
சிந்தனைகள் தொடர்க...
ரொம்ப நல்லா இருக்கு வித்யா.
அனுஜன்யா
நான் வசந்த் கருத்தை ஆமோதிக்கிறேன்
புரியும்படியான கவிதை மிக அழகு .
எனக்கு ஒண்ணுமே புரியலை
Post a Comment