துரோகம்
Posted by
Vidhoosh
on Monday, October 12, 2009
Labels:
கவிதை
எல்லைகளிலுள்ள மண்ணை
கவ்விக் கவ்வி செல்லும் உயிர்
எல்லைசாமிகளின் கோவில் வாசலில்
கள் நிவேதனம் அரங்கேறிய கள்ள பூஜைக்கு
தலைவன் சிறு நீர் தெளித்து நிர்ணயித்த
எல்லைகளைத் தாண்டி போட்ட கோலத்திற்கு இட்ட
காவியின் நிறத்தில் இரத்த வாசனை
அமங்கல இசையோடு சருகான மாவிலைகள்
இருக்கும் மரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும்
எப்.எம் ரேடியோவில் பாடுவதில்லை எந்தக் குயிலும்
உணர்வுகளை ஓலமாக்கும் ஒலிப்பெருக்கிகள் கொண்ட
கையேந்திக் கடைகளில் தகரக் கூரை வழியே அழுக்கான
கருமை மழைத் துளிகள் இந்நகரச் சாலைகளில்
நிமிஷத்துக்குள் ஒருமுறை படிதாண்டும் கால்கள்
உன்னைத்தான் தேடிவந்தேன் காணவில்லை எங்கும்
உன் முகவரியில் இப்போது இருப்பவன்
கொடுத்த தேநீர் ருசிக்கவில்லை அதில்
குறைவாக இருந்தது அன்பு மட்டும்
ஒரு கீற்றுப் புன்னகை வேடிக்கைப் பார்க்கும் குரூரம்
யாரோ எறிந்த கல்லால் கலங்கிய
வெங்காயத் தாமரைகள் விளையும் குளம்
என்னோடு பயணிக்கும் அந்நியங்கள்
இடம் வலம் புறமென்ற திசைகளெல்லாம்
தசைகளோடு திரியும் எலும்புகளைக்
கடித்த ருசிக்கு இரத்தத்தின் சுவை
சப்புக் கொட்டிய உயிருக்கு
இன்னமும் பெயர் சூட்டவில்லை
மிருகத்தை மடியில் இட்டு கிடத்தி
வாய் பிளந்து உணவூட்டிய விரல்களில்
அதன் நாக்கின் இரத்தம்
ஒட்டிய விரல்களைச் சப்பும் தசைகள்
சிந்தும் சிவப்பான சாயப் புன்னகை
உப்புக் காற்று பட்டுத் துருவேறிய
ஜன்னல்களைத் திற நம்பிக்கைச் சாரலில்
நனைந்து கொல் மீண்டும் இதயங்களை
தூறல் மழையாக முடையடிக்கும்
காய்ந்த இரத்த வாசனைக்கு நாக்கு ருசிக்கும்
சில துரோகங்கள் தொடரும்
அறுக்கப்பட்டத் தொண்டையின் ஓலங்கள் போலும்
அதோடு சில கண்டனங்களும், வருந்துகிறேன்.
.
7 comments:
//எல்லைகளிலுள்ள மண்ணை
கவ்விக் கவ்வி செல்லும் மிருகம்
எல்லைசாமிகளின் கோவில் வாசலில்
கள் நிவேதனம் அரங்கேறிய கள்ள பூஜைக்கு
தலைவன் சிறு நீர் தெளித்து நிர்ணயித்த
எல்லைகளைத் தாண்டி போட்ட கோலத்திற்கு இட்ட
காவியின் நிறத்தில் இரத்த வாசனை//
இது உயிர் பலி பற்றி சொல்கிறதா விதூஷ்...??
//உன்னைத்தான் தேடிவந்தேன் காணவில்லை எங்கும்
உன் முகவரியில் இப்போது இருப்பவன்
கொடுத்த தேநீர் ருசிக்கவில்லை அதில்
குறைவாக இருந்தது அன்பு மட்டும்//
வாவ்....... ரொம்ப நல்லா இருக்கு....
//என்னோடு பயணிக்கும் அந்நியங்கள்
இடம் வலம் புறமென்ற திசைகளெல்லாம்
தசைகளோடு திரியும் எலும்புகளைக்
கடித்த ருசிக்கு இரத்தத்தின் சுவை //
படிக்கும் போதே ரத்த வாசனை வர்றது...
//மிருகத்தை மடியில் இட்டு கிடத்தி
வாய் பிளந்து உணவூட்டிய விரல்களில்
அதன் நாக்கின் இரத்தம்
ஒட்டிய விரல்களைச் சப்பும் தசைகளின்
சிந்தும் சிவப்பான சாயப் புன்னகை//
கூடவே இருந்து பாத்த மாதிரி, எப்படி எழுதி இருக்கீங்க!!!! யப்பா...
//காய்ந்த இரத்த வாசனைக்கு நாக்கு ருசிக்கும்
சில துரோகங்கள் தொடரும்
அறுக்கப்பட்டத் தொண்டையின் ஓலங்கள் போலும்
அதோடு சில கண்டனங்களும்//
பலே... வாங்கிக்கொள்ளுங்கள் ஒரு ஷொட்டு... வாழ்த்துக்கள் வித்யா...
//எல்லைகளிலுள்ள மண்ணை
கவ்விக் கவ்வி செல்லும் மிருகம்
எல்லைசாமிகளின் கோவில் வாசலில்
கள் நிவேதனம் அரங்கேறிய கள்ள பூஜைக்கு
தலைவன் சிறு நீர் தெளித்து நிர்ணயித்த
எல்லைகளைத் தாண்டி போட்ட கோலத்திற்கு இட்ட
காவியின் நிறத்தில் இரத்த வாசனை//
இது உயிர் பலி பற்றி சொல்கிறதா விதூஷ்...??
//உன்னைத்தான் தேடிவந்தேன் காணவில்லை எங்கும்
உன் முகவரியில் இப்போது இருப்பவன்
கொடுத்த தேநீர் ருசிக்கவில்லை அதில்
குறைவாக இருந்தது அன்பு மட்டும்//
வாவ்....... ரொம்ப நல்லா இருக்கு....
//என்னோடு பயணிக்கும் அந்நியங்கள்
இடம் வலம் புறமென்ற திசைகளெல்லாம்
தசைகளோடு திரியும் எலும்புகளைக்
கடித்த ருசிக்கு இரத்தத்தின் சுவை //
படிக்கும் போதே ரத்த வாசனை வர்றது...
//மிருகத்தை மடியில் இட்டு கிடத்தி
வாய் பிளந்து உணவூட்டிய விரல்களில்
அதன் நாக்கின் இரத்தம்
ஒட்டிய விரல்களைச் சப்பும் தசைகளின்
சிந்தும் சிவப்பான சாயப் புன்னகை//
கூடவே இருந்து பாத்த மாதிரி, எப்படி எழுதி இருக்கீங்க!!!! யப்பா...
//காய்ந்த இரத்த வாசனைக்கு நாக்கு ருசிக்கும்
சில துரோகங்கள் தொடரும்
அறுக்கப்பட்டத் தொண்டையின் ஓலங்கள் போலும்
அதோடு சில கண்டனங்களும்//
பலே... வாங்கிக்கொள்ளுங்கள் ஒரு ஷொட்டு... வாழ்த்துக்கள் வித்யா...
//தசைகளோடு திரியும் எலும்புகளைக்
கடித்த ருசிக்கு இரத்தத்தின் சுவை
சப்புக் கொட்டிய உயிருக்கு
இன்னமும் பெயர் சூட்டவில்லை//
செம lines .., இதய வடிவில் கொலைகளம்..,படம் நல்லாயிருக்கு..
மிருகத்தை மடியில் இட்டு கிடத்தி
வாய் பிளந்து உணவூட்டிய விரல்களில்
அதன் நாக்கின் இரத்தம்]]
ரண களம் ...
//உணர்வுகளை ஓலமாக்கும் ஒலிப்பெருக்கிகள் கொண்ட
கையேந்திக் கடைகளில் தகரக் கூரை வழியே அழுக்கான
கருமை மழைத் துளிகள் இந்நகரச் சாலைகளில்
நிமிஷத்துக்குள் ஒருமுறை படிதாண்டும் கால்கள்//
தலைப்போடு பொருந்திப்போகும் வரிகள்..
அப்பா....என்ன வித்யா இந்த கலக்கு கலக்கி இருக்கீங்க...கண் கூசுது!..ருத்ரதாண்டவம் வித்யா.மீண்டும்,மீண்டும் வாசிக்க வைத்த முக்கியமான கவிதை இது.சாந்தி..சாந்தி..சாந்தி...(எனக்கு சொல்லிக்கொண்டே போகிறேன்.)
அருமை..
Post a Comment