3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வசதி கொண்டது. ஒன் டச் 2 டி / 3 டி மாற்றும் வசதி மற்றும் 2.8 இன்ச் எல்.சி.டி. மானிடர் கொண்டது.
3D லென்ஸ் சிஸ்டம் மூலம் புகைப்படம் எடுக்க இரண்டு ஃபியூஜியான் லென்சுகள் மற்றும் இரண்டு சி.சி.டிக்கள் (CCDs) கொண்டது. இதற்காகவே புதியதாகத் தயாரிக்கப்பட்ட ரியல் போட்டோ ப்ராசெசார் (RP-3D) மூலம் focus, brightness, முதல் tone வரை அனைத்தையும் தானே தீர்மானித்தும், இடது (first shot) மற்றும் வலது (second shot) படங்களை ஒன்றாக இணைத்து முப்பரிமாண படமாகத் தருகிறது. ஒரே படத்தை (subject/object) இரு வேறு போட்டோ செட்டிங்களுடன் படமெடுக்கவும் இந்தப் ப்ராசெசர் உதவுகிறது.
நம் கண்களுக்கு முப்பரிமாணம் தெரிவதற்கு ஒரு பொருளை விழிகள் இருவேறு கோணங்களில் (different lines of sight) பார்ப்பதே காரணமாகும். இதை parallax என்கிறார்கள். இந்த டிஜிட்டல் கேமராவில் உள்ள மானிடர் Light Direction Control System அடிப்படையில் புகைபடமெடுப்பதால், சிறப்புக் கண்ணாடிகளோ அல்லது வேறெந்த மீடியம்களும் இல்லாமலேயே வெறும் கண்களுக்கு இந்த கேமராவால் எடுகப்பட்டப் புகைப்படம் முப்பரிமாணத்தோடு தெரிகிறது.
CIPA-வால் அங்கீகரிக்கப்பட்ட MP format (“multi-picture format”), 3D-AVI அல்லது JPEG-ஆகவும் இப்புகைப்படங்களை பெறமுடிகிறது.
Individual Shutter 3D Shooting மூலம் ஒரே பொருளை (subject/object) இருவேறு திசைகளிலிருந்து படம் எடுத்தால் கேமரா தானாகவே இரண்டு படங்களையும் ஒன்றாக இணைந்து save செய்து 3D படமாகத் தருகிறது. முதல் படம் எடுத்ததும் அப்படம் transparent overlay போல மானிடரில் தெரிகிறது. இதனால் இரண்டாவது படத்தை (shot) நீங்கள் தகுந்தமாதிரி align செய்ய உதவுகிறது.
புகைப்படத் தொழில்நுட்பத்தில் இது ஒரு பெரும் புரட்சிதான்.
==========================
அப்படியே, Final Destination 3-D RDX-சில் Satyam Theatre-ரில் பார்க்க. ஒரு அருமையான தேநீர் போல, இரசிப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. திகிலும் கூடத்தான்.
வர வர எல்லாக் கதைகளும் எனக்கு புராணங்களையே நினைவூட்டுகின்றன. அல்லது இணைத்தாவது பார்த்துக் கொள்கிறேன்.
பரிக்ஷித் மகாராஜா யுதிஷ்டிரனுக்கு பிறகு ஹஸ்தினாபுர அரியணைக்கு வந்தவன். அபிமன்யு மற்றும் உத்திரைக்கு பிறந்தவன். மகாபாரதப் போரில், அபிமன்யுவை கௌரவர்கள் கருணையின்றிக் கொல்லும்போது உத்திரையின் கருவில் இருந்தவன். பின்பு அசுவத்தாமன் கருவில் இருந்த வாரிசையும், தாயையும் பிரம்மாஸ்திரத்தால் கொல்ல முற்படும்போது, பகவான் கிருஷ்ணரால் காப்பற்றப்படுகிறான். இதனால் பரிக்ஷித் என்ற இவன் பெயரை சமஸ்கிருதத்தில் பலவிதமாக பதம் பிரித்து அர்த்தம் கொள்கின்றனர்.
பரி+க்ஷி - அனைத்தையும் தனதாக்குபவன்
பரி + க்ஷித் - அனைத்தையும் அழிப்பவன்
பரிக்ஷா + இத் - கடும் சோதனைகளுக்கு (பரிக்ஷை) ஆளானவன்
பரிக்ஷா + த - இறைவனைத் தேடுபவன் / நாடுபவன்
பரிக்ஷித் ஆளத் துவங்கியபோது கலியுகம் துவங்கியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை, இவன் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, பூதகி கலி என்பவள் அவன் தேசத்துக்குள் தஞ்சம் வர அனுமதி கேட்கிறாள். அரசன் மறுக்கிறான். அவள் கெஞ்சிக் கேட்கவே, அரசன் சூதாட்டம், மது, விபச்சாரம் மற்றும் பொன் (தங்கம்) இருக்கும் இடங்களில் எல்லாம் அந்த பூதகியை வசிக்கச் சொல்கிறான். சூதும் வஞ்சமும் கொண்ட பூதகி, வஞ்சத்தோடு அரசனின் பொன்னாலான கிரீடத்தில் சென்று அமர்கிறாள். அவன் எண்ணங்களைச் சிதைக்கிறாள்.
வேட்டையின் போது ஒரு முறை சமிக்க மஹரிஷியின் குடிலுக்குச் சென்று பரிக்ஷித் தாகம் தீர்க்கத் தண்ணீர் கேட்கிறான். ரிஷி ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அதையறியாமல், இவன் பலமுறை அவரை வணங்குகிறான். ரிஷி எந்த பதிலும் கொடுக்காத காரணத்தால் ரிஷியின் கழுத்தில் ஒரு இறந்த பாம்பை மாறிவிட்டு செல்கிறான். இந்த அவமானகரமான செயலை அறிந்ததும் ரிஷியின் மகனான சிறிஞ்சின், "அன்றிலிருந்து ஏழாம் நாள் மன்னன் பாம்பு கடித்து இறப்பான்" என்று சபிக்கிறான். இதையறிந்த மன்னன், தன் மகனான ஜனமேஜயனிடம் அரியணையை ஒப்படைத்துவிட்டு , சுகர் மற்றும் பாகவதங்களைக் கேட்டு கழித்தான் என்று கூறுகிறது.
இன்னொரு கதையில், பரிக்ஷித் தன் தலையெழுத்தை மாற்றியமைக்க, உயரமான கோபுரம் ஒன்றை எழுப்பி அதில் பாதுகாப்பான இடத்தில் ஆறு நாட்கள் ஆறு இரவுகளைக் கழித்ததாகவும், ஏழாம் நாள் இரவில், ஒரு பழத்திலிருந்த பூநாகம் ஒன்று அவனை கடித்து விஷம் பரவி இறந்ததாகவும் கூறுகிறார்கள்.
அடுத்து நிகழப் போவது தெரிந்தாலும் தடுக்க முடியாமல் விழிப்பது விதியா? என்னவது? என்னவோ நம் நம்பிக்கைகளை மூடத்தனம் என்று கிண்டலடித்துக் கொண்டே dinosar, hulk, sixth sense, final destination போன்ற படங்களையும் பார்த்து producer-களுக்கு சர்வ தேச வசூலை அள்ளித் தெளிப்போம்.
-விதூஷ்
..
9 comments:
கேமரா மேட்டர் ஆச்சர்யம்!
பைனல் டெஸ்டினேஷனும், நீங்கள் சொன்ன மகாபாரத கதையும் ஒன்று தான் என நான் ஒப்பு கொள்கிறேன்!
ஆனால் மகாபாரதம் ஒரு கதை என்று தான் யாரும் ஒப்புகொள்ள மறுக்கிறார்கள்!
முப்பரிமாண கேமரா நியூஸ் சூப்பர்... வாங்கியாச்சா விதூஷ்??
ஃபைனல் டெஸ்டினேஷன்...மகாபாரதம் ஒப்பீடு நன்று...
வாழ்த்துக்கள் விதூஷ்...
வால்:புராணம் என்றாலே பழைய கதைதான். :))
கோபி: கேமரா இந்தியாவுக்கு அதும் சென்னைக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் technical விஷயங்கள் தெரிந்தவரோடு தான் போய் வாங்க வேண்டும். ஒரு பொருள் சந்தைக்கு வந்தால், அது இந்தியாவுக்கு வரும் முன்னேயே, ஐந்நூறு டூபிளிகேட்டுகள் வந்திருக்கும். :))
--வித்யா
நல்லாயிருந்துங்க..
அப்படியே.. ’அஷோக்’ என்ற பெயருக்கு எத்தனை அர்த்தமிருக்குன்னு சொல்லுங்க.
//பைனல் டெஸ்டினேஷனும், நீங்கள் சொன்ன மகாபாரத கதையும் ஒன்று தான் என நான் ஒப்பு கொள்கிறேன்!//
அப்போ படம் போரா?
அஷோக்:
திரைப்படத்தை அலசி துவைத்து காய வைத்த ஆர்வலர்கள் எல்லோருமே "rotten tomato" என்று தீர்மானித்து அறிவித்தும் விட்டார்கள். :))
கேமிரா - மிகப் பெரிய புரட்சி தாங்க இது. நன்றி.
பைனல் டெஸ்டினேஷன் அருமையாகச் சொல்லியிருக்கீங்க
நல்ல பதிவு ... ரசித்தேன் ... fuji camera பற்றி அது beta version-இல் இருக்கும் போதே படித்திருந்தேன்
நல்ல தகவல்.
மக்களும் இந்த மாதிரி புதிய புதிய பொருட்களைத்தானே விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் சொன்னதுபோல், டூப்ளிகேட் சைனா ஐய்ட்டங்களும் விரைவில் வந்துவிடும்
கேமரா மேட்டர் நல்ல தகவல். நன்றி வித்யா.
Post a Comment