வால் நட்சத்திரங்களும் வானவில்லும்
கண்டு எத்தனை வேண்டுதல்கள் - மீது
வீணான எத்தனை மணித்துளிகள்
பயணித்தேன் உயரம் நோக்கி
உணர்வுகளின் இதயம் கொன்று
வானவில் படியேறி
நட்சத்திரக்கதவு திறந்து, வந்த
உயரங்களின் தனிமைக்கு
யார் குரலும் வருவதில்லை.
இத்தனை உயரம் வந்தும்
என் பாதங்கள் பட ஏங்கும்
பூமியின் ஸ்பரிசங்கள்,
மானுட உருவமெல்லாம்,
இங்கிருந்து பார்க்கையில்
சின்னதாகி போயினவென்
அலட்சிய பார்வைக்கு,
கனத்து போன தலையில்
லேசாக இடித்த மேகமெனும்
பனித் தூசிகள் கலைத்து
பூமி நோக்கி பொழிந்த
நிற்காத மழையில் நனைந்தேன்
என் முகமெல்லாம் சாரல்
அழுத்தி துடைத்தேன் காயவில்லை.
ஆடையெல்லாம் தோல்விகளின் ஈரம்
தேங்கியிருந்த தண்ணீரில்
என்னுடைய பிரதிபலிப்பு
விழிகளில் ஈரமில்லை
உதடுகளில் வெஞ்சினமும்
மூச்சுக் காற்றும் வெம்மையாக
காதுகள் சற்று கூர்மையாக
தோல் கூட வேறு நிறம்
கழிந்து விட்ட காலம் போல்
வேறு முகம் தெரிகிறது?
சுயத்தினை கொன்ற குருதி கொண்டு
என் காயங்களை கழுவிவிட்டேன்
பெற்ற வடுக்களை என்ன செய்ய?
இரு கைத் தட்டி, குரல் கொடுத்தேன்,
"யாரங்கே?" என் குரல் கூட எனதில்லை
என் மனம் தின்ற குரல் கொண்டு
"என் உடையெல்லாம் ஈரம்
மாற்றுடை எங்கே? பட்டாடை ஒன்று
புதியதாக வேண்டு"மென்றேன்னென்
கால் கட்டை விரல் முகர்ந்து
வணங்கியவர் அணிவித்த புத்தாடை மீது
ஈரமான ஆடையின் நாசி துளைத்த
அதே வாசம் நுகர்ந்தேன், புதிதாய் மீண்டும்
சுவர்க்கம் நோக்கி உந்தினேன்
என் கால்களை கரைத்தபடி
பெய்தது ஒரு புது மழை.
[விதூஷ்]
ஆடையில் மீதமிருக்கும்
அவள் செய்யும் ஒளிப்புணர்ச்சி
திரிசங்கின் ஜன்னல்களில் சிறை வைக்கிறது
மீளவே இயலாத படிகளில்
ஏறிக் கொண்டிருக்கிறேன் பின்
உலர்ந்து கொண்டிருக்கிறது கருப்பை சிசுவின் தேகம்
[நேசமித்ரன்]
தேகம் துறந்த வேகப் பயணத்தில்
ஓடும் ஜன்னல் வழி காட்சிகள்
மரங்களாகும் பறவைகளின்
சிறகுகளைப் புதைக்க வேண்டும் ஒரு மயானம்
[விதூஷ்]
மயானத்தில் திணறுகின்றன
தேகம் தின்னும் கரையான்கள்
பேஸ்மேக்கர்
மற்றும் எலும்பு கூட்டுத் தகடுகளில்
தங்கப் பல் ஆசையில் காத்திருக்கிறான் வெட்டியான்
கடைசித் தலை மறைய
விவ ரத்து வந்ததும் பதிவுத் திருமணமாம்
ஆயிரங்கால் மண்டபத்தில் குறி விரைத்த யாளியின் கீழ்
அலைபேசியில் தழுவியபடி
[நேசமித்ரன்]தேகம் தின்னும் கரையான்கள்
பேஸ்மேக்கர்
மற்றும் எலும்பு கூட்டுத் தகடுகளில்
தங்கப் பல் ஆசையில் காத்திருக்கிறான் வெட்டியான்
கடைசித் தலை மறைய
விவ ரத்து வந்ததும் பதிவுத் திருமணமாம்
ஆயிரங்கால் மண்டபத்தில் குறி விரைத்த யாளியின் கீழ்
அலைபேசியில் தழுவியபடி
நீ இந்த கண்டத்தின் அந்தப் பக்கம்
நான் இந்தப் பக்கம் - உன்
குரூரம் மறைத்த புன்னகையை
வெப் காமிரா வழி நான் கண்டு
சொல்லும் I miss youடா,
கேட்டு, நீ சொல்லும் மீ டூ
ஸ்மைலீக்கள் என்னை பார்த்து
சிரிக்கும் கண்ணடித்து
[விதூஷ்]
கண்ணடித்து சலித்து போன
தெருவிளக்கின் கீழ் இதழ் மற்றும்
மடல் பரிமாற்றம் யாருமற்ற வீதியில்
தெருவிளக்கின் கீழ் இதழ் மற்றும்
மடல் பரிமாற்றம் யாருமற்ற வீதியில்
புன்னகை பிறைக்குள்
கருநாக படம் வரைந்த நாக்கு
பின்னிரவு சவுக்குத் தோப்பின் சப்தத்துக்குள் கருநாக படம் வரைந்த நாக்கு
துரோகம் துரு நிறத்தில்
[நேசமித்ரன்]
நிறங்கள் உடைந்தது
உயிர் கரைந்தது
உடல் மட்டும் அலைந்தது
உடைந்த நிறத்தை உணர்ந்தேன்
நிறங்களை சிறகுகள் ஆக்கி
வானத்தை கடந்தேன்
சிறகுகள் வானவில்லாய் மாறி வர மறுத்துதது
[உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி]
மறுத்தலுக்கா ,மட்டுறுத்தலுக்கா வென்று
புரிய மறுக்கும் மறுத்தல் உன்னிடம் .
கொட்டிவிட்டு தவமிருக்கிறேன்
ஏதோ ஒன்றைப்பெறுவதற்கு
பாலா
பெற மேகம் தாண்டி வானில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து மிதந்து பறந்தேன்
வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.
நகர்ந்து கிடந்து தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய சுற்றி சூழ்ந்தது வானம்
போதும் போதுமென உறக்கம் கலைந்து
எழுந்துக் கொண்டேன் தினசரிகளை கவனிக்க
D.R.Ashok
கவனிப்பாரின்றி அலைகிறது
ரத்தநாள சிக்கல்களைக்கொண்ட
இயந்திரம்
காற்றில் வீசி கைக்கொள்ளல்
சாத்தியமற்றல்களைக்கொண்டு
அன்பதனை உண்டு தன்னை
போஷித்து கொள்ளாதவரை
இந்த அலைதலே அதற்கு சாத்தியம்
பாலா
சாத்தியம் இல்லாததையும் சாதிக்க
இல்லாத இதயத்தை அடகுவைத்து
செல்லாத காசுகளை செலவுசெய்து
இல்லாத ஊருக்கு வழிதேடி
வழிமாறி போனேன் வேற்று கண்டத்திருக்கு
அங்கும் இருந்தான் மனிதன் இயந்திரமாக
இல்லாததையும் சாத்தியமாக்க
[உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி]
சாத்தியமற்ற பொழுதுகளில்
சதா முயங்கியே கிடக்கின்றேன்
தசையென்னும் வாசனை
தீரா நோயாக மாறி
நோயின் உஷ்ணத்தில்
பஸ்பமாகி சுயஎரித்தலுக்கு
தள்ளப்பட்டும் தேகம் தேடி அலைதலே
சாத்தியாமாகிறது
தொடங்குதலும் முடித்தலும்
சுழற்சியாகிறது
D.R.Ashok
உள்ளுக்குள் பொத்தி வைச்ச ஆசைகளை
சொல்லுக்குள் கொண்டு வந்து வைப்பேனோ
பெண்ணாகிப் போனதற்கு பதிலாய் மண்ணாகிப் போலாமோ
அன்னையிடம் அழுது புலம்பியேக் கேட்டேன்
அண்ணன் போலவே என்னை பெத்து இருக்கலாமென!
வெ.இராதாகிருஷ்ணன்
யார் வேண்டுமானாலும் தொடரலாம் :)
.
29 comments:
கவிதை சொல்ல வந்த பொருள் மிகவும் எளிதாகப் புரிய முடியவில்லை.
கனவு, வெற்றி மிதப்பு, தனிமை, தோல்வி என சொல்லிய கவிதையில்
ஈரமான ஆடை மாற்றியபோதும் மீண்டும் ஈரமாகிப் போன புதிய ஆடை.
mm blog-l pakirnthu kondathukku nanri vithya
:) அதேதான் இரா.கி. சார்.
வெற்றி தந்த தோல்விகள் களைய முடியாதவை :(
--வித்யா
ஆடையில் மீதமிருக்கும்
அவள் செய்யும் ஒளிப்புணர்ச்சி
திரிசங்கின் ஜன்னல்களில் சிறை வைக்கிறது
மீளவே இயலாத படிகளில்
ஏறிக் கொண்டிருக்கிறேன் பின்
உலர்ந்து கொண்டிருக்கிறது கருப்பை சிசுவின் தேகம்
தொடர்கவிதை பற்றி நீங்கள் எழுதிய பின்னூட்டம்
இதை எழுத வைத்தது
:)
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி :)
//மயானத்தில் திணறுகின்றன
தேகம் தின்னும் கரையான்கள்
பேஸ்மேக்கர்
மற்றும் எலும்பு கூட்டுத் தகடுகளில்
தங்கப் பல் ஆசையில் காத்திருக்கிறான் வெட்டியான்
கடைசித் தலை மறைய //
அருமை....
//தேகம் துறந்த வேகப் பயணத்தில்
ஓடும் ஜன்னல் வழி காட்சிகள்
மரங்களாகும் பறவைகளின்
சிறகுகளைப் புதைக்க வேண்டும் ஒரு மயானம்//
superb..
காட்சிகளை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்...ரியலி சூப்பர்ப்
நிறங்கள் உடைந்தது
உயிர் கரைந்தது
உடல் மட்டும் அலைந்தது
உடைந்த நிறத்தை உணர்ந்தேன்
நிறங்களை சிறகுகள் ஆக்கி
வானத்தை கடந்தேன்
சிறகுகள் வானவில்லாய் மாறி வர மறுத்துதது
(நல்லா இருக்கா)
நன்றி உலவு.
உங்கள் பெயர் என்ன??
அழகான எழுத்து.
--வித்யா
//வால் நட்சத்திரங்களும் வானவில்லும்
கண்டு எத்தனை வேண்டுதல்கள்//
கற்சிலைகளையும், காவியுடைகளையும்
கண்டு எத்தனை வேண்டுதல்கள்!
எனக்கு என்னமோ ரெண்டும் ஒரே அர்த்தம்னு தான் தோணுது!
உங்களுக்கு!
comment moderation தற்காலிகமாக மாற்றியுள்ளேன். இந்த கவிதை தொடருக்காக, முடியும் வார்த்தை கொண்டு யார் வேண்டுமானாலும் கவிதையை தொடரலாம்..
நன்றி,
வித்யா
மறுத்தலுக்கா ,மட்டுறுத்தலுக்கா வென்று
புரிய மறுக்கும் மறுத்தல் உன்னிடம் .
கொட்டிவிட்டு தவமிருக்கிறேன்
ஏதோ ஒன்றைப்பெறுவதற்கு
அவசரத்துல எழுதுனதுங்கோ நல்ல இல்லைனா திட்ட கூடாது
ஆமாம் சொல்லி புட்டேன்
மேகம் தாண்டி
வானத்தில் குதித்து
கால் நழுவி பின்வீழ்ந்து
மிதந்து பறந்தேன்
வானமென்றே ஒன்று
இல்லையென உணர்த்தியது
எங்கும் பரவிய வெளி.
நகர்ந்து கிடந்து
தனித்து நிலைத்து
அதுவே நானென புரிய
சுற்றி சூழ்ந்தது வானம்
போதும் போதுமென
உறக்கம் கலைந்து
எழுந்துக் கொண்டேன்
என் தினசரி வேலையை
கவனிக்க துவங்கி
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் தொடருங்கள்.
விதூஷ்,
அந்தரவெளியில் படித்த போதே பிடித்திருந்தது. நல்லது தொடருங்கள்
அடடா! மிக ரசித்தேன்! வாழ்த்துகள்!
பகிர்ந்தமைக்கு நன்றி!
கவனிப்பாரின்றி அலைகிறது
ரத்தநாள சிக்கல்களைக்கொண்ட
இயந்திரம்
காற்றில் வீசி கைக்கொள்ளல்
சாத்தியமற்றல்களைக்கொண்டு
அன்பதனை உண்டு தன்னை
போஷித்து கொள்ளாதவரை
இந்த அலைதலே அதற்கு சாத்தியம்
வாவ். நேசமித்ரன், அஷோக், பாலா - எத்தனை தூரம் கொண்டு சென்று விட்டீர்கள் இந்த பயணத்தை. சூப்பர்.
வால்: :)) வாங்க வாங்க - நாளைக்கு பார்க்கலாம் முடிந்தால்.
--வித்யா
ஈரத் துணியோடரொம்ப நேரம் நின்னாக்க
சளியும்வரும் சுரமும் வரும்!
சொல்றாக!
சிறுகதைப் பட்டறைக்குத் தும்மிக்கிட்டே
போனாக்க
என்னவோ காய்ச்சலுன்னு ஊசியும்
போடுவாக!
கவிதை வரணுமின்னா உயர் தாக்கம்
பெறவேணும்!
தாக்கம் இல்லயென்றால் துக்கப்படத்
தெரியோணும்!
வாடின பயிரைக் கண்டு வாடுகிற
வாட்டம் இருக்கோணும்!
வெறும் காதல் போதாது! அதைக் கடந்தும் போகோணும்!
தலைதுவட்டிச் செல்லமகளே!அடுத்த
வேலையிருந்தாப் பார்!
சாத்தியம் இல்லாததையும் சாதிக்க
இல்லாத இதயத்தை அடகுவைத்து
செல்லாத காசுகளை செலவுசெய்து
இல்லாத ஊருக்கு வழிதேடி
வழிமாறி போனேன் வேற்று கண்டத்திருக்கு
அங்கும் இருந்தான் மனிதன் இயந்திரமாக
(ரொம்ப மொக்கையா இருக்கா )
சாத்தியமற்ற பொழுதுகளில்
சதா முயங்கியே கிடக்கின்றேன்
தசையென்னும் வாசனை
தீரா நோயாக மாறி
நோயின் உஷ்னத்தில்
பஸ்பமாகி சுயஎரித்தலுக்கு
தள்ளப்பட்டும் தேகம் தேடி அலைதலே
சாத்தியாமாகிறது
தொடங்குதலும் முடித்தலும்
சுழற்சியாகிறது
(3,4 வினாடிகளிள் தோன்றியவை...
இது நல்ல விளையாட்டாயிருக்கு)
சுழற்சியே வாழக்கையாகிறது
மோகமே அர்த்தம்கொண்டு
தேகமே திரியாகி மனமேன்னும் காடினூடே
பயணப்படடு ரணம்கொண்டு
தேடலுக்கும் தேடலின் ஊடே
தெய்வத்தையும் வயிற்றையும் கழுவி
மறைத்தும் மறைந்தும் நகர்த்துகிறது
ஈரமனது
(நீங்கள் பற்ற வைத்த தீ ஜிவாலையாகிறது... இனி பெய்யென பெய்யும் மழை... கவிதை...
ஒரு நொடியில் தெரித்த வார்த்தைகள் மேலே)
தங்கள் அளவுக்கு யாராவது தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை விதூஷ்..
உங்கள் தமிழின் ஆளுமை என்னை வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது....
வாழ்த்துக்கள்....
கவுஜ எழுதுற அளவுக்கு அறிவு இல்லை, என் அறிவுக்கு ஏத்த மாதிரி எதாவது மொக்கை தொடர்க்கு அழைப்பு கொடுத்தால் நலம்
//தங்கள் அளவுக்கு யாராவது தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை விதூஷ்..
உங்கள் தமிழின் ஆளுமை என்னை வியக்கவும், பிரமிக்கவும் வைக்கிறது....//
R.Gopi ??? :)))))
wow, amazing post!
//
யார் வேண்டுமானாலும் தொடரலாம் :)
//
I really don't think there is a chance in hell that I can...
Good luck to others! ;-)
!!!!!!!!
உள்ளுக்குள் பொத்தி வைச்ச ஆசைகளை
சொல்லுக்குள் கொண்டு வந்து வைப்பேனோ
பெண்ணாகிப் போனதற்கு பதிலாய் மண்ணாகிப் போலாமோ
அன்னையிடம் அழுது புலம்பியேக் கேட்டேன்
அண்ணன் போலவே என்னை பெத்து இருக்கலாமென!
Post a Comment