ஒரு நாட்குறிப்பு
Posted by
Vidhoosh
on Tuesday, October 6, 2009
Labels:
கவிதை
என்னுடல் சாய்ந்த அந்நொடி
நினைவில் மட்டும்
இமைகளை திறக்கவியல
கண்முன்னே என் முகத்தின் புன்னகை
மனைவியின் விசும்பலில்
பிறப்பின் கருப்பை வலி
சொல்லிடுங்கள் சொந்தங்களுக்கு,
மரணித்த மூளை,
இனிச் சாத்தியமில்லை
உறுப்புக்களைத் தானிக்கலாம்
சொல்கின்ற மகன் கலங்கலாய்
பத்திரிகைப் புகழ் பரப்பிகளின்
புகைப்பட ஒளியூடே தெரிகிறான்
அவன் முகம் பார்க்கும் என் விழிகளின் மேல்
இருசொட்டுகள் விடுகிறாள் செவிலி,
"பாத்து வலிக்கப்போகுது" சிந்தியது
என் கரங்கள் மீது மகளின் கண்ணீர்
"நீங்க போயிருங்க" என்றது மருத்துவச்சி குரல்
மகளைத்தான் சொன்னாள் போலும்
விடுதலையான பறவைக்கு நிறைவு
கனவுகள் எல்லாம் சிறகுகள் போல்
ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டே
வெள்ளையாக ஒளிரும் அந்தப் பக்க
இருள் முனை நோக்கிப் பயணித்தச்
சாலைக்கு முன்னால் இருந்தத் தூரத்
தொலைவுகளை காட்டிலும் மிகுதியாக
பின்னால் போன மைல்கற்களின்
மீது எழுதியிருந்த நாட்குறிப்பில்
தேதியில்லை.
.
18 comments:
எப்படிதான் இப்படி எல்லாம் எழுதறீங்களோப்பா...
படித்து விட்டு வாழ்த்துக்கள் சொல்றத தவிர வேற வழியில்ல...
வாழ்த்துக்கள் வித்யா...
கவிதை நல்லா இருக்கு.ஆனா
//”சொல்லிடுங்கள் சொந்தகளுக்கு//
ஆரம்பித்து
//பறவைக்கு நிறைவு// வரை முடியும்
வரிகள் கவிதையின் கவித்துவத்தை
கீறி ஒரு மாதிரி jarring note வருகிறது.
அது இல்லாமல் படித்துப்பாருங்கள்.
நல்ல கவிதை.
எனக்கு தலை சுத்துது!
இது விதூஷ் ப்ளாக் தானே!
தடம் மாறி எங்கயாவது வந்துட்டேனா!?
அழகான கவிதையாகியிருக்க வேண்டிய ஒன்று!
நல்லா இருக்கு
இன்னும் நகம் வளர்ந்து கொண்டிருக்கும் இன்னும் முடி வளர்ந்து கொண்டிருக்கும்
உடலின் ஒலிக்குறிப்புகள் ...
மொழியில் ஏதோ ஒன்று மெல்லிய இடறலை தருவதாக தோன்றுகிறது . ஒரு வேலை என் புரிதல் அப்படியோ என்னவோ ?
:)
என்னப்பா இது எல்லோரும் இப்படி சொல்லாறாங்க...
எனக்குன்னமோ இக்கவிதை பிடிச்சுருக்கு..
வலியிலிருந்தும் உண்மையிலிருந்தும் பீறிடும் எந்த வார்த்தைகளாயினும் அதற்கு ஓர் நேர்த்தி வந்துவிடுகிறது.
கே.ரவிஷங்கர் சொன்னதை அப்படியே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளவும்
//பின்னால் போன மைல்கற்களின்
மீது எழுதியிருந்த நாட்குறிப்பில்
தேதியில்லை.//
ஏன்னா அது பக்கோடா பேப்பர்
//உறுப்புக்களைத் தானிக்கலாம்
சொல்கின்ற மகன் கலங்கலாய்
பத்திரிகைப் புகழ் பரப்பிகளின்
புகைப்பட ஒளியூடே தெரிகிறான்//
இவ்ளோ ஆழமா எடுத்துரைத்திருக்கிறீர்கள் அதுவும் வரிகளை தேடி கண்டறிந்து
சபாஷ்..
மனதைத்தொடும் கரு.அருமை வித்யா
//மொழியில் ஏதோ ஒன்று மெல்லிய இடறலை//
நேசன்: உண்மைதான். மீண்டும் மீண்டும் படிக்கையில் இந்த உணர்வு ஏற்படுவது.
ஆனால், அந்த ஓவியத்தில் உள்ள முதியவரின் மூடிய கண்கள் எனக்குள் ஏற்படுத்திய சலனம்தான் - அந்த நொடியில் என்ன தோன்றியதோ அதை எந்த மாற்றமும் செய்யவில்லை. அப்படியே போட்டு விட்டேன்.
--வித்யா
ரவிசங்கர் / நந்தா - நேர்மையான விமர்சனம். :) எனக்குள்ளும் ஒரு அதிருப்தியை உண்டு பண்ணியது வரிகளின் அமைப்பு. இருந்தாலும், ஓவியம் தந்த உணர்வுகளை மாற்ற விரும்பவில்லை. so, what you read was what i had on my heart, unedited, no brains used. :))
கோபி: நன்றி
வால்: :)
அருணா: ஆம். ஓவியம் கொடுத்த உணர்வுகள் மட்டும், written but unedited.
TVR: நன்றி
அஷோக்: :)
மற்றும் எல்லோருக்கும்:
உண்மையிலேயே இதை இன்னும் கவிதையாக்கவில்லை. அந்த முதியவரின் ஓவியம் (Giuseppe Mazzini Dying by Artist Lega Silvestro (1826-1895)) லீகா ஸில்வஸ்த்ரொ என்பவரால் 1873ஆம் ஆண்டு வரையப்பட்டது. மரணித்துக் கொண்டிருப்பவரின் விழிகள் ஓவியத்தில் எத்தனை கதைகள் சொல்கிறதென்று பாருங்களேன். எத்தனை உயிர்புடன் இருக்கிறது?
மூளைச் சாவு, கருணைக் கொலை என்ற விவரிக்கவே முடியாத ஒன்றை மருத்துவர்கள் மெல்ல அங்கீகரித்து வருகிறார்கள்.
It's true that death without sufferings is sought/wished by many patients, but who is living without sufferings.
Making mercy killing congenial, is what is unacceptable and disturbing.
-Vidhya
வசந்த்: நன்றி. :)
நசரேயா - ம்ம். இன்னும் ஆணிகள் இருக்கிறது உங்கள் நாற்காலியில் என்று தெரிகிறது. இன்னும் உயிர் வரவில்லையே உங்கள் எழுத்தில். :O
சின்ன அம்மிணி: வாங்கம்மிணி நன்றிங்கோ.
அருமையான கவிதை....
வாழ்த்துக்கள் !
அருமையான கவிதை....
வாழ்த்துக்கள் !
Post a Comment